வெல்கம் டூ , வீ எம் - நீங்கள் படிக்கும் பதிவு...

வணக்கம் அண்ட் வெல்கம் டூ சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்... ஓ... ஸாரி..வெல்கம் டூ வீ எம் நீங்கள் படிக்கும் பதிவு........
.... இந்த பதிவோட நம்ம சென்னை எபிசோட் (அதாங்க சென்னை ல இருந்து எழுதபட்ட பதிவு) முடியுதுங்க
அடுத்த பதிவு எங்கிருந்துனு சொல்லனும் ல.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேரரக் ...............................


அடுத்த பதிவுகள் பூனா விலிருந்து....

ஆமாங்க, அலுவலக வேலையாக பூனா போறேன் .. 1 மாசம்.. ஜுன் 26 போயிட்டு ஜூலை 24 திரும்ப சென்னை வருவேன்... (இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப் பா னு நீங்க சொல்றது புரியுது....)


அடுத்த பதிவு பூனா ல இருந்து எழுதுவேன்... until then its bye from வீ .எம்..
(சமிபத்துல 2 , 3 சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி பாதிப்புல ஊருக்கு போற விஷயத்தை இப்படி சொல்லிட்டேன் , வேற ஒன்னுமில்லை.. !)

====================================================

15 கருத்துக்கள்:

அப்டிப்போடு... said...

நல்லபடியா போய்ட்டு வாங்க!., வோலையில் கவனம்! என்ன?

PositiveRAMA said...

ஓ.கே. வீ.எம். புனாவில் உங்களை பாதிக்கற்தைப்பத்தி எழுதுங்க காத்திருக்கிறேன்.

வீ. எம் said...

நன்றி அப்படிபோடு, பாசிடிவ் ராமா அவர்களே,

அப்படிபோடு: தங்கள் அறிவுரை படி வேலையில் கவனமா இருக்கேன் ! :)
பா.ராமா: சென்னை வந்தவுடன் முதல் பதிவு பூனா - பயனக்கட்டுரை தான்..!
இது என்னுடைய இரண்டாவது முறை , மார்ச் மாதத்தில ஒரு முறை சென்றேன்..
சில இடங்கள் பார்த்தேன்..இப்போது பார்க்க போவதையும் சேர்த்து ஒரே கட்டுரை யாக எழுதுகிறேன்.. முடிந்தால் ஜெட் ஏர்வேஸ் விமான பனிபெண்கள் (air hostress) புகைப்படத்தோடு சேர்த்து :) :) .. ஹி ஹி ஹி!

வீ எம்

துளசி கோபால் said...

வீ.எம்,

பூனா நல்ல ஊர்தான். எங்கே தங்கப்போறீங்க?

நானும் பூனாவிலே 5 வருஷம் குப்பை கொட்டியிருக்கேன்!!!!

ராஸ்தாப்பேட் 'ஹனுமாரை'க் கேட்டதாகச் சொல்லுங்கள்!!!!
என்றும் அன்புடன்,
துளசி.

வீ. எம் said...

நிச்சயம் ஹனுமான் கிட்ட சொல்றேன்கா !!
இப்போ "ஹடாப்ஸர்" பக்கத்துல "மகர்பட்டா சிட்டி" னு ஒரு இடம் ..அதுல தான் "சைபர் சிட்டி" சாப்ட்வேர் பார்க் இருக்கு .எங்க அலுவுலக கெஸ்ட் ஹவுஸ் அந்த சிட்டி ல இருக்கு ..அதுல 2 வாரம்..
அப்புறம் "சத்தாரா ரோட்" கிட்ட இருக்கும் "ஹோட்டல் எமரால்ட்" ல ஒரு 2 வாரம் இருப்பேன் !
போன முறை ராஸ்தாப்பேட் 'ஹனுமாரை'க பாக்க முடியாம போச்சு.. இந்த வாட்டி பார்த்துட்டு வரேன்.. !

//// 5 வருஷம் குப்பை கொட்டியிருக்கேன்!!!!/////
நீங்க எங்க குப்பை கொட்டுனீங்கனு சொல்லுங்க .. இருந்தா பார்த்துட்டு வரேன் .. க்ளீன் பன்னி இருக்க மாட்டாங்கனு நெனைக்கிறேன் :) :)
வீ எம்

Go.Ganesh said...

பாவம் பூனா மக்கள் என்ன பாடு படப் போறாங்களோ.....
அது சரி அந்த ஊரு பாஷை மராத்தியோ ஹிந்தியோ தெரியுமா???

அப்புறம் இந்தியில் ஒரு பதிவு போடலாமில்ல.......

வீ. எம் said...

////பாவம் பூனா மக்கள் என்ன பாடு படப் போறாங்களோ.....////
இன்னா தம்பீ .. நக்கலா??? நான் என்ன பூனா க்கு M.L.Aவா போக போறேன் .. எங்க office விஷயமா போறேன்பா... மக்களுக்கு பிரச்சினை இல்லை.. :)
அப்புறம் .. நம்ம வலைப்பூக்கு 2, 3 பூனா ரசிகருங்கோ இருக்காங்க... தெரியும்ல.. :) :)
////அப்புறம் இந்தியில் ஒரு பதிவு போடலாமில்ல......./////
ஏம்பா என் வலைப்பூ பாக்க கொஞ்சம் டீஸண்டா இருக்கறது பிடிக்கலையா?? யாராச்சும் தார் பூசனும்னு ஆசையா?? எவ்ளோ பேர் கெளம்பி இருக்கீங்க?
வீ எம்

Agent 8860336 ஞான்ஸ் said...

சென்று வருக,
வென்று வருக.

*****************
- வாழ்த்தியது ஞானபீடம்
****************

வீ. எம் said...

நன்றி ஞான்ஸ் .
சென்று வருவேன் , வென்று வருவேனா, தெரியலை... ! :)
அங்கே புதியதாக சேர்ந்திருக்கும் project managers ku training கொடுக்க போறேன் :)
உன் கிட்ட படிச்சு என்ன சாதிக்க போறாங்கனு சொல்றது புரியுது ... ஹி ஹி ஹி
வீ எம்

Dondu said...

வீ.எம் அவர்களே,

உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள். தாங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்குமாறு எல்லாம் வல்ல என் அப்பன் மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன். அவ்வப்போது வந்து எனது பதிவுகளுக்கு + மதிப்பெண் தட்டிச் செல்லுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Agent 8860336 ஞான்ஸ் said...

************
ஞானபீடம்.
************

//...சென்று வருவேன் , வென்று வருவேனா, தெரியலை... // - வீ.எம்.

சரி, அப்டீன்னா...

சென்று,
நன்று... மென்று... தின்று... 'குன்று போல்' வருக!

************
ஞானபீடம்.
************

Adaengappa !! said...

Have a safe trip....

dondu(#4800161) said...

வீ.எம். அவர்களே. மேலே என் பெயரில் வந்தப் பதிவு நான் இட்டதில்லை. இதுதான் நான் இடுவது. இதன் நகல் நான் இதற்காகவே வைத்திருக்கும் பதிவில் வரும் பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

இனிமேல் என் பதிவு என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளேயிலேயே வரும். பார்க்கலாம் இதில் ஏதாவது பயன் இருக்கிறதா என்று.

மற்றப்படி போலி டோண்டு இந்த முறை தவறாக எழுதவில்லை. என்ன, கடைசி வரியில்தான் சறுக்கி விட்டார். நான் யாரையும் எனக்காக ஓட்டு எல்லாம் போடச் சொல்ல மாட்டென்.

மற்றப்படி சென்று, வென்று வாருங்கள். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் உங்களுக்கு அருள் புரிவான். போலி டோண்டுவிற்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும். இம்மாதிரி உபயோகமற்ற வேலையையெல்லாம் விட்டு தன் வேலையை கவனிக்கட்டும்.

அன்புடம்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

வீ.எம்,

ஒரு இடமா இருந்தா 'சட்'னு சொல்லிறலாம். அதான் ஆறு மாசத்துக்கு ஒரு வீடுன்னு
மாறிக்கிட்டு இருந்தமே!

மொதல்லே 'மூலா ஹவுஸ், கட்கி பக்கம், அதுக்கு அப்புறம் இப்படியெல்லாம்....

கோர்ப்புரி மிலிட்டரி க்வாடர்ஸ், விஷ்ராந்த்வாடி, வைத்வாடி( ஹடப்ஸார் பக்கம்)
சஸானேநகர்( மொஹம்மத்வாடிப் பக்கம்) கோர்புரி பஸார் ...
இதெல்லாம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

கோபால் அங்கே இன்கேப் லேதான்( ஹடப்ஸார்) வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.
அங்கே பூனாலே 'சிம்பயாஸிஸ்'லேதான் மேனேஜ்மெண்ட் படிச்சார்.

நாங்க அதைவிட்டு வந்தப் பிறகு, ஃபேக்டரி மூடுற நிலைவரைக்கும் வந்து இப்ப சுமாரா
ஓடுதுன்னு தகவல்! நாங்க அங்கே இருந்தது 1977 டு 1982 ஏப்ரல்!!! அப்பெல்லாம்
சாஃப்ட்வேர், ஹார்டுவேர் னு "சைபர் சிட்டி" சாப்ட்வேர் பார்க் இதெல்லாம் ஒண்ணுமே கிடையாது!!!!

புள்ளையார் சதுர்த்தி சமயம் அங்கே இருந்தீங்கன்னா, ஒரே கொண்டாட்டம்தாம்!!!
அது ஒரு புது அனுபவம்!!!

என்றும் அன்புடன்,
துளசி

வீ. எம் said...

நன்றி dondu, duplicate Dondu, ஞான்ஸ் , துளசியக்கா,
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி dondu,
duplicate dondu : ஏன் இப்படி உங்கள் identity மறைத்துக்கொண்டு மற்றவர் முகமூடி க்குள் நுழைந்துக்கொள்கிறீர்? எது சொல்வதென்றாலும் , நீங்கள் , நீங்களாகவே சொல்லுங்கள்

ஞான்ஸ் : நீங்க விஜய டி ஆர் ரசிகரா??? கலக்குறீங்க

துளசியக்கா.. ஒரு கைடு (guide) மாதிரி கலக்கிட்டீங்க.. வைத்வாடி ல தான் என் நன்பன் இருக்கார்..அங்க ஒரு 2 நாள் தங்குவேன் !
இங்கே நல்ல மழை, நேற்று மாலை கொரேகான் பார்க் பக்கம் போய்ட்டு வந்தேன்.

வீ எம்