கொம்பா முளைத்திருக்கிறது

தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?? என்ற கேள்வி சற்று சிந்திக்க வைத்தது.. தமிழர்களுக்கு கொம்பு முளைத்தால் எப்படி இருக்கும்னு.. அதான் சரி, ஒரு தமிழச்சிக்கே முதல்ல கொம்பு முளைக்க விட்டு பார்க்கலாமுனு இந்த முயற்சி...நல்லா தான் இருக்கு.. எல்லா தமிழர்களுக்கும் கொம்பு முளைக்கலாம்.. :)

*** இந்த தமிழச்சி யாருனு ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம்.. !

Return of the இம்சை - ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடு.. !

நண்பர்களே,

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

இடைவிடாத அலுவலக வேலை மற்றும் வேறு சில personal காரணங்களுக்காக சுமார் 1 மாத காலமாக எழுதாமல் விட்டுப்போன என வலைப்பூ பதிவுகள்.. இதோ மீண்டும் தொடரப்போகிறது..

என்னடா இது "Return of the இம்சை" னு சிலர் சொல்றது கேட்குது.. என்ன பன்றது..வேற வழியில்லை.. உங்க தலையெழுத்து..

ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடு.. !

வீ எம்

இது நம்ம துளசியக்கா ஸ்பெஷல்..

==========================


இந்த படத்தை பார்த்தவுடன் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமாக தோன்றும்.. சிலருக்கு கன்னத்தில் போட்டுக்கொள்ள தோன்றும், சிலருக்கு அட என்ன அருமையான ஓவியம் என்று வியப்பு தோன்றும்...ஒரு சிலருக்கு அப்படியே பிரின்ட் எடுத்து பிரேம் போட்டு வீட்டு பூஜை அறையில் வைக்க தோன்றும்..


கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அட! அது எப்படி ஒருத்தருக்கு பத்து கை ... left hand , right hand போக மீதமுள்ள எட்டு கையை எப்படி சொல்வார்கள் என்று நக்கலடிக்க தோன்றும்..

இல்லை, இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல,சிலருக்கும் பன்பாட்டுகாவலர்களை இப்படித்தான் பழி வாங்க வேண்டும் என தோன்றும்.. , அம்மாவும், கராத்தேவும் சிலருக்கு ஞாபகம் வரலாம்...குஷ்பு, தங்கரும் கூட ஞாபகம் வரலாம்.. :)
இதுப்போல பலருக்கு பல மாதிரி தோன்றும்.. ஆனால் எனக்கு இதை பார்த்தவுடன் முதலில் சாமி செடியக்கா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.. அந்த நகைகளுக்குகாக..
அக்கா, வாங்க.. சூப்பர் டிசைன்ஸ் இருக்கு.. ஒட்டியானம் மட்டும் மிஸ்ஸிங்.. அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க..பாவம் கோபால் சார்... :) இந்த தடவை எத்தனை முறை மயக்கம் போட போறாரோ???

Image hosted by Photobucket.com

அதே கோயிஞ்சாமி - Part II

கனேஷ் அவர்களின் இந்த பதிவின் கோயிஞ்சாமி தொடர்ச்சி இது

தம்பி கனேஷ¤ கனவுல வந்த அதே கோயிஞ்சாமி , அவர் கனவை முடிச்சுட்டு நம்ம கனவுல வந்தாரு..வந்து, வீ எம் ,வீ எம்... கனேசுனு ஒரு வலைப்புகாரர் இருக்காரே அவரு கனவுல போயி 10 கேள்வி கேட்டேன்.,..தம்பிக்கு ஒன்னுக்கு கூட பதில் தெரியல... என்ன மாதிரியே அவருங் கோயிஞ்சாமியா இருக்காரு. ..இந்தாப்பா அதே பத்து கேள்வி , எப்படியும் கனேசு, பதிவா போடுவாரு..அவரு போட்ட ஒடனே நீ பதில் எழுதி உன் வலைப்பூவுல பதிவா போடு..அவரு கருத்துபெட்டில போடாதே ..அங்கே லின்க் மட்டும் கொடுனு கண்டிப்பா சொல்லிட்டாரு..அப்படி பன்னலனா, கூடிய சீக்கிரம் ஏதாச்சும் உளறிட்டு ..அப்புறம் எல்லாரு முன்னாடியும் வந்து பொது மன்னிப்பு கேட்க கடவாய் னு சாபம் கொடுத்துடுவேன்னு சொன்னாரு..கோயிஞ்சாமி சாபம் நமக்கு எதுக்கு.. அதான் அங்கே கருத்து பெட்டில போடாம், இதோ இங்கே போட்டுட்டேன்...கோயிஞ்சாமி வாழ்க!!சரி பதிலுக்கு போவலாம..அப்புறம் கோயிஞ்சாமிக்கு இது தான் கடைசி கனவு விசிட்டாம்..சோ, அடுத்து யாராச்சும் கோயிஞ்சாமி கனவுல வந்தாரு சொன்னா நம்பறதுக்கில்லை...சொல்லிட்டேன்.. கோயிஞ் சாபத்துக்கு ஆளாகாதீங்க..


1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?

வீ ம் கிட்ட முதல்ல 300 ரூ இருந்துச்சு.. அது தான் உலகத்துல மொத்த காசுனு வெச்சுக்குவோம்..ஒரு நாளு கனேசு வீ எம் கிட்ட 100 ரூ கடன் கேட்டாரு.. வீ எம் கிட்ட பணம் இல்லை..அவரு என்ன பன்னாரு சின்னவர் கிட்ட 200 கடன் வாங்கி 100 ரூ கனேசுக்கு கொடுத்தாரு, வீ எம் கேட்டப்ப சின்னவரு கிட்டயும் பனம் இல்லை..ஆனா வீ எம் கேட்டுட்டாரேனு முகமூடி கிட்ட இருந்து 200 ரூ வாங்கி கொடுத்தாரு.. சின்னவரு கேட்கறதுக்கு 10 நிமிசம் முன்னாடி தான் பனமே இல்லாத முகமூடி வீ எம் கிட்ட இருந்து 300 ரூ கடனா வாங்கினாரு.. இப்போ வீ எம் கிட்ட 100 , கனேசு கிட்ட 100 , சின்னவர் கிட்ட 0, முகமூடி கிட்ட 100 ரூ இருக்கு , மொத்தம் 300 ரூ.. ஆனா பாருங்க எல்லோரும் கடன் பட்டிருக்காங்க..

2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?
விளம்பரத்தை பார்த்து வாங்கறவங்க சாப்பிட போறதில்லை (சாப்பிட்டாலும் வெளியே சொல்லமாட்டாங்க).. சாப்பிட போற திருவாளர் டாமி, திருமதி ஜிம்மி விளம்பரம் பார்த்து புரிஞ்சுக்க போறது இல்லை.. (சொல்ல நினைத்தாலும் , சொல்ல வழியில்லை, பாவம்) ..அப்புறம் என்ன ..ச இஷ்டத்துக்கு அடிச்சு விட வேண்டியது தானே..

டாமி : என்ன ஜிம்மி இந்த பிஸ்கேட் சூப்பரா இருக்கு.. போன வாரம கொடுத்தியே அதை விட இது சூப்பரு..

ஜிம்மி: அக்க்கூ,ம்.. இதுல ஒன்னும் கொறச்சல் இல்லை.. எவ்ளோ நாளா சொல்லிட்டிருக்கேன்..இந்த கழுத்து பெல்ட் தேஞ்சு போச்சுனு..அதை ஏதாச்சும் மாத்தி தர வழி செஞ்சீங்களா?? ஒன்னுத்துக்கும் ஒதவாத மனுசா...


3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?

அப்புறம் ஏரோப்ளேன் ஆக்ஸிடென்ட்டே ஆகாதே.... கஷ்டப்பட்டு கண்டுபிடித்த இந்த கருப்பு பெட்டிக்கு வேலையே இருக்காதே... அதுனாலே தான்.. நாம செய்யற ஒரு காரியத்தால, ஒரு நல்ல கண்டுபிடிப்பு பாழாபோக கூடாதில்லையா.. ?

5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?

அது அந்த கடைல எப்படி அடுக்கி வெச்சிருக்காங்கனு பொறுத்தது.. இல்லை .. இல்லை..பழக்கடை முதல்ல இருக்கா , இல்லை கூல் டிரிங்கஸ் கடை முதல்ல இருக்கா என்பதை பொறுத்தது..

ஒரு வாரத்துக்கு முன்னால, விச்சு, பா. ராமா, ரம்யா அக்கா, ஷ்ரேயா அக்கா கடைத்தெருவில போனாங்க.. டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ல போயி ஏதோ ஷாப்பிங்க் பன்னாங்க..ஷ்ரேயா அக்கா ரொம்ப தாகமா இருக்கு கலர் குடிக்கலாமானு கேட்டாங்க.. இல்லை.. ஒரு ஆரஞ்சுப்பழ ஜீஸ் வாங்கி சாப்பிடலாமுனு விச்சு சொன்னாரு.. சரினு ஆர்டர் பன்னாங்க..

ரம்யாஅக்காவும், பா. ராமாவும் பெட் கட்டினாங்க.. எது முதல்ல வரும்னு... பா ராமா நெனைச்சாரு கலர் சீக்கிரம் வரும்..ஆரஞ்சு பழம் ஜீஸ் பிழிஞ்சு தர லேட்டாகுமுனு.. அதனால கலர்னு தைரியமா 1000 ரூ பெட் கட்டிட்டாரு..ஆரஞ்சு ஜூரம்யா அக்கா ஜெயிச்சுட்டாங்க.. அக்கா ரொம்ப உஷாரு... எப்படி தெரியுமா ? கெஸ் பன்னுங்க.. எது எப்படியோ , உங்களுக்கு பதில் : எதுவேனும்னாலும் வரலாம்..

6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?

சொந்தகாரங்க.. நன்பருங்க .. அப்புறம் ..அவர ஆஸ்பிட்டல்ல வந்து பார்த்தவங்க.. கேள்விப்பட்டவங்க எல்லோருக்கும் நிச்சயமா அவருக்கு அம்னிசியா இருந்தது தெரியும்... .. மத்தவங்களுக்கு யாராச்சும் சொன்னாத்தான் தெரியும்.. :)

7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?

எப்படி கூப்பிட்டாலும் அது என்னவோ நம்மள மதிச்சு திரும்பி பார்க்க போறதில்ல..அப்புறம் ஏன் கூப்பிடனும்?

8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?

முடிக்கப்பட்ட கட்டடம்னு ஒன்னும் இல்லையே... இன்னைக்கு 1 மாடி, 6 வருஷம் கழிச்சு ஒரு எம் எல் ஏ ஆனா 3 மாடி, அப்படியே ஒரு மந்திரி பதவி வந்தா 5 மாடி .. முதலமைச்சார் ஆனா 6 ... பிரதமர் ஆனா 7 ..அதுவே ஒரு உ. பி. ச வா யாராச்சும் தத்தெடுத்தா 8 .. 9 .. 10 கணக்கே இல்லை.. still building.. அதுனால தான் அதை அப்படி சொல்றாங்க.. forward thinking :)

9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?

கனேசு , நல்லா யோசிச்சு பாருங்க .. அன்னைக்கு நீங்க , நானு அப்புறம் நம்ம குழலி , சாமி செடியக்கா எல்லோரும் கார் ல போறப்ப.. நம்ம குழலி ஒரு கட்டத்துல படு வேகமா போக.. அக்கா மெதுவா போப்பா னு அலற..நாம எல்லாரும் உயிரை கைல பிடிச்சுட்டு இருக்கு... நீ என்ன சொன்னே???குழலி என்ன இது 100கி மி ஸ்பீட்ல போறீங்க.. மெதுவா போ ..மெதுவா போ.. சொல்லல??எப்படி சொன்னீங்க? வண்டி வீல் சுத்தறத வெச்சா சொன்னீங்க..? இல்லையே.. ஸ்பீடோமீட்டர பார்த்துதானே..அதான்..130 ல போறோம் னு ஸ்பீடேமீட்டர் இருந்தாதானே தெரியும்??


10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?

குடிச்சுட்டு வண்டிய ஓட்டக்கூடாதுனு தானே சொன்னாங்க.. வண்டி ஓட்டிட்டு வர எல்லோரும் குடித்தே ஆகனும்னு சொன்னாங்களா??அன்னைகு நீங்க, ஞான்ஸ் போனீங்க.. ஞான்ஸ் புல்லாயிட்டாரு.. நீங்க நல்ல புள்ள , தொடல... வண்டிய ஓட்டிட்டு வந்தது யாரு??? அப்புறம் அந்த பார்க்கிங் இல்லைனா ..என்ன பன்னியிருப்பீங்க..??


4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?

இது தான் எனக்கே கொஞ்சம் பதில் தெரியல..இருந்தாலும் கோயிஞ்சாமி க்கு 9 விடை சொன்னதாலே சந்தோசமாகிட்டாரு..பாராட்டிட்டு இதுக்கு அவ் அவரே பதில் சொன்னாரு.. ஆனா யாருக்கும் சொல்லாதேனு சொன்னாரு..,. இருந்தாலும்..நம்ம வலைப்பூ தம்பி நீங்க..சொல்லாம இருக்க முடியுமா.. பட் .. ப்ளீஸ் யாருக்கும் சொல்லாதீங்க தம்பி..அது நம்ம கோயிஞ்சாமி கிட்ட தான் இருக்கா.. அப்புறம் அதுக்கு பார்ட்னர்ஷிப் இருக்காம்..

திருவிளையாடல் நாகேஷ் பேர்ல வலைப்பூகாரர் ஒருத்தர் இருக்காரே அவரும் , சிறு கதை எழுதி பட்டம் வாங்கிய ஒருத்தவங்களும், அப்புறம் மாயமானவரும் .. இவங்க நாலு

பேரும் தாங்க அந்த காபிரைட் வெச்சிருக்காங்க..
அப்பாடா சாபத்துல இருந்து தப்பித்தேன்...வீ எம்

வீ எம்

ஒரு தாயின் கனவு

***********************************
ஒரு தாயின் கனவு என்ற தலைப்பில் எனக்கு வந்த மின்னஞ்சல் இனைப்பு இது..
குழந்தையின் படம் என்பதால் தாயின் கனவு என்று சொல்லி இருக்கலாம்.. ஆனால், பொதுவாக பலருக்கு இது தேவை என்று படுகிறது..

சமீபத்திய உதாரணமாக : மூன்றெழுத்து மணம் நடிகை, கோல்ட் பச்சான் , வங்காள கேப்டன், இரெண்டெழுத்து வலைப்பூ பதிவர்.. ஹி ஹி ஹி .. :)

சரி, ஷ்ரேயா அக்கா, ரம்யா அக்கா, துளசியக்கா, கலையரசி .. எல்லோரும் என்ன சொல்றீங்க..

இது ஒரு தாயின் கனவா?? வந்து சொல்லிட்டு போங்க.. !

தாயின் கனவோ இல்லையோ... இது ஒரு கனவனனின் 'மனைவி பற்றிய கனவு' னு பல கனவன்மார்கள் முனுமுனுப்பது புரிகிறது

Image hosted by Photobucket.com

நானும் படம் காட்டவா? சூப்பர் படம்

*****************************************
என்னாங்கடா இது ? வலைப்பூவுல ஆளாளுக்கு படம் காட்டிக்கினு இருக்காங்கோ... நாமளும் ஏதாச்சி படம் காட்டனுமேனு முழிச்சுக்கிட்டு இருக்க சொல்லோ... நம்ம தோஸ்த் ஒருத்தரு இத மெயில்ல அனுப்பிக்கினாரு..
அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு இதோ ... உங்க பார்வைக்கு..

இந்த அம்மனி ரெண்டு மூனு போட்டோல கொஞ்சம் நம்ம ஹீரோயினிங்க கணக்கா டிரஸ் பன்னிக்கினு இருந்துச்சு...அதனால் கொஞ்சம் வீ எம் சென்சார் போர்டுக்கு அனுப்பி.. சென்சார் பண்ணி , செலக்ட் பன்னினேன்.. என்ன பன்றது.. நம்ம அக்காங்க எல்லாம் விசிட் அடிப்பாங்களே நம்ம வலைப்பூவுக்கு..அதான்...
*****************************************


அம்மனி ஒரு நாளு காலைல எழுந்த ஒடனே கண்ணாடி பாத்துச்சாம்.. அட அழகா தானே இருக்கோமுனு தோனுச்சாம்..
Image hosted by Photobucket.com


அப்புறம் குளிச்சுட்டு வந்து பார்த்துதாம்..அட இன்னும் சூப்பரா இருக்கோமேனு சந்தோசமாயிடுச்சாம்..
Image hosted by Photobucket.com


அப்படியே செண்ட் அடிச்சுக்கினே என்னடா இவ்ளோ அழகா இருக்கோமே..என்ன செய்யலாமுனு ரொம்ப நேரம் யோசிச்சுதாம்..
Image hosted by Photobucket.com


அப்புறம் வீ எம் தான் ஒரு ஐடியா கொடுத்தாரு.. அத வேற யாருக்கும் சொல்லாதேனு உஷ்ஷ்ஷ¤னு வாய்ல கை வெச்சு வீ எம் க்கு சொல்லிட்டு...
Image hosted by Photobucket.com


வீ எம் சொன்ன மாதிரி அப்டியே கெளம்பிப் போய் அழகி போட்டில கலந்துக்குனு எகிப்து அழகியா ஜெயிச்சுடுச்சாம்..
Image hosted by Photobucket.com



படத்தை மட்டும் போட்டா, போர் அடிக்காதா... அதான் ஒரு குட்டி கதை கூடவே இலவச இனைப்பா.. நம்ம பத்திரிக்கைங்க கொடுக்கிற மாதிரி..

குறிப்பு:

1. அப்புறம் இந்த பதிவுக்கு நீங்க நட்சத்திரத்துல குத்தறது வீ எம் க்கு இல்லை.. ஞாபகம் வெச்சுக்கோங்க.. அது அந்த எகிப்து அழகி 2005 க்கு ... புரியுது..
2. இந்த அழகி பேர கரீட்டா எழுதறவங்களுக்கு ஒரு பரிசு காத்துக்குனு இருக்கு..

பெட்ரோல் வாங்கலாம் வாருங்கள் --- !!

கடந்த 2 நாட்களாக ஒரு மின்னஞ்சல் சுழற்சியில் இருக்கிறது... நீங்களும் பார்த்திருக்கலாம்..


இது பெட்ரோல் விலையுர்வை பற்றியது..

இது தான் அந்த மின்னஞ்சலில் வந்த முக்கிய விஷயம்:

இந்தியர்கள் அனைவரும் ஒரு நாள் முழுக்க பெட்ரோல் வாங்காமல் இருந்தால், எண்ணெய் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.. எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 4.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். ஆகவே செப் 22 ம் தேதி இந்தியர்கள் யாவரும் பெட்ரோல் வாங்கவேண்டாம்..
இந்த மின்னஞ்சலை அனைவருக்கும் அனுப்புங்கள் .

வந்தேமாதரம்...


//FORMALLY DECLARED "STICK IT UP THEIR BEHIND " DAY //

முதலில் இது எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை.. அப்படியே இது உண்மை என்றாலும், இது சாத்தியமா? மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் கார் / பைக் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை..சொல்லப்போனால் பெட்ரோல் உபயோகிப்பவர்களில் மிகச்சிறு விழுக்காடே இந்த வகையை சார்ந்தவர்கள்..
ஆக, இந்த மெயில் மூலம் அனைவரையும் தடுத்து நிறுத்துவது சாத்தியமா???

இதற்கெல்லாம் மேலே, அப்படி நிறுத்தமுடியும்.. என்றாலும் இது ஒரு சரியான வழியா? இப்படி செய்வதால் என்ன பலன் வரும்? பாதிப்பு யாருக்கு??

இது உண்மையிலே பெட்ரோல் விலை ஏற்றத்தை குறிவைத்தா இல்லை அரசியல் ஆக்கப்டுகிறதா??

இப்படி பல கேள்விகள் எனக்குள் இருந்தாலும், நான் அதை பற்றி எதுவும் இங்கே அலசப்போவதில்லை..

வலைப்பூ நண்பர்களே , கருத்துப்பெட்டி உங்களுக்காவே திறந்துள்ளது.. இது பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...
பின்னர் , இது பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.

வீ எம்

இது தான் அந்த மின்னஞ்சல்

IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OF PETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES
WOULD CHOKE ON THEIR STOCKPILES.
AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OIL COMPANIES.
THEREFORE "THURSDAY SEPTEMBER 22nd " HAS BEEN FORMALLY DECLARED
"STICK IT UP THEIR BEHIND " DAY AND THE PEOPLE OF THIS NATION SHOULD NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY.
THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO AS MANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?

REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES, TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING, BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE DO!
WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOUR CALENDARS AND MAKE SEPTEMBER 22nd A DAY THAT THE CITIZENS SAY "ENOUGH IS ENOUGH"
We forward so many junk email to many of our friends, now let us do it for some useful cause to cut down the price of the petrol ..
VANDEMATHARAM

என்னத்த சொல்றது .. !

பிஞ்சு போன J eலே B

Image hosted by Photobucket.com



உமா பாரதி .... ஜின்னா ... குரானா... குஜராத்....வந்த நேரமே சரியில்லபா.. அய்யோடா சமாளிக்க முடியலயே..பேசாம இவங்கள மாதிரி காவிய வெளிப்படையா மாட்டிக்கிட்டு காலத்தை ஓட்டலாம் போல இருக்கு.... கடவுளே...

============================================


Image hosted by Photobucket.com


அய்யா சொம்பு வேனாம் நீங்களே வெச்சிக்கோங்க.. அந்த காவி துனிய மட்டும் கொடுங்க சாமி போதும்..அதான் இப்போதைக்கு தேவை..

காணவில்லை ! காணவில்லை !! காணவில்லை !!!

காணாமல் போனவர்கள் பற்றிய செய்திகள்

செய்தி - 1


தவறாமல் வலைப்பதிவு சேவை செய்து வந்த சாப்பாட்டு சமத்துவர் "ஞான்ஸ்" என்கிற ஞானத்தின் பீடம் மேல் இருந்த ஒருவரை கடந்த 2 வாரங்களாக காணவில்லை.


கடந்த சில நாட்களாகவே அவரின் பதிவுகளுக்கு '-' குத்து வந்ததை அடுத்து, அவர் மன உளைச்சலில் இருந்ததார். இதன் காரணமாக எதாவது விபரீதமான முடிவுக்கு ஏதேனும் சென்று விட்டாரா என்று அவரின் நெருங்கிய வலைப்பூ வட்டாரங்கள் கவலையில் உள்ளது..
கடைசியாக ஆடியபாதம் பதிவு போட்டுவிட்டு எங்கோ மறைந்து விட்டார். ஆடிய பாதங்கள் வலியெடுக்க ஓய்வு எடுக்க சென்றுவிட்டாரா?


இவரை எங்காவது பார்த்து கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச சன்மானமாக உதை கொடுக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.. ஜாக்கிரதை!

செய்தி - 2

அதே போல, பேருக்கு ஏற்றார் போல் ஒருவர் 'மாய'மாக உள்ளார். திரும்பி 'வரத்' தான் போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.. வலைப்பூவின் முதல் இடத்தில் உள்ள இவரை வெளிநாட்டு சக்திகள் கடத்திச்சென்று இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது, மேலும் கடைசியாக இவர் போட்ட 'அசின்' பதிவை பார்க்கும் போது, தன் தலைவியை பார்க்க கோடம்பாக்காம் சென்றிருப்பாரோ என்ற திசையிலும் விசாரனை நடக்கிறது.

செய்தி - 3 & 4


'தங்க'மான வரை பற்றி பேசி பேசி களைத்துப்போன இரு சுறுசுறுப்பு வலைப்பதிவர்களும் காணவில்லை..குழலூதுபவரும், 'முக'த்தை 'மூடி' இருப்பவரும் தான் அந்த இருவர்..கடைசியாக உள்குத்து பதிவு போட்டு உள்குத்தை வெளியுலகத்துக்கு காட்டிய குழலூதுபவரை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிலர் கடத்திச்சென்றிருப்பார்களோ என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.
கடைசியாக அடிப்பொடிகளை பார்த்து கேள்வி கேட்டு பதிவு போட்ட 'முக'த்தை 'மூடி' இருப்பவரை அடிப்பொடிகள் யாரேனும் கடத்தி இருப்பாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது..
இந்த நால்வரையும் தேடும் வேலையில் ஒரு வலைப்பதிவர் குழு மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.

காணாமல் போயிருப்போர் பற்றிய செய்திகள் இத்துடன் முடிவடைகிறது.. நன்றி , வணக்க்க்கம்ம்ம்ம்ம்..
இவர்கள் பற்றிய விவரங்கள் மற்று புகைப்படம் பார்க்க கீழே சொடுக்கவும்

நம்பர் 1'
நம்பர் 2'
நம்பர் 3'
நம்பர் 4'

காணாமல் போன இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் இங்கே கருத்துபெட்டியில் விவரம் தெரிவிக்கவும்

நன்றி

வீ எம்

வலைப்பூ நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு

வலைப்பூ நண்பர்களே,


இதோ, மீண்டும் ஒரு கார்ட்டூன் முயற்சி. ஜூலை மாதத்தில் எங்கள் அலுவலகத்தின் ஒரு newsletter க்கு நான் போட்ட முதல் கார்ட்டூனை

என் முதல் முயற்சி

என்ற தலைப்பில் போட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்..இல்லையெனில் மீண்டும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டுவரவும் :)
இதோ இப்போது என்னுடைய இரண்டாவது கார்ட்டூன். இது, வலைப்பூ சம்பந்தப்பட்ட கார்ட்டூன்...

disclaimer : யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல , விளையாட்டாக போடபட்ட கார்ட்டூன் இது..சிரிக்க மட்டுமே ( சிரிப்பு வரவில்லையென்றால்... சாரி ) :)

வீ எம்

சூ டோ கு !!

தலைப்பை பார்த்தவுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து வந்த ஒரு ஜப்பானிய ரசிகர் பற்றிய பதிவு என தவறாக நினைத்துவிட வேண்டாம். :)




நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துக்கு மாற்றாக தற்போது மிக பிரபலமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சூ டோ கு (SU - DO - Ku). குறுக்கெழுத்து என்பது வார்த்தைகளை அடிப்படையாக கொண்டது. இந்த சூ டோ கு என்களை அடிப்படையாக கொண்டது.. குறுக்கெழுத்து போல , இங்கே க்ளு (CLUE) எல்லாம் கிடையாது. சில அடிப்படை விதிகளை கொண்டு கட்டங்களை எண்களால் நிரப்ப வேண்டும்.

1970 களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தான் இந்த விளையாட்டு தோன்றியது, அப்போதைய அதன் பெயர் "NUMBER PLACE". எண்களை கட்டங்களில் பொருத்துவதால் அதன் பெயர் இவ்வாறு அழைக்கப்பட்டது. 1986ல் தான் இந்த விளையாட்டு ஜப்பானுக்கு பரவி பெரும் வரவேற்பை பெற்றது.அங்கே தான் சூ டோ கு என்று மறுபெயர் சூட்டும் விழாவும் நடந்தது.

ஜப்பானிய மொழியில் சூ டோ கு என்றால் "தனி எண்" (SINGLE NUMBER) என்று பொருள்.20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சூ டோ கு உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளது..எப்படி பலருக்கு குறுக்கெழுத்து விளையாட்டு ஒரு வித போதையோ அதே போல் இப்போது சூ டோ கு பலருக்கு என்பது உன்மை..

எனக்கு பல காலமாக பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்துக்களை விளையாடுவதில் ஆர்வம் இருந்தது.. ஒரு காலகட்டத்தில், மற்ற வேலைகள் காரணமாக, காலை காபியுடன் சேர்த்து தலைப்பு செய்திகளை படிப்பது என்ற அளவில் மட்டுமே பத்திரிக்கையுடனான நெருக்கம் சுருங்கி விட்டது..சில சமயம் இந்த சூ டோ கு வை பார்த்த போதிலும் அதில் ஏனோ மனம்போகவில்லை..

பூனேவில் இருந்த போது, காலையில் சற்று நேரமிருந்தமையால் இந்த சூ டோ கு வை விளையாட ஆரம்பித்ததில் , மிக பிடித்து போய், நாங்கள் இருவரும் மிக நெருக்கமாகிவிட்டோம்.. !இவ்வளவு நெருக்கமான பிறகு, அவரை பற்றி ஒரு பதிவு போடாமல் இருக்கலாம???

சரி, என்ன விளையாட்டு இது?
81 (9 x 9 ) கட்டங்கள் , அதில் 15 முதல் 24 கட்டங்களில் ஏற்கனவே எண்கள் நிரப்பட்டு இருக்கும். மீதமுள்ள கட்டங்களின் நாம் எண்களை நிரப்பவேண்டும், அது தான் விளையாட்டு..
21 - 25 கட்டங்களில் எண்கள் நிரப்பப்ட்டிருந்தால் அது EASY level, 18 - 20 நிரப்பபட்டிருந்தால் அது MEDIUM level , 15 - 17 கட்டங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தால் அது HARD level என்ற மூன்று பிரிவில் இருக்கும்

அட, ஒரு 67 முதல் 76 கட்டத்துல நம்பர் போடனும் ..இது என்ன பெரிய விஷயம்னு நெனைச்சுடாதீங்க.. இருங்க.. மேல சொன்னபடி, சில ரூல்ஸ் இருக்கு.
நீங்கள் முடித்த பின்னர்,

1. ஒவ்வொரு வரிசையிலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every Row should have the numbers 1 to 9 )
2. மேலிருந்து கீழாக ஒவ்வொரு கட்டத்திலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Eveர்y column should have the numbers 1 to 9)
3. பிரிக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு 3X3 கட்டங்களிலும்,1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every 3X3 table should have numbers 1 to 9)..

கேட்கும்போது , ஏதோ சாதாரண விஷயம் போலிருந்தாலும்.. விளையாடும்போது உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமாக இருக்கும்..
முயற்சித்து பாருங்களேன்..
சாம்பிளுக்கு ஒரு சூ டோ கு வை JPG ல் போட்டுள்ளேன்.. பதிவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்க..

மேலும் இந்த விளையாட்டு பற்றி பல வலைதளங்கள் உள்ளது..
கூகுள் துனையோடு "su do ku " என்று தேடிப்பாருங்கள்...!




நன்றி ! நன்றி ! நன்றி!

நன்றி ! நன்றி ! நன்றி!

175 நாள் விழாவில் நிறைய பேசுவேன்..இப்போதைக்கு இந்த போஸ்டர் மட்டும் தான்!!

வீ எம்

சிறுகதை - யாதார்த்தம்

வடபழனிக்கு ஒரு வேலையாக வந்தேன்..வந்ததே வந்தோம் முருகனை பார்த்துட்டு போகலாம்னு.. கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு , பிரகாரம் சுற்றிவிட்டு, ஒரமாக இடம் பார்த்து அமர்ந்தேன்..

எதேச்சையாக, என்னை கடந்து சென்ற ஒரு உருவத்தை பார்த்தேன். கருநீல புடவையில், சரியாக பார்க்கும் முன்பே என்னை கடந்துவிட்டாள், அவளாக இருக்குமோ? சரியாக பார்க்கலயே .. என்னையே நொந்துக்கொண்டேன். கொஞ்சம் வேகமா திரும்பி பார்த்திருக்கலாமே...

அவளாக இருக்க கூடாது என்று ஒரு பக்கம், ஆனால் பாழாய் போன மனது அவளாக இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டது...சரி, எப்படியும் சுற்றிக்கொண்டு இந்தப்பக்கம் தானே வரவேண்டும். எதிர்புறத்தை பார்த்து கண்கள் காத்துக்கொண்டிருந்தது, மனது மெல்ல மூண்றாண்டுகள் பின்னோக்கி சென்றது..

விசிட்டர் என்ற செய்தி கேட்டு, அலுவலக வரவேற்பறைக்கு சென்றேன்.. அங்கே HSBC அடையாள அட்டையுடன் ஒரு வாலிபர், நடுத்தர வயது பெரியவர் ஒருவர், சுமார் 23,24 வயது பெண் ஒருவரும் அமர்ந்திருக்க, இதில் யார் நம்மை பார்க்க, என்ற குழப்பத்தோடு, மூவருக்கும் நடுவே நின்று பொத்தாம்பொதுவாக ஐ ஆம் சுரேஷ் என்றேன்...
ஹலோ சார், மென்மையான குரலில் அந்த பென்..
இந்த பெண்ணா?? நம்மை பார்க்கவா? வியப்போடும் , தயக்கத்தோடும்..ஹலோ என்றேன்...
நீங்க.........?
என் பெயர் சுதா.. அறிமுகப்படுத்திக்கொண்டாள்..
என் குழப்பத்தை புரிந்துக்கொண்டிருப்பாள் போல, உடனடியாக உங்க நன்பன் குமார் அனுப்பினார், வேலை விஷயமாக.. சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

என் கல்லூரி நன்பன் குமார், நேற்று என்னை தொலைப்பேசியில் அழைத்து, தன் தூரத்து உறவுக்கார பெண் ஒருவர் வேலை தேடுவதாகவும், முடிந்த உதவியை செய்யும்படி கேட்டிருந்தான்.. ஒரளவுக்கு புரிந்துப்போனது..
வாருங்கள் என்று அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு கேண்டினுக்கு சென்றேன்..

டீ ஆர் காபி என்றேன்..

வேண்டாம் சார், நளினமாக மறுத்தாள்

பரவாயில்லை சொல்லுங்க, நோ பார்மாலிட்டிஸ் என்றேன்..

காபி என்றாள். இருவருக்கும் காபி சொல்லிவிட்டு அமர்ந்தோம்.

சார், குமார் சொல்லிருப்பாரு, வேலை விஷயமாக அடுத்த வாரம் தான் உங்களை பார்க்க சொன்னார், பட் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்..அதான் இப்பவே பார்த்துட்டு போகலாமேனு.. தயக்கமாக பேசினார்.

நோ பராப்ளம், சொல்லுங்க, என்ன படிச்சிருக்கீங்க, எனி எக்ஸ்பீரியன்ஸ் என்றேன்..

எம் சி யே சார், 2 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் சார், JAVAவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன் சார்.. சொல்லி முடித்தாள்.

வரும்போதே பை நிறைய எடுத்து வந்திருக்கீங்களா இல்லை வழியில சீப்பா இருக்குனு வாங்கிட்டு வந்தீங்களா??

சற்று குழப்பமாக பார்த்தாள்...என்னது சார்?

இல்லை, இவ்ளோ "சார்" சொல்றீங்ளே அதான் கேட்டேன்..

மெதுவாக சிரித்து வைத்தாள், சரியான கடி என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்.
சுரேஷ்னே கூப்பிடுங்க என்றேன்..

காபி வந்தது, பேசிக்கொண்டே இருவரும் குடித்து முடித்தோம்.. செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பரிமாறிக்கொண்டு விடைப்பெற்றார்.

மீண்டும் என் இடத்திற்கு வந்த அமர்ந்தேன்.. அவளை பற்றி அப்போது தான் சற்று யோசித்துப்பார்தேன்.அளவான உயரம், சுமார் என்று சொல்ல முடியாத அதே நேரத்தில் அழகு தேவதை என்றும் சொல்ல முடியாத, பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை நிச்சயம் திரும்பி பார்க்க செய்யும் வசீகரமான முகம். அழகாகத்தான் இருக்கிறாள். நினைவகளோடு வேலையில் மூழ்கிப்போனேன்..

மறுநாள் சுதாவிடம் இருந்து மின்னஞ்சல்,

ஹலோ சுரேஷ், தங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, காபிக்கும் சேர்த்துஇதனோடு என் பயோடேட்டா இனைத்துள்ளேன், மிக்க நன்றி, சுதா என்று சுருக்கமாக இருந்தது.

அவளின் பயோடேட்டாவை ஒருமுறை பார்த்துவிட்டு, சிறு மாற்றங்கள் செய்து, எங்கள் அலுவலக தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தேன்.

மறக்காமல் நான் செய்த மாற்றங்கள் குறித்தும், தேர்வுக் குழுவிற்கு அனுப்பியுள்ளதை பற்றியும் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்..

ஒரு சனிக்கிழமை காலை 8.30 மனி இருக்கும்.. எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் படுத்திருந்த என்னை செல்போன் மனி எழுப்பியது, எடுத்து ஹலோ என்றேன்.
ஹலோ சுரேஷ், சுதா ஹியர், குட் மார்னிங். சற்று சகஜமாகி இருந்தாள்..

ஹாய், குட் மார்னிங் எப்படி இருக்கீங்க.. என்ன ஆச்சு? நேர்முக தேர்வுக்கு அழைப்பு ஏதாச்சும் வந்ததா? ஆவலாக கேட்டேன்.

யெஸ், நேற்று மாலை உங்க எச்-ஆர் கிட்ட இருந்து போன் வந்தது, திங்கட்கிழமை பதினோரு மனிக்கு நேர்முக தேர்வு, உங்க கிட்ட சொல்லலாம்னு போன் பன்னேன்.

குட், ஆல் தி பெஸ்ட் , சில பொதுவான விஷயங்களை பேசிவிட்டு, நேர்முக தேர்வுக்கு சில குறிப்புகள் கொடுத்தேன்..

நேர்முக தேர்வு முடிந்தது.. நன்றாக செய்ததாகவும், தேர்வாகிவிட்டதாகவும் தொலைபேசியில் அழைத்து சொன்னாள், சந்தோஷமாக இருந்தது..

நான்கு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள், அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொண்டோம், நிறைய பேசினோம்.. ஒரிரு மாதங்களிலேயே நல்ல நன்பர்களாகிப்போனோம்..

நளினமாக உடையனிந்து அவள் கடக்கும் போது பலரின் பார்வை அவள் மேல் மொய்த்தது எனக்கு பொறாமையாகவும் இருந்தது

என்னடா மாப்ளே, உன்னை அடிக்கடி சுதா கூட பாக்கறோம்..என்ன மேட்டரு??? மச்சம்டா உனக்கு.. சூப்பர் ஆளுடா .. கலக்கு.. நன்பர்கள் நக்கலடித்தனர்.. டேய் அப்படியெல்லாம் இல்லடா , பொய் கோபம் காட்டினாலும் மனசுக்குள் சந்தோஷமாகவே இருந்தது..

ஆறு மாதங்கள் உருண்டோடியது, இந்த ஆறு மாதத்தில் இருவரும் இன்னும் மிக நெருங்கிய நன்பர்களாகி இருந்தோம்..வாங்க , போங்க எல்லாம் வா போ என்றானது. அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று நானும் , எனக்கு என்ன பிடிக்கும் என்று அவளும் விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு மிக நெருங்கிய நன்பர்களாகிப்போனோம்
சில முறை அவள் என் வீட்டிற்கும் , பல முறை அவள் வீட்டிற்கு நானும் சென்று வந்திருந்தோம்...

மேலும் 2 மாதங்களுக்கு பிறகு, ஒரு நாள் காண்டீனில், சமேசா ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில் ...
என்ன சுதா, அப்புறம் என்ன விஷயம்?
உங்கிட்ட பேசறதுக்கு எதுவும் இல்லையா? கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டாள்
அப்படி இல்லை , சரி சொல்லு, ..லாஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரும் போது அம்மா சொன்னாங்களே, அது என்ன?

...என்ன சொன்னாங்க? இது சுதாவின் எதிர்கேள்வி

நீயும் தானே அங்கே இருந்தே .... சுதாவின் திருமணம் பற்றிய பேச்சு வந்தது .. அவள் வாயாலேயே ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்த்து கேள்வியை வீசினேன்..

ஓ!! அதுவா, ஆமாம்பா உண்மையாதான்யா, எதிர் வீட்டு பசு நிஜமாவே ஒரே பிரசவத்துல 2 குட்டி போட்டுச்சு .. அமைதியாக சொல்லிவிட்டு ஒரு பார்வை பார்த்தாள்.

எனக்கு ரொம்ப முக்கியம் அது.. அந்த பசு 2 குட்டி போட்டா என்ன , 20 குட்டி போட்டாத்தான் எனக்கென்ன?

ஓ! அப்போ எங்க வீட்டுக்கு நீ வந்தா, எங்கம்மா உன்கிட்ட தேவையில்லத விஷயத்தை எல்லாம் பேசுறாங்கனு சொல்றீயா?.. என்னை வம்புக்கிழுத்தாள்.

ஐயோ என்னமா நீ, சரி சரி, உன் கல்யாண விஷயம்ப்பா... சொல்லிமுடித்துவிட்டு.. சே! என்ன மனுஷன்டா நீ, ஒரு பொன்னுகிட்ட பேசி விஷயத்தை வரவழைக்க முடியல . சரண்டர் ஆயிட்டே? மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..

ஹ்ம்ம்.. அதை நேரடியா கேட்க என்னடா(அப்பப்போ இதுவும் உண்டு) தயக்கம் உனக்கு ? மீண்டும் கேள்வி வந்தது

அம்மா தாயே, கேள்விக்கு எதிர் கேள்வி கேட்காம பதில் சொல்லமாட்டீயா நீ?

ஆர்டர் பன்ன சமோசா வந்தது

பதில் வரலயே என்றவாறே சுமதியை பார்த்துக்கொண்டே சமாசாவை கையிலெடுத்தேன்...
ஒரு வாரமாவே இந்த பேச்சு வீட்ல போயிட்டு இருக்கு சுரேஷ்.
நீ என்ன சொன்னே சுதா? சமோசாவை கடித்துக்கொண்டே கேட்டேன்..

நான் எதுவும் சொல்லலயே மா, எனக்கும் சேர்த்து தானே நீ சமோசா சொன்னே? கடித்தாள்

ப்ளீஸ், சற்று கோபமாகவே சொன்னேன்...

சரி சரி , சாரி , சொல்லுங்க என்றாள்

நீ தான் சொல்லனும் , நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்

பொன்னுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நேரம் வந்ததா பெத்தவங்க நினைக்கிறாங்க, இதுல நான் என்ன சொல்லட்டும்.. அது சரி உனக்கு எப்போடா? பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா இல்லயா, யாரந்த அதிர்ஷ்டசாலி?

தங்கை கீதா இருக்காளே , அவளுக்கு பார்த்துட்டு இருக்கோம், உனக்குத்தான் தெரியுமே, எதுவும் சரியா அமையல..அதான் அம்மா இப்போ ரெண்டு பேருக்கும் சேர்த்து பார்க்கலாம், யாருக்கு முதல்ல முடியுதோ , முடியட்டும்னு சொன்னங்க. நேத்து தான் பேசிகிட்டாங்க

அப்போ கூடிய சீக்கிரமா அந்த அதிர்ஷ்டசாலி வருவானு சொல்லு!

ஹே, அதென்ன அப்போ இருந்து "அதிர்ஷ்டசாலி , அதிர்ஷ்டசாலி":னு...அதெல்லாம் ஒன்னுமில்லை..அவள் அப்படி சொல்வதை மனதுக்குள் ரசித்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை

இல்லை சுரேஷ், உன்கிட்ட இவ்வளவு நாள் பழகியதிலிருந்து சொல்றேன், உனக்கு நல்ல மனசு, கோபம் வந்து பார்த்ததில்லை, ஒரு பிரச்சனையை அடுத்தவங்க இடத்திலும் இருந்து பார்க்கும் குணம், வேலையில சின்சியாரிட்டி.. ரியலி டா, ஷீ ஷ¤ட் பி லக்கி .. சற்று உணர்ச்சிவசபட்டுத்தான் போனாள்.

மீதமிருந்த சமோசா, டீயை முடித்துவிட்டு, கிளம்பினோம்..
இரவு 10.00 மணி, வீட்டில் படுத்திருந்த எனக்கு அவள் சொல்லிய வார்த்தைகள் இதமான இருந்தது... கைத்தொலைபேசி எடுத்து, "என்ன செய்கிறாய்" என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

ரொம்ப வெயிலடிக்குது அதான் போயி வத்தல் காய போட்டுட்டு வந்தேன்.. நக்கலாக பதில் வந்தது ..

"என்ன கிண்டலா" மற்றொரு பதில் அனுப்பினேன்.

பின்ன ராத்திரி 10 மனிக்கு என்ன பன்னுவாங்க... இதென்ன கேள்வி, படுத்துட்டு இருக்கேன்டா, பதில் வந்தது.

சரி, சாயந்திரம் அதிஷ்டசாலினு சொன்னியே சுதா..,

ஆமா சொன்னேன்பா..என்ன அதுக்கு..

இல்லை.. நாம ஏன் அந்த அதிர்ஷ்டசாலியா இருக்ககூடாதுனு எப்பவாச்சும் நெனச்சிருக்கியா? எதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டேன்..

சற்று நேரம் ஏதும் பதிலில்லை

தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுடு, மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

இல்லப்பா, தப்பு இல்லை ..நாளைக்கு ஆபிஸ்ல பேசாலாமே , தூக்கம் வருதுப்பா..

குட் நைட் என்றேன்...

மறுநாள் அலுவலகத்தில் மீண்டும் ஆரம்பித்தேன். என்ன சுதா நேற்று நான் கேட்டதை தப்பா எடுத்துகிட்டியா? சாரிம்மா ..ஹே சுரேஷ் , அதெல்லாம் ஒன்னுமில்லை.. தெரியலமா.. எனக்கு இதுவரைக்கும் காதல்ன்ற என்னமே வந்ததில்லை.. கல்யாணமே கூட ஒன்னும் பெரிய விஷயமா எனக்கு படலமா.. ஏதோ வீட்ல சொல்லுவாங்க பன்னிக்குவேன்..அவ்ளோதான்.. சரி அதை விடு ..அப்புறம் ஏதோ ப்ராஜக்ட் விஷயமா சிங்கபூர் போக வேண்டியிருக்கும்னு சொன்னியே என்னாச்சு? பேச்சை மாற்றினாள்

.கன்·பார்ம்ட், பதினெட்டாம் தேதி கிளம்பனும் , இன்னும் 11 நாள் இருக்குமா..சிறுது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினோம்..
மொத்ததில் நாசூக்காக நான் காதலை சொன்னதைப்போலவே அவளும் நாசூக்காக மறுத்துவிட்டாள்...ஆனால் நட்பில் எந்த விரிசலும் விழவில்லை, அதுவரை சந்தோஷம்.

சிங்கப்பூர் பயணத்துக்கான வேலைகளில் நாட்கள் வேகமாக ஓடியது... நடுவிலே சுதாவிற்கு java program ல் ஒரு பிரச்சனை. குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போய்விடுமோ என என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட, இரண்டு நாட்கள் சனி , ஞாயிறு இருவரும் அலுவலகம் வந்து எட்டு மனி நேரம் அவளுடனேயே செலவழித்து வேலையை முடித்துக்கொடுத்தேன்

மறுநாள் கிளம்ப வேண்டும், படுக்கையில் இருந்தபடியே, எல்லாம் எடுத்து வைத்துவிட்டேனா என்று யோசனையில் இருந்தவனை எஸ்எம்எஸ் சத்தம் அழைத்தது..
சுதாவிடம் இருந்து தான், ஒற்றை வரியில், "சுரேஷ்" என்று,என்னமா? பதில் அனுப்பினேன்..நாளைக்கு இந்த நேரம் நீ ரொம்ப தூரத்துல இருப்பே இல்லையா?ஆமாம் சுதா ஒரு மாதம் இல்லயா? என்னை மறந்துடுவீயா சுரேஷ்?
ஸ்டுப்பிட்..என்ன பேத்தல் இது, எப்படி உன்னை மறப்பேன்..
ஹ்ம்ம்..என்னமோ மாதிரி இருக்குடா, பர்ஸ்ட் டைம் நம்ம நட்பு ஆரம்பிச்சு, இப்படி போறே இல்லயா?ஆமாம்மா எனக்கும்தான் கஷ்டமா இருக்கு..பட் அபிஷியல் என்ன பன்னட்டும்?சரிப்பா மணி பத்து, நீ தூங்கு, காலையில நிறைய வேலை இருக்கும்.. ட்ராவல் பன்னனும்.சரிம்மா குட்நைட்

மறுநாள் காலை அனைவருக்கும் சொல்லிவிட்டு, விமான நிலைய செக்-அப் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு காத்திருந்த நேரத்தில் மெசேஜ் வந்தது சுதாவிடமிருந்து.,.
சுரேஷ், நீ சொன்னது மாதிரி நடக்குமா..?

புரிந்துக்கொண்டபோதிலும் காட்டிக்கொள்ளாமல் பதில் அனுப்பினேன், என்ன நான் சொன்னது?

அந்த அதிர்ஷ்டசாலியா ஏன் நான் இருக்ககூடாது சுரேஷ், பதில் வந்தது..
சந்தோஷமாக இருந்தது..
வெறுமனே பை, டேக் கேர்மா மெசேஜ் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்தேன்..
சுதாவை விட்டு பல மைல் தூரம் கடல் தாண்டி வந்துவிட்டேன்..
எஸ் எம் எஸ் தொடர முடியவில்லை என்ற போதிலும்.. எங்கள் அலுவலகத்தில் உள்ள இன்டர்னல் சாட்டிங் சிஸ்டம் மற்றும் மின்ஞசல் மூலம் தொடர்பு கொண்டோம்..
சுதாவிடம் இருந்து ஒரு நாள் தொலைப்பேசி வந்தது...
ஷேம நல விசாரிப்புகள் முடிந்து, விஷயத்துக்கு வந்தாள்..
சுரேஷ், என் கடைசி எஸ்எம்எஸ் க்கு நீ எதுவும் சொல்லலயே..
என்ன சொல்றதுனு தெரியலயே..
ஏன்? நீ தானே ஆரம்பிச்சு வெச்சே.. நேரடியாக கேட்டாள்..ஓ! அப்போ உனக்கே அது தோனல..நான் கேட்டதாலே. வந்ததா .. ?
ஏ..அப்படி இல்லை..எனக்கும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..
ஆமா சுதா மனசுல தோனுச்சு சொல்லிட்டேன்.. அப்புறம் யோசிச்சா...தங்கச்சி இருக்கா ..என்ன பன்றதுஇதெல்லாம் சரியா வருமானு இருக்கு.. ஒன்னுமே புரியலை..
அப்போ நீ இல்லைனு சொல்லிட்டேனு எடுத்துக்கவா? பாவமாக கேட்டாள்..
இல்ல இல்லைமா, சுதா, இல்லைனு சொல்ல முடியல..அதே நேரம் எப்படி இது நடக்கும்னு தெரியல..என்னமோ மாதிரி இருக்குமா..
சரி , யோசிச்சு சொல்லுப்பா..சற்று நேரம் பேசிவிட்டு தொலைப்பேசியை துண்டித்தோம்..
பார்காமலே காதல், நாக்கறுத்த காதல், மூக்குடைத்த காதலுக்கிடையில், ஐ லவ் யூ சொல்லாமல்..கடிதம், ரோஜா தராமல்.. மெல்ல ஒரு காதல் ஆரம்பித்திருந்தது...
பனி முடிந்து, சென்னை வந்தேன்..
முன்பெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு முறை சந்தித்துக்கொண்டவர்கள், இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தித்து கொள்ள காரணத்தை ஏற்படுத்திகொண்டோம்..
என் மனது மட்டும் நிலையாக இல்லை.. குரங்கு மனசு என்றால் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது..
இது நடக்குமா, நிச்சயமா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க .. தங்கை வேற கல்யாண வயசுல ... என்ன பன்றது சுதாவை ஏமாத்தற மாதிரி இருக்குமா... இல்லை வேண்டாம்னு சொல்லிடலாமா? அதற்கும் மனசு வரலயே.....
ஓவ்வொரு முறை பேசும்போதும் அவள் கேட்பதும் , நான் குழப்பமாக பதில் சொல்வதும்..இப்படியே போனது..
ஒரு முறை அப்படி பேசும் போது..
என்ன சுரேஷ்..நீ எனக்குத்தானே? நேரடியாக கேட்டாள்..என்ன சொல்றதுனு தெரியலயே சுதா ..உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? கேட்டேன்இல்லைப்பா ஒத்துக்க மாட்டாங்க..ஆனா எனக்கு நீ வேணுமே, கனவனாக... நீ மட்டும் சரினு தெளிவா சொல்லிட்டா , நான் எங்க வீட்ல கேட்பேன்... ஆனா உன் கிட்ட இருந்தே சரினு பதில் வரலயே..
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிபோனது..
ஒரு வெள்ளிகிழமை பேசினோம், சரி சுதா நான் ஞாயிற்றுகிழமை எங்க வீட்ல பேசிடறேன்.. சரிப்பா, மிகவும் மகிழ்ந்து போனாள்..
முதல் முறையாக ஐ லவ் யூ சொன்னேன்.. மீ டு, அவளும் சொன்னாள்..
இருவருமே அன்று மாலை நடக்கபோவதை அப்போது அறியவில்லை..
வீட்டிற்கு வந்தேன்.. மணி 9.30, வழக்கமாக 7.30 மனிக்கெல்லாம் வீட்டுக்கு வரும் கீதா இன்னும் வரவில்லை.. அனைவரும் பதட்டமாகி போனோம்..
எங்கெல்லாமோ தேடியும் 11.30 மனிவரை எந்த செய்தியும் இல்லை..
11.45 ஒரு போன், யாரோ ஒருவன் பேசினான்... கீதாவும் நானும் நான்கு மாதங்களாக காதலித்தோம்,. நீங்க ஒத்துக்கமாட்டீங்கனு தெரியும்.. அதனால், மதியம் ஒரு கோவிலில் திருமணம் செய்துக்கொண்டோம்..
தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது..

வீடே சூனியம் பிடித்தது போலாகியது.. உறவினர்கள் வந்தனர்.. விசாரித்ததில் மறுநாள் கீதா இருக்குமிடம் தெரிந்தது.. போய் பேசி பார்த்தோம் ..வரவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்..

மகளே இல்லை என உதறிவிட்டு அப்பா அம்மா இருவரும் வந்துவிட்டனர்..

அதே கவலையில் அம்மாவிற்கு உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்..

இரண்டே நாளில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது..

இரண்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு , அம்மா கொஞ்சம் தேறி வீட்டுக்கு வந்ததும் அலுவலகம் வந்தேன்..
இடையிலே சுதாவிடமிருந்து போன் வந்தது..

அவசர வேலையாக சேலம் போகிறேன்..வந்து சொல்கிறேன்.. பொய் சொன்னேன்.... வீட்ல பேசிட்டியா என்ற கேள்விக்கு கூட, வந்து சொல்கிறேன் என கூறிவிட்டேன்

புதன்கிழமை இருவரும் தனியாக சந்திதோம்.என்னப்பா ஆச்சு, எனி ப்ராப்ளம்? முகமே சரியில்லையே... என்னப்பா.. ஒத்துக்கலயா?? திட்டுனாங்களா??

என்னை சகஜத்திற்கு கொண்டு வரவா அல்லது ஆழம் பார்க்கவா தெரியவில்லை, அடிக்கடி கேட்கும் அந்த இரண்டு கேள்விகளை கேட்டாள்
நான் யார் செல்லம்? நீ யார் செல்லம்.. ?

மற்ற நேரங்களில் சொல்வது போல "என் செல்லம்" "உன் செல்லம்" என்று சொல்லாமல் அவளை பார்த்தபோதே, புரிந்துக்கொண்டாள்
என்ன ஆச்சு, எதுவா இருந்தாலும் சொல்லு..
அனைத்தையும் சொல்லி முடித்தேன்.. கடைசியாக அம்மா என்னை அழைத்து , அவ தான் குடும்ப மானத்தை வாங்கிட்டா.. நீ அப்படி எதுவும் செய்ய மாட்டேனு தெரியும்.. இருந்தாலும் கேக்கறேன்பா.. என் தலைல கை வெச்சு சத்தியம் பன்னு , அப்படி எதுவும் பன்ன மாட்டேனு.. வேறு வழி தெரியாமல் சத்தியம் செய்ததையும் சேர்த்தே சொல்லி முடித்தேன்..
அவள் கண்கள் கலங்கிபோனது, மனதை போலவே..

4 நாட்கள் கழித்து சற்று தெளிந்த பிறகு,

என்னப்பா, நிச்சயமா நடக்காதா? சுதா தான் ஆரம்பித்த்தாள்..

தெரியலமா..என்ன பன்னட்டும்...?
அம்மாவ நினைத்தா..ஏற்கனவே உடம்பு முடியாக இருக்காங்க..சுதா, தன் பொன்னு இப்படி பன்னிட்டாளேனு நினைச்சு அம்மா இப்படி ஆயிட்டாங்க..அதே மாதிரி தானே aunty க்கும் இருக்கும்..

ஆமா சுரேஷ்..என்னப்பா பன்னலாம்..நீயே சொல்லுமா...இல்லப்பா நீ சொல்லு..

எனக்கு என்னமோ இது நடக்காதுனு படுது சுதா...அப்போ உங்க வீட்ல பாக்கற பொன்னை..இழுத்தாள்

இல்லைமா எப்படி முடியும் என்னால? உன்னால முடியுமா??என்னை ஒரு மாதிரி பார்த்தாள்..
நிச்சயமா இப்போ போய் வீட்ல இதல்லாம் சொல்ல முடியாது .. அதே நேரத்துல வேற கல்யானமும் பன்னிக்க முடியாது.. இப்படியே கல்யாணம் பன்னிக்காம கடைசி வரைக்கும் இருந்திடலாமா?

தலையாட்டினாள்.........

அன்றோடு அடிக்கடி பார்த்துக்கொள்வதெல்லாம் நின்று போனது....

மூன்று மாதத்தில் எனக்கு வேறொரு கம்பெனியில் வேலை கிடைத்து , இந்த வேலையை ராஜினாம செய்துவிட்டு சென்றேன்.. கடைசியாக அவள் என்னிடம் சொன்னது "என்னை மறந்துடாதே சுரேஷ்.."

இரண்டு மூன்று மாதங்கள் அவளோடு மின்னஞ்சல், தொலைப்பேசி மூலம் தொடர்பிருந்தது..,பின்பு அதுவும் நின்று போனது..

ஒரு வருடத்துக்கு பிறகு என் நன்பன் மூலம் அவளுக்கு திருமணமான விஷயம் தெரிந்துக்கொண்டேன்..

மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தேன்..
கண்கள் கலங்கி இருந்தது...

இதோ நான் சற்று முன்பு பார்த்த பெண் .. அவளே தான்...சுதா ..சுதாவே தான்...
பார்க்கலாமா , வேண்டாமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளும் என்னை பார்த்துவிட்டாள்..
அருகில் வந்தாள்.. என்ன பேசுவதென்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்...அவள் தான் ஆரம்பித்தாள் ... எப்படி இருக்கே சுரேஷ்.....??ஹ்ம்ம்.. நீ??இருக்கேன் ..

என்னங்க இங்கே வாங்க.. சற்று தள்ளி நின்று யாரோடோ பேசிக்கொண்டிருந்தவரை அழைத்தாள்...

இது என் ·பிரண்ட் சுரேஷ், சுரேஷ் இவர் என் கனவர் ஸ்ரீராம் , அறிமுகப்படுத்தி வைத்தாள்.. அவரும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு , சுதா பேசிட்டு இரு நான் அவரை அனுப்பிட்டு வரேன்.. என்னிடமும் எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கொண்டு, ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவரை நோக்கி நடந்தார்...

கல்யாணம் .......... ? இழுத்தாள் இல்லை என்பது போல தலையாட்டினேன்..
கீதா.......?ஹ்ம்ம்..நல்லா இருக்கா.. போன மாசம் தான் கொழந்தை பொறந்தது..வேற என்ன
பேசுவதென்று புரியாமல் மெளனமாகவே இருந்தோம்... இருவர் கண்கள் கலங்கி இருந்தது இருவருக்கு மட்டுமே தெரிந்தது...

அதற்குள் ஸ்ரீராம் வந்தார்.. சற்று நேரம் என்னிடம் பேசிவிட்டு.. , இருவரும் விடைப்பெற்றுக்கொண்டனர்..ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சுரேஷ்... ஸ்ரீராம் அழைத்தார்... சரிங்க என்றேன்..

மெதுவாக நடந்து கோயில் வாசலை நோக்கி வந்தேன்

கீதாக்கு குழந்தை பிறந்ததை சொன்னேனே, அப்பவே எனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமுனு சொல்லியிருக்கலாமோ????

சொல்லாம விட்டது நல்லதா?? தப்பா?? மனதிற்க்குள் போராட்டம்..

திரும்பிப்பார்த்தேன் .. அமைதியே உருவான முகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தார் முருகர்...

(வார்த்தைகள் - 1976)

சிறுகதை - மாயவரத்தான்

சென்னை மந்தைவெளி பேருந்து நிறுத்தம். மாலை சுமார் 5.30 மணி..
ஐயா, வணக்கமுங்க.. இந்த விலாசத்துக்கு எப்படி போவோனுங்க?

குரல் கேட்டு, வெகு சுவாரஸ்யமாக அப்போது தான் பார்த்துவிட்டு வந்த திரைப்படத்தை பற்றி அலசிக்கொண்டிருத்த இரண்டு இளைஞர்களும் எரிச்சலாக திரும்பிப்பார்த்தார்கள்..

கையில் கசங்கிய காகிததுண்டுடன் அந்த பெரியவர் நின்றுக்கொண்டிருந்தார்..கலைந்த தலை, மெல்லிய கூன் விழுந்த தேகம், கறுத்த நிறம், பழுப்பேறிய வேட்டி, சட்டை, தாடி , மீசையுடன் பார்பதற்கே சற்று முகம் சுளிக்கும்படி தான் இருந்தார்.. கையில் ஒரு மஞ்ச கலர் துனிப்பை... வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய சிரித்தவாறே "இந்த வெலாசம் எங்க இருக்கு தம்பி..."

வேண்டா வெறுப்பாக, குடு இப்படி என்று துண்டு சீட்டை வாங்கி பார்த்த இருவரில் ஒருவன்,

என்னய்யா இது ஈரமா, பாதி எழுத்து அழிஞ்சு போயிருக்கு, தெரு பேர கானோம், சைதாப்பேட்டைனு மட்டும் இருக்கு..,... தண்ணில போட்டுடியா??

இல்லை தம்பி, பஸ்ல வந்த கசகசப்பு, வேர்வைல நெனஞ்சு போச்சுப்பா..

அவர் செல்லி முடித்த அடுத்த நொடியில், வலது கையிலிருந்த காகித துண்டை இடது கைக்கு மாற்றிக்கொண்டான். மேலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவரிடமே திருப்பி கொடுத்தான்.. திருப்பி கொடுத்தான் என்பதை விட , அவர் மேல் வீசினான் என்று தான் சொல்ல வேண்டும்..

சொல்லுப்பா, எப்படி போவனும்? ஒரு மைல் தூரம் இருக்குமா? அப்பாவியாக கேட்டார்.

ஹ்ம்ம்ம்.. ஒரு மைல் தூரமில்லை, ரெண்டு சேவல் தூரம் போகனும்.. நக்கலடித்து விட்டு சிரித்தான்..கூட இருந்தவனும் சேர்ந்துக்கொண்டான்..

அவர்களின் நையாண்டியை கூட புரிந்துகொள்ளாமல், பதிலுக்காக காத்திருந்தார் பெரியவர்...

எந்த ஊருயா நீ? சைதாபேட்டைல இருக்க தெருவுக்கு மந்தைவெளில வந்து விசாரிச்சு உயிரை வாங்குற..

மாயவரம் பக்கம் தம்பி.. ஒரு சின்ன கிராமம்..

ஆமா, ஆமா , நீ இருக்க லட்சனத்துக்கு சின்ன கிராமத்துல இல்லாம, போயஸ் கார்டன்லயா இருப்பே??மூஞ்சி , மொகரைய பாரு.. எப்படிய்யா இங்கே வந்தே??

கோயம்பேடு வந்து எறங்கி ஒரு தம்பிய கேட்டேன்..அந்த தம்பி தான் ஒரு பஸ்ல ஏத்திவுட்டுச்சு.. இங்கே வந்துட்டேன்..

யோவ், பஸ் சைதாப்பேட்டை வந்தப்ப என்ன பன்னிட்டு இருந்தே?? எறங்கி தொலச்சி இருக்க வேண்டியது தானே..

தெரியலயேப்பா.. ஒடம்பு வலி...அப்டியே கண்ணு அசந்துட்டேன்..

நல்ல ஆளுயா நீ.. அப்படி ஓரமா நில்லு, சைதாபேட்டைனு போட்டு பஸ் வரும்..ஏறிப்போ..

சரிப்பா, ரொம்ப நன்றி... அமைதியாக நின்றார் பெரியவர்...

இருவரும் மீண்டும் திரை விமர்சனத்தை தொடர்ந்தனர்...தம்பி , மீண்டும் இடைமறித்தார்..

என்னய்யா ரோதனையா போச்சு உன்கூட..என்ன வேணும்? டீ சாப்பிட 2 ரூ வேணுமா???தம்பி,

சாமி புன்னியத்துல காசு கொஞ்சம் இருக்குப்பா... அது வேணாம்..

ஆமா, இவரு ரிஸர்வ் பேங்க் கவர்னர்.. நக்கலடித்தான்.. சரி என்ன சொல்லு...

எழுதப்படிக்க தெரியாதுப்பா, கொஞ்சம் சைதாப்பேட்டை பஸ் வந்தா சொல்லுங்கப்பா...

ஆமாய்யா, மாயவரத்து பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு வர காட்டானுங்களுக்கு வழி சொல்லி பஸ் ஏத்திவிடத்தான் இவன் மந்தைவெளியிலும் , நான் அன்னா நகர்லயும் இருக்கோம் பாரு....

தம்பி, கொஞ்சம் தயவு பன்னுங்கப்பா..

யோவ், இப்ப எதுக்கு நீ அங்கே இருந்து இவ்ளோ தூரம் இங்கே சென்னைக்கு வந்தே... நீயெல்லாம் வரலைனு சென்னை அழுதுச்சா?? வந்துடறானுங்க பாரு ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு, குளிப்பானுங்களோ , மாட்டானுங்களோ.. அழுக்கு துனிய போட்டுகிட்டு... பட்டிக்காட்டானுங்க..
மானம் பாத்த பூமி , மழை இல்லாம பட்டுப்போச்சுய்யா.. அறுப்பு இல்ல, கழுனி வேலையுமில்ல..வவுறு காயுது.. எங்க பிரசிடென்ட் ஐயா தான் மெட்ராஸ்ல கல்லு ஒடைக்கற வேலை இருக்கு போய் பொழச்சிக்கோடனு வெலாசம் கொடுத்து அனுப்பி வெச்சார்... பொறுப்பாக பதில் சொன்னார்...

அவர் சொல்லியதை இவர்கள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.. அவர்கள் கவனமெல்லாம் சாலையை கடக்க எதிர் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த அந்த இரண்டு நவநாகரீக காலேஜ் பெண்கள் மீதே இருந்தது...

டேய் மாப்ளே, அங்க பாருடா ரெண்டு சூப்பர் ·பிகர் வருது.. அந்த மஞ்சள் சுடிதார் சூப்பர்டா ..டேய் அதவிட பச்சை டீ சர்ட், ஜீன்ஸ் போட்டிருக்காளே அவ சூப்பர்டா... பஸ் ஸ்டாப்புக்கு தான் வராங்கடா... கவர் பண்ணமுடியுதானு பாரு...

தம்பி... பஸ் வந்தா... பெரியவர் இடைமறித்தார்...

அட, இந்தாளு வேற .. யோவ்..அப்படி ஓரமா போயி நில்லு வந்தா சொல்றேன், ஏறிப்போ... போயா..கொஞ்சம் தூர போய் நில்லு.. தொன தொனனு அறுக்காத .. புரியுதா..

டேய் இன்னும் கொஞ்சம் தூர போய் நிக்க சொல்லுடா அந்தாள.. பிகருங்க வர நேரத்துல அவன் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தா நம்ம இமேஜ் என்ன மச்சி ஆகறது... மந்தைவெளிகாரன் எரிச்சலோடு சொன்னான்..

இரண்டு பெண்களும் ஒரு வழியாக சாலையை கடந்து வந்து , இவர்களுக்கு ஒரு 10 அடி தள்ளி நின்றார்கள்...

இருவரில் ஒருவன் சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டான், மற்றொருவன் ஒரு படி மேலே போய் பாக்கெட்டில் இருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து மாட்டிகொண்டான்...

மாப்ள, ஒரு தம் போடலாமாடா.. ஸ்டைலா ஒரு தம் போட்ட சூப்பரா இருக்கும்டா.. நிச்சயம் நம்மள பார்பாளுங்க... என்ன சொல்ற...

எதிர் திசையில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று சிகரெட் வாங்கி பற்றிவைத்து புகை விட்டார்கள்...aனால் இந்த பெண்கள் தான் அவர்களை கண்டுக்கொண்டாதாகவே தெரியவில்லை...
அதுவரை வேறொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் இந்த பக்கம் திரும்பி அவர்கள் இல்லாததை கண்டு திகைத்துப்போனார்.. இப்போ யாரை கேட்பது என்று சுற்றுமுற்றும் பார்த்தவர் கண்களில் அந்த பெண்கள் பட்டனர்..
அருகே சென்றார்..

தாயி, கொஞ்சம் சேதாபேட்டை பஸ் வந்தா சொல்லுங்க தாயி.. பாவமாக சொன்னார்

இரண்டு பெண்களும் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் சற்று தள்ளி நின்றனர்..

பெரியவர் சற்று நெருங்கி..அம்மாடி கண்ணுங்களா படிக்கத்தெரியாதாவன்மா ..ஒத்தாசை பன்னுங்கம்மா.. கெஞ்சும் தொனியில் கேட்டார்.

ஒ ! காட், வாட் இஸ் திஸ் நியூசன்ஸ், ஹைலி இர்ர்ரிடேட்டிங் யா... நுனி நாக்கு ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினாள் ஜீன்ஸ் போட்டவள்...

யெஸ், இதுக்கு தான் ஆட்டோல போலாம்னு சொன்னே.. கேட்டியா , அந்தாளு மூஞ்சியும் , துனியும், கொமட்டிட்டு வருதுடி.. ·பீல் லைக் வாமிட்டிங், யூ நோ !! ஒத்து ஊதினாள் சுடிதார்..

இன்னமும் அவர்கள் பதிலுக்கு காத்திருந்தார் பெரியவர்...

கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம, சே.. இதுக்கு தான்யா இந்த வில்லேஜ் ஆளுங்கள சிட்டிக்குள்ள வர கவர்மெண்ட் தடை போடனும்.. பேசிக்கொண்டே இன்னும் சற்று தள்ளிப்போய் நின்றுக்கொண்டனர்...

டேய்! அங்க பாருடா அந்த நாட்டுபுறத்தான் அந்த பிகருங்கள பிடிச்சிக்கிட்டான்.. நல்ல வேணும் அதுங்களுக்கு.. இவ்ளோ ஸ்மார்ட்டா ரெண்டு பேரு லுக் விட்டுட்டு இருக்கோம்.. நம்ம பக்கமே திரும்பாம...நக்கல் புடிச்சவளுங்க...நல்லா வேனும்... அல்ப சந்ஷோசம் அடைந்தார்கள் அந்த இரண்டு இளைஞர்கள்..

பெரியவர் அங்கிருந்த மேலும் நாலைந்து பேரிடம் கேட்டு பார்த்தார்...
யோவ் தூர போயா,

தள்ளி நில்லுயா வந்தா சொல்றேன்,

கழுத்தறுப்பு... நானே அண்ணா நகர் பஸ் எப்பவரும்னு தெரியாம நிக்கறேன்,

பெரிசு, ஒதுங்கி நில்லு... வந்தா சொல்லுவாங்க..

இப்படிபட்ட பதிலே வந்தது.... பாவமாக சற்று ஒதுங்கி நின்றார்.. யாரவது சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில்...


ஒரு பேருந்து வந்து நின்றது... அது சைதாப்பேட்டை போகுமா? பெரியவர் தவித்துப்போய் விட்டார்
ஐயா இது போவுமா, போவுமா அனைவரிடமும் கேட்டுப்பார்த்தார்.....பதில் வரவில்லை..

அனைவரும் அந்த பேருந்தில் ஏறுவதிலும்.. பின்னால் வரும் அடுத்த பேருந்தை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்..

பெரிசு, இது போவாது இது அன்னா நகர் போது... அதோ பின்னாடி வருது பாரு அது போவும் ..போ .. யாரோ ஒருவர் சொல்லிவிட்டு முதல் பேருந்தில் ஏறினார்...

பெரியவர் பின்னால் நிற்கும் இரண்டாவது பேருந்தை நோக்கிச்சென்றார்...

ஜீண்ஸ¤ம், சுடிதாரும் கூட முதல் பேருந்தில் ஏறி ஜன்னலோரும் இருக்கையில் அமர்ந்தார்கள்..

இளைஞர்களும் சுறுசுறுப்பானார்கள், டேய் உனக்கு பஸ் வந்தாச்சு... ·பிகருங்க கூட அதுலதாண்டா ஏறுதுங்க .. போய் ஏறு .. என்ஜாய் பன்னு,

சரிடா அப்புறம் நான் கிளம்பறேன்... நாளக்கு காலைல மறக்காம வீட்டுக்கு வா..

டேய் மாப்ள சீக்கிரம் ஓடுடா வண்டிய எடுத்துட்டான்... சொல்லிக்கொண்டே , பக்கத்து சந்தில் சென்று மறைந்தான் ஒருவன் மந்தைவெளிகாரன்...

ஓடி வந்தவன் ஜன்னல் கம்பியை பிடித்து ..லாவகமாக வலதுகாலை படிக்கட்டின் நுனியில் வைக்கவும், டிரைவர் ஆக்ஸிலேட்ரை வேகமாக மிதிக்கவும்.. எதிர்பாராதவிதமாக கால் இடறி அவன் கீழே விழ .. ஒரு சில மனித்துளியில் அனத்தும் நடந்துவிட்டது.....
கீழே விழுந்தவன் உருண்டு போய் ஓரமாக இருந்த ஒரு பாறையில் தலை மோதி, நினைவிழந்து கிடந்தான்.. பின்னந்தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது...
நிறுத்ததில் இருந்து ஒரு இருவது அடி தள்ளி முதல் பேருந்து சடன் பிரேக் அடித்து நின்றது .. இரண்டாவது பேருந்தும் பின்னாலேயே நின்றது..

கூட்டம் கூடிவிட்டது...
மூச்சிருக்கா பாரு ,

போலிஸ் கேஸ் ஆக போதுப்பா.. பாத்து..

அய்யோ , யாரு பெத்த புள்ளயோ.. பாவம்...

இவனுங்க எல்லாம் இப்படித்தான் பா, வண்டி நிக்கற வரைக்கும் ஸ்டைலா பாக்க வேண்டியது.. கிளம்பின உடனே வந்து ஏறவேண்டியது..ஹீரோனு நினைப்பு...

உயிர் இருக்குய்யா, கொஞ்சம் தள்ளுங்கப்பா...காத்து விடுங்க..

பல விதமான குரல்கள் வந்த வண்ணம் இருந்தது...

யாராச்சும் ஒரு துணி இருந்தா குடுங்கப்பா ... தலைல ஒரு கட்டு போட்டு கொஞ்சம் ரத்ததை நிறுத்தலாம்.. யாரோ ஒருவர் சொல்ல .. அவரவர் மற்றவரை பார்த்தார்கள்..யார் தருவார்கள் என்று..

ஒருவன் தன் கைக்குட்டையை நீட்டினான்.. ஏம்ப்பா , இதை வெச்சி கட்டி பிரயோஜனமில்லை... கொஞ்சம் பெரிய துனியா வேனும்..

முதல் பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த ஒருத்தர்... ஏம்மா அந்த மஞ்ச துப்பட்டாவ கொஞ்சம் குடும்மா...

கேட்காதது போல், வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாள் மஞ்ச சுடிதார்..

சரி சரி ஏறுங்கப்பா..நாம கிளம்பலாம்... மணியாச்சு ... ஆறு மணிக்கெல்லாம் வடபழனி டிப்போ போகனும்..ஏற்கனவே லேட்டு... இரண்டாவது பேருந்து கண்டக்டர் குரல் கொடுத்தார்...

யோவ், பெரிசு.. எங்க எறங்கி போற?? சைதாப்பேட்டை தானே கேட்ட ..ஏறு, ஏறுய்யா... அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியாது.. லேட்டாகும்... ஏறு...யோவ்.... கண்டக்டர் குரல் கொடுக்க அதை காதில் வாங்காமலேயே இறங்கினார் பெரியவர்...

அடிப்பட்டவனுக்கு அருகில் வந்தார்.. இன்னமும் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது..

இந்தாங்கய்யா.. இதை வெச்சி கட்டி அந்த ரத்ததை கொஞ்சம் நிறுத்துப்பா... மஞ்ச பையில் வைத்திருந்த ஒரே வேட்டியை எடுத்து நீட்டினார் அந்த பெரியவர்...

என்னய்யா புதுசா இருக்கே?? யாரோ ஒருவன் கேட்டான்..

ஆமாங்க, நாளைக்கு மொத தடவையா வேலைக்கு போறப்ப கட்டிக்கலாமுனு நல்லா தோச்சி , இஸ்திரி போட்டு எடுத்துட்டு வந்தேன்யா... பரவல்ல... நான் பாத்துகறேன்.. நீ கட்டுய்யா..ரத்தம் நிக்கட்டும்... கட்டுபோட்டு ஆஸ்புத்திரி தூக்கிட்டு போங்கப்பா.. பாவம் , யாரு பெத்த புள்ளயோ... கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட கூட நல்லா பேசிட்டு இருந்துச்சு... இப்போ...இப்படி ஆயிபோச்சே. தாயி மகமாயி அந்த புள்ளய காப்பாத்தி குடுதாயி.... வேண்டிகொண்டே பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றார்..

வேட்டி சுத்தமாக இருந்தது, அந்த மாயவரத்தானின் மனசு போலவே!!

சாமி, சைதாபேட்டை போற பஸ் வந்தா கொஞ்சம் சொல்லுப்பா..எழுத படிக்க தெரியாது....வேறு யாரிடமோ அந்த பெரியவர் கேட்பது காதில் விழுகிறது ......................

சிறுகதை - முகமூடி

புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்

என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?

உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு

இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...

அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தாகாதல் னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..

தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..

மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..

உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?

இல்லைனா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்

வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.

வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்

நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???

அப்படி இல்லைனா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..

எந்த ஊரு பையன்??

இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....

என்ன சாதி ?

"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..

"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?
இல்லைனா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....

அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

இல்லனா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..

அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................

ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ... அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொலேரென அறைந்தான்.. என்னடி பன்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..
இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்...

முடியதன்னா.. நான் அவரை தான் கல்யா.....அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,

கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொன்னுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.. முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..

ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்.. பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு..

உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..

"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மனிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"
படாரென லைனை கட் செய்தான்...

சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா...

சரிங்க , தலையாட்டினாள்....

கோபத்தில் கன்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...

செல்போன் சினுங்கியது, எடுத்து ஹலோ என்றான்.."...ஹ்ம்ம் ஓகே சார், நிச்சயமா ... முடியும். சார்.. காலையில ரெடியா இருக்கும் ..கவலைபடாதீங்க.. இல்லை சார், எனக்கு புரியுது.. சரி சார்... ஒகே ஷ்யூர் , முடிஞ்சுடும் .. நீங்க கேட்ட மாதிரி நல்லா வரும் நம்பிக்கையா இருங்க , எஸ்..10 மணிக்கு ரெடியா இருக்கும்.. ஒகே...குட்நைட் சார்"

செல்போனை அனைத்து, மேஜை மீது தூக்கி எறிந்தான்..

சரளா , ஒரு கப் டீ எடுத்துட்டு வா.. அடுத்த 5 நிமிடத்தில் டீ வந்தது .. இரண்டு சிப் பருகினான்...ஒரமாக சரளா ஒடுங்கி நின்றிருந்தாள்...

இதோ பாரு, நாளைக்கு காலையில முடிச்சு தர வேண்டிய வேலை...எப்படியும் முடிக்கனும்னு வந்தேன்.. எல்லாம் பாழ்.. என் மூடே போச்சு இப்போ.. ..ஆனா வேற வழியில்லை முடிச்சு தரேனு சொல்லிட்டேன்.. இப்போ போன் கூட வந்தாச்சு.. முடிச்சே ஆகனும்.. நீ ·ப்ளாஸ்க்ல டீ போட்டு வெச்சிட்டு , அப்படியே கீழே என் சிகரெட் பாக்கெட் இருக்கு எடுத்து வந்து கொடுத்துட்டு போய் அந்த சனியன் கூட படு.. நான் இந்த வேலைய முடிச்சுட்டு காலையில பேசிக்கிறேன்... சரியா??
சரியென்று அவன் சொன்னபடியே செய்துவிட்டு சென்றாள் சரளா..
மற்றொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மேஜை மேலிருந்த பேப்பர், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தான்

"......யோவ், என்ன மனுஷன்யா நீ, நீயெல்லாம் ஒரு பொறுப்பான அப்பனா? தூத்தேரி...என்னய்யா உன் பொன்னு ஆசைப்பட்டுச்சு?? கூட படிக்கறவனை காதலிக்குது.. காதலிக்கறது அவ்ளோ பெரிய குத்தமாயா??? சாமிங்க கூட காதல் பன்னுச்சுய்யா..படிச்சது இல்லையா நீ. இதோ பெரிசா மாட்டி வெச்சி கும்பிட்டுக்குனு வரீயே முருகரு...அவரு கூட காதக் கல்லானம் தானேயா பன்னாரு..
என்னயா பெரிய சாதி. உலகத்துல ரெண்டே சாதி தான் இருக்குய்யா ஒன்னு ,மனுச சாதி , இன்னொன்னு மிருக சாதி... காதல சேத்து வெச்சி நீ மனுச சாதியா இருக்கனுமா ..இல்ல சாதி வெறி பிடிச்ச மிருக சாதியா திரியனுமானு நீயே முடிவு பன்னுயா...
சாதி சாதி னு ஏன்யா இப்படி சாதி பைத்தியம் புடிச்சு, உன் பொண்ணு வாழ்க்கைய பாழடிக்கப்பாக்கற??காதலிக்கறவன் நல்லவனா , உன் பொண்ண கடைசி வரைக்கும் கண் கலங்காம காப்பாத்துவானானு பாருய்யா... அத உட்டுட்டு..சாதி , மதம்னு ... ஏன்யா இப்படி மனுசன கூறு போட்டு பாக்குறீங்க?
ஏன்யா.. நீ என்னய்யா உசந்த சாதின்றதால அம்மா வவுத்துல 15 மாசமா இருந்தே?? எல்லாரும் 10 மாசம்தான்யா...
இத பாரு.. இப்போ மட்டும் நீ நம்ம ராதாம்மா காதலுக்கு சரி சொல்லாங்காட்டி போன, நானே மொத ஆளா நின்னு அந்தம்மா கூட்டிட்டு போயி அந்த பையனக்கு கட்டி வெப்பேன்..அதனால என் உசிரு போனா கூட கவலையில்லை..சொல்லிட்டேன்...
உங்க வூட்டு சோத்த துன்னுட்டேன்யா, அதான் இப்படி கொஞ்சிக்கினு இருக்கே..இல்ல மவனே...எல்லவனையும் வகுந்துடுவேன்..
ராதாம்மா இந்த வேலைக்காரன் இருக்கான்மா.. கவல படாம தெகிரியமா இரு.. ரெண்டுல ஒன்னு பாத்துடலாம், உனக்கும் அந்த கனேசுக்கும் தான் கல்லானம் , என் தலையே போனாலும் இது நடக்கும்..இது எங்கம்மா மேல சத்தியம்"

திரும்ப திரும்ப படித்து பார்த்து, சில மாற்றங்களை செய்தான்..

மறுநாள் காலையில் தருவதாக ஒப்புக்கொண்ட "காதல் சாதி" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் குப்பத்து கதாநாயகன் பேச வேண்டிய அனல் பறக்கும் வசனத்தை எழுதி முடித்த திருப்தியில் பேனாவை மூடிவைத்து விட்டு மற்றொரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான், வேகமாக வளர்ந்து வரும் இளம் திரைப்பட வசனகர்த்தா வித்யபாரதி..

அடுத்த அறையில்.. அழுது அழுது வீங்கிய கண்களுடன், சுந்தருக்கு எதுவும் ஆகிவிட கூடாதென கடவுளை வேண்டியவாறு நொறுங்கி போய் படுத்திருந்தாள் தேவி.....

சிறுகதை - இடையை கையில் பிடித்து..

கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்பை விட கூடாது.. முடிவு செய்தேன்.. மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 2.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.
என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?
சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பன்னியிருக்காங்க..
அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேனுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...
இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.
சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..
ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது.. இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..
சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டுவந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...
புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...
கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...


கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலாடையை எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..


இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு சற்று நேரம் உறங்கலாமென படுத்தேன்.


டாக்டர் சைனஸ் என்று சொல்லிவிட்ட காரணத்துக்காக 3 மாதம் என்னை குளிர் பானங்களை கண்களால் கூட பார்க்க கூடாது என்று கண்டிஷன் போட்டு , சுமார் 1.5 மாதம் கடைபிடிக்க வைத்த அம்மாவிற்கு இது தெரிந்தால் என்ன ஆகும் என்ற நினைப்போடு உறங்கிபோனேன்...................................

வீ எம்.

Kutty Break

Dear Friends,
Due to some unavoidable circumstances, I took a short break and it will continue for the next few days.
Will be back soon. My first posting would be the risk analysis part II.

Sorry For the Break

Regards
V M

ஒரு முக்கியமான் ரிஸ்க் Analysis :)

என்னப்பா இது ரஜினி ல இருந்து rusk வரைக்கும், பா ம க இருந்து பாப்பா சுஸ்மி வரைக்கும் அனாலிஸிஸ் போயிட்டு இருக்கு..

நம்ம பங்குக்கு என்ன எழுதுறதுனு யோசிச்சு யோசிச்சு எழுதினது.. நல்லா இருந்தா + இல்லைனா - , சிம்பிள்!! :)


குயிலி - ரிஸ்க் அனாலிஸிஸ் - 1

ப்ளஸ்

* சரளமான எழுத்து நடை- எழுதும் கருத்து பற்றிய விஷய ஞானம்

* மற்றவர் பதிவுகளுக்கு எதிர்மறையான கருத்துக்களை தரும்போதும் எல்லை மீறாத வார்த்தைகள்

* தன் கருத்தில் உடும்பு பிடியாக இருப்பது- தனக்கு பிடிக்காதவர் பற்றிய் நல்ல குணங்களையும் அவ்வப்போது பதிப்பது

* நகைச்சுவை உணர்வு

மைனஸ்

* ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு எதிர்ப்பு நிலை

* ஒரு குறிப்பிட்ட கட்சி / தலைமைக்கு சார்பு நிலை

MASK - ரிஸ்க் அனாலிஸிஸ் - 2

ப்ளஸ்
- வித்தியாசமான சமயோசித பதிவுகள்

- நகைச்சுவை கலந்த எழுத்து நடை

- முகமூடி இருந்தாலும் நிஜ முகம் மறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது

- நீண்ட இடைவெளியெல்லாம் விடாமல், தொடர்ந்து பதிவெழுதி ஆற்றும் தமிழ்த்தொண்டு.

- கலர்·புல் எழுத்துக்கள்

- மாதா மாதம் போடும் "டாப் 10"

மைனஸ்-

- அய்யாவின் அன்பு தொண்டர்களை சீண்டவே சில பிண்ணூட்டங்கள், பதிவுகள்

- ப ம க வை யும் அதன் (நீண்ட கால !!) தொண்டர்களையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது.

- அவர் பதிவுல அவரே நிறைய கமெண்ட் போட்டுக்கறது(பினாமியா இல்லை.. நிஜ பெயர்ல தான்)

- ஒரு குறிப்பிட்ட நடிகர்/குறிப்பிட்ட 2 , 3 அரசியல் தலைவர்கள் பற்றி எழுதும் போது மட்டும் MASK ஐ இறுக்கி பிடித்துக்கொள்வது.


டிஸ்க்ளெய்மர்: யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல அல்ல அல்ல !! விளையாட்டாகவே இந்த பதிவு!

ரிஸ்க் அனாலிஸிஸ் தொடரும்.. அடுத்த இரண்டு பேர் யார்... விரைவில் .. யோசித்துக்கொண்டே இருங்கள்

அதுவரை

நன்றியுடன்,

"ரிஸ்க் அனாலிஸ்ட்" வீ எம்

நான் வாங்கிய முதல் போர்வை !

நான் வாங்கிய முதல் போர்வை !

வீ எம்: கித்னா ஏ பையா?

கடைகாரர்: தீன் செள ருபயா

வீ எம்: தீன் செள?

கடை: ஹ, கித்னா பீஸ் சாயீயே !

வீ எம் : கித்னா னை! பர்ஸ்ட் ரேட் போலோ..

கடை: பிக்ஸட் ரேட் ஹே இதர் .. தீன் செள ருபயா ஹே பைனல் ரேட்.

வீ எம்: னை பையா, டூ மச் ஹே ரேட்.. தோ செள ஒகே

ஒரு மாதிரி அவன் என்னை பார்க்க.. ஒரு மாதிரியா ஹா னு ஆரம்பித்து 4 , 5 வரிக்கு ஏதேதோ சொல்லி முடிச்சான் ..

ஏதோ எல்லாம் புரிஞ்ச மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு.. நான் கேட்ட கேள்வி(!!!) சொன்ன வார்த்தை ." அச்சா ஹே! தோ செள??"

என்னை எரிக்கற மாதிரி ஒரு பார்வை பார்த்துட்டு அவன் பாட்டுக்கு அடுத்த கஸ்டமருக்கு போயிட்டான்..க்யா பையா .. பையா னு நான் கத்துனதை கடைசி வரைக்கும் அவன் கண்டுக்கவே இல்லை.. என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கலை..

என்னட இவன் ..சரி கொஞ்சம் இறங்கி வருவோம்னு "தோ செள டொண்டி ·பைவ்" னு சொன்னேன்..அப்பா, 25 ரூபாய்க்கு ஏதோ கொஞ்சம் எபெக்ட் இருந்தது ..

திரும்பிப்பார்த்தான்..
எப்படியும் இவனை மடக்கிடனும்னு ஒடஞ்ச ஹிந்தில "பையா, ஹடாப்ஸர் மே இதர் மார்கெட் சே கித்னா தூர் ஹே நா, ட்ராவல்கர்தா ஆப் கா ஷாப் மே பர்சேஸ் கோ? ஆப் ரேட் நஹி ரெட்யூசிங்"

எனக்கு மட்டுமே புரிந்த தமிழாக்கம் : "அண்னே, ஹடாப்சர்ல இருந்து இந்த மார்கெட்ல இருக்க உங்க கடைல தான் வந்து வாங்கனும்னு இவ்ளோ தூரம் வந்தா, நீங்க இப்படி விலை சொல்றீங்களே"

என் ஹிந்தி கேட்டு நொந்து போயிட்டான் போல, நா கையில வெச்சிருந்த புடுங்கி உள்ள வெச்சிட்டான்.. நான் 100 ரூபாய்க்கு கேட்டிருந்தா கூட தந்திருப்பான் போல ..ஆனா, அவன் தாய்மொழிய நான் இப்படி கொலை செய்றத பார்த்து ஏகத்துக்கு டென்ஷன் ஆகிட்டான்..

இருந்தாலும் சற்றும் மனம் தளராம (அப்புறம், நாம எப்பத்தான் இந்தி கத்துகறது??? ) நம்ம அடுத்த அஸ்திரம்.. பையா, தோ பெட்ஷீட் சாயியே , கித்னா ருபயா??கொஞ்சம் கூட அசராம சொன்னான் "சே செள" !!அடப்பாவி, ஒன்னு 300 ரூபாய்னா , 2 - 600 ரூபாய்னு கூட வா தெரியாம உங்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் .. மனசுக்குள்ளே நெனச்சுகிட்டே, "னை பையா, தோ பீஸ் ஹே நா, சோ, சார் செள பச்சாஸ் " சொல்லி முடிச்சேன்..

அவன் ஏதோ சொல்ல , நான் ஏதொ சொல்ல , ரெண்டு பேருக்கும் ஒன்னும் புரியல.. ஒரு கட்டத்துல அவன் என்னை கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டு இருக்க மாதிரி தோனுச்சு..

இதுக்கு மேல தாங்காது சாமினு..பக்கத்துல இருந்த நன்பன் (..தமிழ்தான்..ஆனா இந்தி நல்லா தெரியும் அவனுக்கு.. ) கிட்ட டேய்.. மாப்ளே என்ன பாத்துகிட்டு இருக்கே.. ஹெல்ப் பன்னுடா பெரிய இவன் மாதிரி..நீ எதுவும் பேசாதே, நான் ஹிந்தில அடிச்சு பேசி வாங்கறேனு சொன்னே.. என்ன ஆச்சு?? நக்கல் செய்தான்..

டேய் சரண்டர் டா , வந்து பேசுடானு கெஞ்ச, அப்புறம் அவன் வந்து பேசி, ஒருவழியா 240 ரூபாய்க்கு வாங்கி தந்தான்..

பணம் கொடுத்துட்டு , பார்சலை வாங்கிட்டு வரும்போது, மறக்காம் அவருக்கு "பையா , தன்யவாத்" னு சொன்னேன்..

"ரொம்ப முக்கியம்டா" நன்பன் சொன்னான் !

இப்படியாக ஜுன் 25, பூனே சென்றடைந்த ஞாயிறு மாலை என் முதல் பெட்ஷீட் வியா(பே)பாரம் காமெடியாக முடிவடைந்தது!!

வீ எம்.


தூசு தட்டப்போகிறேன்

வலைப்பூ நன்பர்களே !

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு என் வலைப்பூவை தூசு தட்டப்போகிறேன் !

ஒரு வழியாக என் கடமைகளை பூனேவில் முடித்துவிட்டு, நேற்று மாலை சென்னை வந்துவிட்டேன் !!மீண்டும் பதிவுகளை தொடருவேன் என்பதை இந்த குட்டி பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் !

Image hosted by Photobucket.com


நன்றி

வீ எம்

Ask Your Boss

U guys might have read it already.. anyway, for those who have not had a chance to look in to this earlier !
V. M

====================

One day an employee sends a letter to her boss asking for an increase in her salary!!!

Dear Bo$$

In thi$ life, we all need $ome thing mo$t de$perately. I think you $hould be under$tanding of the need$ of u$ worker$! who have given $o much $upport including $weat and $ervice to your company.

I am $ure you will gue$$ what I mean and re$pond $oon.

Your$ $incerely,

Marian $hish



The next day, the employee received this letter of reply:

Dear Marian ,

I kNOw you have been working very hard. NOwadays, NOthing much has changed. You must have NOticed that our company is NOt doing NOticeably well as yet.

NOw the newspaper are saying the world's leading ecoNOmists are NOt sure if the United States may go into aNOther recession. After the NOvember presidential elections things may turn bad.

I have NOthing more to add NOw. You kNOw what I mean.


Yours truly,

Manager

என் புது முயற்சி

எங்கள் அலுவலகத்தில் 5 பேர் ஒரு குழுவாக சேர்ந்து project management related quarterly newsletter (தமிழில் தெரியவில்லை) வெளியிடுவோம்.. வழக்கமாக project management related காமெடி துணுக்குகள், கார்டூன் என்று வலையில் தேடி அதில் project management ஹ¥யுமர் என்ற பகுதியில் போடுவோம்.. ஆனால் ஜுன் மாதம் newsletter வெளியிடப்பட இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் உயரதிகாரி அழைத்து, இந்த newsletter அனைத்து தரப்பினர்களுக்கும் மற்றும் வேறு பல நாடுகளில் உள்ள நமது அலுவலக கிளைகளுக்கும் அனுப்பபடுவதாலும், அலுவலக global copyright and security policy காரணமாகவும் இனையத்தில் வரும் எந்த ஒரு கட்டுரையோ, துனுக்கோ எதுவும் newsletter ல் வரவே கூடாது என்று கூறிவிட்டார்.. என்ன செய்வது என்று சற்று திண்டாடித்தான் போய்விட்டோம்.. கட்டுரை , மற்ற பகுதிகள் எதுவும் பிரச்சனை இல்லை..எப்பொழுதும் நாமாகவே செய்வது தான்.. ஆனால் ஹ¥யுமர் பகுதிக்கு தான் குகூள் சாமி துனை என்றிருந்தோம். இப்பொழுது என்ன செய்வது... அதிலும் newsletter ன் ஹைலைட்டே அந்த ஹ¥யுமர் பகுதிதான்..
எனக்கு ஒதுக்கிக்கொண்ட (இட ஒதுக்கீடு இல்லை) பகுதியில் இதுவும் ஒன்று.. ஆக மற்ற 4 பேரும்.. என்ன செய்வீயோ தெரியாது இன்னும் ரெண்டு நாள்ல ஏதாச்சும் கார்டூன் வேனும். மதன் , அரஸ் இல்ல..யாரை பார்ப்பீயோ தெரியாது என்று சொல்லிவிட... அன்று இரவு வீட்டில் யோசித்துக்கொண்டிருக்கையில் ..நாமே ஏன் ஒரு கார்டூன் போட கூடாது என்ற அந்த விபரீத ஆசை ஏற்பட்டது.. படம் போட தெரியாது... இருந்தாலும் காசா , பணமா செய்து பார்கலாம் என்று முடிவு செய்து, ரொம்ப நேரம் யோசித்து ஒரு இரண்டு, முன்று கரு கிடைத்தது .. ஆனால் கரு நன்றாக இருந்தால் படம் போடுவது எளிதாக இல்லை.. படம் எளிதாக போடமுடியம் ஆனால் நல்ல கரு கிடைக்கவில்லை.. அப்படியே சற்று நேரம் யோசித்து ..கடைசியில் ஒரளவு இரண்டும் சேர்ந்தார்போல் வருவதாக தெரிந்தது.. உடனே எழுந்து லேப்டாப் எடுத்து.. MS paint உதவியோடு சுமார் 1.5 - 2 மணி நேரம் போராடி இதோ கீழே இருக்கும் கார்டூன் போட்டு முடித்தேன்... முதல் முயற்சி, இதுவரை செய்யாத ஒன்று..
இது ஜுன் மாத newsletter ல் வந்தும் விட்டது.. பாராட்டும் கிடைத்தது.. முதல் முறை செய்வதால் யாரும் குறை கண்டுப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. !
சரி, இதை நம் வலைப்பூ நன்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இங்கே பதிக்கிறேன் !!எப்படி இருக்குனு சொல்லுங்க, என் புது முயற்சி !




நன்றி

வீ எம்

படம் பார்த்து கதை செப்பு - அடுத்த முதல்வர் ஆல்பம்

அடுத்த தமிழக முதல்வர் புகைப்பட ஆல்பம் இது!
இது வெறும் கற்பனையே !! யாரையும் புன்படுத்த அல்ல , அல்ல , அல்ல !
நாள் : 2 ஜூன் 20XX
********************************************************************
அப்பாடா ஒரு வழியா 132 இடம் கிடைச்சு கோட்டைக்கு வந்தாச்சு.. ஐயோ ! இனிமே இப்படி தான் அடக்கமா போஸ் கொடுக்கனும் ..இந்த சுவத்துல கால் வெச்சி தூக்கி அடிக்கிறத எல்லாம் மூட்டை கட்டி போடனும்
Image hosted by Photobucket.com


=======================================================
Image hosted by Photobucket.com
தலைக்கு மேல வேலை இருக்கு.. சரி சரி கொஞ்சம் தியானம் பன்னி, நல்லவங்களா பார்த்து துறை ஒதுக்கனும்.. நம்மள நம்பி 132 பேரை தமிளக மக்கள் கெலிக்க வெச்சிருக்காங்க .அதுல யாரெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க???ஹ்ம்ம்..யோசிக்கலாம்!
==============================================
Image hosted by Photobucket.com

முதல்வர்: முதல்ல தெய்வம் சம்பந்தபட்ட துறை, ஹ்ம்ம் ..யாரை அறநிலையத்துறை அமைச்சராக போடலாம்
முதல்வர்-வீட்டம்மா : பக்கதுலேயே இவ்ளோ பக்தியா உக்காந்திருக்கேன்.. என் நியாபகம் வரலயா இவருக்கு???
முதல்வர் : சரி சரி , DONE !

===============================================

Image hosted by Photobucket.com

அய்யோ, ஒரு வழியா 'விளையாட்டுத்துறை அமைச்சரை முடிவு பன்னியாச்சு.. பின்னாடி இன்னா ஸ்டைலா நிக்கிறாரு பாருங்க
=================================================
Image hosted by Photobucket.com
சரி சரி, அவனுக்கு விளையாட்டுத்துறை ... உனக்கு தான் போலிஸ் துறை தரேன்னு சொல்லிட்டேன் ல.. சிரி சிரி .. சரியான துறை உனக்கு !
======================================
Image hosted by Photobucket.com
ஹ்ம்ம்ம் ..புரியுது, அறநிலைய துறையோட சேர்த்து உனக்கு உனவு த்துறையும் வேணும்..
அதான் ஒரே ஆள் 2 துறைய பாக்கலாமே.. கொடுத்துட்டா போச்சு.. நல்லா முறுகலா
ஒரு தோசை போடுமா! :)
=======================================
Image hosted by Photobucket.com
கவலைபடாதே டாமி, பசுவதை தடுப்பு சட்டம் மாதிரி நாய் வதை தடுப்பு சட்டம் கொண்டுவந்து உன்னையும் காப்பாத்துவேன் !
============================================


Image hosted by Photobucket.com
அவங்கவங்களுக்கு தேவையானதை பங்கு போட்டு குடுத்தாச்சு, பத்திரமா சண்டை போடாம சாப்பிடனும்..ஓ சாரி பார்த்துக்கனும் , சரியா?
===========================================

Image hosted by Photobucket.com
அப்பாடா ஒருவழியா எந்த பிரச்சினையும் இல்லாம, சரி சமமா தகுதியானவர்களுக்கு துறை பிரிச்சு கொடுத்தாச்சு, வாங்க வாங்க கேபினெட் க்ரூப் போட்டோ எடுத்துக்கலாம்
=========================================

Image hosted by Photobucket.com

காட்சி 1: ஹலோ !யாரங்கே!! என்ன இது கேபினெட் க்ரூப் போட்டோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லயே...நல்லா வரலயே.. அப்புறம் என் ரசிகர்கள் கொதித்தெழுந்தா நான் பொருப்பில்ல சொல்லிட்டேன்.. சீக்கிரம் மாத்துங்க!
காட்சி 2: ஐய்யோ, ,என்னது நம்ம கட்சிக்கு மொத்தம் 1 இடம் தான் கெடச்சதா??? என்னபா சொல்றீங்க ..132 இல்லயா? நான் வேற ஏதேதோ plan போட்டுடேனே பா .. அட ராமா !!
(((படிப்பவருக்கு எது பிடிச்சிருக்கோ அதை படிச்சுக்கலாம், இன்னொரு முறை :) ))

=========================================

நடிகர்கள், நல்லவர்கள். !!

வலைப்பூ நன்பர்களே வணக்கம்!பூனாவில் இருந்து என் முதல் பதிவு !

இது ஒரு வார இதழில் 2 மாதங்களுக்கு முன் வந்த பேட்டியை அடிப்படையாக கொண்ட பதிவு.. கொஞ்சம் லேட்டான பதிவு தான் இருந்தாலும் படித்தவுடன் இதை எழுதவேண்டும் என்ற என்னம் தோன்றியதால் எழுதுகிறேன். சமீபத்தில் பழைய இதழ்களை மேய்ந்த போது கண்ணில் பட்டது...
நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு சென்னையில் ஒரு சிலை தயாரகிறது.. சென்னை என்றவுடன், சிவாஜியை தங்களின் ஆசான், தெய்வம், அப்பா என்றெல்லாம் சொல்லித்திரியும் நடிகர்களின் முயற்சியால் இது நடக்கிறது இது என்று நீங்கள் தவறாக எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல ! அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஒரு மகா கலைஞனுக்கு அம்மா அரசு செய்கின்ற மரியாதையா என்றால் , அதுவும் இல்லை..


சிலை தயாரிக்கப்படுவது, பாண்டிச்சேரியில் நிறுவப்படுவதற்காக. பாண்டிச்சேரி அரசின் வேண்டுகோள் படி சிற்பி திரு மணி நாகப்பா தன் பட்டறையில் சிற்பத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறார்.அவ்வப்போது பாண்டிச்சேரி முதல்வர் திரு ரங்கசாமி சென்னை வந்து பார்த்துவிட்டு போகிறார்.
இந்த பதிவு, யார் செய்கிறார்கள் , தமிழக அரசோ, தமிழ் நடிகர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்காக அல்ல..பின்?? சொல்கிறேன்..

மணி நாகப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ..அதில் அவர் சொன்ன விஷயம் சற்று நெருடலானது.. இது தான் அவர் சொன்னது
"..... சிலை இறுதி வடிவம் அடையும் கட்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரிய!! நடிகர்கள் அத்தனை பேரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வந்து பார்த்து உங்கள் அபிப்பிரயத்தை சொல்லுங்கள் , அதன்படி செய்யலாம் என்று சொன்னேன். சிவாஜியை தெய்வம் என்றும், எங்கள் உயிர் என்று சொல்லும் ரஜினி , விஜய்காந்த் உட்பட சிவாஜி என் அப்பா அவர் மடியில் தான் வளர்ந்தேன் என பேட்டி கொடுக்கும் கமல் உட்பட அனைத்து முன்னனி நடிகர்களையும் அழைத்தேன்... ஆனால் ஒருத்தர் கூட இன்று வரை எட்டிப்பார்க்கவில்லை. என்ன நடிகர்களோ இவர்கள் ..."

இது தான் அவர் சொன்ன செய்தி. பொங்கலோ , தீபாவளியோ - தொலைக்காட்சியில் தங்கள் முகத்தை காட்ட அலைந்துக்கொண்டு ஓடிவந்து ஆற அமர பேட்டி என்ற பெயரில் பினாத்திவிட்டு செல்லும் நடிகர்களுக்கு, "மரியாதை நிமித்த" சந்திப்பு என்று பெயர் கொடுத்து தங்களின் சுய லாபத்துக்காக அரசியல் தலைவரை சந்தித்து விட்டு வரும் நடிகர்களுக்கு, பல நூறு மைல் தாண்டி பக்தி மார்கமாக சென்றாலும் மறக்காம பத்திரிக்கைக்கு பேட்டி தரும் நடிகர்களுக்கு, ஒரு நடிகையின் பிறந்த நாளுக்கு கவிதை எழுதி அனுப்பி தான் எதிலும் புதுமை செய்வேன் என்று காட்டிக்கொள்ள நேரம் இருக்கும் நடிகர்களுக்கு.. வார பத்திரிக்கைளின் பக்கம் பக்கமாக சுயசரிதை எழுத நேரமிருக்கும் நடிகர்களுக்கு, இதோ இங்கே சென்னையில் இருக்கும் ஒரு பட்டறைக்கு வந்து அந்த மகா கலைஞனுக்காக 15 நிமிடம் செலவழிக்க ஏனோ முடியவில்லை. பாவம் அவர்கள் !


ஒருவேளை , அவற்றில் எல்லாம் பணமோ , பப்ளிசிட்டியோ , அல்லது இரண்டும் சேர்ந்தோ கிடைக்கும் ஆனால் இந்த பட்டறைக்கு வந்து போவதால் தங்களுக்கு பெட்ரோல் செலவு மட்டுமே மிஞ்சும் என்பதால் தவிர்த்துவிடுகிறார்களோ இந்த "ஏழை" நடிகர்கள்????

இவர்கள் எல்லாம் அவரின் இறுதி ஊர்வலத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்ததை பார்த்தால், திரையில் நடித்து நடித்து , நிஜ வாழ்க்கையிலும் அதுவே பழகிப்போய்விட்டதாகவே தோன்றுகிறது.


மறக்காமல் முதல் வேளையாக 3 அல்லது 4 மனி நேரம் ஒதுக்கி, திரையரங்கு சென்று 300, 400 செலவழித்து குறைந்தது 3 முறையாவது, இந்த நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வரும்போது பார்த்துவிடுவோம்..இல்லை மறைந்த சிவாஜியின் ஆத்மா நம்மை மன்னிக்காது!

நல்ல நல்ல நடிகர்கள்! நல்லா இருக்கட்டும் பாவம்... !! ஒரு நாள் அவர்களுக்கும் சிலை வடிக்க வேண்டி வரும்.. !
இவர்களில் ஒருவர் தான் நாளைய தமிழக முதல்வரா??? என்ன சொல்வது !!!!

வீ எம்

வெல்கம் டூ , வீ எம் - நீங்கள் படிக்கும் பதிவு...

வணக்கம் அண்ட் வெல்கம் டூ சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்... ஓ... ஸாரி..வெல்கம் டூ வீ எம் நீங்கள் படிக்கும் பதிவு........
.... இந்த பதிவோட நம்ம சென்னை எபிசோட் (அதாங்க சென்னை ல இருந்து எழுதபட்ட பதிவு) முடியுதுங்க
அடுத்த பதிவு எங்கிருந்துனு சொல்லனும் ல.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேரரக் ...............................


அடுத்த பதிவுகள் பூனா விலிருந்து....

ஆமாங்க, அலுவலக வேலையாக பூனா போறேன் .. 1 மாசம்.. ஜுன் 26 போயிட்டு ஜூலை 24 திரும்ப சென்னை வருவேன்... (இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப் பா னு நீங்க சொல்றது புரியுது....)


அடுத்த பதிவு பூனா ல இருந்து எழுதுவேன்... until then its bye from வீ .எம்..
(சமிபத்துல 2 , 3 சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி பாதிப்புல ஊருக்கு போற விஷயத்தை இப்படி சொல்லிட்டேன் , வேற ஒன்னுமில்லை.. !)

====================================================

பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2

பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 1 (http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post.html)

ரஜினி - அரசியல் அரிதாரம் - ஒரு பார்வை

(பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2 )

Image hosted by Photobucket.com


இந்த பதிவை ரஜினியின் ஒரு பாடலில் இருந்து ஆரம்பிப்பதே சரியாக இருக்கு என தோன்றுகிறது.
"எனக்கு கட்சியும் வேண்டாம் , ஒரு கொடியும் வேண்டாம் ஹே டகர டகர டகர டகர டோய்..' 1989 ல் வெளியான ராஜாதி ராஜா பட பாடல் இது. இந்த பாடலுக்கும் இன்றுள்ள நிலைமக்கும் தான் எவ்வளவு பெரிய வேறுபாடு...
ரசிகிர்கள் மனதில் "இவர் அரசியலுக்கு வரலாமே" .... என்கிற எண்ணம் எப்பொழுது "இவர் வரவேண்டும்" என்று மாறியது , பின்னர் அதுவே "வந்தே ஆகவேண்டும்" என எப்படி மாறியது ?
தெரிந்தோ , தெரியாமலோ தன் படங்களில் ரஜினி அவர்கள் புகுத்திய "பன்ச்" வசனங்களே இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1991 அம்மா ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ரஜினிக்கும் அம்மாவிற்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரம்பமானது. பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதியது. அதை தொடர்ந்து வந்த "மன்னன்", "அன்னாமலை" படத்தில இருந்த ரஜினியின் வசனங்கள் சற்று அரசியல் நெடி கலந்து இருந்தது. அப்போதே ரஜினி என்கிற நடிகருக்கு "அரசியல்வாதி" முலாம் பூசும் முதற்கட்ட பனிகள் ஆரம்பமானது.
ஆனால், 1992ல் சினிமா துறை முதல்வருக்கு நடத்திய பாராட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினியின் பேச்சு இந்த சலசலப்பை அடக்கும் விதமாக இருந்தது. அந்த விழாவில் அவர் பேசியது இது தான்
"..........நேற்று பஸ் கண்டக்டர் , இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ, அதே நேரத்தில்..ஆண்டவா, எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுவிடாதேனு வேண்டிக்குறேன், ஏன்னா, அரசியலுக்கு வந்துட்டா நிம்மதி போயிடும்..." அதே பேச்சில், முற்றிலும் பொய்யான , ஆதாரமற்ற செய்திகளை எழுத வேண்டாமென பத்திரிக்கைகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பேச்சு சற்று சலசலப்பை அடக்கினாலும், விரைவிலேயே , 3 வருட இடைவெளியில் காட்சிகள் மாறியது...
"பாட்ஷா" பட வெற்றி விழாவில் அவர் பேசிய பேச்சு பல்வேறு வடிவம் பெற்று, "இன்னொரு முறை இவர் வந்தால் ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது" என்பது வரை வந்து... ஒரு கூட்டனி க்கு ஆதரவு தந்து, அந்த கூட்டனியும் பெரும் வெற்றி பெற்றது..... பின்னர், ரசிகர்கள் இந்த வெற்றிக்கு தலைவரின் ஆதரவே காரணம் எனவும், ரசிகரல்லாதோர், இல்லை , இல்லை இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் , மக்களுக்கு அம்மா ஆட்சி மீது இருந்த வெறுப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம், ரஜினி வாய்ஸ் என்பதெல்லாம் சும்மா எனவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.முதலில் வந்தது முட்டையா , கோழியா என்பது போல் தான் இந்த வாதம் தொடர்கிறது..நாம் அதற்குள் செல்ல வேண்டாம்.. நான் சொல்ல வருவது, தெரிந்தோ , தெரியாமலோ அந்த ஆதரவின் மூலமே தன் ரசிகர்களுக்கு "அரசியல்" ருசி ஏற்படுத்திவிட்டார் ரஜினி.
நம் அரசியல்வாதிகள் மிக புத்திசாலிகள், கொடுக்க வேண்டியதை கொடுத்து நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அரசியல் போதை ஏறிப்போனது.இந்த காலகட்டத்தில் தான் ரசிகிர்கள் மனதில் "இவர்அரசியலுக்கு வரலாமே" .... என்று இருந்த எண்ணம் "இவர் வரவேண்டும்" என்று மாறியது. ரஜினி என்ன செய்திருக்கலாம்? ரஜினி அவர்கள் இந்த காலகட்டத்தில், நேரடியாக இறங்கி இருக்க வேண்டும்.. அப்படி நடந்திருந்தால், 3 நிகழ்வுகளுக்கு வாய்ப்பிருந்தது
யாருக்கு தெரியும், ரஜினி மிக பெரிய வெற்றி பெற்று கோட்டையில் அமர்ந்திருக்கலாம்.. இல்லை மொத்தமாக "கோட்டை"யும் விட்டிருக்கலாம்.. அல்லது கணிசமான தொகுதிகள் வென்று கோட்டையில் கொடி ஏற்றுபர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கலாம். இந்த மூன்றில் எது நடந்திருந்தாலும், இந்த பதிவிற்கோ , அவர் வருவாரா , மாட்டாரா என்ற 10 வருட பட்டிமன்றத்துக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
ஆனால் அதை செய்யாமல், தன் ரசிகர்களை களம் இறக்கிவிட்டு அவர் ஒரு அறிக்கை மற்றும் ஒரு தொலைக்காட்சி தரிசனம் என்ற அளவில் நிறுத்தி கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மனக்"கோட்டை" கட்டிக்கொண்டிருப்பது தான் மிஞ்சியது. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே ஆங்காங்கே ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனகசப்பு ஏற்பட்டது .. வெற்றி பெற்றவுடன் எங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்..(அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா, கடைசி வரையில் உங்களை மதித்து நடப்பதற்கு?? அவங்க பொழைக்க தெரிஞ்சவங்கப்பா )
அப்போதாவது ரஜினி சுதாரித்திருக்க வேண்டும்.. ! மேலே சொன்ன ராஜாதி ராஜா பாடலை செயல் படுத்தி இருக்கவேண்டும் மாறாக யாருக்கும் புரியாமலேயே பேசிக்கொண்டிருந்தார்..
இதற்கு அடுத்து வந்த படங்களில் அருனாசலத்தை தவிர, மற்ற 3 படங்களிலும் (முத்து, படையப்பா , பாபா) அரசியல் நெடி சற்று அதிகமாகவே அடிக்க தொடங்கியது. குறிப்பாக முத்துவை பற்றி சொல்ல வேண்டும்.
முத்து படத்தில் தினிக்கப்பட்ட "வசனங்கள்" ஏராளம்.. மீனா வுடன் நடக்கும் மோதல் காட்சிகளில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களின் கற்பனை சக்திக்கு நன்றாக தீனி போட்டது.. அவரின் அனல் பறக்கும் வசனங்களுக்கு அவரவர் வசதிகேற்ப பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டது.. ரசிகர்களுக்குள் பட்டிமன்றமே நடந்தது. போதாகுறைக்கு, எரிகின்ற தீயில் எண்னெய் ஊற்றும், தங்கள் கடமையை பத்திரிக்கைகள் சரியாகவே செய்தது. ரசிகர்கள் சற்று மறந்தாலும் கூட, பத்திரிக்கைகள் விழிப்புடன் இருந்து சமூக கடமையாற்றியது.
முத்து படத்தில நிச்சயமாக ரஜினி இதை தவிர்த்திருக்கலாம்.. என்ன காரணத்தினாலோ அப்படி செய்யவில்லை.. இல்லை இது இயக்குனர் எடுத்த முடிவு ..ரஜினி என்ன செய்வார் என்று சொல்வீர்களேயானால் ..சிரிப்பதை தவிற வேறெதுவும் செய்ய முடியாது !
திரையில் தான் கால் தூக்கினாலும் , கை தூக்கினாலும், ரசிகர்களும் சரி , பத்திரிக்கையும் சரி அதற்கொரு அர்த்தம் செய்துக்கொள்கிறார்கள் என்று தெரிந்தும் ரஜினி , 1992 விழாவில் பத்திரிக்கைகளை குற்றம் சாட்டியவர், இது போன்ற வசனங்களை பேசியது நிச்சயமாக ஏற்புடையதல்ல!
தொடர்ச்சியாக அவர் நடித்து வெளிவந்த படையப்பா படம், சொல்லவே வேண்டாம்.. தனக்கு எதிரியாக ஒரு ஆனவம் கொண்ட பென் கதாபாத்திரம், அதே அனல் பறக்கும் வசனங்கள்... கேட்க வேண்டுமா?
பாபா - ஆன்மீக படம் என்று அறிந்த போது, அட! ரஜினி அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு , தனக்கு ஆன்மீகத்தில் தான் நாட்டம் என்று புரிய வைக்க போகிறார். 7 , 8 வருட விளையாட்டு முடிவுக்கு வர போகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் .. இல்லை , இல்லை இது மேலும் குழப்பத்தை தான் அதிகரித்துள்ளது என்ற அளவில் அந்த கதையின் இறுதி காட்சியை அமைத்து படத்தை முடித்தார்.
ஆன்மீகம் பற்றி எடுத்து சொல்ல எவ்வளவோ நல்ல திரைக்கதை இருக்கும் போது ( எடுத்துகாட்டு : ராகவேந்திரர்), இப்படி ஆன்மீகத்தை அரசியலோடு கலந்திருக்க வேண்டாம். விளைவு அவரின் ஆன்மிகமும் மக்களை சென்றடையவில்லை... அவரின் அரசியல் நிலையும் தெளிவுபடுத்தபடவில்லை.. மேலும் குழப்பித்தான் விட்டது.
தெரிந்து நடந்ததோ , தெரியாமல் நடந்தோ புரியவில்லை.. ஆனால் 1992 ல் ரசிகர்கள் மனதில் சிறு பொறியாக கிளம்பிய அரசியல் ஆசை இன்று வரையில் பல்வேறு வடிவங்களில் அனைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது..திரையில் அவர் பேசும் வசனத்துகே இந்த வலிமை என்றால்.. நிஜ வாழ்வில் அவர் பேச்சுக்கு?? சொல்ல வேண்டுமா?
திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் தோன்றிய சில பொது மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள் இந்த தீப்பொறி அனையாமல் இருக்க உதவியது. மலேசிய, சிங்கப்பூர் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளில் அவர் ரசிகர்களுக்கு அளித்த கேள்வி பதில் நிகழ்ச்சி இன்னும் குட்டையை நன்றாக குழப்பியதே தவிர, தெளிவடைய செய்யவில்லை.
நதி நீர் பிரச்சனைக்காக அவர் இருந்த உன்னாவிரதம், பாபா - பா.ம.க சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த கால கட்டத்தில் அவர் கொடுத்த அறிக்கை, பேட்டிகள் எல்லாம் அரசியல் சார்புடைய குழப்பங்களைத்தான் அதிகரித்தது.
நதி நீர் பிரச்சினையின் போது தீடிரென தொலைக்காட்சி பேட்டியில் " ...அவர்கள் யாரென எனக்கு தெரியும்..தேர்தல் நேரத்தில் தக்க பதில் தருவேன்" என்றார்.. அதற்குள் மருத்துவரின் சில்மிஷத்தால் காட்சிகள் மாறி, இன்று வரை அவர் குறிப்பிட்ட "அவர்கள்" யாரென்று தெரியாமல் போனது.
பா. ம க - பாபா பிரச்சனையால், அவரின் அரசியல் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அம்மையாரோடு அவர் ஆடிய ஆட்டம் களம் மாறி எதிரனியுடன் இனி ஆட்டம் என்றானது.. அவரின் ரசிகர்கள் சத்தியனாரயனன் தலைமயில் அரசியலில் இன்னும் ஒரு படி மேலே சென்றனர்.. தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மிக அழகாக காய் நகர்த்தி ஆட்டம் முடிந்துவிடாமல் பார்த்துக்கொண்டது.
முத்து படத்தில் ஆரம்பத்தில் மீனாவுடன் சண்டை போட்டாலும், பின்பு அவருடன் ராசியாகி போனது போல், எதிர்பாராத திருப்பம் நிஜத்திலும் நடந்தது, அம்மாவை தீவரமாக எதிர்தவர் பின்பு அம்மா ஆதரவு நிலை எடுத்தார்...
களம் மாறிவிட்டதே தவிர, ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது....


எதையும் தீர்மானமாக சொல்லாமல.. நேற்று அப்படி, இன்று இப்படி, நாளை எப்படியோ என்று பூடகமாக கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை தவிர்த்திருக்கலாம்.. எப்பொழுது திரையில் தான் பேசும் வசனங்களுக்கே பல்வேறு அர்த்தம் கற்பிக்கபடுகிற்தோ, அப்போதே அவர் இப்படி பேசுவதை தவிர்த்து, கேட்கப்படுகிற கேள்விக்கு அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி பதில் சொல்லி இருக்க வேண்டும்..
ரஜினியோ..அல்லது அவரை சுற்றி இருந்தவர்களோ..இல்லை பத்திரிக்கைகளோ .. அல்லது இவர்கள் அனைவரும் சேர்ந்தோ அனையாமல் பார்த்துக்கொண்ட காரணத்தாலேயே அந்த சின்ன பொறி இந்த 12 ஆண்டுகளில் வீரயம் பெற்று கொழுந்து விட்ட எரிகிறது.
நல்ல வேளயாக சந்திரமுகி சற்று மாறுபட்டு இருந்தது... அதில் ரஜினிக்கு மருத்துவர் என்ற கதாபாத்திரம் என்று கேள்விபட்டபோது , போச்சுடா மீண்டும் தூபம் போடப்படுகிறது என்று தோன்றியது ..நல்ல வேளயாக அப்படி எதுவும் இல்லாமல் போனது. இப்படியே தொடர வேண்டும் என்பதே பலரின் விருப்பம்..
வழ வழா குழ குழா என்றில்லாமல், இது தான் என்று தீர்கமாக முடிவெடுத்து சொல்லுவது அரசியலுக்கு வர மிக மிக முக்கியமான தகுதிகளுள் ஒன்று.. இதுவே ரஜினியை அரசியலுக்குள்ளே இழுத்து வராத சக்தியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.
இதற்கெல்லாம் முடிவு ரஜினியின் கையில் தான் உள்ளது ... ஆம், நிச்சயம் வருவேன், அது வரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும் என்றோ ..அல்லது .. அரசியலுக்கும் எனக்கும் ஒத்து வராது ..அரசியல் என்பதற்கே வாய்ப்பில்லை என்றோ அவர் விடும் ஒரு தெளிவான அறிக்கையில் தான் உள்ளது.. அவர் அம்மாவை எதிர்த்து "ஆண்டவாலும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னாலும்.. அதே அம்மாவை "அஷ்டலட்சுமி" என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அவரின் ரசிகர்கள் அவர் வருவேன் , வரவே மாட்டேன் என்று சொல்லும் அறிக்கையையும் நிச்சயம் ஏற்பார்கள்...
ஆனால், அது எப்போதோ?????????????????????????????????
ஒரு பாடலோடு முடிக்கலாம், சற்று மாற்றம் செய்த அவரின் முத்து பாடலோடு....
விடுகதையா உந்தன் (அரசியல்) வாழ்க்கை, விடை தருவார் யாரோ?????? குழப்பமில்லாத ஒர் அறிக்கை உந்தன் பெயரால் இங்கு வேண்டுமய்யா..........

வீ எம்

நன்றி : குழலி ( ஒரு புகைப்படத்திற்கு)

நன்றி : rajinifans.com (மற்றொரு புகைப்படம் மற்றும் சில தகவல்கள்)

படித்ததில் பிடித்தவற்றுள் சில !

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மெட்டி ஒலிலிலிலிலிலிலி

மெட்டி ஒலி -இது கடந்த 3 ஆண்டுகளாக 75% தமிழர்களின் இல்லங்களில் இரவு 9 - 9.30 மணி வரை கேட்ட ஒலி.. நாடகமே என்றாலும், அதில் வரும் சம்பவங்களை ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் நிகழ்வுகளாகவே ஒன்றிப்போய் பார்த்தவர்கள் ஏராளம்..மெகா தொடர் நாடகங்களை ஒரு பக்கம் விமர்சித்துக்கொண்டே, ஓரக்கண்ணால் பார்த்தவர்களும் மிக அதிகம், என்னையும் சேர்த்து.
ஆரம்பத்தில் தொடருக்கு நடுவே விளம்பரம் போட்டது போய் , கொஞ்சம் சூடு பிடித்தவுடன் விளம்பரத்துக்கு இடையே கொஞ்சம் நாடகமும் போடப்பட்டது என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கும் இந்த தொடர் , இன்றோடு முடிய போகிறது...

சற்று இடைவெளி விட்டு, ஒரிரு மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியும் என்கிற வசதி மெகா தொடருக்கு உண்டு..மெட்டி ஒலியிலும் அந்த வசதி இருந்தது. பொதுவாக மெகா தொடர்கள் வார பத்திரிக்கை துனுக்குகளில், பட்டிமன்றகளில் , கூடிப்பேசும் நன்பர்கள் என அனைவரின் வாயிலும் விழுந்து எழும்.. மெட்டி ஒலியும் அதற்கு விதிவிலக்கல்ல.. வலைப்பூவில் கூட மெட்டிஒலி பற்றிய பதிவுகள் சிலவுண்டு..

பட்டிமன்ற புகழ் "ராஜா" ஒரு பட்டிமன்றத்திலே பேசும்போது "எங்க வீட்டு அம்மனி மெட்டிஒலி முடிந்தால் தான் ரொட்டி ஒலி னு சொல்லிடுச்சி.." என சொல்லி மக்களின் கரகோஷத்தை அள்ளி சென்றார்.

ஒரு மனைவி கனவனை பார்த்து கேட்டாங்களாம் "ஏங்க , மெட்டி ஒலி கோபி பாருங்க, எவ்ளோ நல்லவரா இருக்காரு, மனைவிக்கிட்ட அன்பா இருக்காரு... நீங்களும் அப்படி தான் இருக்கனும்.."கனவர் சொன்னாராம் "ஹ்ம்ம்..அவருக்கு லட்சக்கனக்குல பணம் வருது, எனக்கும் உங்கப்பா மாசம் 50 ஆயிரம் தந்தா நான் மட்டும் இப்படி நடிக்க மாட்டேனா என்ன??"

என் நன்பன் மெட்டி ஒலி ஆரம்பிக்கப்போ "பாச்சிலர்" , முடியும்போது 2 குழந்தைக்கு அப்பா ... என்ன 3 வருசத்துல கல்யாணம் பன்னி 2 குழந்தைகளா னு பாக்கறீங்களா?? ஏன் முடியாது????? ஹ ஹா ஹா ... இருந்தாலும் அவனுக்கு(மனைவிக்கு) ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறந்தது..
நாம (வீ எம்) அப்பவும் "பாச்சிலர்" இப்பவும் அதே தான் :( :( ..பார்க்கலாம் செல்வி புன்னியத்துல ஏதாச்சும் நடக்குதானு...)..ஐயோ ..."செல்வி" தொடரை சொன்னேங்க... !

நானும் மெட்டி ஒலி உள்ளிட்ட மெகா தொடர்களை அதிகமாக விமர்சித்துள்ளேன்.. என்ன இது மக்களை இப்படி அடிமை படுத்தி வைக்கிறாங்க, அப்புறம் நினைத்துக்கொள்வேன், அவர்களுக்கு டீ வி தொடர் என்றால் நமக்கு வலைப்பூ !

இந்த வகையான தொடர்கள் பல நேரங்களில் அபத்தமான விஷயத்தை சொல்கிறது, வியாபார நோக்கத்திற்காக சில விஷயங்கள் தினிக்கபடுகிறது, சில நேரங்களில் மூட வழக்கங்களை நியாயப்படுதுகிறது.... இன்றைய தொடர்களில் சில் நேரங்களில் "இது போன்ற காட்சி தேவையா??" என சொல்ல வைக்கும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் வைக்கப்படுகிறது.. உன்மையே !

ஆனால் , சற்று யோசித்து பார்த்தால்,. . பல குறைகள் இருந்தாலும் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் உள்ளடங்கி இருப்பது தெரிகிறது....

இந்த தொடரை பொறுத்தவரை, ஒரு கனவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் காண்பித்தார்கள், அதே வேளையில் எப்படி இருக்க கூடாது என்றும் காண்பித்தார்கள்.. நல்ல அருமையான பாத்திர படைப்புகள் இந்த தொடரில் இருந்தது..
சிறு சிறு பிரச்சினைகள் எழுந்து அடங்கினாலும் 5 சகோதரிகளின் பாசத்தையும் , பொறுப்பான தந்தையும் பார்க்க முடிந்தது.. நல்ல உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வைக்கும் படி இருந்தது ...
மாமியாராக நடிதவரின் பாத்திர படைப்பு மிகைப்படுத்தபட்டதென்றாலும், இவரின் சுபாவத்தை ஒத்த மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது... நிச்சயமாக அவர்களுக்கு சற்றாவது உறுத்தி இருக்கும்..
நிர்மலா என்ற பாத்திர படைப்பின் மூலம், ஒரு பேன் ஆரம்பத்தில் மற்றவரையே சார்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் தெளிவடைந்து , சுயமாக இருக்க முடியும் என்பதை காட்டியது.. அந்த கதாபாத்திரத்தின் முதல் பாதியும், பின் பாதியும் வெகு அழகாக தீட்டப்பட்டிருந்தது

இப்படி 3.5 ஆண்டுகளுக்கு மக்களை கட்டி போடுவது சாதாரண காரியம் இல்லை.. கதாசிரியர், இயக்குனர் இருவரின் அபார திறமையும் இதற்கு முழு காரணம்.. வாழ்த்துக்கள்... !

குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து பேசுவதே அரிதாகி வரும் இந்த கால கட்டத்தில், இது போன்ற தொடர் பார்க்கும் அந்த 1 மனி நேரமாவது அனைவரும் தொலைகாட்சி முன் கூடி அமர்வதும், தொடர் பற்றியாவது ஏதாவது அவர்களூக்குள் விவாதிப்பதும் ..நல்ல விஷயமே!

மறுபக்கத்தில், இதையெல்லாம் விட உண்மையிலேயே இதில் நடித்தவர்கள், டெக்னிஷியன்கள் அனைவரும் மூன்று வருட காலம் ஒன்றாய் இருந்து , பேசி , பழகி.. ஆரம்பத்தில் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த நாடகம் தொடர் முடியும் இந்த நேரத்தில் நெருக்கமான நன்பர்களாகி இருப்பார்கள்.
நடிப்புக்கு புதிதாய் வந்தவர்கள் கூட இந்த 3.5 ஆண்டு காலத்தில் தங்களை பட்டை தீட்டிக்கொண்டிருப்பார்கள். அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. என்ன ஒரு அருமையான அனுபவமாக இருந்திருக்கும் அல்லவா?
ஆக, ஒரு கவிஞன் "வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி ... " என்று பாடியது போல..இந்த மெகா தொடர்களில் பல குறைகள் இருந்தாலும், நிச்சயமாக நாம் புரிந்துக்கொள்ளக்கூடிய , ரசிக்க கூடிய சில நல்ல விடயங்களும் இருக்கத்தான் செய்கிறது ...

உண்மைதானே??????

வீ எம்