சூ டோ கு !!

தலைப்பை பார்த்தவுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து வந்த ஒரு ஜப்பானிய ரசிகர் பற்றிய பதிவு என தவறாக நினைத்துவிட வேண்டாம். :)




நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துக்கு மாற்றாக தற்போது மிக பிரபலமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சூ டோ கு (SU - DO - Ku). குறுக்கெழுத்து என்பது வார்த்தைகளை அடிப்படையாக கொண்டது. இந்த சூ டோ கு என்களை அடிப்படையாக கொண்டது.. குறுக்கெழுத்து போல , இங்கே க்ளு (CLUE) எல்லாம் கிடையாது. சில அடிப்படை விதிகளை கொண்டு கட்டங்களை எண்களால் நிரப்ப வேண்டும்.

1970 களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தான் இந்த விளையாட்டு தோன்றியது, அப்போதைய அதன் பெயர் "NUMBER PLACE". எண்களை கட்டங்களில் பொருத்துவதால் அதன் பெயர் இவ்வாறு அழைக்கப்பட்டது. 1986ல் தான் இந்த விளையாட்டு ஜப்பானுக்கு பரவி பெரும் வரவேற்பை பெற்றது.அங்கே தான் சூ டோ கு என்று மறுபெயர் சூட்டும் விழாவும் நடந்தது.

ஜப்பானிய மொழியில் சூ டோ கு என்றால் "தனி எண்" (SINGLE NUMBER) என்று பொருள்.20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சூ டோ கு உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளது..எப்படி பலருக்கு குறுக்கெழுத்து விளையாட்டு ஒரு வித போதையோ அதே போல் இப்போது சூ டோ கு பலருக்கு என்பது உன்மை..

எனக்கு பல காலமாக பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்துக்களை விளையாடுவதில் ஆர்வம் இருந்தது.. ஒரு காலகட்டத்தில், மற்ற வேலைகள் காரணமாக, காலை காபியுடன் சேர்த்து தலைப்பு செய்திகளை படிப்பது என்ற அளவில் மட்டுமே பத்திரிக்கையுடனான நெருக்கம் சுருங்கி விட்டது..சில சமயம் இந்த சூ டோ கு வை பார்த்த போதிலும் அதில் ஏனோ மனம்போகவில்லை..

பூனேவில் இருந்த போது, காலையில் சற்று நேரமிருந்தமையால் இந்த சூ டோ கு வை விளையாட ஆரம்பித்ததில் , மிக பிடித்து போய், நாங்கள் இருவரும் மிக நெருக்கமாகிவிட்டோம்.. !இவ்வளவு நெருக்கமான பிறகு, அவரை பற்றி ஒரு பதிவு போடாமல் இருக்கலாம???

சரி, என்ன விளையாட்டு இது?
81 (9 x 9 ) கட்டங்கள் , அதில் 15 முதல் 24 கட்டங்களில் ஏற்கனவே எண்கள் நிரப்பட்டு இருக்கும். மீதமுள்ள கட்டங்களின் நாம் எண்களை நிரப்பவேண்டும், அது தான் விளையாட்டு..
21 - 25 கட்டங்களில் எண்கள் நிரப்பப்ட்டிருந்தால் அது EASY level, 18 - 20 நிரப்பபட்டிருந்தால் அது MEDIUM level , 15 - 17 கட்டங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தால் அது HARD level என்ற மூன்று பிரிவில் இருக்கும்

அட, ஒரு 67 முதல் 76 கட்டத்துல நம்பர் போடனும் ..இது என்ன பெரிய விஷயம்னு நெனைச்சுடாதீங்க.. இருங்க.. மேல சொன்னபடி, சில ரூல்ஸ் இருக்கு.
நீங்கள் முடித்த பின்னர்,

1. ஒவ்வொரு வரிசையிலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every Row should have the numbers 1 to 9 )
2. மேலிருந்து கீழாக ஒவ்வொரு கட்டத்திலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Eveர்y column should have the numbers 1 to 9)
3. பிரிக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு 3X3 கட்டங்களிலும்,1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every 3X3 table should have numbers 1 to 9)..

கேட்கும்போது , ஏதோ சாதாரண விஷயம் போலிருந்தாலும்.. விளையாடும்போது உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமாக இருக்கும்..
முயற்சித்து பாருங்களேன்..
சாம்பிளுக்கு ஒரு சூ டோ கு வை JPG ல் போட்டுள்ளேன்.. பதிவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்க..

மேலும் இந்த விளையாட்டு பற்றி பல வலைதளங்கள் உள்ளது..
கூகுள் துனையோடு "su do ku " என்று தேடிப்பாருங்கள்...!




10 கருத்துக்கள்:

Anonymous said...

நானும் பார்த்தேன்.. ஆனால் முயற்சித்தது இல்லை.
உங்கள் பதிவை படித்தவுடன் கொஞ்சம் ஆர்வம் வந்துள்ளது..
நல்ல பதிவு , நன்றி!

சுந்தர்

Anonymous said...

VM,

Please don't "REPEATU" :)
You are LATE !!!!

Did you my posting on SUDOKU ????

---BALA

கலை said...

இந்த சூ டோ கு வை நானும் பார்த்தேன். ஆனால் பொறுமையாக அதைச் செய்து பார்க்க நேரம் அமையவில்லை. நீங்க பூனே க்கு போன மாதிரி நாமளும் எங்கேயாவது போகும்போது செய்து பார்க்கலாம், ஹி ஹி.

G.Ragavan said...

எனக்கும் அப்படித்தான். இதுக்கு பொறுமை மிகவும் தேவை. அது எங்க கெடைக்குதுன்னு கேட்டு வாங்கினதுக்குப் பெறகு சூ டோ கு-வ பூன்னு ஊதித் தள்ளீர்ரேன்.

நல்ல விளையாட்டு அறிமுகம் வீ.எம்.

Anonymous said...

Tom Green on the Disney Channel?
Did I just see Tom Green on the Disney Channel ? Wow. I think I did. Even though my brain's throbbing furiously due to the completely bizarre thought, it's true.
Friendly Stranger
marc emery seeds

தருமி said...

ஒரு நாள் மட்டும் முஎஇஞ்சுது; பிறகெல்லாம் முடியலை.
தினமலரில் வருவது பற்றி...?

Anonymous said...

6 5 4 3 1 2 8 7 9 /n
9 8 1 6 4 7 3 2 5 /n
3 2 7 5 9 8 1 4 6 /n
4 9 2 1 5 3 6 8 7 /n
1 6 8 2 7 9 4 5 3 /n
5 7 3 8 6 4 9 1 2 /n
8 1 5 9 2 6 7 3 4 /n
7 3 9 4 8 5 2 6 1 /n
2 4 6 7 3 1 5 9 8

Ganesh Gopalasubramanian said...

TOIவும் இந்துவும் தினமும் சூடோகுவை வழங்க ஆரம்பித்த பிறகு இதன் மவுசு இன்னும் கூடியிருக்கிறது.

வீ. எம் said...

வருகை தந்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

ஓ!! பாலா அப்போ நான் LATE ஆ?? உங்க லின்க் என்னனு சொல்லுங்களேன்.. தேடினேன், கிடைக்கவில்லை..

கலை & ராகவன்,
ஆம், எனக்கும் நேரம் தான் பிரச்சனை, ஆனால் , காலையில் 10 நிமிடம், இரவில் 10 நிமிடம் என இதற்காக ஒதுக்கிக்கொள்கிறேன்

தருமி : எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான்.. இப்பொழுது தேறிவிட்டேன் :)
தினமலரை படிக்க விருப்பமில்லாத காரணத்தால்..தினமலரில் வருவது பற்றி தெரியவில்லையே.. ஆனால், ஒரே ஒருமுறை பார்த்துள்ளேன்..

சவிதா : CONGRATS!!

கனேஷ் : ஆம், உங்கள் கருத்து சரியே! நான் DECCAN CHRONICLE ல் வரும் சூ டோ கு வை SOLVE பன்னுகிறேன்! வீட்டில் DC , அலுவலகத்தில் தான் THE HINDU

பாரதி தம்பி said...

hindu-வில் வரும் சுடோகு கொஞ்சம் hard type ஆக இருக்கிறது. DC-யில் வரும் இரண்டு சுடோகுகளில் ஒன்று easy யாக உள்ளது.