குங்குமம் கேள்விகள் - என் பதில்கள்

பாஸ்டன் பாலா , குங்குமத்தில் வந்த கேள்விகளை அவர் வலைபூவில் போட்டு பதில் கேட்டிருந்தார்.. என் பதில்கள் இதோ இங்கே !!

நன்றி : திரு பாஸ்டன் பாலா (http://etamil.blogspot.com/2005/06/blog-post_111881044089605095.html)

குங்குமம் கேள்விகள்
ராஜ்குமார், காரப்பாடி:பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?

க தியாகராசன், குடந்தை: நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?

அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம் : பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?எஸ்

அபுதுல்லா அஹமது, நாகூர் : தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்ராஜ்குமார்,

வீ எம் பதில்கள்

பதில் 1 : இன்றைய கால கட்டத்தில் பேசாமல இருந்து மற்றவர்கள் உன்னை பற்றி பேச வைப்பது தான் பெஸ்ட்

பதில் 2: நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் !

பதில் 3: கொசுக்களாவது பாதுக்காப்பாக இருகட்டுமே என நல்ல எண்ணம் தான்!!

பதில் 4: என் மன் எனக்கு சொந்தம் - தேசபக்தி , இன்னும் ஒருபடி மேலே போய் , எனக்கு தானே சொந்தம்..நான் அழிப்பேன் என சொல்வது தீவிரவாதம்.

10 கருத்துக்கள்:

அப்டிப்போடு... said...

//நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?//

மூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா

இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைக்கும் உங்கள் அன்பு சகோதரி.

வீ.எம்., நாலும் தெளிந்த நல்லவரா?., பொழச்சுகுவிங்கப்பு!!!

வீ. எம் said...

" அப்படியெல்லாம் இல்லை அப்படிபோடு சார்... தப்பா நெனச்சுடாதீங்க "
கோபாலபுரமாச்சும் ஓரளவு ஒட்டும்..... நமக்கும் போயஸ் தோட்டத்துக்கும் ரொம்ப தூரம்..
நான் முதல்ல போட நெனச்ச பதிலே வேற .. நல்லா இருக்காதேனு இப்படி மாத்தினேன்..
"நாலும் பார்த்து - தெளிந்து .... " நல்ல படிச்சு பாருங்க .. ஏதாச்சும் புரியும்.... :)

என் "அவரை தேடி" பதிவை நீங்க படிக்கலையா?? படிச்சு பாருங்க

வீ .எம்

குழலி / Kuzhali said...

//இன்றைய கால கட்டத்தில் பேசாமல இருந்து மற்றவர்கள் உன்னை பற்றி பேச வைப்பது தான் பெஸ்ட்
//

இதில் எதுவும் நக்கல் இல்லையே! பதில் நேரடியாக உள்ளது போல் தெரிகின்றது

//நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் ! //
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

//கொசுக்களாவது பாதுக்காப்பாக இருகட்டுமே என நல்ல எண்ணம் தான்!!//
இது வீ.எம். பஞ்ச், இருந்தாலும் இப்போவெல்லாம் லல்லு பீகார் நகைச்சுவைகளுக்கு சிரிப்பதில்லை...

//இன்னும் ஒருபடி மேலே போய் , எனக்கு தானே சொந்தம்..நான் அழிப்பேன் என சொல்வது தீவிரவாதம்//

ம்... புரிந்தமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு என்ன பின் நவீனத்துவமா?

கலக்குங்க...

வீ. எம் said...

நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்... பதில் அனுப்புகிறேன்..இருந்தாலும் .. என் வலைப்பூவை பார்த்தாலே பதில் உங்களுக்கு புரிந்திருக்கும்..

ஹ்ம்ம்.. இப்போ இந்த கருத்தை பற்றி..

4 பதிலும் 4 விதமா இருக்கனும்னு பன்னேன்... அப்போ தானே 4 பேரு 4 விதமா பேசுவாங்க :)
1. நேரடி பதில் ...
2. ஏஏஏஏ சொல்ற மாதிரி . கொஞ்சம் நக்கல்ஸா...
3. பன்ச்
4. குட்டைய கொழப்பி..புரியாத மாதிரி..

சரிதானே குயிலி?????
வீ எம்

Boston Bala said...

>>//நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் ! //
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ


எப்பா... சாமீ! :))))))

குழலி / Kuzhali said...

//நன்றி குழலி சார்.. தங்கள் மின்னஞ்சல் படித்தேன்... பதில் அனுப்புகிறேன்..இருந்தாலும் .. என் வலைப்பூவை பார்த்தாலே பதில் உங்களுக்கு புரிந்திருக்கும்..//

நன்றி வீ.எம்., பார்த்தேன் புரிந்தது... எனது படைப்புகள் பற்றிய விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்...

மாயவரத்தான்... said...

//இப்போவெல்லாம் லல்லு பீகார் நகைச்சுவைகளுக்கு சிரிப்பதில்லை//

ஆமாம் குழலி சார்.. இப்போவெல்லாம் அந்தக் குறையை தான் தினமும் நம்ம தமிழ்நாட்டு லல்லு போக்கிடறாரே. கூடவே அவரோட மகனும்!

//உங்கள் அன்பு சகோதரி//

அப்படிப்போடு... இந்த வார்த்தை காப்பிரை holder நம்ம தமிழ்குடிதாங்கி!

வீ. எம் said...

பாஸ்டன் பாலா & மாயவர்ஸ் அவர்களே மிக்க நன்றி !
ஏன் மாயவர்ஸ் அன்னே, நம்ம குழலி வாயை கிளற பாக்கறீங்க..
இப்போ பாருங்க அவர் இதுக்கு ஒரு தனி போஸ்டிங் போட போறாரு. !

Go.Ganesh said...

வீ.எம்...... இந்தப் பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்

ஆனா கொஞ்சம் சீரியசாக ஏதாவது விஷயத்தைப் பற்றி எழுதுங்களேன்....... ரஜினி பதிவு மாதிரி

வீ. எம் said...

இந்த பதிவே இன்னொரு பதிவுக்கு கமன்டாக எழுதியது தான் :)
இந்த பதிவுக்கு நோ கமன்ட்ஸ்னு ஒரு கமென்ட் போட்டதுக்கு நன்றி கனேஷ்:)
சீரியஸா எழுதுறதுக்கு நடு நடுவே இப்படி கொஞ்சம் கிளுகிளுப்பா..சே ... கலகலப்பா கொஞ்சம் எழுதலாம் தானே !! :)
வீ எம்