இது நம்ம துளசியக்கா ஸ்பெஷல்..
==========================
இந்த படத்தை பார்த்தவுடன் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமாக தோன்றும்.. சிலருக்கு கன்னத்தில் போட்டுக்கொள்ள தோன்றும், சிலருக்கு அட என்ன அருமையான ஓவியம் என்று வியப்பு தோன்றும்...ஒரு சிலருக்கு அப்படியே பிரின்ட் எடுத்து பிரேம் போட்டு வீட்டு பூஜை அறையில் வைக்க தோன்றும்..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அட! அது எப்படி ஒருத்தருக்கு பத்து கை ... left hand , right hand போக மீதமுள்ள எட்டு கையை எப்படி சொல்வார்கள் என்று நக்கலடிக்க தோன்றும்..
இல்லை, இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல,சிலருக்கும் பன்பாட்டுகாவலர்களை இப்படித்தான் பழி வாங்க வேண்டும் என தோன்றும்.. , அம்மாவும், கராத்தேவும் சிலருக்கு ஞாபகம் வரலாம்...குஷ்பு, தங்கரும் கூட ஞாபகம் வரலாம்.. :)
இதுப்போல பலருக்கு பல மாதிரி தோன்றும்.. ஆனால் எனக்கு இதை பார்த்தவுடன் முதலில் சாமி செடியக்கா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.. அந்த நகைகளுக்குகாக..
அக்கா, வாங்க.. சூப்பர் டிசைன்ஸ் இருக்கு.. ஒட்டியானம் மட்டும் மிஸ்ஸிங்.. அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க..பாவம் கோபால் சார்... :) இந்த தடவை எத்தனை முறை மயக்கம் போட போறாரோ???
30 கருத்துக்கள்:
//சாமி செடியக்கா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.. //
இது என்னது சாமி செடி?
நான் ஏதோ சாப்பாடு படம் போட்ருப்பீங்கன்னு நினச்சேன்!
--
வலைப்பதிவு உலகின் ஒரே மெகா வரலாற்றுத்தொடர்!! ஹி ஹி.. இடத்திற்கு நன்றி வீ.எம். :)
இந்த பதிவுக்கு மிக்க நன்றி வீ எம்
)))))))
இராமநாதன்,
சாமி செடி = துளசி
ஹி ஹி.... செம தமாsu...
(tamil la type panna vasathi illa.. athanala, anganga iruntha ezhuththa porukki potten... 'su' mattum kedaikkala ... ஹி ஹி....)
//சாமி செடி = துளசி //
அடச்சே.. இது புரியாத கோயிஞ்சாமியாயிட்டேனே! :((
//இந்த பதிவுக்கு மிக்க நன்றி வீ எம் //
இதை வழிமொழிகிறேன்.
துளசின்னாவே சாப்பாடு , ஒட்டியானமுன்னு ஆயிப்போச்சு.
வந்தாச்சா? கலக்குங்க
இரமாநாதரே
நிஜமாகவே புரிந்துதான் வழிமொழிகிறீரா ?
என்னப்பா இது,
எல்லாத்துக்கும் ஒரு சப்-டெக்ஸ்ட் வெச்சு டமில் லேங்குவேஜையே இப்படி காம்ப்ளிகேட் பண்ணி வெச்சுருக்கீங்க..
//நிஜமாகவே புரிந்துதான் வழிமொழிகிறீரா //
இதுல என்ன உள்/வெளி/ஆழக்குத்துனு புரியலையே
அஹா.. கல்கத்தா நியாபகங்களை கொண்டு வந்துடீங்களே... வீ.எம்....
என்னதான் கடவுள் நம்பிக்கை இல்லாட்டியும்.. மூன்று நாள் இரவு முழுவதும்.. ஒவ்வொரு பந்தல் பந்தலா.. சுத்துனது.. அது ஒரு அழகிய நிலாக்காலம்... :-(
நானும் துளசின்னதும், ஏதோ பலகாரக் கடைதான்னு திறந்து பார்த்தேன், ஏமாந்தேன். அது துளசின்னா, திரு. கோபால் பாவம்தான்!!!!
// நிஜமாகவே புரிந்துதான் வழிமொழிகிறீரா ? //
இதை வழிமொழிகிறேன், புரிந்து
அடப் பாவிங்களா!
துளசின்னா சாப்பாடுன்னா நீங்க நினைச்சுட்டீங்க?
கூடவே நகை நட்டுமா?
இருங்க இருங்க உங்களைப் பழிவாங்கவே ஒரு பதிவு போடறேன்.
வயிறு எரியுங்க:-)
U 2 V.M?
குமரேசு
U2 VM இல்லைங்க
U2 என்றால் BONO தான் !!
:-)
குஷ்புவையும் அக்கான்னு சொல்றீங்க. துளசியையும் அக்கான்னு சொல்றீங்க. இதுல எதோ இடிக்கிதே.
nallaa irukku!
ஆக்ரோஷமாய் சிங்கம் கர்சிக்க,
வதம் செய்யப்படும் அசுரன் அலற,
ஷாந்த ஸொரூபியாய் தேவி!!
கலர்புல் ... :)
துளசி அக்கா நீங்க சாத்வீகமா? ராஜசமா?
வீஎம்
துளசியின் இத்த்னை பதிவுகளை படித்துவிட்டு நீங்கள் எழுதி இருப்பது நகைச்சுவை என்றாலும் எல்லை மீறுவதாக எனக்கு தோன்றுகிறது. இதற்காக குஷ்புவையும் துளசியும் அக்காவா என்று கேட்ட பின்னூட்டம், மற்றும் நகச்சுவை பதிவுகள் தரும் அவரிடம் நீங்க ராஜதமா என்று கேட்பதெல்லாம் அநாகரீகமாக தோன்றுகிறது.
அய்யோ தேன் துளி, தப்பா நெனச்சிக்காதீங்க, நான் ஏதோ படையப்பா படம் ஞாபகம் வர விளையாட்ட தான் சொன்னேன் ...
துளசி அக்கா ... ஐ எம் வெரி சோரி சிஸ் ... :(
வீ.எம் துளசி மேடம் பாவம் அவங்கள விட்டுருங்களேன். தேன்துளி அவர்களோட கருத்தையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க.
இராமநாதன், சின்னவன்,சுதர்சன், ஜெகதீஸ்வரன், கல்வெட்டு, குழலி, யாத்ரீகன், தானு, முகமூடி, துளசியக்கா, குமேரேஸ், பாண்டி, ஹமீத், அதிமதுரா, தேந்துளி, கனேஷ் -
எல்லோருக்கும் மிக்க நன்றி
சாமிசெடி நம்ம துளசியக்கா தான் இராமநாதன்.. தெரியாதா உங்களுக்கு?
ரொம்ப கிரியேட்டிவா பொறுக்கிப்போட்டிருக்கீங்க ஜெகத் :)
யாத்ரீகருக்கு கல்கத்தா ஞாபகம் கொண்டுவந்ததில் மிக்க மகிழ்ச்சி
ஹி ஹி ஹி நம்ம பொறுத்தவரைக்கு துளசின்னா சூப்பர் பதிவுகள், நல்ல வலைப்பதிவர் அப்புறம் கொஞ்சமா நகை நட்டு.. :) சீக்கிரம் வயிறு எரிய வைங்க அக்கா..
U 2 V M அப்படினா என்ன குமரேஸ்?
எவ்வளவு ஆழம் பாண்டி?
அனானிமஸ் என்ன இது உள்குத்து விளையாட்டு? குஷ்பு எல்லாம் அக்கானு சொல்ல முடியுமா??
தயவுசெய்து உங்கள் கருத்தை மாத்திக்கோங்க..
சூப்பர் பன்ச் ஞான்ஸ்..எப்படிய்யா இது?
அதிமதுரா .. அப்படி எல்லாம் கேள்வி கேட்ககூடாது .. !
தேன்துளி அவர்களே: எல்லை மீறல் இருந்தால் மன்னிக்கவும்.. துளசி அக்காவின் நகைகள் பற்றிய ஒரு பதிவை படித்தபின்பு வந்த இந்த புகைப்படத்தை பார்த்து அப்படி நினைத்தேன்.. விளையாட்டாக இந்த பதிவு போட்டேன்.. தவறான எண்ணமோ.. அவர்களை கிண்டல் செய்ய வேண்டுமென்றோ போடவில்லை.. தவறிருந்தால் நீங்களும், துளசி அக்காவும் மன்னிக்கவும்.. ஒரு சிலர் தேவையில்லாத பின்னூட்டம் போட்டு விட்டார்கள்..அவர்கள் சார்பாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கனேஷ், தப்பா எதுவும் இல்லைபா.. கன்சிடர் பன்னிட்டேன்.. இனிமே துளசியக்காவையும் நகைகளையும் இனைத்து பேச மாட்டேன்..
அருமையான படம் மர்றும் வீ.எம் ன் வழக்கமான கலக்கல் நடை.
தல ரொம்ப பிசியா இருக்கேன்.பதிவு போட நேரமில்லாமல் தவிக்கிறேன்.
மிக்க அருமை, என்னிடமும் சில துர்காபூஜா ஸ்டில்ஸ் இருக்கு, இங்க அஸ்ஸாம்ல எடுத்தது, நாளை இல்லனா இந்த வார இறுதியில் வலையேற்றுகிறேன்..:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
அய்யா வீ.எம்,
நீரு எல்லை மீறிட்டதா ஒரு கமெண்ட் வந்திருக்கே!
அப்படீன்னா, அடுத்ததா உம்ம பதிவ தூக்கப் போறாங்களா! ஹை.. ஜாலி!!!
'ரமணா' பட ஸ்டைல்-ல அடுத்ததா யாரத் தூக்கப் போறாங்கன்னு நல்ல சஸ்பென்ஸ்டா சாமி!!
:-)))))))
பாசிடிவ் ராமா, shrishiv, ஞான்ஸ்,
மிக்க நன்றி
//தல ரொம்ப பிசியா இருக்கேன்.பதிவு போட நேரமில்லாமல் தவிக்கிறேன்//
இன்னும் ஒரு மாசத்துல , இன்னும் பிசி ஆகிடுவீங்க ராம்..
//இல்லனா இந்த வார இறுதியில் வலையேற்றுகிறேன்..:)//
நிச்சயம் ஏற்றுங்கள் ஷிவ், வருகிறேன்..
வருகைக்கு மிக்க நன்றி
//அப்படீன்னா, அடுத்ததா உம்ம பதிவ தூக்கப் போறாங்களா! ஹை.. ஜாலி!!! //
இதை படித்தப்போ எனக்கு இந்த தமிழ்மணம் சென்ஸார் மேட்டர் தெரியாது.. என்னடா ஞான்ஸ் வழக்கம் ஏதோ கொழப்பிட்டு போறாருனு நெனைச்சேன்...
இப்போ விஷயம் தெரிஞ்சப்புறம் தான் இந்த கருத்தின் அர்த்தம் புரியுது..
அச்சமில்லை , அச்சமில்லை ஞான்ஸ் :)
your post is nice. I got your website from Thulasithalam
please send me the pdf file of "manese relax please"
and also have u any other pdf file
please send me ramshere2003@yahoo.com, ramshere2003@gmail.com
Post a Comment