நடிகர்கள், நல்லவர்கள். !!
வலைப்பூ நன்பர்களே வணக்கம்!பூனாவில் இருந்து என் முதல் பதிவு !
இது ஒரு வார இதழில் 2 மாதங்களுக்கு முன் வந்த பேட்டியை அடிப்படையாக கொண்ட பதிவு.. கொஞ்சம் லேட்டான பதிவு தான் இருந்தாலும் படித்தவுடன் இதை எழுதவேண்டும் என்ற என்னம் தோன்றியதால் எழுதுகிறேன். சமீபத்தில் பழைய இதழ்களை மேய்ந்த போது கண்ணில் பட்டது...
நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு சென்னையில் ஒரு சிலை தயாரகிறது.. சென்னை என்றவுடன், சிவாஜியை தங்களின் ஆசான், தெய்வம், அப்பா என்றெல்லாம் சொல்லித்திரியும் நடிகர்களின் முயற்சியால் இது நடக்கிறது இது என்று நீங்கள் தவறாக எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல ! அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஒரு மகா கலைஞனுக்கு அம்மா அரசு செய்கின்ற மரியாதையா என்றால் , அதுவும் இல்லை..
சிலை தயாரிக்கப்படுவது, பாண்டிச்சேரியில் நிறுவப்படுவதற்காக. பாண்டிச்சேரி அரசின் வேண்டுகோள் படி சிற்பி திரு மணி நாகப்பா தன் பட்டறையில் சிற்பத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறார்.அவ்வப்போது பாண்டிச்சேரி முதல்வர் திரு ரங்கசாமி சென்னை வந்து பார்த்துவிட்டு போகிறார்.
இந்த பதிவு, யார் செய்கிறார்கள் , தமிழக அரசோ, தமிழ் நடிகர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்காக அல்ல..பின்?? சொல்கிறேன்..
மணி நாகப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ..அதில் அவர் சொன்ன விஷயம் சற்று நெருடலானது.. இது தான் அவர் சொன்னது
"..... சிலை இறுதி வடிவம் அடையும் கட்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரிய!! நடிகர்கள் அத்தனை பேரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வந்து பார்த்து உங்கள் அபிப்பிரயத்தை சொல்லுங்கள் , அதன்படி செய்யலாம் என்று சொன்னேன். சிவாஜியை தெய்வம் என்றும், எங்கள் உயிர் என்று சொல்லும் ரஜினி , விஜய்காந்த் உட்பட சிவாஜி என் அப்பா அவர் மடியில் தான் வளர்ந்தேன் என பேட்டி கொடுக்கும் கமல் உட்பட அனைத்து முன்னனி நடிகர்களையும் அழைத்தேன்... ஆனால் ஒருத்தர் கூட இன்று வரை எட்டிப்பார்க்கவில்லை. என்ன நடிகர்களோ இவர்கள் ..."
இது தான் அவர் சொன்ன செய்தி. பொங்கலோ , தீபாவளியோ - தொலைக்காட்சியில் தங்கள் முகத்தை காட்ட அலைந்துக்கொண்டு ஓடிவந்து ஆற அமர பேட்டி என்ற பெயரில் பினாத்திவிட்டு செல்லும் நடிகர்களுக்கு, "மரியாதை நிமித்த" சந்திப்பு என்று பெயர் கொடுத்து தங்களின் சுய லாபத்துக்காக அரசியல் தலைவரை சந்தித்து விட்டு வரும் நடிகர்களுக்கு, பல நூறு மைல் தாண்டி பக்தி மார்கமாக சென்றாலும் மறக்காம பத்திரிக்கைக்கு பேட்டி தரும் நடிகர்களுக்கு, ஒரு நடிகையின் பிறந்த நாளுக்கு கவிதை எழுதி அனுப்பி தான் எதிலும் புதுமை செய்வேன் என்று காட்டிக்கொள்ள நேரம் இருக்கும் நடிகர்களுக்கு.. வார பத்திரிக்கைளின் பக்கம் பக்கமாக சுயசரிதை எழுத நேரமிருக்கும் நடிகர்களுக்கு, இதோ இங்கே சென்னையில் இருக்கும் ஒரு பட்டறைக்கு வந்து அந்த மகா கலைஞனுக்காக 15 நிமிடம் செலவழிக்க ஏனோ முடியவில்லை. பாவம் அவர்கள் !
ஒருவேளை , அவற்றில் எல்லாம் பணமோ , பப்ளிசிட்டியோ , அல்லது இரண்டும் சேர்ந்தோ கிடைக்கும் ஆனால் இந்த பட்டறைக்கு வந்து போவதால் தங்களுக்கு பெட்ரோல் செலவு மட்டுமே மிஞ்சும் என்பதால் தவிர்த்துவிடுகிறார்களோ இந்த "ஏழை" நடிகர்கள்????
இவர்கள் எல்லாம் அவரின் இறுதி ஊர்வலத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்ததை பார்த்தால், திரையில் நடித்து நடித்து , நிஜ வாழ்க்கையிலும் அதுவே பழகிப்போய்விட்டதாகவே தோன்றுகிறது.
மறக்காமல் முதல் வேளையாக 3 அல்லது 4 மனி நேரம் ஒதுக்கி, திரையரங்கு சென்று 300, 400 செலவழித்து குறைந்தது 3 முறையாவது, இந்த நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வரும்போது பார்த்துவிடுவோம்..இல்லை மறைந்த சிவாஜியின் ஆத்மா நம்மை மன்னிக்காது!
நல்ல நல்ல நடிகர்கள்! நல்லா இருக்கட்டும் பாவம்... !! ஒரு நாள் அவர்களுக்கும் சிலை வடிக்க வேண்டி வரும்.. !
இவர்களில் ஒருவர் தான் நாளைய தமிழக முதல்வரா??? என்ன சொல்வது !!!!
வீ எம்
20 கருத்துக்கள்:
******** இல்லை மறைந்த சிவாஜியின் ஆத்மா நம்மை மன்னிக்காது! **********
Super Super Super !
-Logesh
வீ.எம்.. இதுபோன்ற நம்மை உசுப்பி விடும் பேட்டிகளில் உற்று கவனித்தால் ஒரு விஷயம் புரியும் // சிவாஜியை தெய்வம் என்றும், எங்கள் உயிர் என்று சொல்லும் ரஜினி , விஜய்காந்த் உட்பட சிவாஜி என் அப்பா அவர் மடியில் தான் வளர்ந்தேன் என பேட்டி கொடுக்கும் கமல் உட்பட // மணி நாகப்பா சிவாஜி குடும்பத்திலிருப்பவர்களை கேட்டால் பத்தாதா? அல்லது மார்க்கெட் போன ஆனால் சிவாஜியுடன் நடித்த அஞ்சலிதேவி, சரோஜா தேவி, நம்பியார் இவர்களை கேட்டால் பத்தாதா? எதற்காக ரஜினி, விஜயகாந்த், கமல் கருத்துக்களின் மேல் இவருக்கு அக்கறை.... எல்லாம் ஒரு பப்ளிசிட்டிதான்... மணிநாகப்பாவும் கலைஞர்தானே... கலைஞர்னாலே அரசியல் சகஜமப்பா....
ஆமா பூனாவிலயும் பதிவெழுதி சம்பளம் வாங்குற ப்ராஜெக்ட் மேனேஜர் உத்தியோகம்தானா :)
ஐயா முகமூடியாரே, இன்னா இப்படி சொல்லிட்டீங்க!!
சென்னையா இருந்தா என்ன , பூனாவா இருந்தா என்ன ..நம்ம கடமையை நாம தானே செய்யனும்? :)
சென்னையா இருந்தாலும், பூனாவா இருந்தாலும் அலுவலக நேரத்துல பதிவு எழுதறதில்லை முகமூடியாரே.
எழுதவும் விடமாட்டானுங்க .. எதாச்சும் கேட்டுகிட்ட யாராச்சும் வந்துட்டே இருப்பாங்க..தமிழ்ல டைப் பன்னுவதை வித்தியாசமா பார்ப்பாங்க.. ஆக நினைத்தாலும் முடியாது .
லேப்டாப் தான் உபயோக படுத்துகிறேன்.. வீட்டில் டைப் செய்து மறுநாள் வந்து 15 நிமிடம் செலவு செய்து பதிய விடுகிறேன்..
நேற்று கெஸ்ட் ஹவுஸ்ல் எனக்கு முன்பு தங்கியிருந்த யாரோ விட்டு போன புத்தகங்களை புரட்டிய போது தோன்றியது இந்த பதிவு.. லாப்டாப்பில் இரவே டைப் செய்து விட்டு காலையில் வந்து பதித்தேன் !
:)
வீ எம்
//மணி நாகப்பா சிவாஜி குடும்பத்திலிருப்பவர்களை கேட்டால் பத்தாதா? அல்லது மார்க்கெட் போன ஆனால் சிவாஜியுடன் நடித்த அஞ்சலிதேவி, சரோஜா தேவி, நம்பியார் இவர்களை கேட்டால் பத்தாதா? எதற்காக ரஜினி, விஜயகாந்த், கமல் கருத்துக்களின் மேல் இவருக்கு அக்கறை.... //
நியாயமாகத்தான் தெரிகிறது .. !
இருந்தாலும் அழைக்கப்பட்ட இந்த நடிகர்கள் வந்து போயிருக்கலாம் அல்லவா??
நாளைக்கு நீங்க சிவாஜிய பத்தி ஒரு பிளாக் எழுதியிருக்கேன் வந்து படியுங்க அப்படினு எல்லா நடிகரையும் கூப்புடுங்க.அப்புறம் வரலைனா சிவாஜிக்கு மரியாதை செய்யலைனு சொல்லுங்க. 1000 பேரு சிவாஜிக்கு சிலை வைப்பாங்கா எல்லாத்தையும் வந்து பார்க்கனுமா. முதலில் பிரபாவது வந்து பாத்தாரானு சொல்லுஙக.
ரஜினியயும் இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே. சிவாஜி குடும்பத்துக்கு கோடி கோடியா சம்பாதித்து கொடுத்துட்டாரு அது போதாதா.
//ரஜினியயும் இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே. சிவாஜி குடும்பத்துக்கு கோடி கோடியா சம்பாதித்து கொடுத்துட்டாரு அது போதாதா.//
என் ஓட்டு ராம்தாஸுக்கே !! அட நம்ம ராஜா ராமதாஸைச் சொன்னேன்
புனா போனாலும் போனீங்க புதுசா இல்லாட்டாலும் தகவலை தரமாய் ஆராய்ந்து சொல்லி இருக்கீங்க.. வீ.எம்..இந்த பட்டாளமெல்லாம் பச்சோந்திபட்டாலம்ங்க!
""பல நூறு மைல் தாண்டி பக்தி மார்கமாக சென்றாலும் மறக்காம பத்திரிக்கைக்கு பேட்டி தரும் நடிகர்களுக்கு""
முதலிடத்திற்கு வருவதற்கு, இலவச ஆட்டா மாவு கொடுப்பதற்கு இயலாத பட்சத்தில், இவர்களை நம்பிருக்கும் பத்திரிகைகள்தான் ஆதாயம் அடைகிறார்கள், இவற்றை பிரசுரிப்பதன்மூலம், மக்கள் கேட்டார்களா என்ன?
""ஒரு நடிகையின் பிறந்த நாளுக்கு கவிதை எழுதி அனுப்பி தான் எதிலும் புதுமை செய்வேன் என்று காட்டிக்கொள்ள நேரம் இருக்கும் நடிகர்களுக்கு""
ஆமா, அடுத்த படத்திற்காவது பதின்ம வயது ஜோடி இல்லாமல், 55 வயது ஜோடியுடன் நடித்து புதுமை செய்வாரா? அப்ப கவிதை எழுதுறார என்று பார்ப்போம்?
""இவர்கள் எல்லாம் அவரின் இறுதி ஊர்வலத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்ததை....""
எப்படி வந்தார்கள்? வாகனங்களில் இருந்துகொண்டு அல்லவா, உண்மையான ரசிகர்கள் தி நகரில் இருந்து கால்நடையாக நடந்தல்லவா வந்தார்கள்.
தமிழ் சினிமா நடிகர்களுக்கு சிவாஜி தெய்வம் Vs ஆசான். தெய்வம் அரூபமானவர். அப்போன்னா அவருக்கு எதுக்கு சிலை. கூட்டி கழிச்சி வகுத்து பெருக்கி பாருங்க கணக்கு சரியா வரும்.
சிவாகி கணேசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிலையோ அல்லது நினைவு மண்டபமோ பொதுப் பணத்தில்தான் கட்ட வேண்டுமா?
ஒப்புக்கு சரி என்றாலும், நகரின் மத்தியில் இருக்கும் அவர்களின் தியேட்டரை, நினைவு மண்டபமாக மாற்றினால் இன்னும் நினைக்கப் படுவார் அல்லவா?
சும்மா..போங்க சார்!
No comments.
- ஞானபீடம்
அட, ரஜினிக்கு ராமதாஸ் ஆதரவு.. இது நல்ல இருக்கே ! :)
தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ராஜா ராமதாஸ் அவர்களே !
[[[[ரஜினியயும் இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே]]]]
இதற்கு தான் நான் முதலிலேயே சொன்னேன், இந்த பதிவு புத்தகத்தில் வந்த பேட்டியின் அடிப்படையில் என்று. அந்த பேட்டியில் அவர் தெளிவாக மூன்று பெயர்களை சொல்லியிருந்தார் அந்த மூன்று பெயர்களில் ஒன்று ரஜினி. நானும் இங்கே அந்த 3 பெயரை மட்டும் குறிப்பிட்டேன் . அதுவும் அவர் பேட்டியில் சொல்லியிருந்தது போலவே..ஆக எனக்கு தூக்கம் வருவதும் வராததும் இந்த பதிவில் இல்லை.
//முதலில் பிரபாவது வந்து பாத்தாரானு சொல்லுங//
அந்த பேட்டியில் அந்த சிற்பி வந்து பார்த்ததாக சொன்னவர்கள் : ரங்கசாமி, சிவாஜி மனைவி, ராம்குமார்.
ஆக, பிரபுவும் வரவில்லை என்றே நினைக்கிறேன்!
//1000 பேரு சிவாஜிக்கு சிலை வைப்பாங்கா எல்லாத்தையும் வந்து பார்க்கனுமா.//
இப்படி விதன்டாவாதமாக ஒரு ரஜினியின் ரசிகர் பேசலாமா????????? அதான் சொன்னேனே , நாளை இவர்களுக்கும் சிலை வைக்க வேண்டிய காலம் வரும்....
குறிப்பிட்டு ரஜினியை தாக்க எழுதபடவில்லை இது.. பல நடிகர்கள் பற்றி அவர் பேட்டியில் சொல்லியிருந்தார்..அதை எழுதினேன்.. ஆணால் ரஜினி பற்றி தனிபட்ட பதிவாக எடுத்து ரஜினி ரசிகர்கள் எடுத்துக்கொண்டது ஏன் என்று புரியவில்லை !
மீண்டும் சொல்கிறேன்..இது ஒரு வார இதழில் வந்த பேட்டியை அடிப்படையான பதிவு..
பாவம் அவரை விட்டுவிடுங்கள் - பாகம் 1, 2 அல்லது, ரசிகர்மன்றம் ஒரு பார்வை போன்ற என் கருத்துக்களை எழுதிய பதிவு அல்ல !
குழலி வருனும்பா!! எங்கே இருக்கீங்க குழலி ???
வீ எம்
இதைத்தான் சொல்றது 'சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான்.....'னு!!!!!
ரசிகர்களைத் தட்டி எழுப்பியாச்சு:-))))
என்றும் அன்புடன்,
துளசி
Sensational and stimulating essay..but it is a fate of tamilian. Because only in tamilnadu tamilians are not recognised by tamilians, even in the state of statue. But both the press and acters joinly makes the lay men a fool by publishing their essays and himalayan interviews.
இந்த பதிவில் அனைத்து நடிகர் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி, கமல், விஜய்கான்ட் பெயர்கள். அப்படி இருக்க ரஜினியின் ரசிகர் மட்டும் ஏன் எங்கப்பன் குதிர்ல இல்லனு இப்படி குதிக்கரீங்க?
அப்படி தப்பா எதுவும் இல்லை. கூப்படாங்க வரல அதேதான சொல்லியிருக்கு? அப்புறமென்ன கூப்பாடு?
ஒ ரஜினி சிவாஜி குடும்பத்துக்கு சம்பத்திச்சு கொடுத்தார்.. இலவசமா செய்தாரா?? இந்த படம் பாபா மாதிரு ஆகி இருந்தால், அப்படி பார்த்த காக்க காக்க மூலம் சூர்யா தானு குடும்பத்துக்கு உதவி செய்தார்..
பதிவில் சொல்வது ஆத்மார்த்த விசயம், நீங்கள் சொல்வது பணம் .. வித்தியாசம் புரிகிறதா?
ஏன் இப்படி இருகீங்க?
இந்த பதிவைப்பற்றி சில கருத்துக்கள் உள்ளன வீ.எம். நிதானமாக மாலை பின்னூட்டமிடுகின்றேன், முன்பே பதிவை பார்த்துவிட்டான் நிதானமாக பின்னூட்டமிடலாம் என்றுதான் இடவில்லை, ஹி ஹி நடிகர்கள் பற்றிய ஒரு பதிவில் நான் இல்லாமலா... வந்துவிடுகின்றேன்... மிக்க நன்றி
உண்மையான ஆதங்கத்தில் வந்த ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வீ எம்
//மணி நாகப்பா சிவாஜி குடும்பத்திலிருப்பவர்களை கேட்டால் பத்தாதா? அல்லது மார்க்கெட் போன ஆனால் சிவாஜியுடன் நடித்த அஞ்சலிதேவி, சரோஜா தேவி, நம்பியார் இவர்களை கேட்டால் பத்தாதா? எதற்காக ரஜினி, விஜயகாந்த், கமல் கருத்துக்களின் மேல் இவருக்கு அக்கறை.... எல்லாம் ஒரு பப்ளிசிட்டிதான்... மணிநாகப்பாவும் கலைஞர்தானே... கலைஞர்னாலே அரசியல் சகஜமப்பா.... //
மிக அழகாக திரித்தல் முறித்தல் விவாதத்தை வேறு பக்கம் திருப்பல் என்பதற்கு உதாரணம் வேண்டுமா மேலே பாருங்கள், இதில் தேவையேயில்லாமல் கலைஞருக்கு ஒரு குத்து
நடிகர்கள் சிவாஜியைப்பற்றி பேசுவது கூட ஒரு விளம்பரத்திற்குதான் என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை, என்ன செய்வது கேமராவின் முன் நடித்து நடித்து எல்லா இடத்திலும் நடிக்க வேண்டியதாயிற்று.
//பல நூறு மைல் தாண்டி பக்தி மார்கமாக சென்றாலும் மறக்காம பத்திரிக்கைக்கு பேட்டி தரும் நடிகர்களுக்கு//
இது நெத்தியடி, ம்... இதெல்லாம் சினிமா வெளிச்சத்திலேயே சாதி,மத பேதமில்லா தலைவர்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு...
வீ.எம்.: யோவ் குழலி என்ன பிரச்சினை பண்றியா பதிவில
குழலி: சரி சரி அடங்கறேன்
//சிவாஜி குடும்பத்துக்கு கோடி கோடியா சம்பாதித்து கொடுத்துட்டாரு அது போதாதா. //
அப்படியே சொல்லுங்க தேவயானிதான் ஆர்.பி.சவுத்ரிக்கு சம்பாதித்து கொடுத்தார்,விக்ரம்தான் பாலச்சந்தருக்கு சம்பாதித்து கொடுத்தார்,சூர்யாதான் தானுவுக்கு... அடச்சே இதை முதலில்லேயே யாரோ சொல்லிவிட்டாங்கபா, படம் ஊத்திக்கிட்டு இருந்தா போட்ட பணத்தை திருப்பி தந்திருப்பாரு என்னங்க நான் சொல்றது சரிதானே?
//மறக்காமல் முதல் வேளையாக 3 அல்லது 4 மனி நேரம் ஒதுக்கி, திரையரங்கு சென்று 300, 400 செலவழித்து குறைந்தது 3 முறையாவது, இந்த நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வரும்போது பார்த்துவிடுவோம்..இல்லை மறைந்த சிவாஜியின் ஆத்மா நம்மை மன்னிக்காது!//
அது சரி இந்தியன் படத்தையே கள்ள நுழைவு சீட்டு வாங்கி பாத்தவங்கதானே நாங்கெல்லாம்,
//நல்ல நல்ல நடிகர்கள்! நல்லா இருக்கட்டும் பாவம்... !! ஒரு நாள் அவர்களுக்கும் சிலை வடிக்க வேண்டி வரும்.. ! //
அப்போது உங்களை மாதிரி ஒருவர் இது மாதிரி ஒரு பதிவு போடுவார், சரியா?
//இவர்களில் ஒருவர் தான் நாளைய தமிழக முதல்வரா??? என்ன சொல்வது !!!!//
அந்த வித்தையெல்லாம் இங்க நடக்காது, ஏற்கனவே பலூன்ல ஓட்டை போட்டாகிவிட்டது, இனி படத்தில் மட்டும்தான் முதல்வர் பதவியெல்லாம்
கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி !
முகமூடியாருக்கு பதில் சொல்லிட்டேன், ராஜா ராம்தாஸ்கு சொல்லிட்டேன் ..அதுலயே கோ.கனேஷ்க்கு பதில் இருக்கு..
பாஸிடிவ் ராமா : நன்றி, கருத்தை பற்றி கவலை இல்லை..எனக்கு தோனுவதை எழுதுவேன்..எப்பவும்.. முடிந்தவரை மென்மையா பதில் சொல்லுவேன்..
/// இந்த பட்டாளமெல்லாம் பச்சோந்திபட்டாலம்ங்க! //
பாவம் ராம் , எல்லாம் ஒரு குடும்பம், வலைப்பூ குடும்பம்., so இது மாதிரி சொல்ல வேண்டாம்..எல்லாம் நம்ம பசங்க தானே !!
குமரேஸ்: நன்றி,
//எப்படி வந்தார்கள்? வாகனங்களில் இருந்துகொண்டு அல்லவா, உண்மையான ரசிகர்கள் தி நகரில் இருந்து கால்நடையாக நடந்தல்லவா வந்தார்கள்//
நச்சுனு இருக்கு, பதிவு எழுதும் போது, எனக்கு இது தோனலயே !! :(
ஹல்வா.விஜய்,
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் எங்கயோ இடிக்குதே.. !
ஞான்ஸ் : no comments :)
துளசியக்கா: என்ன பன்றது , நாம நல்லா சத்தம் வருனும்னு தான் ஊதறோம், அது அப்படி ஆகிபோது !
பத்மபிரியா :
///"but it is a fate of tamilian. Because only in tamilnadu tamilians are not recognised by tamilians, even in the state of statue."//////////////
money has the power to change this fate .. if these actors were told that they would be given few lakhs to have a look at the statue.. they would have stood there in a Q.
kicha: நன்றி,
பதிவில் சொல்வது ஆத்மார்த்த விசயம், நீங்கள் சொல்வது பணம் .. வித்தியாசம் புரிகிறதா?
இதை நான் சொல்ல நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க .
கலை : என்ன பன்றது உங்களுக்கு புரியுது என் ஆதங்கம், சிலர் இப்படி திட்டி கருத்து போட்டுட்டாங்களே .என்ன பன்றது?
குழலி
//அப்போது உங்களை மாதிரி ஒருவர் இது மாதிரி ஒரு பதிவு போடுவார், சரியா?//
என்னை மாதிரியில்லை, இன்னைக்கு கோவப்பட்ட ரசிகர்கள் மாதிரி ஒருத்தர் , பதிவு போடுவார் இன்றைய இளம் நடிகர்கள் பற்றி.. "ஐயோ, எங்க தலைவர் பத்தி எப்படியெல்லாம் பேசினாங்க, இப்போ வந்து 10 நிமிசம் பாருங்கனு கூப்பிட்டா வர மாட்டேங்குறாங்க.. என்னடா இது.. " அப்படினு.. அப்போ குழலி மாதிரி ஒருத்தர் கருத்து போடுவார் "அதான் உங்க தலைவர் குடும்பத்துக்கு கோடி கோடியா சம்பாதித்து கொடுத்தார்ல , அப்புறம் என்ன?"
\\\\\ஹி ஹி நடிகர்கள் பற்றிய ஒரு பதிவில் நான் இல்லாமலா... \\\
இதே தான் நானும் யோசிச்சேன்... அதுவும் இப்படி ஒரு கருத்து வந்தப்புறம் குழலி என்ன அமைதியா இருக்காருனு.. !
வீ எம்
Post a Comment