நான் வாங்கிய முதல் போர்வை !

நான் வாங்கிய முதல் போர்வை !

வீ எம்: கித்னா ஏ பையா?

கடைகாரர்: தீன் செள ருபயா

வீ எம்: தீன் செள?

கடை: ஹ, கித்னா பீஸ் சாயீயே !

வீ எம் : கித்னா னை! பர்ஸ்ட் ரேட் போலோ..

கடை: பிக்ஸட் ரேட் ஹே இதர் .. தீன் செள ருபயா ஹே பைனல் ரேட்.

வீ எம்: னை பையா, டூ மச் ஹே ரேட்.. தோ செள ஒகே

ஒரு மாதிரி அவன் என்னை பார்க்க.. ஒரு மாதிரியா ஹா னு ஆரம்பித்து 4 , 5 வரிக்கு ஏதேதோ சொல்லி முடிச்சான் ..

ஏதோ எல்லாம் புரிஞ்ச மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு.. நான் கேட்ட கேள்வி(!!!) சொன்ன வார்த்தை ." அச்சா ஹே! தோ செள??"

என்னை எரிக்கற மாதிரி ஒரு பார்வை பார்த்துட்டு அவன் பாட்டுக்கு அடுத்த கஸ்டமருக்கு போயிட்டான்..க்யா பையா .. பையா னு நான் கத்துனதை கடைசி வரைக்கும் அவன் கண்டுக்கவே இல்லை.. என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கலை..

என்னட இவன் ..சரி கொஞ்சம் இறங்கி வருவோம்னு "தோ செள டொண்டி ·பைவ்" னு சொன்னேன்..அப்பா, 25 ரூபாய்க்கு ஏதோ கொஞ்சம் எபெக்ட் இருந்தது ..

திரும்பிப்பார்த்தான்..
எப்படியும் இவனை மடக்கிடனும்னு ஒடஞ்ச ஹிந்தில "பையா, ஹடாப்ஸர் மே இதர் மார்கெட் சே கித்னா தூர் ஹே நா, ட்ராவல்கர்தா ஆப் கா ஷாப் மே பர்சேஸ் கோ? ஆப் ரேட் நஹி ரெட்யூசிங்"

எனக்கு மட்டுமே புரிந்த தமிழாக்கம் : "அண்னே, ஹடாப்சர்ல இருந்து இந்த மார்கெட்ல இருக்க உங்க கடைல தான் வந்து வாங்கனும்னு இவ்ளோ தூரம் வந்தா, நீங்க இப்படி விலை சொல்றீங்களே"

என் ஹிந்தி கேட்டு நொந்து போயிட்டான் போல, நா கையில வெச்சிருந்த புடுங்கி உள்ள வெச்சிட்டான்.. நான் 100 ரூபாய்க்கு கேட்டிருந்தா கூட தந்திருப்பான் போல ..ஆனா, அவன் தாய்மொழிய நான் இப்படி கொலை செய்றத பார்த்து ஏகத்துக்கு டென்ஷன் ஆகிட்டான்..

இருந்தாலும் சற்றும் மனம் தளராம (அப்புறம், நாம எப்பத்தான் இந்தி கத்துகறது??? ) நம்ம அடுத்த அஸ்திரம்.. பையா, தோ பெட்ஷீட் சாயியே , கித்னா ருபயா??கொஞ்சம் கூட அசராம சொன்னான் "சே செள" !!அடப்பாவி, ஒன்னு 300 ரூபாய்னா , 2 - 600 ரூபாய்னு கூட வா தெரியாம உங்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் .. மனசுக்குள்ளே நெனச்சுகிட்டே, "னை பையா, தோ பீஸ் ஹே நா, சோ, சார் செள பச்சாஸ் " சொல்லி முடிச்சேன்..

அவன் ஏதோ சொல்ல , நான் ஏதொ சொல்ல , ரெண்டு பேருக்கும் ஒன்னும் புரியல.. ஒரு கட்டத்துல அவன் என்னை கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டு இருக்க மாதிரி தோனுச்சு..

இதுக்கு மேல தாங்காது சாமினு..பக்கத்துல இருந்த நன்பன் (..தமிழ்தான்..ஆனா இந்தி நல்லா தெரியும் அவனுக்கு.. ) கிட்ட டேய்.. மாப்ளே என்ன பாத்துகிட்டு இருக்கே.. ஹெல்ப் பன்னுடா பெரிய இவன் மாதிரி..நீ எதுவும் பேசாதே, நான் ஹிந்தில அடிச்சு பேசி வாங்கறேனு சொன்னே.. என்ன ஆச்சு?? நக்கல் செய்தான்..

டேய் சரண்டர் டா , வந்து பேசுடானு கெஞ்ச, அப்புறம் அவன் வந்து பேசி, ஒருவழியா 240 ரூபாய்க்கு வாங்கி தந்தான்..

பணம் கொடுத்துட்டு , பார்சலை வாங்கிட்டு வரும்போது, மறக்காம் அவருக்கு "பையா , தன்யவாத்" னு சொன்னேன்..

"ரொம்ப முக்கியம்டா" நன்பன் சொன்னான் !

இப்படியாக ஜுன் 25, பூனே சென்றடைந்த ஞாயிறு மாலை என் முதல் பெட்ஷீட் வியா(பே)பாரம் காமெடியாக முடிவடைந்தது!!

வீ எம்.


16 கருத்துக்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல நகைச்சுவை வீ.எம்

என் சொந்த அனுபவத்திலும், பேரம் பேசிப்பேசித்தான் ஹிந்தி எண்களைத் தெரிந்துகொண்டேன்.

அது சரி, அந்தப் போர்வையின் மார்க்கெட் ரேட் என்ன?

சுதர்சன்.கோபால் said...

ஓ,தில்வாலே துல்ஹனியா லே சாயென்கி ஹம் ஆப்கே கைன் கௌன் ஏக் துஜே கே லியே.கல் ஹோ நா ஹோ மெரி தில் சாஹ்தா ஹை...

மத்தபடி உங்க பெட்ஷீட் மேட்டர் சூப்பர்.

நான் சப்பான் போனப்பவெல்லாம் கால்குலேட்டர் வெச்சு தான் கடைகள்ள பேரம் பேச்சுவேன்...

PositiveRAMA said...

வீ.எம்! கொஞ்சம் பிசி! உங்க மடலுக்காக காத்திருக்கிறேன்!
இந்தி மொழியின் இன்றியயாமை வடக்கே போனால்தான் தெரியும்.

கயல்விழி said...

நல்ல பகிடி தான். ஏன் இந்த வீண் விராப்பு முதலிலே நண்பனை கேட்டிருந்தா இன்னும் கொஞ்சம் காசு குறைச்சிருக்கலாம்.

//
நான் சப்பான் போனப்பவெல்லாம் கால்குலேட்டர் வெச்சு தான் கடைகள்ள பேரம் பேச்சுவேன்... //
நல்ல ஐடியா.

வீ. எம் said...

நன்றி சுரேஷ், சுதர்சன், பா. ராமா, கயல்விழி,
//அது சரி, அந்தப் போர்வையின் மார்க்கெட் ரேட் என்ன? //

சென்னைல வந்து கேட்டு பார்த்தேங்க, 350 ல ஆரம்பிச்சான்.. கடைசியா 290 க்கு வந்தான் அதுக்கு கீழே நோ சான்ஸ் சொல்லிட்டான்.
// கால்குலேட்டர் வெச்சு தான் கடைகள்ள பேரம் பேச்சுவேன்... //
நல்ல ஐடியா, பட், முதன் முதலா கால்குலேட்டர் வாங்க சப்பான்ல எதை வெச்சு பேரம் பேசலாம்? :)

//ஏன் இந்த வீண் விராப்பு முதலிலே//

அதான் சொன்னேனே, எப்பத்தான் நம்ம இந்தி கத்துக்கறது??

கூடிய சீக்கிரம் , சென்னை வருவதற்கு முன்னாடி பூனேல கடைசியா பேரம் பேசி ஒரு டிரெஸ் எடுத்த அனுபவம் எழுதறேன் பாருங்க! அப்போ தெரியும் :)

வீ எம்

குழலி / Kuzhali said...

படிக்க சுவாரசியமாக உள்ளது.

வீ. எம் said...

அட குழலி, உங்க பதிவுல கருத்து போட்டுட்டு இந்த பக்கம் என் பதிவுக்கு வந்தா உங்க கருத்து !!
நன்றி!
வீ எம்

enRenRum-anbudan.BALA said...

VM,

oru pOrvaiyai paththi ivvaLavu sUpparAna pathiva ??? vAzka :)

துளசி கோபால் said...

வீ.எம்,

நான் ரெண்டரை ரூபாய்க்கு 'அடை'ன்னு சொல்லத்தெரியாம 'சாடே தோ'ன்னு சொல்லி குடித்ண்ணி வச்சுக்க மண் கூஜா வாங்குனது நினைவுக்கு வருது:-)))))

நிஜமாவே இப்படிப் பேசப் பேசத்தான் பாஷை கத்துக்க முடியும்.

அவுங்க மட்டும் தமிழைக் கொலை செய்யலாமா? நிம்பள்கி நம்பள்கின்னு!

வீ. எம் said...

கருத்துக்கு நன்றி துளசியக்கா பெரியம்மா, (தன்யாக்கு பெரியம்மானா, நிச்சயமா எனக்கும் அப்படித்தான் இருக்கனும்)
1 மாதத்துல சுமாரா இந்தி கத்துகிட்டேன்.. என் கடைசி ஷாப்பிங்க அனுபவம் பத்தி ஒரு பதிவு போடறேன் பாருங்க!

வீ எம்

enRenRum-anbudan.BALA said...

//கருத்துக்கு நன்றி
//

En, engkaLLukku solla mAttIrkaLO :-(

வீ. எம் said...

என்ன இப்படி சாதாரணமா "ஒரு போர்வை" னு சொல்லிட்டீங்க ?? .. போர்வைக்குள்ளே என்னென்னமோ மேட்டர் இருக்குங்க :) போர்வைல இருக்க டிசைனிங் பத்தி சொல்றேன்..வேற எதுவும் இல்லை..

//vAzka :) //
வாழ்க யாருக்கு? எனக்கா இல்லை பேரம் பேசி கொடுத்த என் நன்பனுக்கா இல்லை அந்த கடைக்காரருக்கா?

பி கு :அவசரபட்டுடீங்களே பாலா... !! கீழே இருந்து ஒவ்வொன்னா வந்துட்டிருக்கேன்.. !
பெரியம்மாக்கு நன்றி சொல்லிட்டு அடுத்து உங்களுக்கு டைப்பிட்டு இருக்கேன் அதுக்குள்ளே உங்க கருத்து..
நீங்க , குழலி எல்லாம் ரொம்ப ஸ்பீடு பா!!


வீ எம்

Anonymous said...

welcome back to Chennai

very interesting V.M

Kishore

வீ. எம் said...

Thank you so much Kishore. Thanks for your comments and warm welcome as well.

யாத்திரீகன் said...

ஹா ஹா ஹா... நான் கல்கத்தாவில் இறங்கியபோது அடிச்ச.. கெட்ட காமெடிகள் நியாபகத்துக்கு வருது.. :-))))

உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் வீ. எம்.. ,

இப்போ, நான் ஏதோ ஹிந்தி பேசுறேன்னா.. , அதுக்கு கல்கத்தா மாநகர, பொதுமக்களின் பொறுமைதான் காரணம்... அது மாதிரி.. பூனே மக்களும் உங்களிடம் நடந்து கொள்ள வாழ்த்துக்கள்.. ;-)

வீ. எம் said...

செந்தில், வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி
//அது மாதிரி.. பூனே மக்களும் உங்களிடம் நடந்து கொள்ள வாழ்த்துக்கள்.. ..//
நடந்துக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்..இப்போது சென்னை வந்துவிட்டேன்.. மீண்டும் 2 மாதங்கள் கழித்து செல்வேன்!அப்போது பார்க்கலாம்..
வீ எம்