பா ம க வின் அடேங்கப்பா போராட்டம்..

பா ம க வின் அடேங்கப்பா போராட்டம்..

மருத்துவரின் தீவிர மது எதிர்ப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அவரின் ஆனைக்கினங்க அவரின் கட்சியினரும் தீவிர மது எதிர்ப்பில் தங்களை ஈடுபத்திக்கொண்டுள்ளதும் நாம் அறிந்தது.. இந்த மது ஒழிப்புக்குழுவினர் கடந்த மாதம் மதுவிலைக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் அனைத்து மதுக்கடைகள் முன்பும் ஆர்பாட்டம் நடத்தியது நாம் அறிந்ததே.
எல்லாம் நாம் அறிந்தது என்றால் நாம் அறியாதது என்ன??
கீழே படங்களை (தினமலரில் வந்த) பாருங்கள் - அறியாததை அறிந்துக்கொள்ளுங்கள்..பாத்திரத்தோடு.. சாரி பாட்டிலோடு ஒன்றிவிட்டாரோ, இந்த மகளிரனி உறுப்பினர்...
மருத்துவர் தான் விளக்கவேண்டும்...
மருத்துவரே - மறந்தும் கூட நீங்கள் ஆனுரை எதிர்ப்பு / ஒழிப்பு போராட்டம் என்று எதையும் நடத்திவிடாதீர்கள்.. தமிழக மக்கள் நலன் விரும்பி கேட்டுக்கொள்கிறோம்..

தினமலர் கமென்ட் : இது தான்பா போராட்டம் : சென்னை அம்பத்துரில், தீவிர மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி பா ம க மகளீரணியினர், டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் உச்சகட்டமாக, கொட்டி உடைப்பதற்காக பீர் மற்றும் மது பாட்டில்கள் மகளிர் அணிக்கு வழங்கப்பட்டது."உற்சாக" மிகுதியான பென் ஒருவர் பீரை உள்ளே இறக்கி உற்சாக கோஷமிட்டார். இதை பார்த்த ரெகுலர் குடிகாரர்கள் குடிக்காதே குடிக்காதே என்ற கோஷம் போட்ட வாயே எப்படி குடிக்குது பார் என்று கமென்ட் அடித்து அதிர்ச்சியடைந்தனர்..
நன்றி: தினமலர்