அதே கோயிஞ்சாமி - Part II

கனேஷ் அவர்களின் இந்த பதிவின் கோயிஞ்சாமி தொடர்ச்சி இது

தம்பி கனேஷ¤ கனவுல வந்த அதே கோயிஞ்சாமி , அவர் கனவை முடிச்சுட்டு நம்ம கனவுல வந்தாரு..வந்து, வீ எம் ,வீ எம்... கனேசுனு ஒரு வலைப்புகாரர் இருக்காரே அவரு கனவுல போயி 10 கேள்வி கேட்டேன்.,..தம்பிக்கு ஒன்னுக்கு கூட பதில் தெரியல... என்ன மாதிரியே அவருங் கோயிஞ்சாமியா இருக்காரு. ..இந்தாப்பா அதே பத்து கேள்வி , எப்படியும் கனேசு, பதிவா போடுவாரு..அவரு போட்ட ஒடனே நீ பதில் எழுதி உன் வலைப்பூவுல பதிவா போடு..அவரு கருத்துபெட்டில போடாதே ..அங்கே லின்க் மட்டும் கொடுனு கண்டிப்பா சொல்லிட்டாரு..அப்படி பன்னலனா, கூடிய சீக்கிரம் ஏதாச்சும் உளறிட்டு ..அப்புறம் எல்லாரு முன்னாடியும் வந்து பொது மன்னிப்பு கேட்க கடவாய் னு சாபம் கொடுத்துடுவேன்னு சொன்னாரு..கோயிஞ்சாமி சாபம் நமக்கு எதுக்கு.. அதான் அங்கே கருத்து பெட்டில போடாம், இதோ இங்கே போட்டுட்டேன்...கோயிஞ்சாமி வாழ்க!!சரி பதிலுக்கு போவலாம..அப்புறம் கோயிஞ்சாமிக்கு இது தான் கடைசி கனவு விசிட்டாம்..சோ, அடுத்து யாராச்சும் கோயிஞ்சாமி கனவுல வந்தாரு சொன்னா நம்பறதுக்கில்லை...சொல்லிட்டேன்.. கோயிஞ் சாபத்துக்கு ஆளாகாதீங்க..


1. உலகத்தில் இருக்கிற எல்லா நாடும் கடன்ல இருக்குன்னா (அட நம்ம அமெரிக்கா உட்பட) பணமெல்லாம் உண்மையிலேயே எங்க தான் போகுது?

வீ ம் கிட்ட முதல்ல 300 ரூ இருந்துச்சு.. அது தான் உலகத்துல மொத்த காசுனு வெச்சுக்குவோம்..ஒரு நாளு கனேசு வீ எம் கிட்ட 100 ரூ கடன் கேட்டாரு.. வீ எம் கிட்ட பணம் இல்லை..அவரு என்ன பன்னாரு சின்னவர் கிட்ட 200 கடன் வாங்கி 100 ரூ கனேசுக்கு கொடுத்தாரு, வீ எம் கேட்டப்ப சின்னவரு கிட்டயும் பனம் இல்லை..ஆனா வீ எம் கேட்டுட்டாரேனு முகமூடி கிட்ட இருந்து 200 ரூ வாங்கி கொடுத்தாரு.. சின்னவரு கேட்கறதுக்கு 10 நிமிசம் முன்னாடி தான் பனமே இல்லாத முகமூடி வீ எம் கிட்ட இருந்து 300 ரூ கடனா வாங்கினாரு.. இப்போ வீ எம் கிட்ட 100 , கனேசு கிட்ட 100 , சின்னவர் கிட்ட 0, முகமூடி கிட்ட 100 ரூ இருக்கு , மொத்தம் 300 ரூ.. ஆனா பாருங்க எல்லோரும் கடன் பட்டிருக்காங்க..

2. நாய்க்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும் முன்பை விட தரமானதாகவும் இருக்குதுன்னு விளம்பரப்படுத்தறாங்களே அப்ப தரத்தையும் சுவையையும் மதிப்பிடுபவர்கள் யார்?
விளம்பரத்தை பார்த்து வாங்கறவங்க சாப்பிட போறதில்லை (சாப்பிட்டாலும் வெளியே சொல்லமாட்டாங்க).. சாப்பிட போற திருவாளர் டாமி, திருமதி ஜிம்மி விளம்பரம் பார்த்து புரிஞ்சுக்க போறது இல்லை.. (சொல்ல நினைத்தாலும் , சொல்ல வழியில்லை, பாவம்) ..அப்புறம் என்ன ..ச இஷ்டத்துக்கு அடிச்சு விட வேண்டியது தானே..

டாமி : என்ன ஜிம்மி இந்த பிஸ்கேட் சூப்பரா இருக்கு.. போன வாரம கொடுத்தியே அதை விட இது சூப்பரு..

ஜிம்மி: அக்க்கூ,ம்.. இதுல ஒன்னும் கொறச்சல் இல்லை.. எவ்ளோ நாளா சொல்லிட்டிருக்கேன்..இந்த கழுத்து பெல்ட் தேஞ்சு போச்சுனு..அதை ஏதாச்சும் மாத்தி தர வழி செஞ்சீங்களா?? ஒன்னுத்துக்கும் ஒதவாத மனுசா...


3. ஏரோப்ளேன்ல கருப்பு பெட்டின்னு ஓண்ணு இருக்குதுல்ல. எவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தாலும் அந்த பெட்டிக்கு ஒண்ணும் ஆவுறதில்லை. அப்போ ஏன் அந்த பெட்டி செஞ்ச உலோகத்திலேயே முழு ஏரோப்ளேன்னைச் செய்யக் கூடாது?

அப்புறம் ஏரோப்ளேன் ஆக்ஸிடென்ட்டே ஆகாதே.... கஷ்டப்பட்டு கண்டுபிடித்த இந்த கருப்பு பெட்டிக்கு வேலையே இருக்காதே... அதுனாலே தான்.. நாம செய்யற ஒரு காரியத்தால, ஒரு நல்ல கண்டுபிடிப்பு பாழாபோக கூடாதில்லையா.. ?

5. ஆரஞ்சு பழம் முதல்ல வந்ததா கலர் முதல்ல வந்ததா?

அது அந்த கடைல எப்படி அடுக்கி வெச்சிருக்காங்கனு பொறுத்தது.. இல்லை .. இல்லை..பழக்கடை முதல்ல இருக்கா , இல்லை கூல் டிரிங்கஸ் கடை முதல்ல இருக்கா என்பதை பொறுத்தது..

ஒரு வாரத்துக்கு முன்னால, விச்சு, பா. ராமா, ரம்யா அக்கா, ஷ்ரேயா அக்கா கடைத்தெருவில போனாங்க.. டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ல போயி ஏதோ ஷாப்பிங்க் பன்னாங்க..ஷ்ரேயா அக்கா ரொம்ப தாகமா இருக்கு கலர் குடிக்கலாமானு கேட்டாங்க.. இல்லை.. ஒரு ஆரஞ்சுப்பழ ஜீஸ் வாங்கி சாப்பிடலாமுனு விச்சு சொன்னாரு.. சரினு ஆர்டர் பன்னாங்க..

ரம்யாஅக்காவும், பா. ராமாவும் பெட் கட்டினாங்க.. எது முதல்ல வரும்னு... பா ராமா நெனைச்சாரு கலர் சீக்கிரம் வரும்..ஆரஞ்சு பழம் ஜீஸ் பிழிஞ்சு தர லேட்டாகுமுனு.. அதனால கலர்னு தைரியமா 1000 ரூ பெட் கட்டிட்டாரு..ஆரஞ்சு ஜூரம்யா அக்கா ஜெயிச்சுட்டாங்க.. அக்கா ரொம்ப உஷாரு... எப்படி தெரியுமா ? கெஸ் பன்னுங்க.. எது எப்படியோ , உங்களுக்கு பதில் : எதுவேனும்னாலும் வரலாம்..

6. ஒரு அம்னிஷியா நோயாளி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டால் அவருக்கு அம்னிஷியா இருந்தது தெரியுமா?

சொந்தகாரங்க.. நன்பருங்க .. அப்புறம் ..அவர ஆஸ்பிட்டல்ல வந்து பார்த்தவங்க.. கேள்விப்பட்டவங்க எல்லோருக்கும் நிச்சயமா அவருக்கு அம்னிசியா இருந்தது தெரியும்... .. மத்தவங்களுக்கு யாராச்சும் சொன்னாத்தான் தெரியும்.. :)

7. ஒரு ஆண் லேடிபேர்டை என்னன்னு கூப்பிடணும்?

எப்படி கூப்பிட்டாலும் அது என்னவோ நம்மள மதிச்சு திரும்பி பார்க்க போறதில்ல..அப்புறம் ஏன் கூப்பிடனும்?

8. முடிக்கப்பட்ட கட்டிடத்தை ஏன் "building"னு சொல்றோம்?

முடிக்கப்பட்ட கட்டடம்னு ஒன்னும் இல்லையே... இன்னைக்கு 1 மாடி, 6 வருஷம் கழிச்சு ஒரு எம் எல் ஏ ஆனா 3 மாடி, அப்படியே ஒரு மந்திரி பதவி வந்தா 5 மாடி .. முதலமைச்சார் ஆனா 6 ... பிரதமர் ஆனா 7 ..அதுவே ஒரு உ. பி. ச வா யாராச்சும் தத்தெடுத்தா 8 .. 9 .. 10 கணக்கே இல்லை.. still building.. அதுனால தான் அதை அப்படி சொல்றாங்க.. forward thinking :)

9. 130 கி.மீ வேகத்தில யாரும் வாகனங்களைச் செலுத்தக்கூடாதுன்னா ஏன் ஸ்பீடோமீட்டர்ல 130 கி.மீ வேகம்னு ஒண்ணு இருக்கணும்?

கனேசு , நல்லா யோசிச்சு பாருங்க .. அன்னைக்கு நீங்க , நானு அப்புறம் நம்ம குழலி , சாமி செடியக்கா எல்லோரும் கார் ல போறப்ப.. நம்ம குழலி ஒரு கட்டத்துல படு வேகமா போக.. அக்கா மெதுவா போப்பா னு அலற..நாம எல்லாரும் உயிரை கைல பிடிச்சுட்டு இருக்கு... நீ என்ன சொன்னே???குழலி என்ன இது 100கி மி ஸ்பீட்ல போறீங்க.. மெதுவா போ ..மெதுவா போ.. சொல்லல??எப்படி சொன்னீங்க? வண்டி வீல் சுத்தறத வெச்சா சொன்னீங்க..? இல்லையே.. ஸ்பீடோமீட்டர பார்த்துதானே..அதான்..130 ல போறோம் னு ஸ்பீடேமீட்டர் இருந்தாதானே தெரியும்??


10. குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னா ஏன் எல்லா பாரிலும் பார்க்கிங் வசதி இருக்கு?

குடிச்சுட்டு வண்டிய ஓட்டக்கூடாதுனு தானே சொன்னாங்க.. வண்டி ஓட்டிட்டு வர எல்லோரும் குடித்தே ஆகனும்னு சொன்னாங்களா??அன்னைகு நீங்க, ஞான்ஸ் போனீங்க.. ஞான்ஸ் புல்லாயிட்டாரு.. நீங்க நல்ல புள்ள , தொடல... வண்டிய ஓட்டிட்டு வந்தது யாரு??? அப்புறம் அந்த பார்க்கிங் இல்லைனா ..என்ன பன்னியிருப்பீங்க..??


4. இந்த காப்பிரைட் காப்பிரைட்னு சொல்றாங்களே அதோட காப்பிரைட் யாருகிட்ட இருக்கு?

இது தான் எனக்கே கொஞ்சம் பதில் தெரியல..இருந்தாலும் கோயிஞ்சாமி க்கு 9 விடை சொன்னதாலே சந்தோசமாகிட்டாரு..பாராட்டிட்டு இதுக்கு அவ் அவரே பதில் சொன்னாரு.. ஆனா யாருக்கும் சொல்லாதேனு சொன்னாரு..,. இருந்தாலும்..நம்ம வலைப்பூ தம்பி நீங்க..சொல்லாம இருக்க முடியுமா.. பட் .. ப்ளீஸ் யாருக்கும் சொல்லாதீங்க தம்பி..அது நம்ம கோயிஞ்சாமி கிட்ட தான் இருக்கா.. அப்புறம் அதுக்கு பார்ட்னர்ஷிப் இருக்காம்..

திருவிளையாடல் நாகேஷ் பேர்ல வலைப்பூகாரர் ஒருத்தர் இருக்காரே அவரும் , சிறு கதை எழுதி பட்டம் வாங்கிய ஒருத்தவங்களும், அப்புறம் மாயமானவரும் .. இவங்க நாலு

பேரும் தாங்க அந்த காபிரைட் வெச்சிருக்காங்க..
அப்பாடா சாபத்துல இருந்து தப்பித்தேன்...வீ எம்

வீ எம்

29 கருத்துக்கள்:

வீ. எம் said...

TEST TEST TEST

பாண்டி said...

test ;-)

Go.Ganesh said...

இந்த மாதிரியும் எழுதலாமா?
கோயிஞ்சாமி நம்மள கவுத்துட்டாரேப்பா ??

vishytheking said...

ஒரு ஆரஞ்சுப்பழ ஜீஸ் வாங்கி சாப்பிடலாமுனு விச்சு சொன்னாரு..

ada intha vishayam unggaLukku eppadi theriyum?

சிறு கதை எழுதி பட்டம் வாங்கிய ஒருத்தவங்களும், அப்புறம் மாயமானவரும் ..

siRukathai ezhuthi pattam vaanginathu Vi. Em. maayamaanathu yaaru.. peyariliyaa?

goinchamy theLiva sollak kUdaatho.. enakku oru koonaar notes theevaip paduthee ithaip purinjukka

anbudan vichu

ஜெகதீஸ்வரன் said...

kalakkiputteenga ponga....!!! :-))

Kai thattara mathiri Smiley podalamna mudiyalappa... ethavathu pannunga..

Go.Ganesh said...

வீ.எம் நம்ம கோயிஞ்சாமிக்கு எதிரா யாரோ கிளம்பியிருக்காங்க. அவரோட அறிவுக்கு முன்னாடி பதில் சொல்ல முடியாம பொறாமையில '-' குத்திட்டு போறாங்க:-(

தாணு said...

பதிவு போட்டு பைத்தியமாவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்; பதிவைப் படிக்க வைத்துப் பைத்தியமாக்குவதற்கென்றேயும் சிலர் இருக்கிறார்கள். தாங்கள் எந்த ரகம் என்று தங்களுக்கே தெரியும்.

அப்பாடியோ! நாகேஷ் பாணியில் ஓடுகிறேன், ஆரம்பித்துவைத்த கணேஷ் பதிவை நோக்கி!

சின்னவன் said...

Geroge Carlin கேட்ட கேள்விகள் மாதிரி இருக்கு இந்த கேள்விகள்.

நானும் அந்த காலத்தில சில கேள்விகள் கேட்டேன். அது
இங்க

Dharumi said...

ஏங்க வீ.எம்., ஆக இப்போ கணேசுவையும் சேத்துக்கிட்டீங்க--இப்போ 'பன்ச் பாண்டவர்கள்' + ஒண்ணுன்னு சொல்றதா , இல்ல வேறெப்படி சொல்றது??
எதுக்கும் கோயிஞ்சாமிகிட்ட கேட்டு சொல்லுங்க!

சித்தன் said...

வீ எம் –னா சிண்டு முடிதல்!
அப்படியா சார்?

இராமநாதன் said...

நல்ல பதிவு வீ. எம் :)


இது என்னது இது??? நா மட்டும் விளம்பரம் கொடுக்கக்கூடாதா? அதான் நல்ல பதிவுன்னு சொல்லியாச்சில்ல? கோயிஞ்சாமி கேட்ட எல்லா கேள்விக்கும் விடை தெரிய இதப் பாருங்க.
விளம்பர இடைவேளை முடிந்தது. தடங்கலுக்கு வருந்திக்கிறோம்.

PositiveRAMA said...

சும்மா "நச்"ன்னு இருக்கு வீ.எம் பதிலு..:))

ஆமா! அது எந்த கடைங்கோ எந்த ஜூஸுங்கோ...' கோழியில இருந்து முட்டை வந்துச்சா முட்டையில் இருந்து கோழி வந்திச்சா"ங்கிறது மாதிரி ஆரஞ்சு மேட்டரை சொல்லிட்டீங்களே!

வீ. எம் said...

அல்லாருக்கும் நன்றி !!

¡ண்டி : :-) நன்றி .. :)

கனேஷ் : ஹ்ம்ம்ம்.. நீங்க பதிவு போட்ட 20 நிமிஷத்துல யோசிச்சு !!! போட்ட பதிவு இது..
கவலை வேண்டாம் யாரையும் கோயிஞ்ஸ் கை விடமாட்டார்.. உங்களை மாதிரி கைவிடற மாதிரி இருக்கும் ஆனா மாட்டாரு.. என்ன மாதிரி ஆளுக்கு நிறைய ஐடியா கொடுப்பார், கடைசில கை விட்டுடுவார்
//வீ.எம் நம்ம கோயிஞ்சாமிக்கு எதிரா யாரோ கிளம்பியிருக்காங்க/
சரியா சொன்னீங்க.. அதுக்குள்ள 3 - வந்தாச்சா.. இப்பொவெல்லாம் என் பதிவுல தவறாம அந்த 3 - வருது :(

விச்சு : வீ எம் க்கு ரகசிய ஏஜென்ட் இருக்காங்க.. எல்லாம் தெரிஞ்சுடும்..
சிறுகதை எழுதி பட்டம் வாங்கியது நானில்லை.. தப்பு.. அப்புறம் நம்ம மாயமானவர் தெரியாதா?? ஐயோ..
கோனார் நோட்ஸ் தேவை தான்..

ஜெகதீஸ்: நீங்க கை தட்டினதா நென்னைச்சுகிட்டேன்.. நன்றிபா..

தானு : தெளிவா புரியுது நான் எந்த ரகம்னு.. நீங்க?? :)

சின்னவரே: அந்த காலம் எல்லாம் போயாச்சு.. இந்த காலத்துல எங்க கோயிஞ்சாமி மாதிரி உங்க carlin கேள்வி கேட்டிருக்காரா?

தருமி : பஞ்ச் பாண்டவர்கள் மொத்தம் 6 பேருதானே? :) பாஞ்சாலிய தனியா பிரித்து பார்க்க முடியுமா? சொல்லுங்க...
அப்புறம்..அது யாரு நீங்க நெனைக்கிற பஞ்ச பாண்டவர்கள்??? தெளிவா சொல்லிடுங்க.. :)
சித்தன்: //வீ எம் –னா சிண்டு முடிதல்!// - சித்தன் வாக்கு சிவன் வாக்கு..ஆனா சிண்டு முடிஞ்சு, அதை பிரச்சனை இல்லாம அவிழ்த்தும் விடுவேன்.. :)
ராமநாதன் : தாராளமா , விளம்பரம் பன்னுங்க சார்.. அரட்டை அரங்கத்துக்கு நடுவுல விளம்பரம் இல்லாமயா.. :) நன்றி
பா. ராமா : ஓ!! தமிழ் முரசு படிக்கிற ஆளா நீங்க.? :)
பந்தயம் கட்டின உங்களுக்கும் , ரம்யா அக்காக்கும் தான் அது எந்த கடைனு தெரியும்..

ஆமாம் சார், அந்த கோழி - முட்டை பதில் தான் இதுக்கு இன்ஸ்பிரேஷன் :)

அல்லாருக்கு இன்னொரு நன்றி!

கலை said...

kalakkal pathilkaL. :)))

வீ. எம் said...

Mikka NanRi kalai !


VM

குழலி / Kuzhali said...

கலக்கல் தல.... கலக்கல்... கோயிஞ்சாமி சிங்கப்பூருக்கு வராராமே?

வீ. எம் said...

Thanks thala Thanks!! :)

கோயிஞ்சாமி சிங்கப்பூருக்கு வராராமே

YES,USHAR USHAR USHAR !!

வீ. எம் said...

அடேங்கப்பா சரமாரி - குத்துக்கள் ஒரே நாள்ல.. நல்லா இருங்கப்பா , நல்லா இருங்க !

Agent 8860336 ஞான்ஸ் said...

//அன்னைகு நீங்க, ஞான்ஸ் போனீங்க.. ஞான்ஸ் புல்லாயிட்டாரு.. நீங்க நல்ல புள்ள , தொடல... வண்டிய ஓட்டிட்டு வந்தது யாரு??? அப்புறம் அந்த பார்க்கிங் இல்லைனா ..என்ன பன்னியிருப்பீங்க..??//

எனக்கு புல்லா ஊத்திவிட்டவிங்க வாழ்க.. வாழ்க.. வாழ்ழ்ழ்ழ்காஆஆ...

ஞான்ஸ் / NJ / ஞானபீடம்

வீ. எம் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்த ஞான்ஸ் , வருக வாழ்க

மூர்த்தி said...

அன்பின் வீஎம்,

எப்படிங்க இந்த மாதிரிலாம் சிந்திக்கிறீங்க? நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் வலை வந்தேன். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

எல்லாம் நம்ம கனேஷ் போட்ட கோடு, அது மேலயே ஒரு சின்ன ரோடு போட்டேன்..
வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி மூர்த்தி

Go.Ganesh said...

//எல்லாம் நம்ம கனேஷ் போட்ட கோடு, அது மேலயே ஒரு சின்ன ரோடு போட்டேன்..//

வீ.எம் நீங்க போட்ட ரோட்டுல நான் கோடு போட்டது எனக்கே மறந்து போச்சு

Ramya Nageswaran said...

//அதனால கலர்னு தைரியமா 1000 ரூ பெட் கட்டிட்டாரு..ஆரஞ்சு ஜூரம்யா அக்கா ஜெயிச்சுட்டாங்க//

அட, எனக்கு ரூ.1000 கிடைச்ச பதிவுன்னு தெரியாம போச்சே!! வீ.எம் தம்பி, முதல்லே அதை மணியார்டர்லே அனுப்பி வைக்கிற வழி பாருப்பா. கொலு செலவேல்லாம் நிறைய இருக்கு!!

இந்த பதிவுக்கு தொரை எல்லாம் வந்தாங்கன்னா தலையை பிச்சுகிட்டு ஓடிடுவாங்க..அதான் word verification இல்லாம தெனாவட்டா இருக்க முடியுது!! :-)

வீ. எம் said...

//வீ.எம் தம்பி, முதல்லே அதை மணியார்டர்லே அனுப்பி வைக்கிற வழி பாருப்பா //

eppavo anupiten.. innum varalaye.. aiyoo... indha postal department eppavum late dhan .. :)

//தலையை பிச்சுகிட்டு ஓடிடுவாங்க//
hehehe :)

துளசி கோபால் said...

ஏம்ப்பா வீ.எம்,

ஷ்ரேயா அக்காவும் ரம்யா அக்காவும் ஷாப்பிங் போய் ஜூஸ் குடிச்சு ஆனந்தமா இருக்கச்சொல்ல இப்படி சாமிச்செடி அக்காவை 'மேலே '
அனுப்ப முடிவு பண்ணி 130 போறவண்டியிலே உக்காத்திவச்சுட்டியேப்பா(-:

உசிரோட திரும்ப வந்தாங்களா,
இல்லையா? :-)

குழலி / Kuzhali said...

எங்க தல ஆளையே காணவில்லை?!

வீ. எம் said...

தல,
போன வார இறுதியில கஜினி படம் பார்த்தேன் தல.. அது நம்ம அசின் பண்ண லொள்ளு பார்த்து மயங்கி போயி சைலன்ட் ஆயிட்டேன்...அதான் :)

வீ. எம் said...

//உசிரோட திரும்ப வந்தாங்களா, இல்லையா? :-) //
என்ன அக்கா இப்படி அசடா இருக்கீங்க???? திரும்பி வராம இருந்திருந்தா இப்படி வந்து கருத்து போட்டிருக்க முடியுமா?? அசடு அக்கா நீங்க.. ஹி ஹி ஹ் ..

விளையாட்டுக்கு...


வருகைக்கு நன்றியக்கோவ்...