மெட்டி ஒலிலிலிலிலிலிலி
மெட்டி ஒலி -இது கடந்த 3 ஆண்டுகளாக 75% தமிழர்களின் இல்லங்களில் இரவு 9 - 9.30 மணி வரை கேட்ட ஒலி.. நாடகமே என்றாலும், அதில் வரும் சம்பவங்களை ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் நிகழ்வுகளாகவே ஒன்றிப்போய் பார்த்தவர்கள் ஏராளம்..மெகா தொடர் நாடகங்களை ஒரு பக்கம் விமர்சித்துக்கொண்டே, ஓரக்கண்ணால் பார்த்தவர்களும் மிக அதிகம், என்னையும் சேர்த்து.
ஆரம்பத்தில் தொடருக்கு நடுவே விளம்பரம் போட்டது போய் , கொஞ்சம் சூடு பிடித்தவுடன் விளம்பரத்துக்கு இடையே கொஞ்சம் நாடகமும் போடப்பட்டது என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கும் இந்த தொடர் , இன்றோடு முடிய போகிறது...
சற்று இடைவெளி விட்டு, ஒரிரு மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியும் என்கிற வசதி மெகா தொடருக்கு உண்டு..மெட்டி ஒலியிலும் அந்த வசதி இருந்தது. பொதுவாக மெகா தொடர்கள் வார பத்திரிக்கை துனுக்குகளில், பட்டிமன்றகளில் , கூடிப்பேசும் நன்பர்கள் என அனைவரின் வாயிலும் விழுந்து எழும்.. மெட்டி ஒலியும் அதற்கு விதிவிலக்கல்ல.. வலைப்பூவில் கூட மெட்டிஒலி பற்றிய பதிவுகள் சிலவுண்டு..
பட்டிமன்ற புகழ் "ராஜா" ஒரு பட்டிமன்றத்திலே பேசும்போது "எங்க வீட்டு அம்மனி மெட்டிஒலி முடிந்தால் தான் ரொட்டி ஒலி னு சொல்லிடுச்சி.." என சொல்லி மக்களின் கரகோஷத்தை அள்ளி சென்றார்.
ஒரு மனைவி கனவனை பார்த்து கேட்டாங்களாம் "ஏங்க , மெட்டி ஒலி கோபி பாருங்க, எவ்ளோ நல்லவரா இருக்காரு, மனைவிக்கிட்ட அன்பா இருக்காரு... நீங்களும் அப்படி தான் இருக்கனும்.."கனவர் சொன்னாராம் "ஹ்ம்ம்..அவருக்கு லட்சக்கனக்குல பணம் வருது, எனக்கும் உங்கப்பா மாசம் 50 ஆயிரம் தந்தா நான் மட்டும் இப்படி நடிக்க மாட்டேனா என்ன??"
என் நன்பன் மெட்டி ஒலி ஆரம்பிக்கப்போ "பாச்சிலர்" , முடியும்போது 2 குழந்தைக்கு அப்பா ... என்ன 3 வருசத்துல கல்யாணம் பன்னி 2 குழந்தைகளா னு பாக்கறீங்களா?? ஏன் முடியாது????? ஹ ஹா ஹா ... இருந்தாலும் அவனுக்கு(மனைவிக்கு) ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறந்தது..
நாம (வீ எம்) அப்பவும் "பாச்சிலர்" இப்பவும் அதே தான் :( :( ..பார்க்கலாம் செல்வி புன்னியத்துல ஏதாச்சும் நடக்குதானு...)..ஐயோ ..."செல்வி" தொடரை சொன்னேங்க... !
நானும் மெட்டி ஒலி உள்ளிட்ட மெகா தொடர்களை அதிகமாக விமர்சித்துள்ளேன்.. என்ன இது மக்களை இப்படி அடிமை படுத்தி வைக்கிறாங்க, அப்புறம் நினைத்துக்கொள்வேன், அவர்களுக்கு டீ வி தொடர் என்றால் நமக்கு வலைப்பூ !
இந்த வகையான தொடர்கள் பல நேரங்களில் அபத்தமான விஷயத்தை சொல்கிறது, வியாபார நோக்கத்திற்காக சில விஷயங்கள் தினிக்கபடுகிறது, சில நேரங்களில் மூட வழக்கங்களை நியாயப்படுதுகிறது.... இன்றைய தொடர்களில் சில் நேரங்களில் "இது போன்ற காட்சி தேவையா??" என சொல்ல வைக்கும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் வைக்கப்படுகிறது.. உன்மையே !
ஆனால் , சற்று யோசித்து பார்த்தால்,. . பல குறைகள் இருந்தாலும் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் உள்ளடங்கி இருப்பது தெரிகிறது....
இந்த தொடரை பொறுத்தவரை, ஒரு கனவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் காண்பித்தார்கள், அதே வேளையில் எப்படி இருக்க கூடாது என்றும் காண்பித்தார்கள்.. நல்ல அருமையான பாத்திர படைப்புகள் இந்த தொடரில் இருந்தது..
சிறு சிறு பிரச்சினைகள் எழுந்து அடங்கினாலும் 5 சகோதரிகளின் பாசத்தையும் , பொறுப்பான தந்தையும் பார்க்க முடிந்தது.. நல்ல உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வைக்கும் படி இருந்தது ...
மாமியாராக நடிதவரின் பாத்திர படைப்பு மிகைப்படுத்தபட்டதென்றாலும், இவரின் சுபாவத்தை ஒத்த மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது... நிச்சயமாக அவர்களுக்கு சற்றாவது உறுத்தி இருக்கும்..
நிர்மலா என்ற பாத்திர படைப்பின் மூலம், ஒரு பேன் ஆரம்பத்தில் மற்றவரையே சார்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் தெளிவடைந்து , சுயமாக இருக்க முடியும் என்பதை காட்டியது.. அந்த கதாபாத்திரத்தின் முதல் பாதியும், பின் பாதியும் வெகு அழகாக தீட்டப்பட்டிருந்தது
இப்படி 3.5 ஆண்டுகளுக்கு மக்களை கட்டி போடுவது சாதாரண காரியம் இல்லை.. கதாசிரியர், இயக்குனர் இருவரின் அபார திறமையும் இதற்கு முழு காரணம்.. வாழ்த்துக்கள்... !
குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து பேசுவதே அரிதாகி வரும் இந்த கால கட்டத்தில், இது போன்ற தொடர் பார்க்கும் அந்த 1 மனி நேரமாவது அனைவரும் தொலைகாட்சி முன் கூடி அமர்வதும், தொடர் பற்றியாவது ஏதாவது அவர்களூக்குள் விவாதிப்பதும் ..நல்ல விஷயமே!
மறுபக்கத்தில், இதையெல்லாம் விட உண்மையிலேயே இதில் நடித்தவர்கள், டெக்னிஷியன்கள் அனைவரும் மூன்று வருட காலம் ஒன்றாய் இருந்து , பேசி , பழகி.. ஆரம்பத்தில் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த நாடகம் தொடர் முடியும் இந்த நேரத்தில் நெருக்கமான நன்பர்களாகி இருப்பார்கள்.
நடிப்புக்கு புதிதாய் வந்தவர்கள் கூட இந்த 3.5 ஆண்டு காலத்தில் தங்களை பட்டை தீட்டிக்கொண்டிருப்பார்கள். அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. என்ன ஒரு அருமையான அனுபவமாக இருந்திருக்கும் அல்லவா?
ஆக, ஒரு கவிஞன் "வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி ... " என்று பாடியது போல..இந்த மெகா தொடர்களில் பல குறைகள் இருந்தாலும், நிச்சயமாக நாம் புரிந்துக்கொள்ளக்கூடிய , ரசிக்க கூடிய சில நல்ல விடயங்களும் இருக்கத்தான் செய்கிறது ...
உண்மைதானே??????
வீ எம்
22 கருத்துக்கள்:
திரைப்படங்களுக்கு மட்டுமே விமர்சனம் கண்ட தமிழ்மணம் முதன் முறையாக மெட்டி ஒலி என்கிற தொடருக்கு விமர்சனம் காண்கின்றது.... வாழ்க வீ.எம்.
/இந்த தொடரை பொறுத்தவரை, ஒரு கனவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் காண்பித்தார்கள், அதே வேளையில் எப்படி இருக்க கூடாது என்றும் காண்பித்தார்கள்.. நல்ல அருமையான பாத்திர படைப்புகள் இந்த தொடரில் இருந்தது..
சிறு சிறு பிரச்சினைகள் எழுந்து அடங்கினாலும் 5 சகோதரிகளின் பாசத்தையும் , பொறுப்பான தந்தையும் பார்க்க முடிந்தது.. நல்ல உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வைக்கும் படி இருந்தது ...
மாமியாராக நடிதவரின் பாத்திர படைப்பு மிகைப்படுத்தபட்டதென்றாலும், இவரின் சுபாவத்தை ஒத்த மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது... நிச்சயமாக அவர்களுக்கு சற்றாவது உறுத்தி இருக்கும்..
நிர்மலா என்ற பாத்திர படைப்பின் மூலம், ஒரு பேன் ஆரம்பத்தில் மற்றவரையே சார்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் தெளிவடைந்து , சுயமாக இருக்க முடியும் என்பதை காட்டியது.. அந்த கதாபாத்திரத்தின் முதல் பாதியும், பின் பாதியும் வெகு அழகாக தீட்டப்பட்டிருந்தது
//
மிகச்சரியான விமர்சனம்...
சிறிது காலம் என்னையும் மெட்டி ஒலி கட்டிப்போட்டிருந்தது...
(..பார்க்கலாம் செல்வி புன்னியத்துல ஏதாச்சும் நடக்குதானு...)
;)
மெட்டி ஒலி சனிக்கிழமை முடியுது.. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜெயா டி.வி.யிலே கெட்டி மேளத்தோட இவ்வளவு நாள் கதை சுருக்கத்தை மூணு மணி நேரம் ஒளிபரப்ப போறாங்களாம். என்னவோ நடக்குது நாட்டிலே!
"இது கடந்த 3 ஆண்டுகளாக 75% தமிழர்களின் இல்லங்களில் இரவு 9 - 9.30 மணி வரை"
தமிழ் நாட்டில் வசதி பற்றவர்கள் அதிகரித்து விட்டார்கள?
//திரைப்படங்களுக்கு மட்டுமே விமர்சனம் கண்ட தமிழ்மணம் முதன் முறையாக மெட்டி ஒலி என்கிற தொடருக்கு விமர்சனம் காண்கின்றது....//
'முதன்முதலாக' என்பதை நான் வன்மையாக (!) கண்டிக்கிறேன் குழலி..
இதோ பாருங்க...
http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_111553339771771770.html
//'முதன்முதலாக' என்பதை நான் வன்மையாக (!) கண்டிக்கிறேன் குழலி..//
தவறு நடந்துவிட்டது பின் வாங்குகின்றேன்
- குழலி
//'பின்' வாங்குகின்றேன்//
'குண்டூசி'யா?! ;)
//...சில நல்ல விடயங்களும் ..//
விடயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் வீ.எம்.
விஷயத்தையா?
அப்படியென்றால், விஷயம் என்று எழுத தயக்கம் ஏனோ?.
'ஷ' என்ன தீண்டத்தகாத எழுத்தா?
பிறகு ஏன் unicode தமிழிலும் 'ஷ' உள்ளது?
உள்ளதை ஏன் எழுத மறுக்கிறீர்கள்?
சாதாரணமாகப் பேசும்போது நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
'விடயம்' என்றா, அல்லது விஷயம் என்றா?.
தேவை இங்கு ஒளிவு மறைவற்ற உண்மை.
**********************
பின்னூட்டம் இட்டவர்: ஞானபீடம்
**********************
//சாதாரணமாகப் பேசும்போது நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
'விடயம்' என்றா, அல்லது விஷயம் என்றா?.
//
சாதாரணமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் வித்தியாசம் உள்ளது... பேசுவதை அப்படியே எழுதுவதில் குறைந்த பட்சம் எனக்கு உடன்பாடில்லை...
சிறு கதைகளிலோ நாவல்களிலோ அல்லது ஒருவர் இப்படி கூறினார் என மேற்கோள்களுக்கிடையில் கூறுவதற்கும் கட்டுரைகளில் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளதாக நான் கருதுகின்றேன்... முடிந்தளவு பிற மொழிச்சொற்கள் எழுத்துக்கள் கலக்காமல் எழுதுவது நல்ல விடயம் தான்...
- குழலி
ஞானபீடம் said to குழலி:
எப்படி எப்படி, பிறமொழி கலக்காமல்
ஓஹோ, அப்ப இதெல்லாம் என்னவாம்?
***************
வித்தியாசம் ...
குறைந்த பட்சம் ...
நாவல்களிலோ ...
***************
வாழ்த்துக்கள் வீ.எம். உண்மையான விமர்சனம்.
//மெகா தொடர் நாடகங்களை ஒரு பக்கம் விமர்சித்துக்கொண்டே, ஓரக்கண்ணால் பார்த்தவர்களும் மிக அதிகம், என்னையும் சேர்த்து.//
உங்களுடைய இந்த லிஸ்ட்டிலே நானும் அடக்கம், ஹி ஹி.
நீங்கள் சொன்னதுபோல் மெகா தொடர்களில் சில பார்க்கும்போதே, அட இப்படி எல்லாம் கூட அபத்தமாக சொல்வார்களா, மூடப்பழக்க வழக்கங்களை நியாயப்படுத்தி சொல்வார்களா என்று எரிச்சலை ஏற்படுத்துவதும் உண்மைதான். அதே வேளை மெட்டி ஒலியில் வந்த காதாபாத்திரங்கள் பலவும் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதுவும் உண்மைதான்.
எப்படி மனிதர்கள் இருக்க வேண்டும் என்பதையும், எப்படி அவர்கள் இருக்க கூடாது என்பதையும் காட்டியதோடு மாத்திரமல்லாமல், அவர்கள் எப்படி திருந்திவிட்டால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லி நிறைவு செய்திருக்கிறார்கள் (முடிவு இன்னும் நான் பார்க்கவில்லை, ஆனால் எப்படி இருக்கும் என்பது கடைசி சில எப்பிசோட்டுகளில் தெரிந்து விட்டதை வைத்து சொல்கிறேன்).
எல்லோரும் முழுக்க முழுக்க நல்லவராகவோ, முழுக்க முழுக்க கெட்டவராகவோ இருப்பதில்லை என்பதையும் இங்கே உணர்த்தியிருக்கிறார்கள்.
//ஆனால் , சற்று யோசித்து பார்த்தால்,. . பல குறைகள் இருந்தாலும் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் உள்ளடங்கி இருப்பது தெரிகிறது....//
மிகவும் உண்மையான வார்த்தை. நீங்கள் சொன்ன பல நல்ல விடயங்களுடன், பல தவறுகள் செய்துவிட்டு உண்மையாக திருந்துபவர்களை, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் திறமையாக எடுத்துக் காட்டப்படிருக்கிறது. அப்பாவின் இறப்பின் பின்னர் மாமியாரையும், கணவரையும் திட்டித் தீர்த்த சரோ, அவர்கள் இருவரும் உண்மையில் மனம் திருந்தி வந்தபோது, மிகவும் இயல்பாக ஏற்றுக் கொள்கிறாரே, அப்புறம் அந்த நிர்மலா பாத்திரமும் ஒரு பெண் இப்படி இருந்தால் எத்தனை அழகு என்று எடுத்துக் காட்டுகிறது.
நீங்கள் சொன்னதுபோல் எப்படி மனிதர்கள் இருக்க கூடாது என்பதை காட்டியபோது, உண்மையில் அப்படி இருப்பவர்களிடம் கொஞ்சமாவது அது உறுத்தலை ஏற்படுத்தி, அவர்களுள் இங்கே காட்டப்பட்டது போல் மாற்றம் ஏற்படும்தானே என்று நானும் நினைத்தது உண்மைதான்.
நல்ல விமர்சனம், வாழ்த்துக்கள்.
உங்களுடைய லொள்ளை அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளுங்கள். நன்றாக இருக்கு லொள்ளுசபா, ஹி ஹி.
யோவ் ஞானபீடம்... புரியாத ஆளா இருக்கீறே.. குழலி அவருக்கு பிடிக்காது என்று தான் சொன்னார். அவர் செய்ய மாட்டர்னா சொன்னார். ஊரெல்லாம் பெயர் பலகைகளில் ஆங்கில இருந்தால் தார் பூசி அழிப்போம். ஆனா எங்க வீட்டு பெயர் பலகை மட்டும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். (குழலி.. என்னோட பதிவிலே - ஸ்டாரா போடுறீங்க?!)
//குழலி.. என்னோட பதிவிலே - ஸ்டாரா போடுறீங்க//
கண்டுபிடிச்சிட்டிங்களா பின்ன எனக்கு பிடிக்காத பதிவிற்கு - தான் போட முடியும்... + ஆ போட முடியும்..
ஆனா எனக்கு மட்டும் எந்த பதிவு எழுதினாலும், கவிதை எழுதினாலும், பொதுவா எழுதினாலும் ஒரு இரண்டு - உடனே விழுந்துடுத்துப்பா...
ஞானபீடம் உங்க பின்னூட்டத்திற்கு பதிலளிக்கத்தான் வந்தேன் இந்த மாயவரத்தான் பின்னூட்டத்தை பார்த்து திசை திரும்பிவிட்டேன்...
என்னால் தற்போதுள்ள நிலையில் 100% தூய தமிழில் எழுத முடியாது... ஆனால் பெரும்பாலுமான எனது பதிவுகளில் (நக்கல்,நையாண்டி பதிவிகள் தவிர) அதிக பட்ச அளவிற்கு நான் ஆங்கிலம் மற்றும் வடமொழி கலப்பை என்னால் முடிந்த வரை தவிர்த்திருப்பேன்... அதேபோல பெரும்பாலுமான வட மொழி எழுத்துக்களையும் தவிர்த்திருப்பேன்...
வரும் காலங்களில் நான் மேலும் வட மொழி மற்றும் ஆங்கிலக்கலப்பை குறைப்பேன்... ஆனால் பிற மொழிக்கலப்பை சற்று கூட சிந்திக்காமல் இருப்பவர்களை பார்த்து தான் எனக்குள்ளேயே மனம் நோகின்றேன்...
Hello VM,
Nice review. All the posting of yours is good. your poem "averai thedi" was very good and story "kaagida pookalum , kalar tv " was superb,
keep writing more
sankarnarayanan
குழலி, பாலாஜி, பாரி, மாயவர்ஸ், மாறன், ஞான்ஸ், கலை, சங்கரநாரயனன் அனைவருக்கு நன்றி !
சங்கரநாரயனன் : என் பதிவில் எனக்கு மிக பிடித்ததும் அந்த காகித பூக்களும் , கலர் டீ வி யும்.. ! அதே போல் இன்னொரு கதை எழுதுகிறேன் ..விரைவில் பதிப்பேன் !
கலை : முடிந்தவரை லொள்ளுசபா வை அடிக்கடி புதுப்பிக்க முயர்ச்சி செய்கிறேன் ! தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி
ஞான்ஸ் : நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி , தமிழில் ஒரு கத்துகுட்டி தான்.. என்னுடைய மற்ற பதிவுகளில் "விஷயம்" என்று பல இடங்களில் எழுதியுள்ளேன்.. எழுத்துவடிவில் மற்ற மொழி கலப்பின்றி எழுத முயற்சி செய்கிறேன் அவ்வளவே !
அதற்காக பேச்சி நடையிலும் அப்படியே இருக்கவேண்டும் என்றால்...இந்த கால கட்டத்தில் அது சாத்தியமில்லை .. விடயம் மற்றுமில்லை.. கார் , ஒகே, thanks, bye , sure, right, போன்று பல பல பிற மொழி வார்த்தைகள கலந்தே பேசுவேன் !
அப்பாடா என்னடா ஞான்ஸ் நம்மள போட்டு தாக்காம ரெண்டு பேருக்குமே தூக்கம் வராதேனு நெனைச்சேன்..நல்ல வேளை !!
என்னவோ நடக்குது நாட்டிலே!
நல்லதா நடந்தா சரி மாயவரத்தாரே !
//'முதன்முதலாக' என்பதை நான் வன்மையாக (!) கண்டிக்கிறேன் குழலி..//
கண்டிப்பதோட விடாதீங்க... கேஸ் போட முடியுமானு பாருங்க ! :)
ஆனா எனக்கு மட்டும் எந்த பதிவு எழுதினாலும், கவிதை எழுதினாலும், பொதுவா எழுதினாலும் ஒரு இரண்டு - உடனே விழுந்துடுத்துப்பா...
+ ம் - ம் பிறர் தர வாரா !! குழலி !! :)
வீ எம்
பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் இடைவெளி உள்ளதை மறுக்க முடியாது. அது தவறுமில்லை. எல்லா மொழியிலும் உள்ளதுதான் அது.
ஆகையால் குழலி விஷயத்தை விடயம் என்று எழுதுவதில் தவறில்லை என்பது என் கருத்து.
அன்புடன்,
கோ.இராகவன்
// என் நன்பன் மெட்டி ஒலி ஆரம்பிக்கப்போ "பாச்சிலர்" , முடியும்போது 2 குழந்தைக்கு அப்பா ... என்ன 3 வருசத்துல கல்யாணம் பன்னி 2 குழந்தைகளா னு பாக்கறீங்களா?? ஏன் முடியாது????? ஹ ஹா ஹா ... இருந்தாலும் அவனுக்கு(மனைவிக்கு) ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறந்தது..
நாம (வீ எம்) அப்பவும் "பாச்சிலர்" இப்பவும் அதே தான் :( :( ..பார்க்கலாம் செல்வி புன்னியத்துல ஏதாச்சும் நடக்குதானு...)..ஐயோ ..."செல்வி" தொடரை சொன்னேங்க... ! //
இந்த வரிகள் பதிவின் நீளத்துக்கு மட்டுமே உதவியிருக்கின்றன. என்ன நான் சொல்வது !!!
// இந்த தொடரை பொறுத்தவரை, ஒரு கனவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் காண்பித்தார்கள், அதே வேளையில் எப்படி இருக்க கூடாது என்றும் காண்பித்தார்கள்.. நல்ல அருமையான பாத்திர படைப்புகள் இந்த தொடரில் இருந்தது.. //
உண்மை.......
கோபி போல மருமகன் அமைவதற்கும் சரோ போல மருமகள் அமைவதற்கும் இப்போ சில கோயில்களில் வேண்டுதல்களும் வைக்கப்படுகின்றனவாம்.
நன்றி ,
அப்புறம் நம்ம மனசுல இருக்க ஆதங்கத்தை எங்கதான் சொல்றது கனேஷ் !! நம்ம சொந்த வலைப்பூவில தானே சொல்லனும் :)
வீ எம்
கடைசிப்பதிவிற்க்கு கருத்துப்பெட்டி திறக்கப்படவில்லை
s kuzhali,
donno why. also the posting is not getting listed in the "edit post" list
just wrote a mail to blogger support and waiting for their support !
V. M
Post a Comment