பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2

பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 1 (http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post.html)

ரஜினி - அரசியல் அரிதாரம் - ஒரு பார்வை

(பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2 )

Image hosted by Photobucket.com


இந்த பதிவை ரஜினியின் ஒரு பாடலில் இருந்து ஆரம்பிப்பதே சரியாக இருக்கு என தோன்றுகிறது.
"எனக்கு கட்சியும் வேண்டாம் , ஒரு கொடியும் வேண்டாம் ஹே டகர டகர டகர டகர டோய்..' 1989 ல் வெளியான ராஜாதி ராஜா பட பாடல் இது. இந்த பாடலுக்கும் இன்றுள்ள நிலைமக்கும் தான் எவ்வளவு பெரிய வேறுபாடு...
ரசிகிர்கள் மனதில் "இவர் அரசியலுக்கு வரலாமே" .... என்கிற எண்ணம் எப்பொழுது "இவர் வரவேண்டும்" என்று மாறியது , பின்னர் அதுவே "வந்தே ஆகவேண்டும்" என எப்படி மாறியது ?
தெரிந்தோ , தெரியாமலோ தன் படங்களில் ரஜினி அவர்கள் புகுத்திய "பன்ச்" வசனங்களே இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1991 அம்மா ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ரஜினிக்கும் அம்மாவிற்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரம்பமானது. பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதியது. அதை தொடர்ந்து வந்த "மன்னன்", "அன்னாமலை" படத்தில இருந்த ரஜினியின் வசனங்கள் சற்று அரசியல் நெடி கலந்து இருந்தது. அப்போதே ரஜினி என்கிற நடிகருக்கு "அரசியல்வாதி" முலாம் பூசும் முதற்கட்ட பனிகள் ஆரம்பமானது.
ஆனால், 1992ல் சினிமா துறை முதல்வருக்கு நடத்திய பாராட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினியின் பேச்சு இந்த சலசலப்பை அடக்கும் விதமாக இருந்தது. அந்த விழாவில் அவர் பேசியது இது தான்
"..........நேற்று பஸ் கண்டக்டர் , இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ, அதே நேரத்தில்..ஆண்டவா, எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுவிடாதேனு வேண்டிக்குறேன், ஏன்னா, அரசியலுக்கு வந்துட்டா நிம்மதி போயிடும்..." அதே பேச்சில், முற்றிலும் பொய்யான , ஆதாரமற்ற செய்திகளை எழுத வேண்டாமென பத்திரிக்கைகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பேச்சு சற்று சலசலப்பை அடக்கினாலும், விரைவிலேயே , 3 வருட இடைவெளியில் காட்சிகள் மாறியது...
"பாட்ஷா" பட வெற்றி விழாவில் அவர் பேசிய பேச்சு பல்வேறு வடிவம் பெற்று, "இன்னொரு முறை இவர் வந்தால் ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது" என்பது வரை வந்து... ஒரு கூட்டனி க்கு ஆதரவு தந்து, அந்த கூட்டனியும் பெரும் வெற்றி பெற்றது..... பின்னர், ரசிகர்கள் இந்த வெற்றிக்கு தலைவரின் ஆதரவே காரணம் எனவும், ரசிகரல்லாதோர், இல்லை , இல்லை இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் , மக்களுக்கு அம்மா ஆட்சி மீது இருந்த வெறுப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம், ரஜினி வாய்ஸ் என்பதெல்லாம் சும்மா எனவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.முதலில் வந்தது முட்டையா , கோழியா என்பது போல் தான் இந்த வாதம் தொடர்கிறது..நாம் அதற்குள் செல்ல வேண்டாம்.. நான் சொல்ல வருவது, தெரிந்தோ , தெரியாமலோ அந்த ஆதரவின் மூலமே தன் ரசிகர்களுக்கு "அரசியல்" ருசி ஏற்படுத்திவிட்டார் ரஜினி.
நம் அரசியல்வாதிகள் மிக புத்திசாலிகள், கொடுக்க வேண்டியதை கொடுத்து நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அரசியல் போதை ஏறிப்போனது.இந்த காலகட்டத்தில் தான் ரசிகிர்கள் மனதில் "இவர்அரசியலுக்கு வரலாமே" .... என்று இருந்த எண்ணம் "இவர் வரவேண்டும்" என்று மாறியது. ரஜினி என்ன செய்திருக்கலாம்? ரஜினி அவர்கள் இந்த காலகட்டத்தில், நேரடியாக இறங்கி இருக்க வேண்டும்.. அப்படி நடந்திருந்தால், 3 நிகழ்வுகளுக்கு வாய்ப்பிருந்தது
யாருக்கு தெரியும், ரஜினி மிக பெரிய வெற்றி பெற்று கோட்டையில் அமர்ந்திருக்கலாம்.. இல்லை மொத்தமாக "கோட்டை"யும் விட்டிருக்கலாம்.. அல்லது கணிசமான தொகுதிகள் வென்று கோட்டையில் கொடி ஏற்றுபர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கலாம். இந்த மூன்றில் எது நடந்திருந்தாலும், இந்த பதிவிற்கோ , அவர் வருவாரா , மாட்டாரா என்ற 10 வருட பட்டிமன்றத்துக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
ஆனால் அதை செய்யாமல், தன் ரசிகர்களை களம் இறக்கிவிட்டு அவர் ஒரு அறிக்கை மற்றும் ஒரு தொலைக்காட்சி தரிசனம் என்ற அளவில் நிறுத்தி கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மனக்"கோட்டை" கட்டிக்கொண்டிருப்பது தான் மிஞ்சியது. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே ஆங்காங்கே ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனகசப்பு ஏற்பட்டது .. வெற்றி பெற்றவுடன் எங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்..(அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா, கடைசி வரையில் உங்களை மதித்து நடப்பதற்கு?? அவங்க பொழைக்க தெரிஞ்சவங்கப்பா )
அப்போதாவது ரஜினி சுதாரித்திருக்க வேண்டும்.. ! மேலே சொன்ன ராஜாதி ராஜா பாடலை செயல் படுத்தி இருக்கவேண்டும் மாறாக யாருக்கும் புரியாமலேயே பேசிக்கொண்டிருந்தார்..
இதற்கு அடுத்து வந்த படங்களில் அருனாசலத்தை தவிர, மற்ற 3 படங்களிலும் (முத்து, படையப்பா , பாபா) அரசியல் நெடி சற்று அதிகமாகவே அடிக்க தொடங்கியது. குறிப்பாக முத்துவை பற்றி சொல்ல வேண்டும்.
முத்து படத்தில் தினிக்கப்பட்ட "வசனங்கள்" ஏராளம்.. மீனா வுடன் நடக்கும் மோதல் காட்சிகளில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களின் கற்பனை சக்திக்கு நன்றாக தீனி போட்டது.. அவரின் அனல் பறக்கும் வசனங்களுக்கு அவரவர் வசதிகேற்ப பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டது.. ரசிகர்களுக்குள் பட்டிமன்றமே நடந்தது. போதாகுறைக்கு, எரிகின்ற தீயில் எண்னெய் ஊற்றும், தங்கள் கடமையை பத்திரிக்கைகள் சரியாகவே செய்தது. ரசிகர்கள் சற்று மறந்தாலும் கூட, பத்திரிக்கைகள் விழிப்புடன் இருந்து சமூக கடமையாற்றியது.
முத்து படத்தில நிச்சயமாக ரஜினி இதை தவிர்த்திருக்கலாம்.. என்ன காரணத்தினாலோ அப்படி செய்யவில்லை.. இல்லை இது இயக்குனர் எடுத்த முடிவு ..ரஜினி என்ன செய்வார் என்று சொல்வீர்களேயானால் ..சிரிப்பதை தவிற வேறெதுவும் செய்ய முடியாது !
திரையில் தான் கால் தூக்கினாலும் , கை தூக்கினாலும், ரசிகர்களும் சரி , பத்திரிக்கையும் சரி அதற்கொரு அர்த்தம் செய்துக்கொள்கிறார்கள் என்று தெரிந்தும் ரஜினி , 1992 விழாவில் பத்திரிக்கைகளை குற்றம் சாட்டியவர், இது போன்ற வசனங்களை பேசியது நிச்சயமாக ஏற்புடையதல்ல!
தொடர்ச்சியாக அவர் நடித்து வெளிவந்த படையப்பா படம், சொல்லவே வேண்டாம்.. தனக்கு எதிரியாக ஒரு ஆனவம் கொண்ட பென் கதாபாத்திரம், அதே அனல் பறக்கும் வசனங்கள்... கேட்க வேண்டுமா?
பாபா - ஆன்மீக படம் என்று அறிந்த போது, அட! ரஜினி அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு , தனக்கு ஆன்மீகத்தில் தான் நாட்டம் என்று புரிய வைக்க போகிறார். 7 , 8 வருட விளையாட்டு முடிவுக்கு வர போகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் .. இல்லை , இல்லை இது மேலும் குழப்பத்தை தான் அதிகரித்துள்ளது என்ற அளவில் அந்த கதையின் இறுதி காட்சியை அமைத்து படத்தை முடித்தார்.
ஆன்மீகம் பற்றி எடுத்து சொல்ல எவ்வளவோ நல்ல திரைக்கதை இருக்கும் போது ( எடுத்துகாட்டு : ராகவேந்திரர்), இப்படி ஆன்மீகத்தை அரசியலோடு கலந்திருக்க வேண்டாம். விளைவு அவரின் ஆன்மிகமும் மக்களை சென்றடையவில்லை... அவரின் அரசியல் நிலையும் தெளிவுபடுத்தபடவில்லை.. மேலும் குழப்பித்தான் விட்டது.
தெரிந்து நடந்ததோ , தெரியாமல் நடந்தோ புரியவில்லை.. ஆனால் 1992 ல் ரசிகர்கள் மனதில் சிறு பொறியாக கிளம்பிய அரசியல் ஆசை இன்று வரையில் பல்வேறு வடிவங்களில் அனைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது..திரையில் அவர் பேசும் வசனத்துகே இந்த வலிமை என்றால்.. நிஜ வாழ்வில் அவர் பேச்சுக்கு?? சொல்ல வேண்டுமா?
திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் தோன்றிய சில பொது மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள் இந்த தீப்பொறி அனையாமல் இருக்க உதவியது. மலேசிய, சிங்கப்பூர் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளில் அவர் ரசிகர்களுக்கு அளித்த கேள்வி பதில் நிகழ்ச்சி இன்னும் குட்டையை நன்றாக குழப்பியதே தவிர, தெளிவடைய செய்யவில்லை.
நதி நீர் பிரச்சனைக்காக அவர் இருந்த உன்னாவிரதம், பாபா - பா.ம.க சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த கால கட்டத்தில் அவர் கொடுத்த அறிக்கை, பேட்டிகள் எல்லாம் அரசியல் சார்புடைய குழப்பங்களைத்தான் அதிகரித்தது.
நதி நீர் பிரச்சினையின் போது தீடிரென தொலைக்காட்சி பேட்டியில் " ...அவர்கள் யாரென எனக்கு தெரியும்..தேர்தல் நேரத்தில் தக்க பதில் தருவேன்" என்றார்.. அதற்குள் மருத்துவரின் சில்மிஷத்தால் காட்சிகள் மாறி, இன்று வரை அவர் குறிப்பிட்ட "அவர்கள்" யாரென்று தெரியாமல் போனது.
பா. ம க - பாபா பிரச்சனையால், அவரின் அரசியல் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அம்மையாரோடு அவர் ஆடிய ஆட்டம் களம் மாறி எதிரனியுடன் இனி ஆட்டம் என்றானது.. அவரின் ரசிகர்கள் சத்தியனாரயனன் தலைமயில் அரசியலில் இன்னும் ஒரு படி மேலே சென்றனர்.. தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மிக அழகாக காய் நகர்த்தி ஆட்டம் முடிந்துவிடாமல் பார்த்துக்கொண்டது.
முத்து படத்தில் ஆரம்பத்தில் மீனாவுடன் சண்டை போட்டாலும், பின்பு அவருடன் ராசியாகி போனது போல், எதிர்பாராத திருப்பம் நிஜத்திலும் நடந்தது, அம்மாவை தீவரமாக எதிர்தவர் பின்பு அம்மா ஆதரவு நிலை எடுத்தார்...
களம் மாறிவிட்டதே தவிர, ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது....


எதையும் தீர்மானமாக சொல்லாமல.. நேற்று அப்படி, இன்று இப்படி, நாளை எப்படியோ என்று பூடகமாக கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை தவிர்த்திருக்கலாம்.. எப்பொழுது திரையில் தான் பேசும் வசனங்களுக்கே பல்வேறு அர்த்தம் கற்பிக்கபடுகிற்தோ, அப்போதே அவர் இப்படி பேசுவதை தவிர்த்து, கேட்கப்படுகிற கேள்விக்கு அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி பதில் சொல்லி இருக்க வேண்டும்..
ரஜினியோ..அல்லது அவரை சுற்றி இருந்தவர்களோ..இல்லை பத்திரிக்கைகளோ .. அல்லது இவர்கள் அனைவரும் சேர்ந்தோ அனையாமல் பார்த்துக்கொண்ட காரணத்தாலேயே அந்த சின்ன பொறி இந்த 12 ஆண்டுகளில் வீரயம் பெற்று கொழுந்து விட்ட எரிகிறது.
நல்ல வேளயாக சந்திரமுகி சற்று மாறுபட்டு இருந்தது... அதில் ரஜினிக்கு மருத்துவர் என்ற கதாபாத்திரம் என்று கேள்விபட்டபோது , போச்சுடா மீண்டும் தூபம் போடப்படுகிறது என்று தோன்றியது ..நல்ல வேளயாக அப்படி எதுவும் இல்லாமல் போனது. இப்படியே தொடர வேண்டும் என்பதே பலரின் விருப்பம்..
வழ வழா குழ குழா என்றில்லாமல், இது தான் என்று தீர்கமாக முடிவெடுத்து சொல்லுவது அரசியலுக்கு வர மிக மிக முக்கியமான தகுதிகளுள் ஒன்று.. இதுவே ரஜினியை அரசியலுக்குள்ளே இழுத்து வராத சக்தியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.
இதற்கெல்லாம் முடிவு ரஜினியின் கையில் தான் உள்ளது ... ஆம், நிச்சயம் வருவேன், அது வரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும் என்றோ ..அல்லது .. அரசியலுக்கும் எனக்கும் ஒத்து வராது ..அரசியல் என்பதற்கே வாய்ப்பில்லை என்றோ அவர் விடும் ஒரு தெளிவான அறிக்கையில் தான் உள்ளது.. அவர் அம்மாவை எதிர்த்து "ஆண்டவாலும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னாலும்.. அதே அம்மாவை "அஷ்டலட்சுமி" என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அவரின் ரசிகர்கள் அவர் வருவேன் , வரவே மாட்டேன் என்று சொல்லும் அறிக்கையையும் நிச்சயம் ஏற்பார்கள்...
ஆனால், அது எப்போதோ?????????????????????????????????
ஒரு பாடலோடு முடிக்கலாம், சற்று மாற்றம் செய்த அவரின் முத்து பாடலோடு....
விடுகதையா உந்தன் (அரசியல்) வாழ்க்கை, விடை தருவார் யாரோ?????? குழப்பமில்லாத ஒர் அறிக்கை உந்தன் பெயரால் இங்கு வேண்டுமய்யா..........

வீ எம்

நன்றி : குழலி ( ஒரு புகைப்படத்திற்கு)

நன்றி : rajinifans.com (மற்றொரு புகைப்படம் மற்றும் சில தகவல்கள்)

34 கருத்துக்கள்:

Anonymous said...

nice analysis mr. vm,
i am rajini and though i contradict with some few of the points here. most of them i agree and i really appreciate your posting

Sundar

வீ. எம் said...

Thanks Sundar
//i am rajini and though //
it is Rajini or Sundar? :)

இராமநாதன் said...

//"எனக்கு கட்சியும் வேண்டாம் , ஒரு கொடியும் வேண்டாம் ஹே டகர டகர டகர டகர டோய்..' 1989 ல் வெளியான ராஜாதி ராஜா பட பாடல் இது.//

"கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்!
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்!!" - இது 2002

ஒரு முடிவோட குதிச்சிருந்தார்னா நீங்க சொல்றதெல்லாம் நடந்திருக்கும். குழப்பி குழப்பியே நீர்த்துப் போகச் செய்துட்டாரேன்னு வருத்தமா இருக்குது.

தெரியாமலயா பஞ்ச் வசனம் வெச்சருப்பாரு? எனக்கென்னவோ முதல்ல அரசியல்ல இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டு பிறகு என்ன காரணத்தாலோ பின்வாங்கின மாதிரி தான் படுது.

என்ன ஆனாலும், அவர் நின்னா என் வோட்டு அவருக்கு தான்! அவரின் ரசிகன் என்பதை விட ஒரு நல்ல மனிதர் என்பதற்காகவே அது!

குழலி / Kuzhali said...

//அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மனக்"கோட்டை" கட்டிக்கொண்டிருப்பது தான் மிஞ்சியது.//

சே சே இப்போது அதையும் தாண்டி வலைப்பதிவிலே கட்சி ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றனர்.

//அவர் அம்மாவை எதிர்த்து "ஆண்டவாலும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னாலும்.. அதே அம்மாவை "அஷ்டலட்சுமி" என்று சொன்னாலும் //
என்ன வீ.எம். உங்களுக்கும் முத்திரை குத்தப்படவேண்டுமா?

நிறைய உண்மை பேசுகின்றீர், பார்த்து கும்பலாக வந்து குதிக்கபோகின்றனர்...

குழலி / Kuzhali said...

என்னால் முடிந்தது + ல் ஒரு குத்து குத்திவிட்டேன்...

Go.Ganesh said...
This comment has been removed by a blog administrator.
Go.Ganesh said...

வீ.எம் தங்கள் PART ONE பின்னூட்டம்

********************
//வீ.எம் !! ..இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் ..... "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன?////

நிச்சயமாக வெகு விரைவில் "பகுதி 2" வரும்..அதில் பதில் இருக்கும்..
********************

என் கேள்விக்கு நேரடியான பதில் பகுதி 2 ல் இல்லை. அதாவது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் மாட்டார் என்பதிற்கு நேரடியான பதில் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை இந்த அளவுக்கு தெளிவாக யாரும் அலசவில்லை என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

//வழ வழா குழ குழா என்றில்லாமல், இது தான் என்று தீர்கமாக முடிவெடுத்து சொல்லுவது அரசியலுக்கு வர மிக மிக முக்கியமான தகுதிகளுள் ஒன்று.. இதுவே ரஜினியை அரசியலுக்குள்ளே இழுத்து வராத சக்தியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.//

அப்படியா சொல்கிறீர்கள்.......... என் கருத்து உங்கள் கருத்துக்கு முரணாக இருக்கிறது. நினைப்பதை எல்லோருக்கும் சொன்னாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது நினைப்பதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது. (இது என் கருத்து அவ்வளவே).

நல்லது செய்யனும்னு நினைச்சு வருகிறவன் அப்படியே இருப்பதில்லை அல்லது அவனை அப்படியே இருக்க விடுவதில்லை. இது இந்திய அரசியலின் சாபக்கேடு. அதற்கு இந்த காலகட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக தெரியவில்லை. கூடுமானவரை மனதுக்கு பிடித்தவன் நல்லவன் என்று நாம் நம்பும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் இன்றைய மக்கள் இருக்கிறார்கள். எல்லாமே தனிப்பட்ட கருத்துக்களுக்குள்ளும் அடிபட்டு போய் விடுகின்றன. இல்லையென்றால் சாதீய அரசியல், குடும்ப அரசியல் போன்ற பேச்சுக்களுக்கே இடமிருந்திருக்காது.

//காலகட்டத்தில் தான் ரசிகிர்கள் மனதில் "இவர்அரசியலுக்கு வரலாமே" .... என்று இருந்த எண்ணம் "இவர் வரவேண்டும்" என்று மாறியது.//
ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ஒரு 60% என்றால். மக்களுக்கு எந்த ஆட்சியிலும் நல்லது நடக்கவில்லை. தலைவராவது வந்தால் நல்லது நடக்கும் என்று எண்ணிய ஒவ்வொரு ரசிகனின் அலைவரிசையும் ஒரு 40% காரணம் என்று நான் நினைக்கிறேன்.

//அம்மாவை தீவரமாக எதிர்தவர் பின்பு அம்மா ஆதரவு நிலை எடுத்தார்...//
ரஜினி அம்மாவுக்கு ஆதரவு வழங்கினார் என்று சொல்வதை விட பாமகவிற்கு எதிராக இருக்க விரும்புகிறார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் ரஜினியின் இந்த முடிவிற்கு அம்மாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது. இல்லையேல் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வரிசையாக திமுகவினரின் மேல் நடவடிக்கைகள் எடுத்த பொழுதும் ரஜினியை மட்டும் விட்டுவைத்தது மிகப்பெரிய விஷயம். அம்மாவின் அரசியல் சாதுர்யம் இதில் தெரியும்.

// சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அவரின் ரசிகர்கள் அவர் வருவேன் , வரவே மாட்டேன் என்று சொல்லும் அறிக்கையையும் நிச்சயம் ஏற்பார்கள்.... //
அவர் அறிக்கையை ஏற்றுக் கொள்வது ரசிகர்களின் மனநிலையைப் பொற்த்த விஷயம். எனக்கென்னவோ அறிக்கை அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தோன்றுகிறது. முடிவு சாதகமாக இல்லையென்றால் ரசிகனின் மனநிலைமை எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியவில்லை.
அம்மாவிற்கு ஆதரவு என்று தெரிந்தவுடன் வீட்டில் 10 வருடமாக பிரேம் போட்டு வைத்திருந்த போட்டோவைத் தூக்கியெறிந்த ரசிகனை நான் பார்த்திருக்கிறேன். தான் எடுக்கும் எந்த முடிவிற்கும் ரசிகன் கட்டுப்படுவான் என ரஜினி நினைக்காமலிருக்க வேண்டும். அப்படி அவர் நினைப்பாரேயானால் அவரின் ஆளுமை அங்கே அடிபட்டு போய்விடும்.

கலை said...

நல்லதொரு அலசல் அரட்டை அரங்கத்தில்.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், இன்னும்கூட ரஜினி அரசியலுக்கு வருவார்ன்னு மக்கள் நம்புறாங்களா?????

வீ. எம் said...

ராமநாதன், குழலி, கலை : வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

ராமநாதன்,

//கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்!
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்!!" - இது 2002//
பாருங்கள், 1989 தெளிவான நிலையில் இருந்தவர், 2002 ல் தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிட்டார்..
//என்ன ஆனாலும், அவர் நின்னா என் வோட்டு அவருக்கு தான்! அவரின் ரசிகன் என்பதை விட ஒரு நல்ல மனிதர் என்பதற்காகவே அது! ..//
என் நிலையும் இதுதான் !
====
//சே சே இப்போது அதையும் தாண்டி வலைப்பதிவிலே கட்சி ஆரம்பித்துக்கொண்டிருக்கின்றனர். //

அப்டீங்களா குழலி??? நெசமாலுமா சொல்றீங்க???????????????/
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

//என்னால் முடிந்தது + ல் ஒரு குத்து குத்திவிட்டேன்...///

நீங்க + ல தான் குத்துவீங்கனு எனக்கு நல்லா தெரியும் .. :) மிக்க நன்றி, சன்மானத்தை வீட்டுக்கு அனுப்பறேன் ! :)
==
//இன்னும்கூட ரஜினி அரசியலுக்கு வருவார்ன்னு மக்கள் நம்புறாங்களா????? //
நம்பிக்கை தானே வாழ்க்கை , என்ன சொல்றீங்க கலை?
வீ எம்

Moorthi said...

சிறந்த அலசல் வீ.எம்.

அவர் அரசியலில் நிற்க ஆசை கொள்ளவில்லை. ஆனால் சுற்றி நிற்பவர்கள் மட்டுமே அவரை உசுப்பி விடுகின்றனர் என்பது மட்டும் உண்மை.

வீ. எம் said...

நன்றி மூர்த்தி, ஆம் .. சுற்றியுள்ளவர்கள் உசுப்பிவிட வேண்டாம் என்பதை தான் பாகம் 1 ல் சொல்லியிருந்தேன் .. படித்தீர்களா?

வீ எம்

வீ. எம் said...

கனேஷ்,
தங்கள் நீண்ட கருத்து பதிவிற்கு முதலில் நன்றி.
//என் கேள்விக்கு நேரடியான பதில் பகுதி 2 ல் இல்லை. அதாவது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் மாட்டார் என்பதிற்கு நேரடியான பதில் எனக்கு கிடைக்கவில்லை/////////
ஆம். உங்கள் கேள்விக்கு இங்கு பதிலில்லை, பதிலளிக்கலாம் என்று நினத்தேன்..ஆனால் சற்று அலசி பார்த்து விரிவாக எழுத வேண்டும் என்பதால் .. "ஸ்டார் - அரசியல் வானில் ஜொலிக்குமா??" என்று ஒரு தனி பதிவு போட முடிவு செய்ததால், அதில் எழுதலாம் என விட்டுவிட்டேன்.

///////அப்படியா சொல்கிறீர்கள்.......... என் கருத்து உங்கள் கருத்துக்கு முரணாக இருக்கிறது. நினைப்பதை எல்லோருக்கும் சொன்னாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது நினைப்பதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்தாலும் அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது. /////////

நான் குறிப்பிட்ட வழ வழா குழ குழா விற்கும், நீங்கள் சொல்லுவதற்கும் வேறுபாடு இருக்கிறது.. என் பதிவில் நான் புரிந்துக்கொள்ளும்படி எழுதவில்லை என்று நினைக்கிறேன் (நானும் ஒரு வழ வழா குழ குழா பேர்வழி என்று நினைக்கிறேன் :) )

மனதில் நினைப்பது ஒன்று வெளியில் சொல்வது வேறு என்பது தான் தாங்கள் சொல்வது.. நான் குறிப்பிட்டது மனதில் என்ன நினைத்தாலும், வெளியில் சொல்லுவதை பட்டென்று தெளிவாக சொல்லாமலிருப்பது.
உதாரனமாக, நம்மூர் வானிலை அறிக்கை : மழை வரலாம், வராமலும் இருக்கலும், இடியுடன் கூடிய மழை வரலாம்..இல்லை இடி இல்லாமல் வரலாம்.. பலத்த மழை பெய்தாலும் பெய்யலாம்.. இல்லாமல் சிறு தூரலும் போடலாம்.. என்பது போல....


/////////ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ஒரு 60% என்றால். மக்களுக்கு எந்த ஆட்சியிலும் நல்லது நடக்கவில்லை. தலைவராவது வந்தால் நல்லது நடக்கும் என்று எண்ணிய ஒவ்வொரு ரசிகனின் அலைவரிசையும் ஒரு 40% காரணம் என்று நான் நினைக்கிறேன்.//////////

நீங்கள் சொல்வது சரியே.. ஆணால், இதை ரசிகர்களின் எண்ணம் என்பதை விட ரசிகரல்லாத நல்லாட்சி வேண்டும் என்கிற பொதுஜனத்தின் ஆதங்கமாகவே நான் பார்க்கிறேன்... அவர்களுக்கு ரஜினி என்றில்லை..யார் வேண்டுமானால் வரலாம்..ஆனால் நல்லாட்சி வேண்டும்.. அவ்வளவே!

ரசிகன் 'நல்லாட்சி' என்பதை விட ஒரு படி மேலே தங்கள் உள்ளங்கவர் நடிகர் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகமாக உள்ளது...
ஒரு 4 வரி இது பற்றி முதலில் எழுதினேன் , பின்பு நீக்கீ விட்டேன் ..இது ரசிகர் , பத்திரிக்கை பற்றிய பதிவு என்பதால்..
அப்படி பார்த்தாலும், கடந்து 7 - 8 வருடங்களாக தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் முக்கியத்துவம் பெற்றது ..ஆனால் இப்போதுள்ள அரசியல் கட்சிகளின் ஆட்சிகள் மீது வெறுப்பு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.. ஏன் அப்போதே ரசிகர்கள் குரல் எழுப்பவில்லை ??

//அம்மாவின் அரசியல் சாதுர்யம் இதில் தெரியும்////
ஒத்துக்கொள்ள கூடிய கருத்து !

அம்மாவிற்கு ஆதரவு என்று தெரிந்தவுடன் வீட்டில் 10 வருடமாக பிரேம் போட்டு வைத்திருந்த போட்டோவைத் தூக்கியெறிந்த ரசிகனை நான் பார்த்திருக்கிறேன். தான் எடுக்கும் எந்த முடிவிற்கும் ரசிகன்
நான் முதல் பாகத்தில் சொன்னது போல் மிக சிலர் இப்படி... ஆணால் பெரும்பான்மையானவர்கள் , அவர் சொன்னதாலேயே பழையன மறந்து "இரட்டை இலைக்கு" வாக்களித்தவர்கள்.
பாருங்கள் ஒருவேளை பா ம க வுடன் நட்பாகி .. ஏதோ ஒரு காரணத்துக்காக ரஜினிக்கு ப ஜ க வுடன் மோதல் வரும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் தாமரையை உதறி விட்டு, மாம்பழத்தை ஏற்றுக்கொள்ளும் "மறப்போம் , மன்னிப்போம்" பக்குவத்திற்கு "பல" ரசிகர்கள் போவார்கள்..ரஜினி என்ற ஒரே காரணத்துக்காக..

//அப்படி அவர் நினைப்பாரேயானால் அவரின் ஆளுமை அங்கே அடிபட்டு போய்விடும்.//
இப்படி நடக்க ஆரம்பித்திருப்பதாகவே எனக்கு படுகிறது..
வீ எம்

குழலி / Kuzhali said...

//அம்மாவிற்கு ஆதரவு என்று தெரிந்தவுடன் வீட்டில் 10 வருடமாக பிரேம் போட்டு வைத்திருந்த போட்டோவைத் தூக்கியெறிந்த ரசிகனை நான் பார்த்திருக்கிறேன்.//

10 ஆண்டுகளுக்குமுன் நான் மன்ற துணைத்தலைவனாக இருந்து பின் வெளியேறிய மன்றம் எங்கள் பகுதியில் கலைக்கப்பட்டதும் கூட இந்த காரணத்தினால் தான், கடலூரிலே எனக்கு தெரிந்தவர் நீண்ட காலமாக மன்றத்திலிருந்தவர் தான் மாவட்ட ரஜினி ரசிகர் வழக்கறிஞர்கள் மன்றத்தலைவன், அவர் ரஜினியின் கொடும்பாவியை கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்து வெளியேறியதும் இந்த சம்பவத்தால் தான்.

ஆனாலும் நீங்கள் சொல்வது போல

குழலி / Kuzhali said...

ஆனாலும் நீங்கள் சொல்வது போல எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் உண்டு

Anonymous said...

அந்த மரம் வெட்டியின் கட்சி பற்றி எங்கள் தலைவர் பதிவில் எழுதி இப்படி அசுத்தம் பன்னிட்டீங்களே வீ எம்.
jagan

குழலி / Kuzhali said...

என்னங்க உண்மை சுடுகின்றது போல, சூடுதாங்காமல் குதிக்கின்றீர்

Anonymous said...

kuzhali,
சீக்கிரம் உங்க மரம் வெட்டி கூட்டத்துக்கும், அந்த மரவெட்டி தலைவனுக்கு வெக்க போறம் சூடு..அப்ப தெரியும் . தயாரா இருங்க.

பாட்ஷா படை வரப்போகுது,
jagan
super star veriyan !

Anonymous said...

thaar tin thookittu alayuravanukku enga thangathalaivar pathi enna theriyum..
vaaya moodungada , enga vaaya kelaradheenga. appuram aapu veppom unga kootathukku

jagan, dont discuss with these kind of maravetti kootam.

sundarraj
rajinifans.com

குழலி / Kuzhali said...

எத்தனை தடவை மண்ணை கவ்வினாலும் புத்தி வராதவர்களை என்ன சொல்ல, வாங்க என் பதிவுக்கு, அங்கே வைத்துக்கொள்ளலாம் நம் கச்சேரியை, இது வீ.எம்.மோட பதிவு இங்க வந்து சண்டை போடக்கூடாது, அடுத்து குதி குதினு நீங்க குதிக்கிற மாதிரி இன்னொரு விடயம் வைத்திருக்கேன், இந்த ரசிகர் மன்றங்கள்ள நடக்கின்ற விடயங்களை எழுதப்போகின்றேன், அப்போ எல்லாம் மொத்தமா வந்து குதிங்க

குழலி / Kuzhali said...

//enga vaaya kelaradheenga. appuram aapu veppom unga kootathukku
//

யாருக்கு ஆப்பு விழுந்தது என்று மொத்த தமிழகத்திற்கும் தெரியும்

வீ. எம் said...

ஜெகன் & சுந்தர்ராஜ்,
வருகைக்கு நன்றி,

இந்த பதிவு ரஜினியையோ அல்லது பா ம க வையோ தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை.. என் பதிவில் எங்கும் அப்படி இல்லை.. நடந்தவற்றை பற்றிய ஒரு அலசல் தான் இது.
யாரையும் தாக்க அல்ல என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
rajinifans.com யாகூ குழுமத்தின் moderator திரு ஷாஜஹான் கூட இதன் பாகம் 1 படித்துவிட்டு, தவறேதும் சொல்லவில்லை. மாறாக குழுமத்தில் உள்ள அனைவருக்கும் இதை forward செய்தார்.. அங்கே படித்தவர் யாரும் தவறாக சொல்லவில்லை..
ஆனால் ஜெகன் அவர்கள் இங்கே சொன்ன கருத்தை தவிர்திருக்கலாம். ரஜினி பற்றிய பதிவில் பா ம க பற்றி சொல்லாமல் இருக்க முடியாது, நடந்தவை தானே.. நடக்காததை சொல்லியிருந்தால், நீங்கள் என் மீதோ அல்லது பதிவையோ குறை சொல்லலாம்.. மாறாக பா ம க பற்றி எழுதியதால் "அசுத்தமானது" என்று சொல்லியது சற்று அதிகம் தான். தங்களின் தலைவருக்கு பிரச்சனை தந்த ஒரு கட்சி, அதன் தலைவர் மீது உள்ள கோபத்தில் , உனர்ச்சிவசபட்டு சொன்னது இது என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.. எனினும், இது போன்ற வாதங்களில் வார்த்தை பிரயோகமும் மிக முக்கியம்..
புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
வீ எம்

Anonymous said...

kuzhali,
modhalla ezhudhunga, appuram vechikalam kacheriya

enga thalaivar pugazhukku neenga ellam jujubeeee

oru dhadavai vizhundhom , sari, aanal enga thanga thalaivar sonna maadhiri naanga ellam yaanai illai kudhirai.. marakaavendam.

ungalala thaniya ninnu oru 25 thoguthila jeiyka mudiyuma??
eppavum onnu dmk illa admk.
pachondhi kuuttam neenga..

paasamulla kuutam enga thalaivardhu

seekiram eludhunga , varom, udhaar udadheenga.
vartaa !
sundarraj
rajinifans.com

குழலி / Kuzhali said...

//naanga ellam yaanai illai kudhirai.. //

அது சரி இப்படியே யானை குதிரைனு சொல்லிக்கிட்டிருந்தா எப்போ தான் மனுசனாகப்போறீங்க? சரி அப்போ மனுசனில்லைனு ஒத்துக்கிறீங்க, நீங்கலாம் மனுசன்னு நினைத்துதானே இவ்வளவு நாளா பேசிக்கொண்டிருக்கின்றேன்...

//pachondhi kuuttam neenga..//
அது சரி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாதுனு தம் அடித்துக்கொண்டே தொலைக்காட்சியில பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு அதே ஜெயலலிதாவை தைரியலஷ்மி னு பாராட்டினாரே உங்க தலைவர் அதைவிடவா பச்சோந்தித்தனம் உலகத்திலிருக்கு??

//eppavum onnu dmk illa admk.
pachondhi kuuttam neenga..//
வேண்டுமென்றால் திமுக வையோ அதிமுகவையோ பாமகவோட கூட்டணி வைக்கவேண்டாம்னு சொல்லுங்களேன்...

//paasamulla kuutam enga thalaivardhu//
நீங்க தான் பாசம் வேசம்னு பேசிக்கொள்ளலாம், உங்க தலைவருக்கு பாசமிருக்கா உங்க மேல?, பத்திரிக்கையே இல்லாம கல்யாணத்துக்கு போயி தடியடி வாங்கனவங்கதானே....

//seekiram eludhunga , varom, udhaar udadheenga.
vartaa !//
அது சரி மன்றத்துலருந்து வைக்கிற கட்-அவுட், சுவரொட்டியெல்லாம் கலர் போட்டோ எடுத்து மன்ற மாநிலத்தலைவருக்கு அனுப்புகின்றீர்களே எதற்கு? தலைமையிடமிருந்து வந்த பணத்திற்கு கணக்கு காட்டத்தானே?

இந்த ஒரு விடயம் மட்டுமில்ல இது மாதிரி மன்றத்து விடயங்கள் பல இருக்கு என்னிடம், மொத்தமா பதிவில் போடுறேன் அப்போ கூட்டமா வந்து பதில் சொல்லுங்க

-L-L-D-a-s-u said...

//தம் அடித்துக்கொண்டே தொலைக்காட்சியில பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு/

தம் அடித்துக்கொண்டே டீவியில் பேட்டி கொடுத்தது உண்மைதானே. எனக்கும் அப்படித்தான் நியாபகம் . அவர் ரஜினியின் திமிறைத்தான் காட்டுகிறது. ராமதாஸ் சொன்ன அசிங்க வார்த்தைகளுக்கு ஏற்புடையவர்தான் ரஜினி .

Anonymous said...

good posting V.M
we all enjoyed reading it
nice analysis !

write more

SenthilK

வீ. எம் said...

L L DASU and Senthil Thanks for the visit and comments

Kicha said...

good posting mr VM. some places i contradict with you but most of the areas well analysed with facts and example.

i dont know why Kuzhali is so much angry and dead against rajinikanth as if he personally gave trouble to him

cool down mr kuzhali

குழலி / Kuzhali said...

//i dont know why Kuzhali is so much angry and dead against rajinikanth as if he personally gave trouble to him
//
அப்படியெல்லாம் வெறுமனே மூர்க்கத்தனமாக எதிர்க்கவில்லை.
அவருடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் தமிழ்,தமிழர் விரோத போக்குதான் இந்த அளவுக்கு, 1995லிருந்தே ரஜினியின் மீதிருந்த என் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்து, 1999ல் மொத்தமாக மாறிவிட்டது.

அது சரி ரசிகர் கூட்டமே நான் எழுப்பிய கேள்விக்கு பதில் எங்கே, மறந்து விட்டீர்களெனில் மீண்டும் ஒருமுறை இங்கே

அது சரி மன்றத்துலருந்து வைக்கிற கட்-அவுட், சுவரொட்டியெல்லாம் கலர் போட்டோ எடுத்து மன்ற மாநிலத்தலைவருக்கு அனுப்புகின்றீர்களே எதற்கு? தலைமையிடமிருந்து வந்த பணத்திற்கு கணக்கு காட்டத்தானே?

Anonymous said...

When I was 10 years old I wanted to become a doctor, then i started playing sports and at 15 I wanted to become a champion and at 20 i did not know what i want to be, at 25 I became a computer professional and came to USA. Whatever happened in my life was not because what i wanted to be.

How can one say exactly this is what i want to be. No one has their life in hands. I think we should take life as it comes. Who knows i can become a politician in future.

I dont think one can say he want to do this or that. Super Star is in same position. You got to understand coming to politics is not in his hands. I dont think he can give us a definite answer

Anonymous said...

Kuzhali,

Its sad that few persons like you try to take dig Rajini everytime u get a chance.
I cant even talk about L.L Dasu.

Guys whatever u say and do, there are millions of fans from New York to Nagercoil who always accept Rajini as the person he is.

Long Live the Sun and Long Live the magic he leaves.

V.M I agree with some of your points, but a good analysis anyway.

Anonymous said...

Hi friend,

i like you writing style. i request you to go through Rajini Ramki's book Rajini-sapthama,sagapthama?

He has mentioned, clearly the situations forced rajini to give statements in politics and also answered many of your questions and comments.

simple_sundar Rajinifans.com

வீ. எம் said...

Thanks Simple Sundar. Sure, I already have a plan to read it. I wanted to write my own thots, that is why i didnt read it before writting this posting. else i might have got influenced by his writing and this posting wouldnt have been my thouts.
hope u understood
thanks again!
VM

Anonymous said...

/////அது சரி ரசிகர் கூட்டமே நான் எழுப்பிய கேள்விக்கு பதில் எங்கே, மறந்து விட்டீர்களெனில் மீண்டும் ஒருமுறை இங்கே////

குழலி,
என்ன கேள்வி இது? என் பதிவில் எழுதுகிறேன் கூட்டாமா வாங்க என்று சவடால் விட்டீர்களே. அதற்காக தான் காத்து இருக்கிறோம் . நான் மட்டுமல்ல, என் ரஜினி பாசறை கூட்ட நன்பர்களுக்கு சொல்லியுள்ளோம்.
உங்கள் பதிவில் எழுதுங்கள்..தயாராக இருக்கிறோம். மற்றவர் பதிவில் வந்து பூச்சாண்டி காமிக்க வேண்டாம்..
sundarraj
rajinifans.com

குழலி / Kuzhali said...

நான் எழுப்பிய ஒரு கேள்விக்கே இங்கே பதில் இல்லை, நீங்களாம் என்ன கூட்டமா வந்து என்ன பதில் சொல்லப்போறிங்க, வரேன் எழுதுகிறேன், எழுதி முடித்தவுடன் பதிவில் போடுகின்றேன் வாருங்கள்