காணவில்லை ! காணவில்லை !! காணவில்லை !!!

காணாமல் போனவர்கள் பற்றிய செய்திகள்

செய்தி - 1


தவறாமல் வலைப்பதிவு சேவை செய்து வந்த சாப்பாட்டு சமத்துவர் "ஞான்ஸ்" என்கிற ஞானத்தின் பீடம் மேல் இருந்த ஒருவரை கடந்த 2 வாரங்களாக காணவில்லை.


கடந்த சில நாட்களாகவே அவரின் பதிவுகளுக்கு '-' குத்து வந்ததை அடுத்து, அவர் மன உளைச்சலில் இருந்ததார். இதன் காரணமாக எதாவது விபரீதமான முடிவுக்கு ஏதேனும் சென்று விட்டாரா என்று அவரின் நெருங்கிய வலைப்பூ வட்டாரங்கள் கவலையில் உள்ளது..
கடைசியாக ஆடியபாதம் பதிவு போட்டுவிட்டு எங்கோ மறைந்து விட்டார். ஆடிய பாதங்கள் வலியெடுக்க ஓய்வு எடுக்க சென்றுவிட்டாரா?


இவரை எங்காவது பார்த்து கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச சன்மானமாக உதை கொடுக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.. ஜாக்கிரதை!

செய்தி - 2

அதே போல, பேருக்கு ஏற்றார் போல் ஒருவர் 'மாய'மாக உள்ளார். திரும்பி 'வரத்' தான் போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.. வலைப்பூவின் முதல் இடத்தில் உள்ள இவரை வெளிநாட்டு சக்திகள் கடத்திச்சென்று இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது, மேலும் கடைசியாக இவர் போட்ட 'அசின்' பதிவை பார்க்கும் போது, தன் தலைவியை பார்க்க கோடம்பாக்காம் சென்றிருப்பாரோ என்ற திசையிலும் விசாரனை நடக்கிறது.

செய்தி - 3 & 4


'தங்க'மான வரை பற்றி பேசி பேசி களைத்துப்போன இரு சுறுசுறுப்பு வலைப்பதிவர்களும் காணவில்லை..குழலூதுபவரும், 'முக'த்தை 'மூடி' இருப்பவரும் தான் அந்த இருவர்..கடைசியாக உள்குத்து பதிவு போட்டு உள்குத்தை வெளியுலகத்துக்கு காட்டிய குழலூதுபவரை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிலர் கடத்திச்சென்றிருப்பார்களோ என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.
கடைசியாக அடிப்பொடிகளை பார்த்து கேள்வி கேட்டு பதிவு போட்ட 'முக'த்தை 'மூடி' இருப்பவரை அடிப்பொடிகள் யாரேனும் கடத்தி இருப்பாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது..
இந்த நால்வரையும் தேடும் வேலையில் ஒரு வலைப்பதிவர் குழு மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.

காணாமல் போயிருப்போர் பற்றிய செய்திகள் இத்துடன் முடிவடைகிறது.. நன்றி , வணக்க்க்கம்ம்ம்ம்ம்..
இவர்கள் பற்றிய விவரங்கள் மற்று புகைப்படம் பார்க்க கீழே சொடுக்கவும்

நம்பர் 1'
நம்பர் 2'
நம்பர் 3'
நம்பர் 4'

காணாமல் போன இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் இங்கே கருத்துபெட்டியில் விவரம் தெரிவிக்கவும்

நன்றி

வீ எம்

27 கருத்துக்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

கறுப்புப் பூனை - மேற்படி நால்வரையும் காணாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் ஞாபகப் படுத்தியதற்காக வீயில் ஆரம்பித்து எம்மில் முடியும் ஒரு வலைப்பதிவரை போட்டுத்தாக்க தாதா கும்பல் சுபாரி வாங்கி விட்டதாக ஒரு பேச்சு!

பினாத்தல் சுரேஷ் said...

//வீ எம் கார்னர் என்னிடம், சுவாமி சுகபோகானந்தாவின் மனசே - ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் II உள்ளது (PDF format). விருப்பமுள்ளவர்கள், தொடர்பு கொண்டால், மின்னஞ்சலில் அனுப்பி வைப்பேன்! வீ எம//

what is your mail id?

please send to sudamini at gmail dot com

முகமூடி said...

முதல் மூன்று ஆட்களும் காணாமல் போன மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் நான்காவது ஆள் இருப்பதால் அவர் காணாமல் போன ஒரு தோற்றம் வருகிறது...

அப்புறம் நீங்கள் ரத்த தானம் செய்பவர்களின் பதிவு கொடுத்திருக்கிறீர்களே, அதில் சென்னை என்று போட்டால் போதுமே.. கொசுவுக்கு ரத்த தானம் செய்பவர்கள்தானே நாம் (சும்மா கிட்டிங்... நல்ல ஒரு சுட்டி அது)

(நன்றி வீ.எம்.. நீண்ட விடுமுறை, சொந்தக்காரர்களின் வருகை, ஆபிஸ் வேலை ஆகியவை காரணமாகவே கையை கட்டி உள்ளேன்.. நாளை இரவு பதிவில் சந்திப்போம், பெனாத்தல் சுரேஷ் அதுவரை சுதந்திரத்தை அனுபவிக்கவும்)

gopans said...

SUPER SUPER SUPER V M

குழலி / Kuzhali said...

//கறுப்புப் பூனை - மேற்படி நால்வரையும் காணாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் //

அப்படி போடு நம்மால கூட சிலர் சந்தோசமாக இருக்கின்றனர் போலும்

மீண்டு(ம்)வருகின்றேன் இந்த வார இறுதியில், நம்மளை யாரு மறந்தாலும் வீ.எம். மறக்க மாட்டாரு போல...

நன்றி

அரசு said...

வேலை நிமித்தமாக கொஞ்சம் இடைவேளை போட்டுவிடலாம் என்று நினைத்தேன் இப்ப காணவில்லை பட்டியலில் என் பெயரும் வரக்கூடாது என்பதற்காக தினசரி உள்ளேன் ஐயா! என்று ஒரு பதிவு போடணும் போல.
முடியாத பட்சத்தில் உங்கள் பின்னூட்டத்திலாவது உள்ளேன் ஐயா! என்று சொல்லிட்டு போறது நல்லது.

Go.Ganesh said...

உள்ளேன் ஐயா

கொழுவி said...

இவர்களை விடவும் நீண்டகாலமாகக் காணாமற்போனவர்களைப் பற்றி நானொரு பதிவு போட்டேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. வெறும் ஒரு வாரத்துள் காணாமற் போனவர்களைப்பற்றிப் பதிவு போட்டுவிட்டீர்களே?

Ramya Nageswaran said...

பலே ஆளுப்பா இந்த பெனாத்தல் சுரேஷ்.. வீ எம்மை தாதாக்கள் போட்டு தாக்கறதுக்கு முன்னாடி 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்'சை வாங்கி வீ.எம் அடிவாங்கும் பொழுது ரிலாக்ஸ்டா இருக்கலாம் பாக்குறாரு!! :-))))

குமரேஸ் said...

வீ எம்,

ஞான்ஸ் ஒன்றும் காணாமல் போகவில்லை, இந்த மாதத்தை விடுமுறை காலம் என்ற பெயரில் கால் மாறி ஆடிய தலம் எல்லாவற்றிற்கும் Cameraவும் கையுமாக போயுள்ளாராம், அக்டோபரில் வரும்போது சரியான படத்துடன் வந்து யாருக்கோ தக்க பதில் தருவாராம் என்று நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.

எனவே அவரைப்பற்றி கவலை தேவையில்லை.

வீ. எம் said...

வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி,
ரொம்ப கஷ்டப்பட்டு சொந்தமா வரைஞ்சு ஒரு கார்ட்டூன் பதிவு போட்டேன். இதுக்கு முன்னாடி பதிவு..
அதுக்கு வந்த கருத்தைவிட இதுக்கு அதிகம்..அதுவும் ஒரே நாள்ல அதுக்கு மொத்தமா வந்ததுல 60% .. என்னத்த சொல்றது போங்க :)


கானாமல் போன 4 பேர்ல 2 பேரு அவங்களாவே பதில் சொல்லிட்டாங்க.. ஒருத்தருக்கு proxy கொடுத்தாச்சு.. அந்த 4 வது நபர் தான் இன்னும் மாயமா இருக்காரு..சீக்கிரம் வருவாருனு நம்பிக்கை இருக்கு..

//வீயில் ஆரம்பித்து எம்மில் முடியும் ஒரு வலைப்பதிவரை போட்டுத்தாக்க தாதா கும்பல் சுபாரி வாங்கி விட்டதாக ஒரு பேச்சு!
please send to sudamini at gmail dot com ///
ரொம்ப பெரிய மனசு சுரேஷ் உங்களுக்கு... அப்புறம் நான் சொல்ல நினைத்ததை ரம்யா அக்கா சொல்லிட்டாங்க..
விரைவில் உங்களுக்கு ஒரு காப்பி அனுப்பி வைக்கறேன் சுரேஷ்..

//முதல் மூன்று ஆட்களும் காணாமல் போன மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் நான்காவது ஆள் இருப்பதால் அவர் காணாமல் போன ஒரு தோற்றம் வருகிறது...//

சீக்கிரமா கொண்டாட்டத்தை முடிச்சுக்கோங்க..அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு செலவு இருக்கு தல..
///அப்புறம் நீங்கள் ரத்த தானம் செய்பவர்களின் பதிவு கொடுத்திருக்கிறீர்களே, அதில் சென்னை என்று போட்டால் போதுமே.. கொசுவுக்கு ரத்த தானம் செய்பவர்கள்தானே நாம் //

VM: இதுதான் முகமூடி பன்ச் :)

கொசுவுக்கு ரத்ததானம் செய்பவர் பேரு வந்தாகூட பரவாயில்லைங்க.. நான் தேடினப்ப ரெண்டு கொசுவோட பேரே வந்தது.. :)
இது தான் வீ எம் பன்ச்..ஹி ஹி ஹி

//SUPER SUPER SUPER V M //
நன்றி நன்றி நன்றி கோபன்

// நம்மளை யாரு மறந்தாலும் வீ.எம். மறக்க மாட்டாரு போல...//
மறக்க முடியுமா தல... என்ன இப்படி சொல்லிட்டீங்க.. !


//டியாத பட்சத்தில் உங்கள் பின்னூட்டத்திலாவது உள்ளேன் ஐயா! என்று சொல்லிட்டு போறது நல்லது. //

சும்மா சொல்லிட்டு இருந்தா ஆகாது அரசாரே, செய்யனும்..பாருங்க நம்ம கனேஷ் தம்பிய.. கத்துக்கங்க..

//உள்ளேன் ஐயா //
என் உள்ளம் கவர்ந்த மாணவன் நீயே கனேஷ் தம்பி.. இன்று போய் நாளை வா!! :)

//இவர்களை விடவும் நீண்டகாலமாகக் காணாமற்போனவர்களைப் பற்றி நானொரு பதிவு போட்டேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை. வெறும் ஒரு வாரத்துள் காணாமற் போனவர்களைப்பற்றிப் பதிவு போட்டுவிட்டீர்களே? ////
தப்பு பண்ணிட்டீங்க கொழுவி, நீண்டகாலமா காணாம போனவங்கள போடலாமா? இது பாஸ்ட் :புட் காலம்.. 1 வாரம் , 2 வாரம் தான் அப்புறம் மறந்தே போயிடுவாங்க.. என்ன சொல்றீங்க

//வீ.எம் அடிவாங்கும் பொழுது ரிலாக்ஸ்டா இருக்கலாம் பாக்குறாரு!! :-)))) //
ரம்யா அக்கா, மிக்க மிக்க நன்றி, என் சார்பா சுரேஷ்க்கு கருத்து சொன்னதுக்கு.. அஸ்கு புஸ்கு..நான் அனுப்புவேனா?? அடி வாங்குன அப்புறம் ரிலாக்ஸ்டா படிக்க எனக்கு வேனும்ல..

// சரியான படத்துடன் வந்து யாருக்கோ தக்க பதில் தருவாராம் என்று நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது. எனவே அவரைப்பற்றி கவலை தேவையில்ல///

proxy கொடுத்த குமரேஸ் நன்றி... நம்பத்தகுந்த வட்டாரத்தை நம்பலாமா???
அது சரி, அவரு யாருக்கு பதில் சொல்ல போறாராம்?? நம்பத்தகுந்த வட்டாரத்தை கேட்டு சொல்லுங்க..
கால் தூக்கி ஆடிய படத்தை பத்தி கு னு பேரு ஆரம்பிக்கிற ஒருத்தருதான் சந்தேகம் கேட்டாரு.. !!

Ramya Nageswaran said...

வீ.எம். உங்க கார்டூனை பார்க்க நான் ரொம்ப முயற்சி பண்ணேன்.. என்னமோ தெரியலை (அது என்ன மாயமோ தெரியலை.அபிராமி அபிராமி...சரி, சரி, அடங்கிட்டேன்) நான் பார்க்கும் பொழுதெல்லாம் படம் வரவே இல்லை. அதனாலே தான் பின்னூட்டமிட முடியலை.

வீ. எம் said...

சரி சரி ரம்யா அக்கா, வருத்தப்படாதீங்க ... !! ஒரு ரசிகையோட ஆதங்கம் புரியுது.. (சரி சரி வீ எம்..நிறுத்து)
உங்களுக்கு கார்ட்டூன் மெயில்ல அனுப்பறேன்.. ! பார்த்துட்டு கருத்து போடுங்க..

மாயவரத்தான்... said...

ullaen aiyyaa...give me 3 more weeks..! :)

Ramya Nageswaran said...

இதோ இந்த முகவரிக்கு அனுப்புங்க:
ramyanags@gmail.com

kishore said...

NICE ONE V M

வீ. எம் said...

Thanks akka, Mayavars and Kishore

Ok Mayavars, 3 Weeks Granted..

Ramya akka, will send it today

வீ. எம் said...

2 பேரு புதுப்பொலிவுடன் தங்களுக்கே உரிய கலக்கல் பதிவுகளுடன் மீண்டும் வந்துட்டாங்க.. ஒருத்தரு 3 வாரத்துல வரேனு சொல்லியிருக்காரு.. !
இன்னொருத்தரு வருவாருனு நம்பிக்கைல காத்துட்டு இருப்போம்.. :)

குழலி / Kuzhali said...

//லொல்ளு சபா"

Sunday Na ரெண்டு - தினமலர்

ஆமா, ஜனத்தொகை அதிகமாகி போச்சு.. ஒன்னு ஒன்னா கொடுத்து எப்போ அத்தனை பேரையும் கேனை பசங்களா மாத்தறது... அதான்.. கூடிய சீக்கிரம் Saturday na நாலு எடுத்துட்டு வர வாழ்த்துக்கள்..
//
உங்க லொல்லு சபா கலக்கல்ங்க...

நிம்மதியாக இருந்த பெனாத்தல் சுரேஷ் மற்றும் பலரின் நிம்மதியை கெடுத்துவிட்டீர்.

வீ. எம் said...

நிம்மதியாக இருந்த பெனாத்தல் சுரேஷ் மற்றும் பலரின் நிம்மதியை கெடுத்துவிட்டீர். \\\

idhu nyaayama thala??
nimmadhiya naan keduppena??

chinnavan said...

Me In !

Dharumi said...

முந்தின பதிவுக் கார்ட்டூன்ல இன்னும் கொஞ்சம் ஜல்லி அட்டிகிற ஆளுக இருகாங்கன்னு சொன்னீங்கள்ள; அதான் ஆளுக அப்பீட்டு...

vishytheking said...

avanga ellam illiya.. (naan kanamapoi moonu vaaram aachchu..)

anyway, enakkum antha manase relax please anuppunggaLen.. (svishy at gmail.com)

anbudan vichchu

paagam onRukku oru link irunthathu.. i will try to get that

PositiveRAMA said...

வீ.எம்! ரொம்ப அவசியமான பதிவு. என் பேர் இங்கே வர்றதுக்குள்ளே என் பதிவை இட்டுடுதேன்.

நாளை "ஆழ்மனம்" பற்றிய எனது பதிவு வெளியாகும்.

வீ. எம் said...

நன்றி , ராமா, விச்சு, தருமி, சின்னவன்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O)

kalakkittiingga!!

குமரேஸ் said...

"காணவில்லை !
காணவில்லை !!
காணவில்லை !!!"