அனல் கக்கும் மதுரை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுட்டெரித்து வந்த வெயில் குறைந்து சற்று இதமான குளிர் காற்று வீசுகின்ற போதிலும், ஒரே ஒரு பகுதியில் மட்டும் இன்னும் அனல் வீசுகிறது. ஆம்.. அது மதுரை மேற்கு... சிவாஜியின் அனலை காட்டிலும் இடைத்தேர்தல் அனலில் சிக்கித்தவிக்கிறது மதுரை மேற்கு. ஆங்காங்கே வாக்குவாதம், கைகலப்பு, பண விநியோகம், உள்குத்து, குழிபறிப்பு , பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் என்ற சமீபத்திய தேர்தல் ட்ரெண்ட் எதற்கும் பஞ்சமில்லாமல் மேற்கு தொகுதியில் தேர்தல் திருவிழா உச்சக்கட்ட களைக்கட்டுகிறது.

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கும் - அதிமுக வேட்பாளருக்கும் தான் போட்டி என்றாலும் களத்தில் தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் மற்றும் சுயேச்சைகளும் அனல் கிளப்பிக்கொன்டிருக்கிறார்கள்.

வெற்றி மாலை யாருக்கு???

திமுக கூட்டணியின் ப்ளஸ் :

 • மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆட்சியாளர்கள் மீது ஒரு பெரிய வெறுப்பு எண்று எதுவும் இல்லாதது (தினகரன் தாக்குதல் தவிர்த்து)
 • கிலோ அரிசி 2 ரூபாய்இலவச வண்ண தொலைக்காட்சி மற்றும் 2 ஏக்கர் இலவச நிலம்.
 • ஆளுங்கட்சி என்கிற அதிகாரம்.அழகிரியின் வேகம்.

தி மு க கூட்டணியின் மைனஸ்

 • தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம்.
 • வழக்கமான காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒத்துழையாமை இயக்கம்
 • இலவசங்களை வழங்குவதில் ஏற்பட்ட சில குளறுபடிகள்
 • சன் டிவி அளித்து வந்து பிரச்சார சப்போர்ட்
 • அதிமுக வின் இரட்டை இலை

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, முதல் மைனஸ் தவிர்த்து மற்றவைகள் மிகப்பெரிய தாக்கத்தையோ , திமுக கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என்றோ சொல்ல முடியாது.


தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இடைத்தேர்தலில் இருக்கும் என்பது அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. தி மு க கூட்டணிக்கு இது பெரும் பிண்ணடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஆனாலும் சற்று யோசித்துபார்த்தால், 3 பொதுமக்களின் உயிர் பலி வாங்கிய சம்பவம் என்றாலும், இதனை பலரும் தயாநிதி + கலாநிதி மற்றும் தி மு க விற்கு இடையேயான பிரச்சனையாக பார்க்கின்றனர் என்பதே நிஜம். உபயம் : பத்திரிக்கைகள் + கலைஞரின் அனுபவம் (தருமபுரி நிகழ்வு பொதுமக்கள் மனதில ஏற்ப்படுத்தியது போன்ற வடுவை மதுரை ஏற்படுத்தவில்லை அல்லது ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் கொள்க)

உடன்பிறப்புக்களளை பொறுத்த வரை, இந்த தாக்குதலை குறித்து அவர்கள் வருத்தப்பட்டாலும், இதனை மிகப்பெரிய குற்றம் என்று அவர்கள் பார்க்கவில்லை. தினகரன் செய்தது மிக பெரிய தவறு அதன் காரணமாகவே உணர்ச்சிவேகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் இந்த தாக்குதலை நடத்தியது மதுரை தி மு கவினர் என்பதால் நிச்சயமாக இந்த தாக்குதலை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு திமுகவிற்கு எதிராக வாக்களிக்கப்போவதில்லை.

என்னதான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இந்த தாக்குதல் குறித்து மிக பெரிய வருத்தம், கோபம் இருந்தாலும், களத்தில் இருப்பது தங்கள் கட்சி என்பதாலும், தி மு க , அதிலும் குறிப்பாக அழகிரியின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் தேவை என்பதாலும், நிச்சயமாக அவர்களின் வாக்குகளும் சிதறப்போவதில்லை.


பா ம க - ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு சன் டிவி, தினகரன், தயாநிதி மீது இருந்து வந்த கோபம், மற்றும் தயாநிதியை இப்போது கட்சியில் இருந்து ஓதுக்கிவைத்துள்ள காரணத்தால் இந்த சம்பவத்தை இவர்களும் மிகப்பெரிய கொடூரமாக நினைத்து வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை.

தோழர்களின் வாக்கு வங்கியில் மட்டுமே சிறய அளவில் ஓட்டை விழ வாய்ப்புள்ளது.


யாருக்கு இந்த வெற்றி முக்கியமோ இல்லையோ அழகிரிக்கு இந்த வெற்றி மிக முக்கியம் (காங்கிரஸை விட) . இந்த வெற்றியை வைத்துதான் அழகிரி இந்த தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என மதுரை மக்கள் தீர்பளித்துள்ளார்கள் எனறும், தென்மாவட்டங்களில் தன் சாம்ராஜ்யத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்று கூறி வலம் வர முடியும்.

ஏன் தி மு க கூட்டனியில் உள்ள கட்சிகளின் வாக்குகளை மட்டும் பற்றியே எழுதினேன் என்று யோசிக்கலாம்.. ஆம், கடந்த சில தேர்தல்களில், ஜனநாயக கலாசார முறையில் நிகழ்ந்த சில உருட்டுக்கட்டை , அடிதடி, வாக்குசாவடி கைப்பற்றுதல் காரணத்தாலும், தற்போதைய கள நிலவரத்தாலும், பொது மக்களில் பலர் வாக்களிக்க வருவார்களா என்பது சற்று சந்தேகமே.ஆக கட்சியின் தீவிர உறுப்பின்ர்கள், கட்சி சார்ந்தவர், கட்சி அபிமானிகள் வாக்குகள் மட்டுமே அதிக அளவில் பதிவாகும் (கள்ள ஓட்டு என்னிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்பது வேறு :) )


ஆக, பொதுமக்கள் பலர் முன்வந்து வாக்களிக்காத பட்சத்தில், தினகரன் சம்பவத்தின் பாதிப்பு காங்கிரஸின் வெற்றியை சற்றே பாதிக்கலாமேயொழிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

அப்படி ஏற்படப்போகும் அந்த சிறு பாதிப்பையும், அதே போல இரட்டை இலை மந்திரத்தால் ஏற்படப்போகும் பாதிப்பையும் கிழ்க்கண்ட விசயங்கள் சரிக்கட்டிவிடும் என்றே தோன்றுகிறது..

 • அதிகார பலம் (துஷ்பிரயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்) :)
 • வாரியிரைக்கப்படும் கரண்சி நோட்டுக்கள்
 • முன் தேதியிட்ட கலர் டீவி டோக்கன்கள்
 • நம் எம் ல் ஏ ஒரு ஆளும் கூட்டனியின் எம் எல் ஏ வாக இருக்கட்டுமே என்ற மக்களிள் பொதுவான மனநிலை

மேலும், கலாநிதி + தயாநிதி ஆரம்பத்தில் காண்பித்த வேகம் இப்போது இல்லை. அதே வேகம் இப்போது இருந்திருந்தால், தன் கையில் இருக்கும் மிக வலுவான சன் என்னும் மீடியா முலமே திமுக கூட்டணியின் எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தால்..திமுக விற்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கும்.. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற வகையில் தான் கலாநிதி தயாநிதி இருக்கிறார்கள்.

தேமுதிக கவனிக்கப்படவேண்டிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும் அது அதிமுகவின் , குறிப்பாக எம் ஜி ஆர் சேர்த்து வைத்துள்ள வாக்கு வங்கியில் தான் சேதாரம் ஏற்படுத்தப்போகிறது.


தேர்தல் நாளன்று என்ன நடக்கப்போகிறது , எந்தளவிற்கு வாக்குபதிவு இருக்கும், வாக்குப்பதிவு அமைதியாக நடக்குமா, கள்ள வோட்டு கனஜோராக இருக்குமா.. என்பதெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.. ஜீன் 26 அன்றே தெரியவரும்..


மிக பெரிய அளவில் வன்முறை அலம்பல் இல்லாமல் தேர்தல் நடக்கும் பட்சத்தில் , வெற்றி விளிம்பின் வெகு அருகில், மிக மிக நெருக்கத்தில் இரு கூட்டனி வேட்பாளர்களும் இருந்தாலும், திமுக கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரன் சற்று (நூலிழையிலாவது) வெற்றிக்கோட்டை முதலில் தொட்டு கோட்டைக்கு போவார் என்றே தோன்றுகிறது, அழகிரி தேரில் ஏறி. மன்னிக்கவும் அழகிரி தோளில் ஏறி..

குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.


யார் வெல்வார்?? உங்கள் கணிப்பு என்ன?? கருத்து பெட்டியில் சொல்லுங்கள்..

வீ எம்

நான் அவன் இல்லை.. .. திருமணமானவர்கள் ஸ்பெஷல்

திருமணமானவர்களுக்கு எல்லாம் சமர்பணம் :)

திருமணத்திற்கு முன் :

அவன் : ஆமாம், காத்திருப்பது மிக கடினமாக உள்ளது

அவள் : என்னை விட்டு பிரிய நினைக்கிறாயா?

அவன் : இல்லை, அப்படி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை

அவள்: என்னை நேசிக்கின்றாயா?

அவன் : இதிலென்ன சந்தேகம் உனக்கு?

அவள் : என்னை எப்பொழதாவது ஏமாற்றி இருக்கிறாயா??

அவன் : இல்லை, இல்லை, இப்படி கேட்பதே தவறு

அவள்: எனக்கு ஒரு முத்தம் தருவாயா?

அவன்: ஆம், நிச்சயமாக.

அவள் : என்னை கடிந்துக்கொள்வாயா? அடிப்பாயா?

அவன் : வாய்ப்பே இல்லை , நான் அப்படிபட்டவன் இல்லை.

அவள் : நான் உன்னை நம்பலாமா? நீ நம்பிக்கையானவனா?திருமணத்திற்கு பின்:

மேலே உள்ள அதே உரையாடலை , கீழிருந்து மேலாக படிக்கவும்

====================

திருமணமானவர்களே - இது உண்மையா என்று சொல்லுங்கள் (கருத்துப்பெட்டியில்)

திருமணமாகாதவர்கள் - திருமணமானவர்கள் தரும் பதிலை பார்த்து முடிவு செய்யுங்கள்..என்ன முடிவு... அது எனக்கு தெரியாதுங்கோ.. உங்க இஷ்டம்...

வீ எம்

சலூனுக்கு போகாமல் முடி வெட்டிக்கொள்ளலாம் வாருங்கள்.

சிலர் இதனை முன்பே கேட்டிருக்கலாம்..

முன்பு கேட்டிராத வலைப்பூ நன்பர்களுக்கு சமர்ப்பணம்

HOLOPHONIC என்ற ஒலிப்பதிவு முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த MP3 கேட்டுப்பாருங்கள், இந்த JPG யை பார்த்துக்கொண்டே

என் நன்பர் இதனை மின்னஞசலில் அனுப்பினார். முதன் முறை கேட்ட போது சும்மா அதிர்ந்து போனேன்...

நீங்களும் கேட்டுப்பாருங்க .. சும்மா அதிருதுல???? ......... என்ன சொல்றீங்க..

மிக முக்கியம் - HEADPHONES (தமிழில் தெரியலீங்கோ.. மன்னிச்சுடுங்க)போட்டு கேட்டால் மட்டுமே அதிரும்..

HEADPHONES இன்றி கேட்பின், கேட்டலின் கேட்காமை நன்று !!!

இதனை பற்றி நிறைய எழுதுவதை விட, நீங்கள் கேட்டு மகிழ்வதே சிறந்ததாக இருக்கும் என்பதால்.. இதோ உங்கள் காதுகளுக்கு.....

barbershop-600


Get this widget Share Track details

காதால் கேட்டுவிட்டு அப்படியே சென்று விடாமல், கைகளுக்கு கொஞ்சம் வேலை கொடுங்கள்.. அட! பிண்ணூட்டம் பா.. (கருத்து சொல்லிட்டு போங்கனு சொல்றேன்.. ) :)

வீ எம்

FM - கூறு கெட்ட குறுந்தகவல்

அவ்வப்போது ரேடியோவில் எப் எம் (FM) கேட்பது வழக்கம். அதே போல கடந்த வெள்ளியன்று சூரியன் மற்றும் ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே வயாராகா என்ற நிகழ்ச்சி வரும் FM ட்யூன் செய்து கேட்ட எனக்கு அவர்கள் நேயர்களை ஒரு தலைப்பு பற்றி குறுந்தகவல் அனுப்பும்படி கேட்டனர்... அந்த தலைப்பை கேட்டவுடன் எனக்கு சற்று நெருடல் கலந்த அதிர்ச்சி.. அதிமுக்கியமான அந்த தலைப்பு என்ன தெரியுமா??? அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கொடுத்த தலைப்பு இது தான்...

"காமத்தில் நீங்கள் அமைதியா.. அதிரடியா...??"

என்ன தான் இப்பொழுது குறுந்தகவல் அனுப்ப சொல்வது வாடிக்கையாகிவிட்டது என்றாலும்.. இப்படி ஒரு தலைப்பு தேவையா??

காமம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விசயம் , குறிப்பாக யாரும் தங்கள் துனையுடன் ஈடுபடும் இந்த விசயத்தை வெளியே விவாதிக்க மாட்டார்கள்..

இது கனவன் மனைவி / காதலன் காதலிக்கு இடையில் மட்டுமே இருக்ககூடிய அந்தரங்கம்.. அந்தரங்கத்தையே வெளிச்சம் போடும் ஒரு கேள்வி.. அதிலும்.. பல லட்சம் பேர் கேட்கும் ஒரு ஊடகத்தில் கேள்வியாக வைப்பது.... ???

இதனை ஒரு வியாபார உத்தி என்றோ அல்லது அப்படி கேள்வி கேட்பது அந்த FM நிகழ்ச்சியின் தனிப்பட்ட உரிமை என்று எடுத்துக்கொள்ளவோ என்னால் முடியவில்லை..

அதிலும் .. கேள்வி கேட்ட சிறிது நேரத்தில்.. வந்ததாக வாசிக்கப்பட்ட சில குறுந்தகவல்கள் படிக்கபட்ட போது .. அட முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழர்கள் பலர் இருக்கின்றனர் !! என்று எண்ணத்தோன்றியது..

அதிலும் குறிப்பாக அவர்கள் படித்த ஒரு குறுந்தகவல் :

"எனக்கு அனமதி வழி பிடிக்கும் ஆனால் என் மனைவிக்கு எப்பவும் அதிரடி வழி தான் பிடிக்கும் , ஆகவே நானும் அதிரடி தான்"

உண்மையில் இது யரேனும் அனுப்பியதா அல்லது ஒரு விறுவிறுப்புக்காக வந்ததாக சொல்லி படிக்கப்பட்டதா என்று தெரியவில்லை..

வந்ததாக சொல்லி படிக்கப்பட்டிருந்தால் , அந்த FM நிகழ்ச்சியின் வியாபார உத்தியையும்.. இல்லை உண்மையாகவே வந்திருந்தால்... தன் மனைவியின் அந்தரங்க விருப்பத்தை, இதனை வெளியில் பகிர்ந்திட மாட்டார் என்ற நம்பிக்கையில் மனைவி கூறிய ஒரு அந்தரங்க விருப்பத்தை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி பகிர்ந்துக்கொண்ட அந்த தமிழனை மனதாற வாழ்த்தலாம்...வேறென்ன செய்ய??????????????????????????

வீ எம்

சிறுகதை - காகித பூக்களும் ... கலர் டிவியும்..

மிக நடுத்தர பிரிவு குடும்பத்தில் பிறந்து, முட்டி மோதி ஒரு வழியாக ...1999 ல் கல்லூரி முடித்து, எப்போழுது வெளிநாட்டில் வேலை கிடைக்கும், கை நிறைய கிடைக்கும் வருமானத்தில் தங்கைக்கு நல்ல இடதத்தில் திருமணம் முடிக்கலாம் என்ற கனவோடு.. நான்கு வருடம் தாய்நாட்டில் உழைத்து,.. கடைசியில் 2003 ல் வெளிநாட்டு வேலை கிடைத்து விட்டது.மனதில் இருந்த பாரம் குறைந்து, தங்கையை கரையேற்றி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் விமானம் ஏறி .. 1.5 ஆண்டுகள் கடினமாய் உழைத்து ..பனம் சேமித்து.. இதோ, 2005 ஜனவரி 18, தங்கையின் திருமனம் ... இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது... என் தாய்நாட்டு பயனத்துக்கு. எல்லாம் தயார். நீண்ட நாள் கனவு (லட்சியம் என்றே சொல்ல வேண்டும்.. ) .. நினைவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்..

2005 ஜனவரி 17 :

வெகு விமரிசையாக மாப்பிள்ளை அழைப்பு.. அடேங்கப்பா¡¡..... எவ்வளவு பெரிய மண்டபம்... வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்க.. அனைவரின் முகத்திலும் அப்படி ஒர் மகிழ்ச்சி.. டேய் ..ஸ்ரீதர் (4 வயது - சித்தி பையன்) .. ஏண்டா அப்படி ஓடுற, விழ போற.. பார்த்து ...பார்த்து அட , குமரன் (அத்தை பையன்) ஹேய் 7 வருஷம் இருக்கும் டா உன்னை பார்த்து... சித்தி , சித்தப்பா .. மாமா , மாமி, பெரியப்பா, பெரியம்மா.. அண்ணன்(பெரியம்மா மகன்) அண்ணி .குழந்த்தைகள்... நன்பர்கள் கூட்டம் அனைவரும் கூடி இருக்க எவ்வளவு சந்தோஷமா இருக்குப்பாஹே ! , யார் இவர்கள்...ஒ !.. மாப்பிள்ளை வீட்டார் போல....அட.. நம்ம சுதா வா இது .. (மாமா மகள்) .. 3 வருடத்தில் எப்படி வளர்ந்த்து விட்டாள்... இவளை தான் எனக்கு கேட்கப்போவதாய் அம்மா சொல்லுவார்கள்.... போங்க்ம்மா ... !! பொய் கோபம் காட்டினாலும் ..உள்ளுக்குள் எனக்கு ஆசை தான்.. ஏதோ நினைவில் அப்படியே சாய்ந்து நின்ற என்னை அருமையான "ஆட்டோக்கிராப்" பட பாடல் தான் நினைவுக்கு கொண்டு வந்தது... அட... ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்து இருந்த மெல்லிசை குழு வாசித்து பாட.... நன்பனின் சிபாரிசின் பேரில் இவர்களை புக் செய்த்தோம் 24000 ருபாய் .... நன்றாக தான் உள்ளது....தங்கையும் மாப்பிள்ளை யும் அங்கே மேடையில் ...தங்கைக்கு அந்த அரக்கு நிற பட்டு புடவை மிக அழகாக உள்ளது... அம்மா காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி சுற்றி ...பார்த்து பார்த்து எடுத்த வேளையில், நான் அமெரிக்க - கலிபோர்னீய வீதிகளில் கடை கடை யாக ஏறி இறங்கி வாங்கிய டைமண்ட் பதித்த அந்த கைகடிகாரம் (வாட்ச்) மாப்பிள்ளை கையில் சூப்பராய் மின்னியது. ... இதை வாங்க நான் சுற்றியது சற்று நேரம் மனதில் வந்து போனது...அம்மாவும் , அப்பாவும் அங்கும் ..இங்கும் ஓடிக்கொண்டு....ஏன் தான் இப்படி இழுத்து போட்டு கொண்டு வேலை செய்கிறார்களோ.... ! கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே.... ! சரி சரி ..மகள் திருமணம் ... ஆசை இருக்காதா???..சம்பிரதாய , சடங்கு ஒருபுறம்... மெல்லிசை ஒருபுறம் .. விருந்து ஒருபுறம் ... பார்த்து பார்த்து நல்ல சமையல்காரருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து.. நீண்ட மெனு (16 வகை) கொடுத்து.. அப்பப்பபா...நான் நினைத்ததை விட இதோ ..மிக நன்றாக அனைத்தும் நடக்கிறது..ஐயோ!!!...எவ்வளவு பெரிய மணிகூண்டு ... மண்டபத்திற்கு எதிரிலேயே ..இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லையே... மணி 10:20 ...வந்தவர்கள் பலர் சென்றிருக்க.. நெருங்கிய நன்பர்கள், உறவினர் மண்டபத்திலேயே இருக்க... அனைவரும் உறங்கும் நேரம் ... விடிகாலை 5.30 மணி முகுர்த்தம் அல்லவா ... !!

2005 ஜனவரி 18 காலை 4.40
..அதிகாலையிலேயே அனைவரையும் பரபரபப்பு தொற்றிக் கொண்டது... அனைவருக்கும் காபி ... மங்கல இசை முழங்கி கொண்டிருக்க... இரவு வந்துவிட்டு போனவர்கள் சிலரும், வராவதர்கள் பலரும் மண்டபத்திற்குள் வந்தவாறே இருக்க ... பட்டு சட்டை , வேட்டி யில் அப்பா அவர்களை கை கூப்பி வரவேற்க.....ஆசிர்வதிக்க 'பூக்களும் , மஞ்சள் அரிசியும்' எல்லோருக்கும் ஒருவர் கொடுத்து கொண்டிருக்க .. மறுமுனையில், அனைவரும் ..சிரித்து ..மகிழ்ந்த்து... மண்டபமே கலகலப்பாய் இருக்க....கெட்டி மேளம் கெட்டி மேளம் ... என்ற குரல் வர, பாரம்பரிய கெட்டி மேள இசை இசைக்கபட..இதோ .. வெகு விமரிசையாய் நடத்த வேண்டும் என்று உழைத்து உழைத்து .இந்த நாளில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பல ஆண்டாக திட்டம் தீட்டி......... நான் பெரிதும் கனவு கண்ட அந்த காட்சி - சுற்றம் சுழ ..தங்கையின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட....தங்கையை மானசீகமாய் ஆசீர்வாதம் செய்து, கையில் இருந்த காகித பூக்களை டிவி (TV) மீது தூவி விட்டு, ரீமொட் எடுத்து டிவி மற்றும் டி.வி.டி ப்ளேயரை அனைத்துவிட்டு .....கிளம்ப இரண்டு நாள் இருக்கும் போது, கடைசி நேரத்தில் .. ஜனவரி 20 ம் தேதி முடிக்க வேன்டிய அவசர ப்ரொஜெக்ட் ஐ காரனம் காட்டி என் விடுப்பை (LEAVE) ரத்து செய்த என் உயரதிகாரியை மனதிற்குள் மற்றும் ஒரு முறை பலமாக அர்ச்சித்து கொண்டே கனத்த இதயத்துடன் கட்டிலில் விழுந்தேன். காலன்டர் ஜனவரி 26, 2005 காட்டி கொண்டிருந்தது....விழியோரத்தில் வழிந்த கண்ணீரை துடைக்க ஏனோ மனம் வரவில்லை ..............இந்தியா சென்று திரும்பும் பொழுது மறக்காமல் என் வீட்டிற்கு சென்று மறக்காமல் திருமண டி.வி.டி வாங்கி வந்த நன்பன் தினேஷ்க்கு நன்றி... அவன் தங்கைக்கு ஜுன் 11 ல் திருமணம்...

= வீ. எம்