லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பும் - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலும்

சமீபத்திய, லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் படி அ தி மு க விற்கு 38.3 சதகிவித ஆதரவும், தி மு க விற்கு 25.8 சதகிவித ஆதரவும், தே மு தி க விற்கு 19.5 சதகிவித ஆதரவும் உள்ளது.

இதனடிப்படையில் வலையுலகில் சில பல பதிவுகள் வந்துவிட்டது. ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலை நிச்சயமாக யாரும் தரமுடியாது.

தமிழக தேர்தலுக்கு இன்னும் 2.5 வருடங்களுக்கு மேல் உள்ளது. அரசியலில், ஒரு வார காலமே பல எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திடும் என்பது நிதர்சனம். இந்நிலையில் 2.5 வருடமென்பது அரசியலில் ஒரு யுகம் போல.. ஒளிந்திருக்கும் பல அதிசயங்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் , கேலிகூத்துக்கள், திருப்பங்கள் எக்கச்சக்கமாக நிகழும் சாத்தியம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தங்களின் கருத்துக்கணிப்பில் கூட "இந்த நிலையில் தேர்தல் வந்தால் .. " என்ற அளவிலே தான் இந்த சதகிவிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

2011 ல் சட்டமன்ற தேர்தலுக்கோ அல்லது அடுத்த வருடம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கோ இவருடன் இவர் கூட்டணி என்பது தெரியாத இந்த நேரத்தில், 2009 / 2011 - இரண்டு தேர்தல்களின் முடிவுகள் இந்த கணக்குடன் ஒரளவாவது ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே.

அதிலும் குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகள் என்பது கடைசி நேரத்தில் ஏற்ப்படும் சில சம்பங்களின் அடிப்படையில் அமைவதும், கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து வாக்களிக்கும் ஒரு குறிப்பிட்ட சதகிவித மக்களின் வாக்குகளின் பாதிப்பில் மாறுவதும் உண்டு. கூட்டணியும் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதை கடந்த சில தேர்தலில் பார்த்துள்ளோம்.. ஏன், கடைசி நேர இலவச அறிவிப்புகளும் தங்கள் பங்களிப்பை செய்ததை போன தேர்தலில் பார்த்தவர்கள் தானே..

இன்று இருக்கும் மின்சாரப்பற்றாக்குறை , டீசல் தட்டுப்பாடு , விலைவாசி போன்ற விசயங்கள் 2.5 வருட காலத்தில் மாறலாம்.. நிலமை சீராகலாம் , யார் கண்டது, தேர்தலை முன்னிட்டு இலவச டீசலும், இலவச மின்சாரமும் கூட 2011 மார்ச் மாதம் முதல் கிடைக்கலாம்.. முன்பெல்லாம் விலைவாசி உயர்வென்றால் ஆளும்கட்சியை காய்த்தெடுத்த காலம் போய்.. ஊடக வளர்ச்சி மற்றும் பல காரணங்களாலும் இப்போது விலைவாசி உயர்வை, அமெரிக்க பொருளாதாரத்துடனும், சர்வதேச சந்தை விலை நிலவரத்துடனும் ஓப்பீடு செய்வதும், அரசாங்கத்தை குறைகூறிக்கொண்டேனும் , அட என்னப்பா அங்கேயே டீசல் ஒரு பீப்பாய் இவ்ளோ விக்குதாம், இவங்க என்ன பன்னுவாங்க என்பது போன்ற பேச்சுக்களும் கேட்கிறது.

கூட்டணியிலும் பல மாற்றங்கள் வரலாம், இனைந்தே இருப்பவர்கள் பிரியலாம், பிரிந்தோர் சேரலாம், சில கட்சிகளில் கரைந்து போகலாம், புது கட்சிகள் வரலாம்..

எந்த கட்சியின் தலைமையிலும் மாற்றம் வரலாம்.. இதே தலைமை தான் 2011 ல் இருக்கும் என்று அடித்க்துக்கூற முடியாது..


இரண்டு வரியில் சொல்வதென்றால், பொதுவாக 5 வருடங்களையும் மக்கள் அசைப்போட்டாலும், கடைசி 1 - 1.5 ஆண்டுகளின் நிகழ்வுகளே வாக்காளானின் மனதில் வாக்களிக்கும் முன் நிழலாடும்.. பெரும்பாலும் இவையே தேர்தல் முடிவுகளை பாதிக்கவும் செய்யும்

ஆனாலும் இந்த கருத்துகணிப்பு நிச்சயமாக அ தி மு க விற்கு ஒரு எழுச்சி டானிக்காகவும், தி மு க விற்கு கொஞ்சம் கசப்பு மருந்தாகவும் இருக்கும்.. இதனை ஒரு எச்சரிக்கை மனியாக எடுத்து சுதாரித்துக்கொண்டால் தி மு க விற்கு நலம்..
சாதகமான இந்த நிலையை 2011 வரைக்கும் நிலைநிறுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டால் அ தி மு க விற்கு நலம். பார்க்கலாம் யார் புத்திசாலிகள் என்று..

எப்படியோ மீண்டும் அதிமுக அல்லது தி முக தான் என்கிறது இந்த கணிப்பு.. அப்புறம் 2011 நாங்கள் தான் ஆட்சி அமைப்போம், நான் தான் முதல்வர் என்று சொல்லித்திரியும் மற்ற முக்கால் டசன் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்.. :)

திரு ரத்னேஷ் அவர்களின் பதிவில் எழுதியது போல, தி மு க வில் ஸ்டாலின் முயன்று முயற்சி எடுத்தால் 2011 எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்.. சில வருடங்களுக்கு முன் ஸ்டானில் மீது பொதுவாகவே மக்களுக்கு இருந்த ஒரு விதமான விமர்சனம் இப்போது மாறியுள்ளது, அவரின் சமீப கால நடவடிக்கைகள் அந்த பார்வையை மாற்றியிருக்கிறது.. பார்க்கலாம் அவர் என்ன செய்கிறார் என்று.. வேறு பதிவில் அது பற்றி விரிவாக.. !

நன்றீ
வீ எம்

பிராந்தி , பூந்தி, வாந்தி, காந்தி .. டி ஆர் ஸ்பெஷல்


எப்படித்தான் இப்படி ரைமிங்கா அடிச்சுவிடுறாரோ...



நன்றி - குமுதம்
மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறது. இந்த விஜயகாந்த் இரவினிலே பிராந்தி, அதை கரங்களில் ஏந்தி, தேடுவது சாந்தி சுவைக்கு சேர்த்துக்கொள்வது பூந்தி, காலையில் எடுப்பது வாந்தி, இதிலே இவர் எப்படி ஆகமுடியும் மகாத்மாகாந்தி? இவரும் மகாத்மா காந்தியும் ஒன்றா? என்று கேட்டேன். புத்தரும் இந்த போதைப் பித்தரும் ஒன்றா? என்று கேட்டேன். இப்படி இருந்தது என் பேச்சு. அதற்குக் கிடைத்த பரிசுதான் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு. இதில் வேடிக்கை என்னவென்றால் வெடிகுண்டு வீசியவரே போதையில் இருந்தார் என்பதுதான்.
--டி ஆர்