பாவம் , அவரை விட்டு விடுவோமே !!

அவருக்கு வர விருப்பம் இருக்கிறதோ இல்லையோ , அவரின் ரசிகர்களுக்கும், பல பத்திரிக்கைளுக்கும், சில அரசியல் கட்சிகளுக்கும் அவரை எப்படியும் இழுத்து விட வேண்டும் என்பதில் அப்படி ஒரு ஆசை.. ! உண்மையிலேயே சொல்லப்போனால், அவரின் ரசிகர்களின் ஒரு பிரிவினரை தவிர, மேலே சொன்ன மற்ற அனைவருமே சுய லாபத்துக்காகவே அவர் வரவை ஆவலுடன் எதிர்பார்கின்றனர்..
பொதுவாகவே .. சரியாக வருமா ? வராதா ? என்று புரிந்துகொள்ள முடியாத ரெண்டாங்கெட்டான் காரியங்களுக்கு நான் என்று முன்னே வருவதை விட "அவன்" என்று மற்றவரை சுட்டுவது (கைகாட்டி விளையாட்டு) மனித இயல்பு..ஞாபகப்படுத்தி பாருங்கள், பள்ளியில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டு பதில் எதிர்பார்க்கும் வேளையில், விடை தெரிந்த கேள்வியாக இருப்பின் , நான் , நீ என் போட்டி போட்டு பதில் வரும்... அதே வேளையில் , பதில் தெரியாத ஒரு கேள்வியாக இருந்தால்?? மற்றவர் பெயரை எத்தனை முறை சொல்லி இருப்போம்.. சில சமயங்களில் ஏதோ ஒரு தவறான விடையை பக்கத்தில் உள்ள ஒரு எமாந்தவனிடன் சொல்லி .. சொல்லு டா ..சீக்கிரம் சொல்லுட என உசுப்பி இருப்போம்..அந்த மாக்கானும் பெறுமைக்காக , தவறாக விடை சொல்ல, ஆசிரியர் அவனை நையாண்டி செய்வதையோ .. அல்லது திட்டுவதையோ.. சிறிதாவது ரசித்திருப்போம்.... !
இதுவும் ஒரு வகையில் அது போலவே !!

ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இது வரவு, பத்திரிக்கைக்கு இது வியாபரம், அரசியல் கட்சிக்கு இது தொகுதிக்கு 500 , 1000 அதிக வாக்குகள் மற்றும் 10 - 12 கூடுதல் தொகுதியில் வெற்றி. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகருக்கோ இது எதிர்காலம் .. அதை ஏன் யாரும் உனரவில்லை... ??

பத்திரிக்கையோ , மற்ற அரசியல்வாதிகளோ அவரை இழுப்பது சரி ..வியாபார நோக்கம்.. இருவருக்குமே இவர் வந்து , தோற்று போனாலும் எந்த நட்டமும் இல்லை.. "முடி"யை கட்டி மலையை இழுப்போம் , வந்தால் "மலை" போனால் "முடி" என்கிற கணக்குத்தான்.. அவர்களுக்கு இந்த "காந்த்" இல்லையென்றால் வேறொரு "சாந்த்"

ஆனால், "உயிர் உனக்கு" என கோஷமிட்டும், அவர் போஸ்டரில் ஒரு மாடு அரிப்பு அடங்க உடலை தேய்துக்கொண்டால் கூட அந்த மாட்டை எதிரி போல பாவித்து சண்டைக்கு போயும், அவர் வீட்டினுள் இருக்கிறாரா இல்லையா என கூட தெரியாமல் , அவர் வீட்டின் வாசலில் பல மனி நேரம் தவமிருந்தும், அவர் படத்துக்காக 'பன்' வடிவ கொண்டை போட்டால் , அதே போல் கொண்டை போட்டுக்கொன்டு, தெருவில் நடந்தும், எல்லாம் அவரே என் இருக்கும் அவரின் முரட்டு பக்தர்கள் , ரசிகர்கள் கூட இந்த 'கைகாட்டி' விளையாட்டை ஏன் செய்கிறார்கள் என்று தான் புரியவில்லை !!

பத்திரிக்கையையும் , மற்ற அரசியல்வாதிகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டு .. உங்களுக்கு தான் இதை எழுதுகிறேன்..

ரசிகர்களே,
வெள்ளித்திரை என்கிற மாயை உங்கள் கண்களை மறைக்கிறதா?? இல்லை சினிமாவில், நூறடியில் இருந்து குதிக்கும் காட்சியில் 'டூப்' போட்டு எடுத்து விடுவது போல், அரசியலும், அரசாங்கமும் சுலபமானது என்று நினைத்து விட்டீர்களா?
திரையில் அவரை பார்த்து ரசிக்கும் கூட்டம் அனைத்தும் ஓட்டுக்களாய் மாறும் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள் ரசிகர்களே !!

அது உன்மையாயின், சிவாஜி , பாக்கியராஜ் , ராமராஜன்... ஏன், செந்தில் , கவுண்டமணி கூட ஒரு முறையாவது நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள்..

சரி, இவர்களை எல்லாம் திரையில் தான் ரசித்தார்கள் ..ஆனால் எங்கள் தலைவர் ஒரு விழாவிற்கோ இல்லை பொது இடத்திற்கோ வந்தால் போதும் அப்படி ஒரு கூட்டம் என்கிறீர்களா?? அப்படி பார்த்தால், 1970 களில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த கலைஞர் இன்று வரை முதல்வராகவே நீடித்து இருக்க வேண்டும்... சரிதானே?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது?? விஜய் டிவி "மக்கள் யார் பக்கம்" நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ரசிகர் மன்ற தலைவர் திரு. ரஜினி சங்கர் , புள்ளி விவரங்களோடு பேசினார், பார்த்திருப்பீர்கள்.. பாண்டியில் இத்தனை பதிவு செய்த மன்றங்கள் , இத்தனை பதிவு செய்யாத மன்றங்கள்.. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தபட்சமாக இத்தனை நபர்.., அவர் குடும்ப உறுப்பினர் , அதில்லாமல் மன்றம் சாரா ரசிகர்கள்... எல்லாம் சொல்லி இறுதியில் மன்றங்கள் X நபர் X குடும்ப உறுப்பினர் + மன்றம் சாரா ரசிகர்கள்+... .. எல்லா கணக்கும் போட்டு ரஜினி சங்கர் சொன்ன வாக்குகள் படி பார்த்தால் அங்கே போட்டியிட்ட தி மு க கூட்டணி வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கி இருக்க கூடாது.. ஆனால் ..நடந்தது என்ன??? யோசித்து பாருங்கள்...

இன்றைய கால அரசியலுக்கு தேவையான சில தகுதிகள் நிச்சயாக நான் கேட்ட , அறிந்த வரையில் ரஜினியிடம் இல்லை. அதில் 20 - 25% கூட இல்லை..

"கடவுளே" வந்தாலும் அவரை
கட்டிப்போட்டு கான்ட்ராக்ட் விட்டு
காசு பார்க்கும் அரசியல்வாதிகள்
நிறைந்த காலமிது ..


ரசிகர்களே , காமராஜர் , கக்கன் காலத்து அரிசியல் என்ற நினைப்பிலேயே, நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், தயவு செய்து உங்கள் 40 ஆண்டு கால தூக்கத்தை கலைத்துவிட்டு விழித்துக்கொள்ளுங்கள்.... !

ரஜினிக்கு நான் எதிர்ப்பு அல்ல.. சொல்லப்போனால் அவரின் ரசிகன் தான். .ஆனால் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகன் அல்ல , வெறியன் அல்ல.. திரையில் அவர் நடிப்பை ரசித்து ..அவரிடம் உள்ள நல்ல குணங்களுக்காக அவரை மதித்து .. அதே நேரத்தில் அவரின் சில தவறான கருத்துக்களை தயங்காமல் விமர்சனம் செய்யவும் , மற்றவர் செய்யும் விமர்சனத்தில் உன்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளவும் பக்குவப்பட்ட உன்மையான ரசிகர்களில் ஒருவன்.. !

அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் சொல்லவில்லை ..வரட்டும்.. ஆனால் அவர் சுயமாக + and - சிந்தித்து, ஆராய்ந்து முடிவு செய்யட்டும்.. நாம் அவரை வலுக்கட்டாயமாக் இழுக்க வேண்டாம்.. . நாம் இழுத்தா அவர் நடிக்க வந்தார்?? நாம் கதை தேர்வு செய்து கொடுத்தா அவர் படையப்பா வும் , பாபாவும் நடித்தார்.. நாமா அவரை இமய மலைக்கு இழுத்து சென்றோம்?? .. இல்லயே ...அவரின் முடிவு தானே எல்லாம்???? இதையும் அவரே முடிவு செய்யட்டுமே.... ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் வர வேண்டாம் என்பதே என் கருத்து... அவரது ரசிகர்களின் ஒரு பகுதியினரின் கருத்தும் கூட ..
நாங்கள் ரசிகர்களாகவே இருப்போம் ... தொன்டனாக வேண்டாம்.!

அவர் வரவேண்டும் என்று வற்புறுத்தி நாம் ஒரு நாள் மட்டும் 'உண்ணாவிரதம்' இருந்து அழைத்து ...அவரை வாழ்நாள் முழுவதும் பட்டினி போட்டு விட வேண்டாம்.... !!

"ரஜினி ராம்கி" சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதினார் .. "ரஜினி - சகாப்தமா , சப்தமா?" திரைத்துறை பொறுத்த வரையில் அவர் சகாப்தம். மேலும் சகாப்தம் படைக்கட்டும்... அவரை அரசியலுக்கு வலுக்கட்டாயமாக, இழுத்து வந்து "வெறும் சப்தம்" என் மாற்றிவிடாதீர் , ரசிகர்களே !!

கவிஞர் கண்ணதாசன் பாடல் நினைவிற்கு வருகிறது :

"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ..கருடா சவுக்கியமா? ...
யாவரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ...
கருடன் சொன்னது ..அதில் அர்த்தம் உள்ளது"


வேறொரு வலைப்பூவில் பார்த்த வரிகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்..

" ............... இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை இதில் அடக்கம்."

பாவம், அவர் அவராக இருக்கட்டும்.. சுயமாக முடிவெடுக்கட்டும்! அவரின் உன்மையான ரசிகர்களிக்கு நிச்சயம் புரியும் என்ற நம்பிக்கையில்....

இந்த நிலைக்கு ரசிகர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.. ரஜினி அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது.. சொல்லப்போனால் அதிக பங்கு அவருக்கு தான் இருக்கிறது ... எப்படி ????? அதையும் சொல்ல வேண்டும் அல்லவா??

பகுதி 2 ல் சொல்கிறேன் ...

அப்புறம் .. வேரென்ன சொல்லப்போறேன்..வழக்கம் போல தான்.. பிடிச்சிருந்தா ஒரு வரி கருத்து + நட்சதிரத்துல் ஒரு சுட்டு .. மற்ற ரசிகர்களும் படிக்கட்டுமே !!

விரைவில் சந்திப்போம்...

அன்புடன்,
வீ .எம்

26 கருத்துக்கள்:

Pavals said...

கொஞ்சம் பழைய வாசம் அடிக்குதுங்களே..

குழலி / Kuzhali said...

பார்த்து எழுதுங்க தலைவா, அப்புறம் முத்திரை உங்க மேலயும் விழுந்துடப்போகுது, நான் என்னத்த சொல்லப்போரேன் நல்ல பதிவுனுதான் சொல்லுவேன்

Anonymous said...

பார்த்து எழுதுங்க தலைவா, அப்புறம் முத்திரை உங்க மேலயும் விழுந்துடப்போகுது, நான் என்னத்த சொல்லப்போரேன் நல்ல பதிவுனுதான�

Unknown said...

அட, என்னங்க குழலி, முத்திரைக்கு பயந்தெல்லாம் எழுதாம இருக்க முடியுமா?., நியாயமா எழுதிறிங்க!. வந்திரவேகூடாதுன்னு சும்மா அழுத்தி எழுது தல!!

மித்ரா said...

KALAKAL....
Dhool kelapu guru..

anbudan,
mitra (saikrishna)

Anonymous said...

Vazhuthukkal. Nalla alasal. Aratai arangam kazhai kattukirathu. Kalkunga.
Main content width konjam athikap paduthak koodatha..neraya scroll panna vendi irukku.(just an opinion).

வீ. எம் said...

== " தலைவா" , "தல" , "குரு" .... அய்யோ !! எனக்கே இப்பொ கொஞ்சம் ஆசை வராப்ல் தெரியுது டோய் ..!! ==

ராசா : பொஸ்டிங் புதுசு என்றாலும்...மேட்டர் பழசு தானே... கொஞ்சம் வாசம் அடிக்குந்தே..... !!

குழலி : விழுந்துட்டு போகுது விடுங்க , விடுங்க ..இதெல்லா ஒரு சேவை தானே உங்களுக்கும் , எனக்கும் , நம்ம அப்படிபோடு க்கும் .. இதெல்லாம் சகஜமப்பா¡¡¡

அப்படிபோடு : அழுத்தி எழுதலாம்... அப்புறம் முத்திரை குத்தாம , நம்ம மொகத்துல குத்திட்டாங்கனா... ஒரு பயந்தே ...

மித்ரா :- தலைவர் பத்தி எழுதி இருக்கேன் .. நீங்க "தூள்" , "குரு" னு சீயான் , உலக நாயகன் படம் பேரெல்லாம் சொல்றீங்க.... குசும்பு தானே !! :)


எது எப்படியோ... 4 பேருக்கும் + பேர் போடம நட்சத்திரத்த மட்டும் க்ளிக் கின வருக்கும் மிக்க நன்றி !!

வீ .எம்

வீ. எம் said...

ரொம்ப நன்றி டுபுக்கண்னே !!

HTML - அ , ஆ கூட தெரியாம ஏதோ இது பன்னதே எனக்கு பெருசு....

அந்த அகலத்த (width) எப்படி மாத்தறதுனு தெரியாம தானே முழிச்சிட்டு இருக்கேன்..
உதவினா தேவல... !!


வீ .எம்

enRenRum-anbudan.BALA said...

வீ. எம்,
Well written piece !!! kalakkaRIngka, appu :)

My stand is, in a democracy, anyone has the right to enter politics (experienced or not !!!). It is upto the public to embrace or reject him. But, once he/she enters politics, his/her actions are subject to scrutiny / criticism.

Till then, both fans and critics MUST exercise patience and MUST NOT indulge in giving unsolicited advice ;-)

வீ. எம் said...

//Well written piece !!! kalakkaRIngka, appu :)......
both fans and critics MUST exercise patience and MUST NOT indulge in giving unsolicited advice ;-) ///

நன்றி ஆனா எங்கேயோ இடிக்குதே பாலா அப்பு !!!!!

ப்ரியன் said...

வணக்கம்,

நான் தீவிர ரசிகன்(இப்பொதும் கூட "ரா ரா...கேட்டுகொனண்டேதான் இதை மடல் செய்கிரேன்) அனாலும் உங்களின் பல கருத்டுக்கள் ஏற்புடையன்வே!...ரஜினி ந்ல்ல நடிகர் ந்ல்ல மனிதர்(ஆ.வி லே தலைவர் படம் ரசிகர்கள் பற்றிய கருத்துக்கள் படித்து கண் கல்ங்கிடேன் பா)...நல்ல ஆன்மீகவாதி...ஆனால் நல்ல தலைவர் அல்ல அவருடைய குணத்திற்க்கு கண்டிப்பாக அரசியல் ஒத்துவராது என்பது என் கருத்து...அவரும் வரமாட்டார் பா...அவருக்கு தெரியும் தனக்கு அது விதிக்கப்டவில்லையென...ந்ல்ல பதிப்பு...வாழ்த்துக்கள் நண்ப்ரே

Ganesh Gopalasubramanian said...

வீ.எம் கருத்துக்கள் ஒவ்வொன்றும் நெற்றிப் பொட்டில் குண்டு துளைத்தது போல இருக்கின்றன.

என்னுடைய சில கருத்துக்களையும் இங்கு இடுகின்றேன்.

//வெள்ளித்திரை என்கிற மாயை உங்கள் கண்களை மறைக்கிறதா??/
நல்ல கேள்வி. வெள்ளித்திரை ஒருவித மாயை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது கண்ணை மறைப்பதில்லை. இதை நான் ஏற்கனவே என் பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். கோட் சூட் அணிந்த "படித்த" ஒருவரும் கூட சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினி அவர்கள் தோன்றும் முதல் காட்சியில் காலைத் தொட்டு கும்பிட்டார். நானும் ஒரு ரஜினி ரசிகன். ஆனால் இந்த அளவுக்கு இல்லை. அதனால் நேரடியாக அவரையே கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

சிறு வயதில், தான் கவலையை மறந்து தலைவரை ரசித்ததாகவும் இப்பொழுதும் அவர் படங்களைப் பார்க்கும் பொழுது தம்முடைய கவலைகளை மறந்து சந்தோஷமடைவதாகவும் கூறினார். மேலும் இது போன்ற செயல்பாடுகளை அறிவுப்பூர்வமாக பார்க்காதீர்கள் உணர்வுப்பூர்வமாக பாருங்கள் என்று கூறினார்".
நானும் இவர்கள் போன்ற தொண்டர்களையும் ரசிகர்களையும் (குழலி அவர்கள் போல்) இளிச்சவாயர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த கோட் சூட்டைப் பார்த்த (படித்த) பிறகு அந்த எண்ணத்தை மாற்றி கொண்டேன். (குழலி தவறாக எண்ண வேண்டாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)

இவரைப் போன்ற ரசிகர்கள் அதிகம் அதுவும் குறிப்பாக ரஜினிகாந்த் அவர்களுக்கு அதிகம். இவர்கள் எல்லோரும் சிந்திக்க கூடியவர்கள். அவரவர்களுக்கு கவலைகள் அதிகம். அவற்றை மறப்பதற்க்கு அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. இவர்களும் ஒரு சராசரி இந்திய பிரஜையைப் போல கொஞ்சம் சுயநலம், கொஞ்சம் குடும்பம், கொஞ்சம் பாசம் கொஞ்சம் வேஷம் என்று வாழ்பவர்கள் தான். அதனால் ஏழைக்கு உதவுவது, தத்தெடுப்பது, தானம் செய்வது போன்ற நிரந்தர சந்தோஷங்களை இவர்களால் கிரகிக்க முடிவதில்லை. ஆகையால் சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை தங்கள் வாழ்க்கையின் ஒரு பிடிப்பாகவே பார்க்கிறார்கள். அதில் பிரச்சனைகளை சமாளித்து ஒருவன் வெற்றி பெறுகிறான் என்றால் இவர்களுக்கு அவன் மிகப்பெரிய பிம்பமாக தெரிகிறான். அதனால் தான் ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

உணர்வுப்பூர்வமாக ஒருவனை பாதிக்கும் படங்கள் தான் அதிகம் வரவேற்க்கப்படுகின்றன. பாட்ஷாவையும் படையப்பாவையும் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கும் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோவைப் பார்த்ததாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள். இதுவே அந்தப் படங்களின் வெற்றிக்கு காரணம். அதனால் வெள்ளித்திரை கண்ணை மறைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததில்லை. அது ரசிகனின் கவலைகளை மறக்கச் செய்கிறதென்பதே உண்மை.

// இன்றைய கால அரசியலுக்கு தேவையான சில தகுதிகள் நிச்சயாக நான் கேட்ட , அறிந்த வரையில் ரஜினியிடம் இல்லை. அதில் 20 - 25% கூட இல்லை..//
இவ்வளவு தூரம் ஒருவன் யோசிக்கிறானே. அப்பவே இது தெரிஞ்சு போன விஷயம் சார். (ரஜினிகாந்த் அவர்களிடம் 10% கூட அந்த தகுதிகள் கிடையாது).

// சுயமாக + and - சிந்தித்து, ஆராய்ந்து முடிவு செய்யட்டும் //
அப்படி விட்டா வரமாட்டார்னு தெரிஞ்சு தானே சொல்றீங்க..

// நாங்கள் ரசிகர்களாகவே இருப்போம் ... தொன்டனாக வேண்டாம்.! //
குழலி அவர்களின் பதிவைப் படியுங்கள் ரசிகன் தொண்டன் இருவர் மீதும் தங்களுக்கு "நல்ல" மதிப்பு வரும்.

//"வெறும் சப்தம்" என் மாற்றிவிடாதீர்//
சபாஷ்

//பாவம், அவர் அவராக இருக்கட்டும்.. சுயமாக முடிவெடுக்கட்டும்!//
சலாம் வாத்தியாரே

//அதையும் சொல்ல வேண்டும் அல்லவா??//
சீக்கிரம் சொல்லுங்கள்

வீ.எம் !! ..இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் வேண்டாமென்று யோசிக்கிறான்........
அமைதி தேடி இமயமலை செல்கிறான்..... இவனிடம் அரசாங்கத்தை கொடுத்தால் "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன?

இது ஒரு பாமரனாய் நான் சில சமயம் எனக்குள் கேட்டுக் கொள்கிற கேள்வி. பலருக்கு இது முட்டாள்த்தனமாக படலாம். சிலருக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம்....... இவனுகளைத் திருத்தவே முடியாதுன்னு பலர் அர்ச்சிக்கலாம்.

தனிமை தேடி, அமைதி தேடி இமயம் செல்கிற எவனும் இவ்வளவு தீங்குகளை (இப்பொழுது செய்யப்படும் தீங்குகளை, களவாடல்களை, சுரண்டல்களை) மனமறிந்து செய்ய மாட்டான் என நினைக்கிறேன். அவன் பேரைச் சொல்லி சுரண்ட நினைப்பவர்களுக்கு இது சரியான வழி. //அவர்களுக்கு இந்த "காந்த்" இல்லையென்றால் வேறொரு "சாந்த்" // அவ்வளவே.

ஆதலால் ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன். ஆனால் ஒரு இயக்கமாக மாறும் பொழுது அவன் மேல் வைத்த நம்பிக்கை கொஞ்சம் குறையத்தான் செய்கிறது.

வீ. எம் said...

கலக்கிப்புட்டீக கனேசு , கலக்கிப்புட்டீக ... மிக பெரிய பதிவையே இங்கே சிறு கருத்தாக கொடுத்துள்ளீர்.. ரொம்ப தான் அடக்கம் சார் உங்களுக்கு. சபாஷ்.. !
தங்களின் "சபாஷ் , சலாமுக்கு " மிக்க நன்றி..

// குழலி அவர்களின் பதிவைப் படியுங்கள் ரசிகன் தொண்டன் இருவர் மீதும் தங்களுக்கு "நல்ல" மதிப்பு வரும். //

நான் "காஜா" குழலியில் ரசிக தொண்டன் . ! :)

//வீ.எம் !! ..இப்படி ஒருத்தன் மக்களை சந்தோஷப்படுத்துகிறான், அரசியல் ..... "கொஞ்சம்" நல்லது செய்ய மாட்டானா என்ன?////

நிச்சயமாக வெகு விரைவில் "பகுதி 2" வரும்..அதில் பதில் இருக்கும்..

பத்மா அர்விந்த் said...

நல்ல பதிவு. அரசியலுக்கு வருவேன் என்று எல்லா திரைஉலக பிரமுகர்களிடம் கேட்பது பத்திரிக்கை நிருபர்கள். அரசியலுக்கு வருவீர்களா என்று ஏதோ விளையாட்டுக்கு வருவீர்களா என்பதைபோல.

enRenRum-anbudan.BALA said...

வீ. எம்,

//நன்றி ஆனா எங்கேயோ இடிக்குதே பாலா அப்பு !!!!!
//


You said:
******சுயமாக + and - சிந்தித்து, ஆராய்ந்து முடிவு செய்யட்டும்
*******

I too stressed the same POINT :)
Your presentation was really good !!!

துளசி கோபால் said...

கலக்கலோ கலக்கல்!!!!!!

பி.கு: என்னை யாரும் இதுவரை கேக்கலை! ஆனாலும் சொல்றேன், நான் அரசியலுக்கு வரப்போறேன்:-)

குழலி / Kuzhali said...

//(குழலி தவறாக எண்ண வேண்டாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)//

நிச்சயமா இல்லீங்க, எப்பவுமே மற்றவர்கள் விமர்சனத்தையும்,கருத்தையும் காதில் வாங்கிக்கொள்வேன்.

குழலி / Kuzhali said...

//நான் "காஜா" குழலியில் ரசிக தொண்டன் . ! :)//

ரொம்ப டேங்க்ஸ் பா

வீ. எம் said...

தேன்துளி மற்றும் துளசி அவர்களே நன்றி !!


\\அரசியலுக்கு வருவீர்களா என்று ஏதோ விளையாட்டுக்கு வருவீர்களா என்பதைபோல \\
விளையாட்டுக்கு வருவது போல் கூட இல்லைங்க தேன் துளி .. ஏதோ டீ குடிக்க 'டீ கடைக்கு கூப்பிடுற மாதிரி ....

\\ பி.கு: என்னை யாரும் இதுவரை கேக்கலை! ஆனாலும் சொல்றேன், நான் அரசியலுக்கு வரப்போறேன்:-) \\

இந்த மாதிரி எத்தனை பேர் கெளம்பி இருகீங்க துளசி?????? , சரி சரி வாங்க... ஒரு வட்டமோ .. மாவட்டமோ எனக்கு கொடுத்தா சரி.. !!

வீ .எம்

வீ. எம் said...

நல்ல பதிப்பு...வாழ்த்துக்கள் நண்ப்ரே

நல்ல பதிப்பென வாழ்த்திய நல்ல நன்பரே ப்ரியன் அவர்களே .. நன்றிகள் !

வீ .எம்

கலை said...

நல்லதொரு பதிவு செய்துள்ளீர்கள். பதிவுகளுடன் கூடவே, அவறிற்கு எழுதப்பட்ட கருத்துக்களும் ஆழமாக உள்ளன. வாழ்த்துக்கள்.

வீ. எம் said...

கலை ,
தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கு மிக்க நன்றி !

Anonymous said...

வி.எம்,

நல்லா அலசிப்பாத்து எழுதியிருக்கீங்க,

கோ.கனேஷ் உங்கள் பின்னூட்டமும் அருமை.

//ஆதலால் ரஜினி என்னும் தனிப்பட்ட மனிதன் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அவனால் என் நாட்டிற்க்கு ஏதேனும் செய்ய முடியுமென்று நான் முழுவதுமாக நம்புகிறேன். ஆனால் ஒரு இயக்கமாக மாறும் பொழுது அவன் மேல் வைத்த நம்பிக்கை கொஞ்சம் குறையத்தான் செய்கிறது.//

உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

வீ. எம் said...

//நல்லா அலசிப்பாத்து எழுதியிருக்கீங்க//

மிக்க நன்றி கோபி !!

கொஞ்சம் மிஸ் ஆனாலும் , தலைவரின் ரசிகர்கள் என்னை அலசிடுவாங்கனு பயத்துல தான் எழுதினேன் :)

குழலி / Kuzhali said...

http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post_06.html

வீ.எம். உங்க பின்னூட்டப்பெட்டியை திறவுங்கள், பின்னூட்டமிட முயற்சி செய்தேன் வேலை செய்யவில்லை

NambikkaiRAMA said...

//"முடி"யை கட்டி மலையை இழுப்போம் , வந்தால் "மலை" போனால் "முடி//
பழமொழியை எவ்வளவு நாகரிகமாக சொல்லி இருக்கிறீகள். என்ன ஒரு அவையடக்கம்! :))