" அவரை தேடி .... "

"ஒருவ"ரை தேடி - தொடங்கிய பயனம்
தூரத்தில் தெரிவது ? நான் தேடியவரோ?
அருகில் சென்றேன், நலமா என்றேன்?
நலமே தம்பி, நீயும் நலமா? - கரகரப்பான கம்பீர குரலில்

நிச்சயம் இவரே அவரென எண்ணி, அவசரமாக
ஐயா, தாங்கள் யாரோ ? என்றேன்
கலைஞர் இவரே, தமிழினதலைவர்
ராஜ தந்திரி , அரசியல் சானக்கியர் , இன்னும் பல பல
அடுக்கின அவரின் தம்பியர் கூட்டம் !

ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச ,
மீண்டும் நடந்தேன் , "அவரை" தேடி

சற்றே தொலைவில் , மற்றொரு உருவம்
நிச்சயம் அவர் தான் , முடிவே செய்தேன்
அருகினில் அமர்ந்து வணக்கம் என்றேன்
திடமாய் அவரும் வணக்கம் என்றார்
தங்களை பற்றி கூறும் என்றேன்

புரட்சிப் புயலாம் , சீறிடும் வேங்கை யாம்..
பளிச்சென சொன்னது பாசறை கூட்டம்..

ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச,
மீண்டும் நடந்தேன் , அவரை தேடி

அரை கல் தூரம் , தனியாய் நடந்தேன்,
கால்கள் வலிக்க சற்றே நின்றேன்
கூட்டம் ஒன்று என்னை கடக்க,
நடுவில் ஒருவர் விறைப்பாய் செல்ல
அருகில் சென்றேன், "அய்யா.." என்றேன்
அடடா வா வா, தெரியுமா என்னை?
உனர்ச்சி வயப்பட உருகியே போனார்

நிச்சயம் இவரில்லை, உணர்ந்தே நானும்
வேறோரு பாதையில் , விரைவாய் நடந்தேன்

வெயில் கொடுமை - வாட்டி எடுக்க,
மரத்தடி நிழலில் சற்றே சாய்ந்தேன்..
வேட்டு சத்தம் - காதை பிளக்க,
அலறி , சுருட்டி எழுந்து அமர்ந்தேன்
ஆயிரக்கனக்கில் வாகனம் தொடர
வந்து இறங்கிய, இவர் தான் அவரோ?

கேட்டே விடுவோம் , வேகமாய் நடந்தேன்
அருகினில் செல்ல முயன்றே தோற்று,
கூட்டத்தில் ஒருவரை ,வாஞ்சையாய் கேட்டேன்
யார் இவர் என நீ சொல்வாய் எனவே !

பொசுக்கும் பார்வையால் பதிலை சொன்னார்
இவர் தான் எங்கள் காவல் தெய்வம்
நிரந்தர முதல்வர், புரட்சித்தலைவி
தெரியாதாடா மடையா என்றார்
நன்றி சொல்லி , வேகமாய் நகர்ந்தேன்

பல மைல் தூரம் நடந்தே முடித்தேன்,
விடுதலை சிறுத்தை , கொள்கை சிங்கம்
தீப்பொறி , தளபதி
காடு வெட்டி, கராத்தே
இன்னும் பலரை வழியெங்கும் பார்த்தேன்.

தேடிய "அவரை" எங்கும் காணாது ,
ஏக்கமாய் நடந்தேன்

நம்பிக்கையோடே நெடுந்தூர பயணம்
"அரசியல்" வீதியில், மீண்டும் தொடர்ந்தேன்

நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்,
நீர் யாரென கேட்பேன் , "மனிதன்" என்பார்,
நம்பிக்கையோடு, காத்து இருப்பேன்

வீதியின் முடிவில், அயர்ந்து அமர்ந்தேன்
நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்

=====

பிடித்திருந்தால், மனதை நிறைத்திருந்தால், 2 நிமிடம் அதிகம் எடுத்து , தங்கள் கருத்தை இங்கே பதிவு செய்து .., நட்சத்திரத்திலும் ஒரு சுட்டு சுட்டுங்கள்... மறக்காமல் ! ! !

மீண்டும் சந்திக்கும் வரை,

வாழ்த்துக்களுடன்,

வீ . எம்

ரசிகர் மன்றங்கள் - ஒரு பார்வை !

.....மழை பெய்தால் வளர்கின்ற காளான் போல், இன்று எங்கு பார்த்தாலும் திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள்.. ஒரு படத்தில் நடித்து , அதுவும் சரியாக ஒடாத நடிகருக்கு கூட ரசிகர் மன்றம் இருப்பதை பார்க்கின்ற போது வேடிக்கையாக தான் உள்ளது.

தெருவுக்கு தெரு ரசிகர் மன்ற பலகைகளை பார்க்கும் போது, சில நடிகர்களுக்கு, ரசிகர்களின் எண்னிக்கையை விட, மன்றங்களின் எண்னிக்கை அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது ! :)


ஒரு சில நடிகர்களை தவிர, மற்றவருக்கெல்லாம் உன்மையிலேயே ரசிகர்கள் தான் மன்றங்களை அமைக்கிறார்களா அல்லது அந்த நடிகரே செலவு செய்து ஆரம்பித்துக்கொள்கிறார என்கிற சந்தேகமும் உள்ளது..

நிஜத்தில் நான் பார்த்ததை சொல்கிறேன், எங்கள் அலுவலகத்தின் சார்பாக, வருடம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு இருக்கும் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வோம்.. (விவரமாக பிறகு சொல்கிறேன்..) ..அப்படி இவ்வருடம் திருவள்ளுவர் மாவட்டம் , புழல் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று பார்த்த போது, உள்ளபடியே அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு எழுத ஒரு கரும்பலகை இல்லை.. கரும்பலகை என்ற பெயரில் ஒன்று இருந்தது, அதில், பலகையை விட ஓட்டை அதிகமாக இருந்தது... கரும்பலகை ஓட்டைக்கும் ரசிகர் மன்றத்துக்கும் என்ன முடிச்சு போடுகிறான் இவன் என்று தோன்றுகிறதா?? இருங்கள் சொல்கிறேன்... அந்த பள்ளியின் வாசலிலே.. இளய தளபதி நடிகர், தல நடிகர், நாட்டாமை நடிகர், இரண்டு "காந்த" நடிகர்களுக்கும் என்று மொத்தம் 5 நடிகர்களுக்கு ரசிகர் மன்ற பலகைகள்.. அதில் 3 புத்தம் புதியதாய் மின்னியது.. பள்ளிக்கூடத்தில் 1 வருடமாக சரியான கரும்பலகை இல்லை..ஆனால் அதன் வாசலில்..பளீரென்று 5 பலகைகள்.. இதை நிறுவிய 5 குழுவில் ஒரு குழுவினர் நினைத்திருந்தால், அப்பள்ளிக்கு ஓர் கரும்பலகை வாங்கி தந்திருக்கலாம்.... தங்களின் மனம் கவர்ந்த நடிகரின் முகம் வரைந்து , கொட்டை எழுத்துக்களில் அவர் பெயர் எழுத ஆயிரக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு தங்கள் கிராமத்து குழ்ந்தைகளின் நலனுக்கு ஒரு 100, 200 செலவு செய்ய ஏன் மனம் வரவில்லை..??வேதனையாக தான் இருந்தது.

ரசிகர்கள் ஏன் கரும்பலகையை மாற்ற வேண்டும்...??? அரசு தானே செய்ய வேண்டும்..? சிலர் கேட்கும் கேள்வி புரிகிறது..

அவர்கள் செய்ய வேண்டும் என சொல்லி இருக்க மாட்டேன், ஒரு வேளை

** ரசிகர்கள், தங்களின் ரசிகர் மன்ற திறப்பு விழாவிற்க்கு வரும் சிறப்பு விருந்தினர்களை அமர வைக்க பள்ளியின் பென்ச் மற்றும் 4 நாற்காலிகளையும் பயன் படுத்தாமல் இருந்திருந்தால்.
** கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக , சிறப்பு விருந்தினர் வரும் வழியில் பள்ளி குழந்தைகள் கையில் , ரசிகர் மன்ற கொடி கொடுத்து 2 மனி நேரம் வெய்யிலில் வரிசையில் நிற்க வைத்து, பந்தா காடி, எல்லாம் முடிந்த பின், 50 பைசா மிட்டாய் மட்டும் கொடுத்து போங்கள் என அனுப்பாமல் இருந்திருந்தால்.
** தோரணம் ஒட்டவும், கலர், கலர் கொடி ஒட்டவும், பள்ளி சிறுவர்களை பயன் படுத்தாமல், தாங்களே சுயமாக ஒட்டி இருந்தால்...
** இதற்கெல்லாம் மேலாக, பென்ச் , நாற்காலி, கழிப்பிடம், இவர்கள் சமைத்து சாப்பிட பள்ளியின் பால்வாடி யில் இருந்து பாத்திரங்கள்..இன்னும் பிற பொருட்களுக்காக , திறப்பு விழாவிற்கு வரும், எங்கள் " ---- " ன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவரிடம் சொல்லி இந்த பள்ளிக்கு நல்ல கரும்பலகை, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சீருடை வாங்கி தருகிறோம் என வாய் கூசாமல் பொய் சொல்லாது இருந்திருந்தால்...
** இல்லை, ஒரு வேளை இது எதையும் நாங்கள் அங்கே சென்ற போது , பேச்சு வாக்கில் கிராமத்தினர் சிலர் எங்களிடம் சொல்லாமல் இருந்திருந்தால்...

சரி , இந்த ஒரு கிராமத்து நிகழ்வுதான் இந்த பதிவிற்க்கான காரணமா?? இல்லை , நிச்சயாமாக இல்லை .. இந்த கிராமத்து நிகழ்வு சமீபத்தில், கடந்த நவம்பரில் நடந்தது, ஆனால் பல ஆண்டுக்காலமாகவே , என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் இந்த பதிவு.. எடுத்துக்காட்டாக மட்டுமே இந்த நிக்ழ்வு..
இன்றைய ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது???????ரசிகர் மன்றங்கள், வெறும் ரசிகர் மன்றங்களாக மட்டுமே இருந்தால், நாமேன் மென்கெட்டு நேரம் செலவிட்டு இங்கே எழுத வேண்டும்... ரசிகர் மன்றங்கள் தங்களின் விளிம்பைத்தாண்டும் பொழுது தான் இப்படி எழுத வேண்டிய கட்டாயத்திற்க்கு நாம் ஆளாகிறோம்..
இந்த ரசிகர்கள், திரையில் தங்கள் மனம் கவர் நடிகர் செய்யும் வித்தைகளை ஏதோ "செல்லுலாய்ட் வித்தைகள்" என்பதை மறந்துவிட்டு.. அதை எதோ நிஜம் என கொண்டு அவரை 'மனித புனிதர்' என்றும்..வாழும் மஹாத்மா, தமிழகத்தை காக்க வந்த அவதாரம் என்றும் முரசு கொட்டுவதை தான் ஏற்க முடியவில்லை.. உன்மையிலேயே ஒரு மனிதனின் தூய உள்ளத்திற்குதான் ரசிகர் மன்ற்ங்கள் அமைக்கப்படுகிறது என்றால், ஏன் ஒரு காந்திஜிக்கோ , அன்னை தெராசாவிற்க்கோ ஒரு ரசிகர் மன்றம் இங்கில்லை?????? ஒரு வேளை, இவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதால், கட்சி ஆரம்பித்து ... ஒரு வட்ட செயலாளர் பதவி கூட கிடைக்காது என்பதாலோ???

தொடரும்...........................

குறிப்பு: இந்த கட்டுரை அனைத்து நடிகர்களின் அனைத்து ரசிகர் மன்றங்களை பற்றியது அல்ல... சில நல்ல மன்றங்களும் இருக்கத்தான் செய்கிறது , பார்த்துள்ளேன் ... அவை பற்றியும் எழுதுவேன் தொடர்ச்சியில்... ஆனால் துரதிர்ஷடவசமாக, வெகு சிலவே அப்படி உள்ளது... !!

தொடர்ச்சியில் சந்திக்கும் வரை,

நட்புடன்
வீ .எம்

---- சந்திரமுகி -----

சந்திரமுகி - இந்த வார்த்தை தான் தமிழ் மக்களின் மனதில் இன்று ரீங்காரமிடும் ஓசை.அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்? பார்த்து விட முடிவு செய்து 112 ரூபாய் (டிக்கெட் 80 , பேருந்து - 10, கொறிக்க - 22) செலவு செய்து சென்னை தியேட்டர் ஒன்றில் போய் அமர்ந்த்தேன்.
உள்ளே சென்று சற்றே நோட்டம் விட்ட எனக்கு ஆச்சரியம்... 50 வயது நடிகரின் திரை படமா இது .. இல்ல ஏதாவது ஆங்கில கார்ட்டுன் படமா? 6 வயது சிறுவர் முதல் 60 வயது பெரியவர் வரை அப்படி ஒரு கூட்டம்.. ரஜினி யால் மட்டுமே 6 ல் இருந்து 60 வரை இழ்த்து வர முடியும் என்று புரிந்தது.
ஒரு புறத்தில், தலைவா தலைவா என்று அடி தொன்டை அலறல் - ரஜியின் பக்தர்கள் போலும்மறுபுறம் சூப்பர் ஸடார் சூப்பர் ஸடார் எண்று ஓசை , அடுத்த கட்ட ரசிகர் கூட்டமாய் இருக்கும்.கை தட்டி ஆரவாரம் - பொட்டு பொடிசுகள் துள்ளல்... அனைத்தயும் ரசித்து பார்க்கும் ஒரு கூட்டம் - பெரிசுகள்
இதில் வேடிக்கை என்ன வென்றால் , வெள்ளி திரை இன்னும் வெள்ளை திரை யாகவே இருந்தது .. படமே போடலங்ஙோ......
இதெல்லாம் கொஞ்ஜம் ஒவர் தான் என்று வித்தியாச பார்வை பார்க்கும் சிலரையும் பார்க்க தான் முடிந்தது - வேறு ஒரு நடிகரின் ரசிகர் கூட்டமாக இருக்கலாம். . சந்திரமுகி ல் என்ன குறை இருக்கும் என்று பூத கண்ணாடி கொண்டு வந்து இருக்க வேண்டும்.
படம் சரியாக இல்லை யென்றாலும், கொடுத்த 70 ருபாய்க்கு நஷ்டம் இல்லாமல் அரங்கினுல் காட்சிகள் கிடைக்கும் என்ற நிம்மதியுடன் அமர் ந்திரு ந்தேன்.. பாபா போல் இருக்க கூடாது என்று ஒரு வேண்டுதல் மனதிற்க்குள் ஒடாமல் இல்லை...
இதோ, விளக்குகள் அனைக்கபட, திரையில் வெளிச்சம்....சென்சார் சர்ட்டிபிகேட்.. திடுகிட்டு போனேன், அப்படி ஒரு அலறல் .. விசில் சத்தம் ... கை தட்டல்.. படத்தில் வெட்டு போடாத சென்சாருக்கு பாராட்டா அல்லது சில நிமிடங்களில் தங்களின் இதய தெய்வம் திரையில் வரப்போகிற சந்தோஷமா? நிச்சயமாக சென்சாருக்கு இல்லை யென்பது விரைவில் புரிந்து போனது
ப்ரபு வந்தார்... நிசப்தம் .. ஆச்சர்யம்.. என்னை தவிர அனைவரும் சென்று விட்டார்க்ளா?.. திரும்பி பார்த்தேன்..இல்லை.. இன்னும் கூட்டம் அதிகமாக தான் இருந்தது....
5 நிமிட காட்சிக்கு பிறகு ... ப்ரபுவின் கம்பெனி ஆட்களுக்கு பிரச்சனை... வில்லனின் அடி ஆட்கள் நிற்க ..பென்கள் அலறி ஒட ... மின்னல் வேகத்தில் ஒரு கார் ... அனைவருக்கும் புரிந்து போனது .. இது கூட புரியலனா...ரஜினி படம் பார்பதற்கு லாயக்குக் இல்லபா... !!
எங்கிருந்துதான் வந்ததோ அப்படி ஒரு சக்தி ... பாபா படத்தின் இறுதி பாடல் . சக்தி கொடு சக்தி கொடு என்று ரஜினி முடித்தாரே .. அதன் அர்த்தம் இப்போது புரிந்தது..அந்த சக்தியை ஆண்டவன் இப்பொது அவரது ரசிகர்களுக்கு கொடுத்தது போல்.. ஒரு சத்தம்... மஹா சத்தம் ... அமெரிக்காவின் ட்வின் டவர் இடிந்த போது இப்படி தான் சத்தம் கேட்டிருக்குமோ? சுனாமி சீற்ற்த்தை விட அதிகமாக ...அப்படி ஒரு சத்தம்..கை தட்டல் ..விசில் ... வித்தியாச ஒலி .... வாய் மூலம் இப்படி எல்லாம் ஒலியெழ்ஹ¤ப்ப முடியும் என்று அப்பொது தான் கண்டு கொண்டேன் ... சாரி கேட்டு கொண்டேன்...
ரஜினி ஒரு கால் தரையில் ..ஒரு கால் வான் நோக்கி நிற்க ..அரங்கினுள் ரசிகர்கள் இரு கால்கலுமே வான் நோக்கி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்..சூடம் (கற்பூரம்) காட்டியது ஒரு கூட்டம் ... துண்டு காகிதம் வீசியது ஒரு கூட்டம்.... ஆனந்த கூத்தாடிய ஒரு கூட்டம் .... கூதுகலத்துடன் கை தட்டி மகிழ்ந்த சிறுவர் .. சிறுமியர் கூட்டம்.....
சற்றே பொசுங்கிய வாசம்... ஒரு வேளை சூடம் காட்டிய பக்தர்கள் மெய் மறந்து விட்டார்களோ என்று பார்தால் ...இல்லை... அப்புறம் என்ன..????
சொன்னேன் அல்லவா .. குறை கண்டுபிடிக்க வந்த பூதக்கன்னாடி குட்டம் .. அவர்களின் வயிற்றில் இருந்து வந்த வாசமாய் இருக்கும் !! :)
ஒவ்வொரு காட்சியிலும் திருவிழ்அ தான்... குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆர்பரிப்பு அபாரம்...நாம் கொடுத்த 70 ரு க்கு இதுவே அதிகம் என்று நினைத்து எழ்ந்து போக நினைத்தேன் ... ஆனால் படத்தின் விருவிருப்பு போக் விடவில்லை....
மொத்ததில் .. அங்கொன்றும் இங்கொன்றும் சிறு திரைக்கதை தவறுகள் இருந்தாலும், .. அனைவரும் ரசிக்க்கும் படி இருந்தது படம்..
இறுதி 20 நிமிடங்கள் அட்டகாசம்... ஜோதிகா மற்றும் ரஜினி போட்டி போட்டு நடித்திருந்தார்கள்...
நல்ல திரைகதைக்கு வாழ்த்துக்கள்.... இசை நன்றாக உள்ளது ... சில இடங்களில் எங்கேயோ கேட்ட மெட்டு போல இருக்கிற்தென்றாலும் ... புதிய பாட்டிலில் பழைய மோர்.. இதமாகவே இருக்கிறது.
"கொக்கு பற பற" பாடல் காட்சி அருமை.. ஆட்டம் போட வைக்கும் "அன்னனோட பாட்டு"... "அத்திந்தோம்.." பாடல் வித்தியாசமான முயற்சி ..வெற்றியும் பெற்றுள்ளது.....
சில இடங்களில் வரும் இரட்டை வசனங்களை தவிர்த்திருகலாம்....ரஜினி படத்திற்க்கு இது தேவைஇல்லை..படத்தில் அந்த கிராபிக்ஸ் பாம்பு எதற்கு என்று தான் இன்னும் புரியவில்லை..
சொல்லும் படியாக நயனதாரா க்கு பங்கு இல்லை... இருந்தாலும் மனதில் நிற்க்கிறார், ரஜினி க்கு அருகில் பல இடங்களில் நின்ற ஒரே காரணத்தால்.
ப்ரபு , நாசர் , வடிவேல் , வினீத் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கிறார்கள்...

வழக்கமான சண்டை.. பைக் , கார் துரத்தல் ஏதும் இல்லாத வித்தியாசமான க்ளைமாக்ஸ்.. அருமை !
வாசு க்கு ஹாட்ஸ் ஆF ...
படம் முடித்து வெளி வரும் போது அனைவரின் முகத்திலும் திருப்தி தெரிந்தது ... சிருவர் சிறுமியர் முகத்தில் சந்ட்தோஷம் இருந்தது. கூடவே , லக்கா .. லக்கா .லகா லகா ..ஓசை ..
... ரஜினி பக்தர் , ரசிகர் முகத்தில் வெற்றி களிப்பு....இருக்காதா பின்னே ..பாபா ... பாராளுமன்ற தேர்தல் முடிவு ...பா மா க பிரச்சனை ...... (அனைத்தும் "பா") !!! அனைத்தயும் கடந்து வந்து பறித்த வெற்றி கனி யாச்சே இது.... வாழ்துக்கள் ரஜினி ரசிகர்களே... கொண்டாடுஙகள் .. உங்கள் தலைவர் போல் அமைதியாக... ஆர்பாட்டம் இல்லாமல்..
வீழ்ந்தது யானை இல்லை குதிரை .... இல்லை இல்லை .. "மான் குட்டி" ... (துள்ளி யெழ்ந்து விட்ட) என்பது .. தெளிவாக புரிந்தது... !
பாபா ஏற்படுத்திய புன்னுக்கு முதலுதவி மருந்து இந்த சந்திரமுகி.... "முதலுதவி மருந்து" ?? ஆம்.. முற்ற்லும் குணமாக்கும் மருந்து முற்றிலும் "ரஜினி Fஒர்முலா" நிறைந்த ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு.. நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம்.. நூலோடு போட்ட இந்த மாஞ்ஞா .. யாரோடும் டீலு போடுமே......
விரைவில் அடுத்த அரட்டையில் சந்திப்போம்...அது வரை நன்றி .... !


நட்புடன்,
வீ.எம்

சிறுகதை - காகித பூக்களும் ... கலர் டிவியும்..

மிக நடுத்தர பிரிவு குடும்பத்தில் பிறந்து, முட்டி மோதி ஒரு வழியாக ...1999 ல் கல்லூரி முடித்து, எப்போழுது வெளிநாட்டில் வேலை கிடைக்கும், கை நிறைய கிடைக்கும் வருமானத்தில் தங்கைக்கு நல்ல இடதத்தில் திருமணம் முடிக்கலாம் என்ற கனவோடு.. நான்கு வருடம் தாய்நாட்டில் உழைத்து,.. கடைசியில் 2003 ல் வெளிநாட்டு வேலை கிடைத்து விட்டது.மனதில் இருந்த பாரம் குறைந்து, தங்கையை கரையேற்றி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் விமானம் ஏறி .. 1.5 ஆண்டுகள் கடினமாய் உழைத்து ..பனம் சேமித்து.. இதோ, 2005 ஜனவரி 18, தங்கையின் திருமனம் ... இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது... என் தாய்நாட்டு பயனத்துக்கு. எல்லாம் தயார். நீண்ட நாள் கனவு (லட்சியம் என்றே சொல்ல வேண்டும்.. ) .. நினைவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்..

2005 ஜனவரி 17 :

வெகு விமரிசையாக மாப்பிள்ளை அழைப்பு.. அடேங்கப்பா¡¡..... எவ்வளவு பெரிய மண்டபம்... வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்க.. அனைவரின் முகத்திலும் அப்படி ஒர் மகிழ்ச்சி.. டேய் ..ஸ்ரீதர் (4 வயது - சித்தி பையன்) .. ஏண்டா அப்படி ஓடுற, விழ போற.. பார்த்து ...பார்த்து அட , குமரன் (அத்தை பையன்) ஹேய் 7 வருஷம் இருக்கும் டா உன்னை பார்த்து... சித்தி , சித்தப்பா .. மாமா , மாமி, பெரியப்பா, பெரியம்மா.. அண்ணன்(பெரியம்மா மகன்) அண்ணி .குழந்த்தைகள்... நன்பர்கள் கூட்டம் அனைவரும் கூடி இருக்க எவ்வளவு சந்தோஷமா இருக்குப்பா
ஹே ! , யார் இவர்கள்...ஒ !.. மாப்பிள்ளை வீட்டார் போல....
அட.. நம்ம சுதா வா இது .. (மாமா மகள்) .. 3 வருடத்தில் எப்படி வளர்ந்த்து விட்டாள்... இவளை தான் எனக்கு கேட்கப்போவதாய் அம்மா சொல்லுவார்கள்.... போங்க்ம்மா ... !! பொய் கோபம் காட்டினாலும் ..உள்ளுக்குள் எனக்கு ஆசை தான்.. ஏதோ நினைவில் அப்படியே சாய்ந்து நின்ற என்னை அருமையான "ஆட்டோக்கிராப்" பட பாடல் தான் நினைவுக்கு கொண்டு வந்தது... அட... ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்து இருந்த மெல்லிசை குழு வாசித்து பாட.... நன்பனின் சிபாரிசின் பேரில் இவர்களை புக் செய்த்தோம் 24000 ருபாய் .... நன்றாக தான் உள்ளது....
தங்கையும் மாப்பிள்ளை யும் அங்கே மேடையில் ...தங்கைக்கு அந்த அரக்கு நிற பட்டு புடவை மிக அழகாக உள்ளது... அம்மா காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி சுற்றி ...பார்த்து பார்த்து எடுத்த வேளையில், நான் அமெரிக்க - கலிபோர்னீய வீதிகளில் கடை கடை யாக ஏறி இறங்கி வாங்கிய டைமண்ட் பதித்த அந்த கைகடிகாரம் (வாட்ச்) மாப்பிள்ளை கையில் சூப்பராய் மின்னியது. ... இதை வாங்க நான் சுற்றியது சற்று நேரம் மனதில் வந்து போனது...
அம்மாவும் , அப்பாவும் அங்கும் ..இங்கும் ஓடிக்கொண்டு....ஏன் தான் இப்படி இழுத்து போட்டு கொண்டு வேலை செய்கிறார்களோ.... ! கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே.... ! சரி சரி ..மகள் திருமணம் ... ஆசை இருக்காதா???..
சம்பிரதாய , சடங்கு ஒருபுறம்... மெல்லிசை ஒருபுறம் .. விருந்து ஒருபுறம் ... பார்த்து பார்த்து நல்ல சமையல்காரருக்கு கான்ட்ராக்ட் கொடுத்து.. நீண்ட மெனு (16 வகை) கொடுத்து.. அப்பப்பபா...நான் நினைத்ததை விட இதோ ..மிக நன்றாக அனைத்தும் நடக்கிறது..
ஐயோ!!!...எவ்வளவு பெரிய மணிகூண்டு ... மண்டபத்திற்க்கு எதிரிலேயே ..இவ்வளவு நேரம் கவனிக்கவே இல்லையே... மணி 10:20 ...
வந்தவர்கள் பலர் சென்றிருக்க.. நெருங்கிய நன்பர்கள், உறவினர் மண்டபத்திலேயே இருக்க... அனைவரும் உறங்கும் நேரம் ... விடிகாலை 5.30 மணி முகுர்த்தம் அல்லவா ... !!

2005 ஜனவரி 18 காலை 4.40 ..

அதிகாலையிலேயே அனைவரையும் பரபரபப்பு தொற்றிக் கொண்டது... அனைவருக்கும் காபி ... மங்கல இசை முழங்கி கொண்டிருக்க... இரவு வந்துவிட்டு போனவர்கள் சிலரும், வராவதர்கள் பலரும் மண்டபத்திற்க்குள் வந்தவாறே இருக்க ... பட்டு சட்டை , வேட்டி யில் அப்பா அவர்களை கை கூப்பி வரவேற்க்க.....
ஆசிர்வதிக்க 'பூக்களும் , மஞ்சள் அரிசியும்' எல்லோருக்கும் ஒருவர் கொடுத்து கொண்டிருக்க .. மறுமுனையில், அனைவரும் ..சிரித்து ..மகிழ்ந்த்து... மண்டபமே கலகலப்பாய் இருக்க....
கெட்டி மேளம் கெட்டி மேளம் ... என்ற குரல் வர, பாரம்பரிய கெட்டி மேள இசை இசைக்கபட..
இதோ .. வெகு விமரிசையாய் நடத்த வேண்டும் என்று உழைத்து உழைத்து .இந்த நாளில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பல ஆண்டாக திட்டம் தீட்டி......... நான் பெரிதும் கனவு கண்ட அந்த காட்சி - சுற்றம் சுழ ..தங்கையின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட....
தங்கையை மானசீகமாய் ஆசீர்வாதம் செய்து,
கையில் இருந்த காகித பூக்களை டிவி (TV) மீது தூவி விட்டு, ரீமொட் எடுத்து டிவி மற்றும் டி.வி.டி ப்ளேயரை அனைத்துவிட்டு .....

கிளம்ப இரண்டு நாள் இருக்கும் போது, கடைசி நேரத்தில் .. ஜனவரி 20 ம் தேதி முடிக்க வேன்டிய அவசர ப்ரொஜெக்ட் ஐ காரனம் காட்டி என் விடுப்பை (LEAVE) ரத்து செய்த என் உயரதிகாரியை மனதிற்க்குள் மற்றும் ஒரு முறை பலமாக அர்ச்சித்து கொண்டே கனத்த இதயத்துடன் கட்டிலில் விழுந்தேன். காலன்டர் ஜனவரி 26, 2005 காட்டி கொண்டிருந்தது....

விழியோரத்தில் வழிந்த கண்ணீரை துடைக்க ஏனோ மனம் வரவில்லை ..............

இந்தியா சென்று திரும்பும் பொழுது மறக்காமல் என் வீட்டிற்க்கு சென்று மறக்காமல் திருமண டி.வி.டி வாங்கி வந்த நன்பன் தினேஷ்க்கு நன்றி... அவன் தங்கைக்கு ஜுன் 11 ல் திருமணம்...
====================================
படித்தமைக்கு மிக்க நன்றி, அப்படியே ஒரு 2 நிமிடம் செலவு செய்து.. தங்கள் மேலான கருத்துக்களை, இங்கே பதிய வைத்தால்..மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..
நன்றி ... மீண்டும் வருக !
அடுத்த அரட்டையில் சந்திக்கும் வரை ,

வாழ்த்துக்களுடன்,
வீ. எம்

இடைத்தேர்தல் முடிவு....முடிவல்ல ஆரம்பம்... !


இடைத்தேர்தல் முடிந்து இரு தொகுதியையும் ஆளும் அ.தி.மு.க 'கை'ப்பற்றியுள்ளது...அதிமுக தலைவி சொல்லி பெருமிதப்பட்டுக்கொண்டது போல் இது முழுமையான "மக்கள்" தீர்ப்பு அல்ல என்பது நிச்சயமாக அனைவருக்கும் தெரியும். அதே நேரதில், இது நிராகரிக்கபட வேண்டிய வெற்றி என்று சொல்லவும் முடியாது. இது கையகப்படுத்தபட்ட "மக்கள் தீர்ப்பு"...
இரு வழிகளை ஆளுங்கட்சி இத்தேர்தலில் கையாண்டது. ஒன்று, அவசர கதியில் மக்கள் பிரச்சனைக்கு செவி சாய்த்து .. பலதை நிவர்த்தி செய்தது.. இரண்டு (மற்றும் முக்கியமானது) பணம்..பணம்.. அதிகார பலம்..
நடந்தது இடைத்தேர்தல், ஆக அதிகாரம் ஆளுங்கட்சியிடம் இருந்தது.. காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் பெருமளவில் வெற்றிக்கு உதவியது... ஆனால் அ.தி.மு.க நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று, அடுத்த ஆண்டு நடைப்பெற இருக்கும் பொது தேர்தலில் அதிகார பலம் நிச்சயமாக உதவாது.. பணம் ஓரளவு உதவி செய்தாலும், மக்கள் பிரச்சினைகளை நீங்கள் கையாலும் விதமே உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.. இந்த இடைத்தேர்தலில் நீங்க பெற்ற வெற்றி 80 % பனம், அதிகார பலம் + 15%(மட்டுமே) நீங்க செய்த மக்கள் பனி .ஆக, நீங்கள் செய்யவேண்டியது (மக்கள் பனி ) நிறைய உள்ளது...


தி.மு.க கூட்டணி : அவர்கள் , பணம் மற்றும் அதிகார பலத்தால் தான் வெற்றி பெற்றார்கள் என்பதற்க்காக, உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று இருந்திட வேண்டாம்.. உங்களக்கும் "எச்சரிக்கை மனி" அடிக்கப்பட்டுள்ளதை உணருங்கள். சொல்லப்போனால், நீஙகள் கற்க வேண்டிய பாடம் தான் அதிகம் ..
உங்கள் கூட்டனி தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில், உங்கள் பலமாக இருந்து வெற்றி பெற வைத்தது.. அதே கூட்டனி தான் இம்முறை உங்கள் பலவீனமாகி தோல்வியுற வைத்துள்ளது...
உங்கள் கூட்டனிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதது முதல் காரணம், கடந்த ஓராண்டில் அவ்வப்போது எழுந்த சலசலப்பு தேர்தல் முடிவுகளில் நன்றாகவே பிரதிபலித்தது...
மேலும், கூட்டனியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளேயே ஓற்றுமையின்மை, ஒரு கட்சி வளர்ந்த்து விடுமோ என்ற கூட்டணிக்குள் பொறாமையும் தோல்விக்கான காரணம்..
தொண்டர்களிடையே, 2 தொகுதி தானே என்கிற அலட்சியமோ அல்லது 40 ஜெயித்த நமக்கு , 2 முடியாதா....... என்கிற மெத்தனப்போக்காகவும் இருக்கலாம்...
எதுவாகினும், 1 ஆண்டுக்கு முன் சரி விகிதத்தில் கலவை செய்து சுவையான கூட்டு செய்த்த உங்களால், இம்முறை முடியவில்லை.. உப்பு , காரம் அதிகமாகி விட்டதோ??? :)
ஆக, இரு கழகங்களுக்குமே தங்களை சுய மதிப்பீடு செய்து .. விரைவாக செயல் படவேண்டிய கட்டாயம்.. !!செய்வார்களா?????? வழக்கம் போல் நம்புவோம்... நம்பிக்கை தானே வாழ்க்கை.. !

நட்புடன்

வீ .எம்

"இதற்கு தான் லாயக்கு.."

கடந்த 3 ஆண்டுகளாய் க்ராபிக்ஸ் - வெப் டிஸைன்ராக வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்..ஒரு நாள் என் உயரதிகாரி என்னை அழைத்து செந்தில், ஒரு புது க்ராபிக்ஸ் ப்ரொஜக்ட்.. நீ , ராகவ் , சுந்தர், ராஜா.. 4 பேரும் சேர்ந்த்து 20 நாட்களில் முடிக்க வேண்டும் .. நீ தான் இன்-சார்ஜ் என்றார்....
மனதிற்க்குள் சந்தோஷம்.. முதன்முறையாக .. என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.. சற்று நேரம் இறக்கை முளைத்து என் அலுவலகத்தின் மீது ஒரு வட்டம் அடித்து கீழே இறங்கினேன்.யெஸ் சார் .. ஐ வில் டூ இட் வெரி வெல் சார் .. அவர் தமிழில் சொன்னாலும், நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.. (பொறுப்பு கொடுத்தவுடன், தாய்மொழி போய் .. ஆங்கிலம் வந்து விட்டது பாருங்கள் !! ) .. நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னது அவர் ஈகோவை கிளறியதோ என்னவோ ... "தட் இஸ் த ஸ்பிரிட் .. கீப் இட் அப் .. ஆல் த பெஸ்ட்' என்றார்.
அடுத்த நாளே வேலை தொடங்கியது... இதுதான் ப்ரொஜக்ட், பிரபல தொலைகாட்சி நிறுவனம் ஒன்று, வருகிற பொங்கல் பண்டி¨க்கு ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிராமத்து மாட்டுப்பொங்கலை சித்தரிக்கும் வன்னம் 30 நிமிட க்ராபிக்ஸ் படம் தயாரித்து தர வேண்டும்.
க்ராபிக்ஸ்ஸில் பொங்கல் பானை, கரும்பு , தோரணம், கிராமம், கிராம மக்கள், குளம், கோயில், ஐய்யனார் சிலை, விவசாய நிலம், ரேக்ளா ரேஸ் (மாட்டு வன்டி பந்தயங்க..) ஜல்லி கட்டு ....
இதை தான் செய்து தரவேண்டும்...
மற்றவர்களுக்கு அவரவர் செய்யவேண்டியதை பிரித்து கொடுத்து விட்டு (அட !! நான் தாங்க ப்ரொஜக்ட் மானேஜர் இப்போ .. :) ) எனக்கென்று ஒரு சிறு பகுதியை (2 நிமிடம் மட்டும்) எடுத்துக்கொண்டு.. (எனக்கு ப்ரொஜக்ட் மானேஜ்மென்ட் வேலை நிறைய இருக்கும்ல.... !! ஹி ஹி ஹி ) .. செய்ய ஆரம்பித்தேன்..
ஒரு வழியாக, ப்ரொஜக்டை சரியாக 19 நாளில் முடித்து இதோ, மனேஜர் அறையில் கடைசி ரிவ்யூ...க்ராபிக்ஸ் காட்சிகள் நகர்ந்த்துக்கொண்டு இருக்கிறது... இதோ நான் செய்த அந்த 2 நிமிட காட்சி..ஒரு மாடு ஒன்று வயல் வெளியில் சுற்றி ரேக்ளா ரேஸ் நடக்கும் இடத்திற்க்கு வருகிறது.... அந்த மாட்டை ஓட்டி வரும் ஒரு க்ராபிக்ஸ் சிறுவன்..
அந்த 2 நிமிட காட்சி முடிந்தவுடனேயே , அனைவரும் பலமாக கை தட்டினார்கள்.... மிக மிக அருமையாக இருப்பதாக ஏகபட்ட பாராட்டு...இந்த 3 ஆண்டுகளிலேயே முதல் முறையாக மிக அருமையாக செய்துள்ளாய்... வெரி குட்... கீப் இட் அப்.. என்று மானேஜர் பாராட்டிய போது உச்சி குளிர்ந்த்து போனேன்..
படிக்கும் காலத்தில் அடிக்கடி அப்பா சொல்லுவார்.. "நீ மாடு மேய்க்க தாண்டா லாயக்கு....." ஏனோ அந்த வாக்கியம் மனக்கண் முன் வந்து போனது...... இருக்கும் இடத்தையும் மறந்து சிரித்தேன்................... அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தது புரிந்தது...............
நன்றி..

அடுத்த அரட்டையில் சந்திக்கும் வரை,

அன்புடன்

வீ. எம்



அரங்கேற்றம்

அனைவருக்கும் வனக்கம்,


சில மாதங்களாகவே, இந்த "blog" , "blog" என்ற வார்த்தை என்னை பாடாய் படுத்தியது, இது என்ன ஏது என்று புரியவே பல நாட்கள் ஆனது.. பல blog க்கு விசிட் செய்து அதில் பலதை மிக ரசித்து.. சிலதை படித்து குழம்பி போய்... சிலது பல காலமாய் கவனிக்கபடாமல் அரைகுரையாய் ... ஆதரவின்றி இருப்பதையும் பார்த்து.. நாம் blog ஆரம்பித்தால், இதுதான் நிலையா என்று யோசித்து..... .. சில நாட்களுக்கு எல்லாம் மறநது ... வெறும் ரீடர் அந்தஸ்த்திலேயே காலம் தள்ளி.... மீன்டும் ஏதோ ஒன்று உந்தீ தள்ள ...இறங்கி பார்த்துவிட வேண்டியதுதான் என்று பல நாட்கள் யோசித்து யோசித்து ..இதோ இறங்கியே விட்டேன்..
தமிழ் தட்டெழத்து கூட தெரியாது.... இந்த நிலையில் .. என்ன எழத , எப்படி எழத...??? என்று யோசனை தட்டினாலும்...... ஒரு "கனிபொறி என்ஜினீயர்" ஆவோம் என்று தெரிந்த்தா LKG சேர்ந்தாய்என்று உள் மனதில் பட்சி ஒன்று சொல்ல ..இதோ .... என் அரங்கேற்றம்........
பல ஆயிரம் படிகள் உள்ளது ... ஒரு நம்பிக்கையோடு முதல் படியில் கால் வைக்கிறேன்....
குறிப்பாக ஒரு blog and adhan author பற்றி சொல்ல வேண்டும்... என்னை ஈர்த்த , உந்த்திய ..நான் ரசித்த இந்த ப்லொக் "rajiniramki.blogspot.com" .. அதன் முகம் தெரியாத (இல்லை இல்லை.. முகம் பலொக் ல் உள்ள புகை படத்தில் பார்த்துள்ளேன்) முன் பின் தெரியாத ஆசிரியர் "ராம்கி" க்கு நன்றிகள் பல......

உனக்கு நல்ல பழம் கிடைக்க வேண்டுமா? காய்த்த மரத்தில் கல்லெறி ...உனக்கு பெயர் வரவேண்டுமா? புகழ் பெற்ற ஒருவரை பற்றி பேசு ... (அதீத புகழ் வர , அவரை பற்றி தவறாக விமர்சனம் செய் - அது வேறு விஷயம்) ..


ஆக .. புரிந்து விட்டதா?? என்ன எழுத போகிறேன் என்று????? மேல் இரண்டு பாராவில் உள்ளது க்ளு..புரிந்தவர்கள் உறுதி செய்து கொள்ளவும் ...புரியாதவர்கள் என்ன தான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வதுடனும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடனும்....... விடை பெருகிறேன்.. (நம்பிக்கை தா யா வாழ்க்கை ... !! )

next and my first posting : http://arataiarangam.blogspot.com/2005/05/blog-post_111634069865343630.html

அன்புடன் !

வீ.எம்