2011 இதுவும் நடக்குமோ?? நடந்தாலும் நடக்கலாம்


கூட்டணிக்குள்ளே முட்டல் மோதல் , எதிரிக்கு எதிரி நன்பன், குழிபறிப்பு, கூட்டனி பேரம் என பரபரப்பான இன்றைய அரசியல் சூழ்நிலையில், மேலும் அரசியலில் எதுவும் நடக்கும் என்ற நிலையிலும் ஒரு வேளை இப்படி நடக்குமோ என்ற் தோண்றியதால் வந்த பதிவு இது..

வருடம் : 2011 பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஞாயிறு
மாலை 7 மனி.
இடம்: சென்னை தீவுத்திடல்.

ஆங்காங்கே கட்சிக் கொடிகள், டிஜிட்டல் பேனர், வானுயர கட் அவுட், விறு விறுப்பான வேர்கடலை, கட்சிக்கொடி, தலைவர்கள் படம் பொறித்த பேட்ஜ், கீ செயின் , டீ காபி, சிகரெட் வியாபாரம், வண்ண விளக்குகள், அலறும் மைக் செட்.. எங்கெங்கும் மக்கள் தலை..

உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேனுமா , இது வேறென்றும் இல்லை, 2011 தமிழகசட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டமென்று?
இதோ வட்டம் , சதுரம், முக்கோனம், வட்டதுக்கு உள் வட்டம், துண்டு துக்கடா முதல் மைக் செட்காரர் வரை பேசி முடிக்க.. கட்சியின் முன்னனியினர் முறை ஆரம்பம்..

மாவட்டம் ஒன்று ஒலிப்பெருக்கியில் வந்து.. இப்போது நமது கழகத்தின் துனைப்பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் ஓ பி அவர்கள் உங்களிடையே உரையாற்றுவார்....அவருக்கு 1442 வட்டத்தின் சார்ப்பில் இந்த பொன்னாடை.... .

என் காவல் தெய்வம் , இதயத்தலைவி அம்மாவின் பொற்பாதம் தொட்டு என அரம்பித்து சுமார் 15 நிமடம் ஓ பி ஸ் ஓட்டு கேட்டுவிட்டு போக..
இப்படியே கூட்டணி கட்சிகளின் இரண்டாம் கட்டத்தலைகள் 15 , 15 நிமிடம் முடித்து ..

நீங்கள் எல்லாம் ஆவலோடு காத்திருக்கும் நம் அன்புத்தாய், தங்கத்தாரகை , தமிழர்களின் தாய், புரட்சித்தலைவி அம்மா பேசுவார் என மைக் அலறி, பொருத்த கோஷம், விசல், கைத்தடலுக்கு பிறகு ஜெ மைக் முன்னே வந்து

கனீர் குரலில் ஆரம்பிக்கிறார்.

என்னை வாழ வைக்கும் அன்புத்தெய்வங்களாகிய புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் அன்புச்ச்கோதரி, உங்கள் அன்புத்தாயின் வணக்கங்கள்...

யாரிந்த விஜயகாந்த் எங்கிருந்து வந்தார், அவர் என்ன என்னைப்போல மக்கள் பிரச்சினையில் பங்கெடுத்து சிறைச்சென்று சொல்லொன்னா துயரங்கள் அடைந்து பின்பு கட்சி ஆரம்பித்தாரா? இல்லையே, அவர் ஒரு நடிகர், சினிமாவில் வாய்ப்பு போய்விட்டது , சேர்த்த சொத்தை காப்பாற்ற கட்சி ஆரம்பித்து இன்று தமிழக்த்தில் ஆட்சி பிடிப்பேன் , நல்லாட்சி தருவேன் என்று சொன்னால் நீங்கள் எல்லாம் நம்புவீர்களா?

விடுதலைபுலிகளுடன் தொடர்பில் இருந்தவர் தானே இந்த வை கோபாலசாமி? எப்படி அவர் அரசியலுக்கு வந்தார் என்று நான் இங்கே சொன்னால் அவர் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்??

கடந்த வருடம் கார்டன் வந்த போது என்னிடம் அவர் நடந்துக்கொண்ட முறை பற்றி நான் இங்கே சொன்னால், வை கோ நிலை என்ன ஆகும் தெரியுமா?

உங்கள் தாயிடம் தவறாக நடப்பவர்களை நான் தடுத்தாலும் நீங்கள் சும்மா விடுவீர்களா??

விட மாட்டோம் விட மாட்டோம் என்று கூட்டத்தில் குரல்..

ராமதாசு பற்றி பேசவே எனக்கு நா கூசுகிறது..

ஒன்றுக்கும் உதவாத இந்த காங்கிரஸ்.. பிச்சு போட்ட ஜிலேபி மாதிரி கோஷ்டி கட்சி அதுக்கு ஒரு தலைவர்..

காவி கட்சி பா ஜ க விற்கு தமிழகத்தில் முகவரி தந்தது யார்? உங்கள் அன்புத்தாய் தானே?? நான் இல்லையென்றால், யாருக்கு வாஜ்பாய் அத்வானி இல கனேசனை தெரிந்திருக்கும்?

இவர்கலெல்லாம் என்னைப்பார்த்து கேட்கிறார்கள் ஏன் கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்தாய் என்று.. (லேசாக இடது பக்கம் தலை திருப்பி மேடையில் அமர்ந்திருக்கு கலைஞரை பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரிக்கிறார் , கலைஞரும் அவரின் டிரேட் மார்க் புன்சிரிப்பை விடுகிறார்).

இவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிகொள்கிறேன், என் அருமை அண்ணன் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரோடு நான் சேர்ந்திருப்பது ஏற்ப்படுத்தப்பட்ட கூட்டணியல்ல, இது அமைந்த கூட்டணி, சரியான கூட்டணி.

ஆயிரம் ஆயிரம் கருத்து மோதல் இருந்தாலும் என் அண்ணன் கலைஞரை நான் என்றாவது தவறாக பேசியிருப்பேனா? இல்லை அவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கியிருப்பாரா?
சில காலம் வேறு வேறு கூட்டணியில் இருந்தோம் , அது காலத்தின் கட்டாயம். அதனாலேயே எங்களின் பாசமிக்க கடந்தகாலம் மறைந்துவிடுமா என்ன?

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தே மு தி க தலைவருக்கு இதெல்லாம் எப்படி தெரியும்..

என் அன்பு அண்ணன் தலைவர் கலைஞரின் அன்பு புதல்வர் தன் சிறு வயதிலே என்னை பாசத்தோடு அத்தை அத்தை என்று அழைத்ததை இன்றும் நினைத்தாலும் என் கண்கள் கலங்கும்.

விஜயகாந்திற்கு தெரியாது , ஆனால் வை கோவை கேட்கிறேன்., உங்களுக்க் என்ன ஆயிற்று?

வாழும் வள்ளுவர் தலைவர் கலைஞரின் இல்லத்துக்கு 1980களில் நான் வரும்போதெல்லாம் எனதருமை அண்ணி தயாளு அம்மா அவர்கள் என்னை பாசத்தோடு அரவனைத்து காபி கொடுத்த காட்சியெல்லாம் நேரில் பார்த்தவர் தானே நீங்கள். இன்று ம தி மு க என கட்சி ஆரம்பித்தும் உங்களுக்கி செலக்டீவ் அம்னிசீயா வந்துவிட்டதா??

என் அண்ணன் கலைஞருக்கு ராமாதாஸ் கூட்டனிக்கும் குடைச்சல் தந்த போதெல்லாம் நான் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை என் உடன் பிறவா தோழிக்கு தெரியும். போக்குவரத்து நெரிசல் காரணமாக போயஸ் தோட்டத்தில் இருந்து கோபாலபுரம் சென்று அண்ணனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் , தொலைப்பேசியில் நான் அழுத அழுகை கேட்டு தானும் அழுத என் அருமை அழகிரிக்கு தெரியும்.

தலைவரின் இல்லத்திற்கு சொல்லும்போதெல்லாம் நான் வாங்கி செல்லும் பிஸ்கெட் பொட்டலுத்துக்கு தளபதியும், மதுரை அஞ்சாநெஞ்சனும், என் அருமை கனிமொழியும் சண்டை போடும் காட்சி என் கண்களில் இன்றும் இருப்பதை யாரிவார்.

இத்துனை பாசப்பினைப்போடு வாழ்ந்த, வாழ்ந்து வரும் நாங்கள் அமைத்த கூட்டு பற்றி தவறாக பேசிட எப்படி உங்களுக்கு மனம் வருகிறது .. நீங்கள் எல்லாம் அரக்கர்களா??

இந்த அரக்க கூட்டத்தை அழிக்க, இதோ என் ஆருயிர் அண்ணன், பாச பினைப்பு, சங்கத்தமிழ் தந்த தலைவர் கலைஞரின் துனையோடு இதோ புறப்பட்டுவிட்டாள் உங்கள் அன்பு அன்னை.. என் ரத்தத்தின் ரத்தங்களே, அண்ணனின் உடன்பிறப்புக்களே.. உங்கள் துனையோடு....


தொடரும்....

தவறாமல் ஜெ உரை தொடர்ச்சியும், கலைஞர் உரையையும் இரண்டாம் பாகத்தில் படிக்க வரவும்

- வீ எம்

விஜய் டிவி கடுப்பு நம்பர் 1 சீசன் 3.

இவங்க அலம்பல் தாங்கலயே சாமி.. என்ன கொடுமைடா இது.

விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 மட்டுமே ரசிக்கும்படியாக இருந்தது, அதன் பின் நடத்தப்பட்ட ஜோ. நெ. 1 சீசன் 2 வில் பிருத்திவி, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இடையே நடந்த கூத்து மிக பிரபலம்.

அனைத்து தரப்பிலும், பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு அதுவே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரமாக அமைந்து TRP ரேட்டிங்கில் ஏற்றம் காண்பித்தது.

இயல்பாக நடந்தது என்றும், இல்லை திட்டமிட்ட நாடகம் என்றும், பிருத்திவியை ஓரம்கட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், சிம்பு , மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து கொடுத்த நெருக்கடி அது என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எப்படியோ, அனைத்து களேபரங்களுடன் நிகழ்ச்சி முடிந்து அடுத்த சீசன் 3 ஆரம்பானது சற்று ஆறுதல்.

சிம்பு மட்டுமன்றி மற்றொரு ஜட்ஜ் சங்கீதா, தொகுப்பாளினி டி.டி செய்கின்ற அலம்பல் தனிக்கதை.

இதோ மீண்டும் அதே போல ஒரு நாடகத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது.. கடந்த இரண்டு எபிசோடுகளில் ஜீவா மற்றும் அவருடன் நடனம் ஆடும் ஜோடி இருவருக்கும் பிரச்சனை. ஜீவா ஒத்துழைக்கவில்லை என அவர் வழக்கம் போல கண்ணீர் விட. இந்த வாரம் நடுவர் எஸ் ஜே சூர்யா தலையிட்டு ஜோடிகளை மாற்ற, வழக்கம் போல் விஜய் டீவி, சோக கீதம் , அதிர்ச்சி கீதம் வாசித்து, நான்கு பேர் அழுவதை காண்பித்து, குழு குழுவாக விவாதிப்பதை காண்பித்து, இறுதியில் ஜீவா நிக்ழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டார்..

தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், தாங்கள் நடிக்கும் சீரியலில் செய்வது போலவே, இங்கும் மேடையில் ஓ வென ஒப்பாரி வைக்கும் இவர்கள் ஏன் போட்டிக்கு வர வேண்டும். அதிலும் 10 லட்சம் பரிசு என அறிவித்த பிறகு இது போன்ற ஒப்பாரி அதிகமாகிவிட்டது..

சீரியல் கில்லர்களே.. சாரி, சீரியல் நடிகர்களே, அங்கே மட்டும் நடியுங்கள் போதும்.

சென்ற முறை விளம்பரத்திற்கு கைகொடுத்த அதே யுக்தி இந்த முறையும் சற்று மாற்றம் செய்யப்படு கையாளப்படுகிறதோ என தோன்றுகிறது..
பங்கேற்ப்பாளர்கள் , நடுவர்கள் , நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் ஓவராக உணர்ச்சிவயப்படுவது என்பது விஜய் டீவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமீபகாலமாக தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது..

நடன நிகழ்ச்சியின் விளம்பரத்தில் , நடனத்தை பிரதானமாக காட்டாமல் இது போன்ற உணர்ச்சிவயபட்ட காட்சிகள், பரபரப்பு விவாதங்களையே பிரதானமாக 30 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டுவது, விஜய் டீவி இது போன்ற சலசலப்பை தூண்டிவிட்டு, அதில் வியாபார குளிர் காய்வதாகவே தெரிகிறது.

ஏற்கனவே விஜய் டீ வி தன் நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் தோல்வியில் அழுவதை க்ளோசப்பில் , சோக இசையுடன் காட்டுதல், தொகுப்பாளினிகளின் ஆடைக்குறைப்பு போன்றவற்றால் நிகழ்ச்சியை ஓட்டுகிறது. இதில் இப்போது இது ஒரு புது ட்ரெண்ட்..

பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை, பொழுதுப்போக்கு அம்சங்களுடன் நடத்தாமல் , இப்படி உணர்ச்சித்தூண்டுதல் முறையில் நடத்தும் டரெண்ட் நல்லதல்ல என்பதை எப்போது அந்த தொலைக்காட்சி புரிந்துக்கொள்ளப்போகிறதோ??

நீங்க என்ன நினைக்கறீங்க, கருத்து சொல்லிட்டு போங்க

வீ எம்

2008 ஆம் வருட புது விதமான சிகையலங்காரம்..

------
அடேங்கப்பா.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. பார்பர் ஷாப்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ??
------









முகமூ(மு)டியா .. மூ(மு)டிய முகமா.... ஆள விடுங்க சாமி.. எதுவும் யோசிக்காம படத்தை மட்டும் பாருங்க..

மன்மோகன் சிங், லாலு பிரசாத், கருணாநிதி பதவி விலகவேண்டும் - ஜெ அதிரடி


கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 3 காட்டு யானைகள் பலியானதை தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா விடுக்கவிருக்கும் பரபரப்பான அறிக்கை நமது எம் ஜி யாரில் பனி புரியும் நம் நன்பர் ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது.

நாளை இந்த அறிக்கை செய்தித்தாள்களில் பளிச்சிடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் செய்திகளை முந்தித்தரும் உங்களின் ஒரே நாளிதழான தினச்சூடு இன்றே இந்த செய்தியை தருவதில் மகிழ்சி அடைகிறது.

இனி ஜெ வின் அறிக்கை.


அன்பிற்கினிய தமிழ் மக்களே, உங்கள் அன்புத்தோழியின் இரக்க குணம் பற்றீ நீங்கள் அறிவீர்கள். இந்த இரக்ககுணம் காரணமாகவே இரண்டு முறை முதலமைச்சர் பதவியை கருணாநிதிக்கு விட்டுக்கொடுத்ததை நான் இங்கே சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் வாயில்லா ஜீவன்களாம் பசுக்களின் மரணம் என்னை வாட்டியெடுத்த போது, என் கண்கள் இரத்த வெள்ளம் போல் காட்சியளித்ததும், என் மனம் சொல்லொன்னா துயர் அடைந்ததையும் இந்த தமிழ் நாடே கண்டு மனம் குமைந்து , இந்த மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி ஆட்சி ஒழிந்திட சாபமிட்டது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பசுக்களின் மரண செய்தியால் நான் அடைந்த துயரத்தில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில், இதோ இன்று காலையில் என் செவியில் விழுந்த ஒரு செய்தி என் இதயத்தில் கோடாரி கொண்டு வெட்டியது போல் உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏதுமறியா 3 யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்து போகையில், ரயில் மோதி இறந்த செய்தி கேட்டு துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் பல் துலக்கவோ, காலை உணவு அருந்தவோ என் மனம் இடம் தராமல் படுத்த படுக்கையாக உடல் பலகீனப்பட்டு இருக்கும் இந்த நேரத்திலும், உங்களுக்காக குரல் கொடுத்திட என் அன்புக்கினிய அரசியல் ஆலோசகர் பொன்னையன் அவர்கள் தான் , நான் சொல்ல சொல்ல இந்த அறிக்கையை எழுதிகிறார் என்பதனை இங்கே தெரிவிப்பதன் மூலம், உங்கள் அன்புத் தாய், அருமை சகோதரி எம் ஜி ஆர் ஆல் வளர்க்கப்பட்டவருக்கு எந்தளவு மரியாதையும் முக்கியத்துவமும் தருகிறார் என நீங்கள் புரிந்துக்கொள்வீர் என நம்புகிறேன்.

அன்டேனியோ மெய்னோ வின் மேற்பார்வையில் நடைபெறும் மத்திய ஆட்சி மற்றும் கருணாநிதி தலைமையில் நடைப்பெறும் மைனாரிட்டி ஆட்சியில் வாயில்லா ஜீவன்கள் அடையும் வேதனைகளும் , சோதனைகளும் சொல்லில்லடங்கா.

சில நேரங்களில் கொடுங்கோல் ஆட்சி புரியும் கருணாநிதியின் ஆட்சியில் தங்களுக்கு நிம்மதியில்லை என்று உணர்ந்தே இந்த வாயில்லா ஜீவன்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கிறதோ என்று எண்ணத்தோண்றுகிறது.

யானைகள் வருவது கூட தெரியாமல் ரயிலை இயக்கிய அந்த ரயில் ஓட்டுனரை பார்த்தாலே , ரயில்வே துறையின் அலட்சிய போக்கு நமக்கு எளிதாக புலப்படும். இந்த அலட்சிய போக்கினை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காத ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத், இனையமைச்சர் வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலகிடவேண்டும்.

ஆண்டனியோ மெய்னோ சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பாக கேட்கிறேன்.

உங்கள் சகோதரியின் ஆட்சியில் யானைகள் எல்லாம் முதுமலையில் எப்படி பராமறிக்கப்பட்டது என்பதனை இங்கே நினைவுபடுத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

என் ஆட்சியில் ஒரு சுண்டெலியாவது ரயிலில் சிக்கி இறந்திருக்குமா அல்லது தங்களுக்கு பாதுக்காப்பு இல்லையென உயிரை மாய்த்துக்கொண்டிருக்குமா என கருணாநிதியை பார்த்து கேட்கிறேன்.

அனைத்து வாயில்லா ஜீவன்களுக்கும் நான் சொல்லிக்கொள்(ல்)வது, கவலைபடாதீர்கள், விரைவில் உங்கள் அன்பு சகோதரியின் ஆட்சி தமிழகத்தில் அமையும், உங்களின் துயர் துடைக்கப்படும். அது வரையில் சற்று பொறுமை காத்து, உங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறன்

கழக கண்மனிகளே, இரத்தத்தின் இரத்தங்களே, படையென புறப்படுவீர் கோவை நோக்கி. மெய்னொ, லாலு, வேலு, மன்மோகன் , கருணாநிதி போன்ற ஜீவராசிகளை வதைக்கும் கூட்டத்தை எதிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவீர், ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல் செய்வீர் , உங்கள் அன்னையின் ஆட்சி அமைய சபதமேற்பீர். நமக்கு ஆதரவளிக்க வரும் யானைகளையும், பசுக்களையும் நம்மோடு இனைத்து போராட்டத்தில் பங்கேற்க செய்வீர்.

நீங்கள் போராட்டம் செய்யும் பாதையில் வரும் கல்லூரி பேருந்தினை எதுவும் செய்திட வேண்டாம் என நான் சொன்னாலும், என் மீதுள்ள பாசத்தால் நீங்கள் அதை கேட்பீர்களா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன், எதுவும் செய்யாமல் இருக்க முயலுங்கள்.

கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,
கருணாநிதி ஆட்சி கலைக்கவேண்டும் ,

வாழ்க எம் ஜி ஆர் நாமம்.

அது என்னங்க இரயில்வே துறை தவறுக்கு கருணாநிதி ஆட்சி கலைக்கனும்னு , அதுவும் 3 தடவை கோர்ட் டவாலி மாதிரி என்று பொன்னையன் கேட்டதுக்கு, யோவ் , உனக்கு தேவையில்லாத கேள்வி, என் எல்லா அறிக்கையிலும் கருணாநிதி ஆட்சி கலையனும்னு ஒரு வரியாச்சும் இருக்கனும்... நீ சொல்றது மட்டும் எழுது இல்லை என்கிட்ட தகாத முறைல நட்ந்தேனு நாளைக்கு பேட்டி தருவேன்னு அம்மா எம் ஜி ஆர் விசுவாசி பொன்னையனுக்கு மரியாதை செய்ததாக கேள்வி.

திரு பாலா என்கிற profile only பதிவர்

வெறுமனே ஒரு profile மட்டும் வைத்துக்கொண்டு, பலரின் பதிவுகளில் வந்து தேவையற்ற பி(பு)ண்ணூட்டங்களை போட்டு எரிச்சல் ஏற்றுவதே கடமையாக செய்கிறார் திரு பாலா என்ற profile only பதிவர்.

அவர் வலைப்பக்கத்திற்கு சென்றால் அங்கே பதிவுகள் ஏதுமில்லை, வெறுமனே ஒரு சிவாஜிகணேசன் புகைப்படம் மட்டுமே உள்ளது.

ஒரு பதிவில் யாரும் அவர்கள் கருத்துக்களை போடலாம் , அது தவறில்லை. ஆனால் பாலா என்பவர் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குகிறார். எப்போதும் அடுத்தவரை எரிச்சலடைய வைக்கும் சொற்களையே உபயோகப்படுத்துகிறார். பல நேரங்களில் பதிவிற்கோ, அங்கே நடக்கும் விவாதத்திற்கு சற்றும் சம்பந்தில்லாமல் பதில் போடுகிறார்.

இவரின் ஒரே குறிக்கோள் அனைவரையும் தாக்குவது. தாக்குதல் ஒன்றே என்ற முடிவோடு இருக்கிறார். உண்மையிலே அவர் அரோக்கியமான வாதம் செய்ய நினைத்தால், தனது கருத்துக்களை அவர் பதிவாக போடலாம், ஆனால் மாட்டார். ஏனெனில், அவர் நோக்கம் ஆரோக்கிய விவாதம் இல்லை.

நண்பர்களே, இவர் இப்படி செய்வதற்கு, பல காரணங்கள். அது அனைவருக்கும் தெரியும். அது பற்றி இங்கே சொல்லவேண்டியது இல்லை. ஆனால் ஒன்று, இவர் போன்றவரின் கருத்துக்களை ஊக்குவிப்பது, ஒரு ஆரேக்கிய சூழலை நிச்சயம் கெடுத்துவிடும்.

என்வே நன்பர்களே, பாலா என்பவரின் கருத்துக்களை மட்டும் அதிக கவனமெடுத்து மட்டுறுத்தவும் அல்லது அவர் கருத்துக்களை வெளியிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடவும்.

இது பாலா என்பவரின் மேல் உள்ள காழ்ப்பு அல்ல. அவர் சூழலை கெடுக்கிறார் என்பதால் மட்டுமே, மட்டுமே. மட்டுமே.