சிறுகதை - இடையை கையில் பிடித்து..

கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்பை விட கூடாது.. முடிவு செய்தேன்.. மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 2.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.
என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?
சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பன்னியிருக்காங்க..
அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேனுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...
இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.
சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..
ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது.. இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..
சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டுவந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...
புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...
கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...


கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலாடையை எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..


இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு சற்று நேரம் உறங்கலாமென படுத்தேன்.


டாக்டர் சைனஸ் என்று சொல்லிவிட்ட காரணத்துக்காக 3 மாதம் என்னை குளிர் பானங்களை கண்களால் கூட பார்க்க கூடாது என்று கண்டிஷன் போட்டு , சுமார் 1.5 மாதம் கடைபிடிக்க வைத்த அம்மாவிற்கு இது தெரிந்தால் என்ன ஆகும் என்ற நினைப்போடு உறங்கிபோனேன்...................................

வீ எம்.

16 கருத்துக்கள்:

வீ. எம் said...

-- Test Comment -

குழலி / Kuzhali said...

சூப்பர் தல சூப்பர்

ஏஜண்ட் NJ said...

அருமையான கதை !

சஸ்பென்ஸ் நிறைந்த கதை!

படிப்பவர்களை ஜொள்ளு விடச் செய்த கதை!!

கிளுகிளுப்பூட்டும் வசனங்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ள கதை!!!

பரிசுக்குரிய எல்லா அம்சங்களும் ஒருங்கே சேர்ந்த கதை!

வாழ்த்துக்கள் VM.

Anonymous said...

Interesting V M ... Nice that you are back to BLOGS!

Kishore

ஏஜண்ட் NJ said...

//ananymous,
ungalukku therindhaalum thappu illai..adhula konjam spelling mistake aagi pochu...
appuram ..njanapeedam blog poitu ingey vandha confusionla.. mugamoodi thalainu podaradhukku padhila njans nu potuten..adhan delete pannitu , thiruambavum correct version poten..//


//உஙலுக்கு தெரின்தாலும் தப்பு இல்லை..அதுல கொஞம் ச்பெல்லிங் மிச்டகெ ஆகி பொசு...
அப்புரம் ..ஞனபீடம் ப்லொக் பொஇடு இஙெய் வன்த cஒன்fஉசிஒன்ல.. முகமோடி தலைனு பொடரதுக்கு பதில ஞான்ஸ் நு பொடுடென்..அதன் டெலெடெ பன்னிடு , திருஅம்பவும் cஒர்ரெcட் வெர்சிஒன் பொடென்..//


அய்யா VM, என்ன மேட்டருன்னு கொஞ்சம் நம்மளுக்கு சொல்லுமய்யா.

njanapidam AT yahoo DOT com
njanapidam AT gmail DOT com

லதா said...

அன்புள்ள வீ.எம்.,

இந்த ஒரு பக்கக் கதையை குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பவும். அவர்கள் கட்டாயம் பிரசுரிப்பார்கள்.

கலை said...

குட்டிக்கதை நல்லாவே இருக்கு. நான் சொல்ல நினைத்தேன், இந்தக் கதையை ஒருபக்க கதையாக ஆனந்தவிகடன் அல்லது குமுதத்துக்கு அனுப்புங்கன்னு சொல்ல. அதற்குள் லதா சொல்லிட்டாங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

VM,
kathai nallArukku :-) ithu thAn ungkaL muthal siRukathaiyA ?

Glad to note that you have come back to blog after a break !!!!

enRenRum anbudan
BALA

வீ. எம் said...

குழலி, ஞானபீடம், லதா, கலை, கிஷோர், பாலா அனைவருக்கும் நன்றி,
+ போட்ட 3 பேருக்கும், - போட்ட 3 பேருக்கும் மிக்க நன்றி :)

//பரிசுக்குரிய எல்லா அம்சங்களும் ஒருங்கே சேர்ந்த கதை!//
மூகமூடி எங்கே இருக்கீங்க... சீக்கிரம் வந்து பாருங்க!

//சூப்பர் தல சூப்பர் //
நன்றி தல நன்றி!

அய்யா VM, என்ன மேட்டருன்னு கொஞ்சம் நம்மளுக்கு சொல்லுமய்யா.
ஒரு மேட்டரும் இல்லை ஞான்ஸ், உங்க ப்லொக் படிச்சுட்டு, முகமூடி ப்லொக் வந்தேன்..அங்கே கருத்து போடும்போது தெரியாம முகமூடினு போடறதுக்கு பதில் ஞான்ஸ்னு போட்டுட்டேன். அப்புறம் delete பன்னிட்டு முகமூடினு போட்டேன்.. யாரோ ஒரு அனானிமஸ் delete பன்னியதை சுட்டி காமிச்சார்..அதுக்கு பதில் சொன்னேன்..

பக்கக் கதையை குமுதம் அலுவலகத்திற்கு
லதா சொல்றீங்க, அனுப்பி பார்க்கலாம்.. :)
இந்தக் கதையை ஒருபக்க கதையாக ஆனந்தவிகடன் அல்லது குமுதத்துக்கு அனுப்புங்கன்னு சொல்ல. அதற்குள் லதா சொல்லிட்டாங்க
பரவாயில்லை கலை, லதா குமுதம் சொல்லியிருக்காங்க..நீங்க ஆனந்த விகடன் சொல்லியிருக்கீங்க..

kathai nallArukku :-) ithu thAn ungkaL muthal siRukathaiyA ?
இல்லையே.. ஏற்கனவே என் பதிவுல "காகித பூக்களும்..கலர் டீவியும்" அப்புறம் "இதுக்கு தான் லாயக்கு" னு 2 கதை போட்டிருக்கேன்...படிக்கலயா நீங்க??

முகமூடி said...

// மூகமூடி எங்கே இருக்கீங்க... சீக்கிரம் வந்து பாருங்க! //
கதைய முத நாளே படிச்சிட்டேன் வீ.எம்... ஆனா போட்டி முடிஞ்சப்புறம் கருத்து சொல்லலாம்னு ஒரு திடீர் ஞானோதயம் வந்திருச்சி... அதான்... வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

கதை சூப்பரா இருக்கு. லதா சொன்னதுமாதிரி இது
குமுதத்துக்கு(தான்) ஏற்றது.

அனுப்பிருங்க. பிரசுரம் ஆனாவர்ற காசுக்கு ஒரு 'பெப்சி பாட்டில்' நிஜத்துக்கும் வாங்கி 'ஷோ கேஸ்'லே வச்சுக்கலாம்:-))))

என்றும் அன்புடன்,
அக்கா( துளசி)

வீ. எம் said...

நன்றி துளசியக்கா,

அப்போ இது நம்ம முகமூடி கதைபோட்டிக்கு ஏற்றது இல்லைனு சொல்றீங்களா?? :(
வீ எம்

வீ. எம் said...

nanri thalava (mugamoodi) ...! ellam unga aasirvadham :)

NambikkaiRAMA said...

இங்கே எல்லாரும் கமெண்ட் பண்ணுன மாதிரி..குமுதம் பத்திரிக்கையில் இருந்து உங்கள தேடி வரப்போறாங்கோ ஜாக்கிரதை!

தகடூர் கோபி(Gopi) said...

ச்சை.. பெப்சி பாட்டிலா!

நல்ல கதையா இருக்கே...

என்னமோ போங்க....

வீ. எம் said...

ன்றி பா.ராமா அண்ட் கோபி,

ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன் ராமா..கவலை வேண்டாம்.
ச்சை.. பெப்சி பாட்டிலா!
ரொம்ப சலிச்சுக்காதீங்க கோபி.. :)