யோ.., ஆ..றி ஆராய்ச்சியில் கரை கண்டவர்

அன்பான வலைப்பூ நன்பர்களே





வாக்களித்தமைக்கு நன்றி. அப்படியே ஏன் அந்த குறிப்பிட்டவருக்கு வாக்களித்தீர் என கருத்து சொல்லவும்

TEST POST

TEST POST

பெணாத்தலாரின் புத்தாண்டு பதிவுக்கு போட்ட கருத்து

திரு பெணாத்தலாரின் இந்த பதிவுக்கு போட்ட கருத்து.. இங்கே பதிவாக


1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?


1. ஆம் விடுமுறை கிடையாது. ஆம், அவரவர் நம்பிக்கையின் படி செய்யலாம். என்னுள்ளும் இந்த கேள்வி வந்தது

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?


2.பிறந்தநாளுக்கும், சினிமா ரீலிஸ்க்கும் , புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் கொண்டாடுவது ஏன் அரசுக்கு எதிராக இருக்கவேண்டும்?

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?


3 & 4. பெனாத்தலாரே, இது விவாதிக்கப்படவேண்டிய விஷயமே அல்ல.. பல மாற்றங்கள் ஏற்கனவே ஏற்பட்டு, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது, அப்படியொன்றும் மாணவர்களிடத்தில் தகவல் வித்தியாசம் இருந்ததில்லை.. (என் கருத்து) நான் படிக்கும் போதெல்லாம் தமிழக தலைநகர் மெட்ராஸ் என்று தான் படித்தேன்..
இப்போது எதிர்ப்பு வராத பட்சத்தில் அடுத்த ஆட்சியாளர் இதனை மாற்றாமல் இருக்கலாம்.

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?


5.சென்னை பெயர் மாற்றம் போலத்தான் இதுவும்.. அதே போல் இது தி மு க வின் திட்டம் மட்டுமில்லை.. அப்படியென்றால் இந்நேரம் அம்மா, வைகோ, ராமதாஸ் எல்லாம் அறிக்கை விட்டிருக்கலாம் :)

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?


6.விதான்டாவாதம்? சில காரணங்களுக்கு விமான நிலையம் மதுரைக்கு மாற்றப்பட்டால், உடனே சென்னை கடற்கரை கோயம்புத்தூருக்கு மாறுமா? மதுரை மகால் திருச்சிக்கு மாறுமா என கேட்பது போல் உள்ளது.

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?


7. ஏற்கக்கூடிய கேள்வி.. ஆனால் நன்மை தீமை என்று இதில் எதுவும் இல்லை.. மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது மட்டுமே இதில் உள்ளது

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?


8. தமிழ் புத்தாண்டுக்கும் , இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.. அப்படியெனில் 80 கோடி இந்துக்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறார்களா? அல்லது ஆங்கில புத்தாண்டை கிறுத்தவர் மட்டும் கொன்டாடுகிறார்களா? புத்தான்டை மதத்துடன் சேர்த்துப்பார்க்க வேண்டாம் .

அப்படி பார்த்ததால் தான் தங்களுக்கு மேல உள்ள பல கேள்விகள் எழுந்துள்ளது.

எனினும் , இதனை விவாத்திக்குட்படுத்தி, பல நல்ல கருத்துப்பறிமாற்றம் நடக்க வழிகோலியமைக்கு மிக்க நன்றி , வாழ்த்துக்கள் பினாத்தலாரே.

வீ எம்

உங்களால் முடியுமா ? முயன்று பாருங்களேன்

இது தாங்க கணக்கு TAN X = N எனில் , வரிக்குதிரை = குதிரை என நிரூபிக்கவும்.



ரொம்ப யோசிச்சு மன்டைய ஒடைச்சுக்காதீங்க.. விடை கீழே இருக்கு பாருங்க
__________________________________________________________

விடை


TAN X = N


முதல் படி


TAN X = N இதனை இருப்பக்கமும் N ஆல் வகுக்கவும்

TAN X / N = N/N

=> TAX = 1 ( TAN X/ N = TAX & N/N = 1)


இரண்டாம் படி


வந்திருக்கும் விடையின் இரு பக்கத்தையும் குதிரையால் பெறுக்கவும்


TAX * குதிரை = 1* குதிரை


ஆக, இப்போது நமக்கு கிடைத்திருக்கு விடை


TAX குதிரை = குதிரை


இது தான் இந்த கணக்கின் மிக முக்கியமான கட்டம் மாணவர்களே, ஆகவே என் அருமை மாணவச்செல்வங்களே, கூர்ந்து கவனியுங்க.. சரியா? "TAX" என்பதன் தமிழாக்கம் "வரி" என்பது உங்கள் அனைவருக்கு தெரிந்திருக்கும் இல்லையா?


நிச்சயம் தெரிந்திருக்கும், ஏனெனில் நீங்கள் எல்லாம் புத்திசாலி மாணவர்கள்.

மூன்றாம் படி


நமக்கு மேலே கிடைத்துள்ள விடையை (இரண்டாம் படி விடை) இரு பக்கமும் முழுமையாக தமிழ் படுத்தினால், நமக்கு கிடைப்பது

TAX குதிரை = குதிரை

வரிக்குதிரை = குதிரை

என் அருமை மாணவர்களே, நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த கணக்கினை முடித்து, வரிக்குதிரை = குதிரை என்பதை நிரூபித்து விட்டோம்..

நம்மை நாமே பாராட்டிக்கொள்ள, பலத்த கையொலி எழுப்புவோமா? . அனைவரும் ஜோராக கைத்தட்டுங்கள்..
_______________________

PIT, Wifeology, Husbandalogy மட்டும் தான் வீட்டுப்பாடம் தருவார்களா.. ??

இதோ இந்த வகுப்பின் வீட்டுப்பாடம்..


COS X = X என்றால், கழுதைப்புலி = புலி என்று நிரூபிக்கவும்..

விட்டுப்பாடத்தின் விடையை கருத்து பெட்டியில் செல்லுங்கள் மாணவர்களே..


மின்னஞலில் இது வந்த போது , யாம் பெற்ற கடுப்பு , பெறுக இவ்வலைப்பதிவர் உலகம் என்ற நல்ல என்னத்தில்...


அப்பாடா, பொங்கல் மொக்கை போட்டாச்சு..


அன்பு பொங்கல் வாழ்த்துக்களுடன்

வீ எம்

பொங்கலோ பொங்கல்.

சர்வேசன் - மறந்துவிடாதீர், மறந்தும் இருந்துவிடாதீர் .

வலைப்பதிவு நன்பர்களே,

வணக்கம்.

சர்வேசன் அவர்களின் நச் கதை போட்டி பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை.. உங்களுக்கே நன்றாக தெரியும்.

பல மாதங்களாக எழுதாமல் இருந்த என்னை , இவரின் போட்டி அறிவிப்பு மீண்டும் எழுத தூண்டியது, மிக்க நன்றி சர்வேசன்.

57 கதைகளில், என் மனதுக்கு பிடித்த கதைகள் 11 (என் கதையும் சேர்த்து). ஆக என் கதை இறுதி சுற்றுக்கு வருமா , வராதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஒரு வழியாக என் கதை இறுதி சுற்றுக்கு வந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

இறுதி சுற்றுக்கு வந்த மற்ற 7 கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் , இறுதியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

ஆர்வமுடன் நல்ல கதைகள் தந்த மற்ற 49 கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்களும் அருமையான கதாசிரியர்கள்.

முதல் சுற்றில் என் கதையை படித்த, கருத்தளித்த, வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றிகள் பல..

கூரு A கதைகள் படித்து அருமையான விமர்சனம் தந்த திரு பாஸ்டன் பாலா அவர்களுக்கு நன்றிகள் பல. மக்களே நீங்களும் படித்து பாருங்களேன்.

அனைவரும் தவறாம வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள், மிக முக்கியம், மின்னஞ்சலில் அப்ரூவ் செய்ய மறக்காதீர்கள்.

எனக்கு பிடித்திருந்த 11 கதைகளில், 3 இறுதி சுற்றுக்கு வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. போட்டி கடுமையாக இருக்கும் என நினைக்கிறேன்...


மற்ற 8 வராததில் எனக்கு சற்று வருத்தமே. எனக்கு பிடித்த 11 கதை பற்றி போட்டி முடிந்த பிறகு பதிவு போடுகிறேன்..

சரி, என் கதைக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்??

என் கதையை நன்றாக படித்துவிட்டு , இந்த மூன்று கேள்விகளை உங்களிடமே கேட்டுப்பாருங்கள்.

1. முடிவு யூகிக்க முடியாததாக இருந்ததா?
2. நல்ல திருப்பம் இருந்ததா?
3. வழக்கமான கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததா?

இந்த மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் வந்தால் (என் கதைக்கு நிச்சயம் வரும்) அரசியல்வாதிக்கு வாக்களியுங்கள்.

மேலும் சில விசயங்கள் யோசிக்கலாம்.

1. கதாபாத்திரங்கள் மனதில் பதிந்தா?
2. கதை இழுவையாக இல்லாமல் நேர்கோட்டில் செல்கிறதா.
3. ஏதேனும் மெஸேஜ் உள்ளதா..

இந்த 3 கேள்விக்கும் ஆம் என்று தான் என் கதைக்கு பதில் வரும் என நம்புகிறேன்.

அப்புறம் என்ன தயக்கம் ??? உடனே அரசியல்வாதிக்கு ஓட்டுப்போடுங்க... நியாயமா, அரசியல்வாதிக்கு தானேங்க ஓட்டு போடனும்...

வாக்கெடுப்பில் பங்கு பெற போகும் அனைவருக்கும், எனக்கு வாக்களிக்க போகும் அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்புடன்
வீ எம்