செய்திகள் - சுட சுட !!

இன்றைய(15-5-05) மாலை நாளிதழில் வந்துள்ள 2 செய்திகள் பற்றியது இந்த பதிவு.பல நல்ல செய்திகள் வந்துள்ளது, சந்தோஷம், ஆனால் கீழே உள்ள இந்த இரண்டு செய்திகள் சற்று நெருடலாக இருக்கவே .. என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்...செய்தி 1 :
இந்த செய்தியை படித்தபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. இது எந்த நோக்கத்தில் பிரசுரிக்க பட்டுள்ளது என்று இன்னும் யோசித்து கொண்டிருக்கிறேன்.. அந்த செய்தித்தாள் நிறுவனம் ,
  • உன்மையிலேயே இந்த செய்தி முக்கியமானது, மக்களை சென்றடைய வேண்டும் என்பதனால் இதை போட்டுள்ளதா?? - இல்லை
  • நேற்று சர்குலேஷன் மிக குறைவு..இன்று உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இவரை பற்றி எழுது வேண்டும்.. ஆனால் என்ன எழுத?? எதோ ஒன்று , இதை எழுதுவோம் ... தலைப்பை பார்த்து ஒரு 1000 பிரதி அதிகம் விற்கட்டும் என்று அச்சிலேற்றியதா??? இல்லை..
  • ஒரு நாளைக்கு இத்தனை செய்தி வரவேண்டும், கணக்கில் ஒன்று குறைகிறது என்று இந்த முக்கியமான செய்தியை சேர்த்தார்களா??
ஏதோ , யார் அந்த 3 வது "ரிப்பீட்டு" சொல்வது என தெரியாமல் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் செய்வது போலவும்.. இல்லை இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால், நுழைவு தேர்வு எழுதி பின் ரத்தாகியதால் நொந்து போயிருக்கும் மாணவர்கள் சந்தோசம் அடைந்துவிடுவார்கள் என்பது போலவும்... இந்த செய்தியை போட்டிருக்கிறாகள்..அதுவும் தலைப்பு பக்கத்தில்... இப்படி தர்மத்துக்கு செய்தி எழுதுவது தான் ஒரு வேளை பத்திரிக்கை தர்மம் என்பதா??? ... நாளைக்கு ஒரு நடிகர் வீட்டு நாய்க்கு 4 தடவை வயித்தால போச்சுனு எழுதுவாங்க போல...தேவுடா , தேவுடா....செய்தி :2

மேலே சொன்ன செய்தி செய்திதாள் நிறுவனத்தை பார்த்து சிரிப்பதா , அழுவதா ரகம் ..இது ரசிகர்களை பார்த்து சிரிப்பதா , அழுவதா என்ற ரகம்..

வீரப்பன் மனைவியிடம் வி.கா ரசிகர்கள் சென்று கட்சியில் சேர சொல்லியுள்ளனர்.. அவர்கள் சொன்ன காரணத்தை பாருங்கள்... "கீழிருந்து மேலே உள்ள 3 வது பத்தியை (para) படியுங்கள்... அதை எழுத கூட மனம் வரவில்லை....
அட மாக்கான்களா...எப்போ மாற போறீங்க...???? வேறென்னத்த சொல்ல... அவங்களும் யோசிச்சு சொல்றேனு சொன்னாங்களாம்..இவங்க கேட்டுட்டு வந்திருக்காங்க..


-- நீங்க என்ன சொல்ல போறீங்க .. கருத்துபெட்டில சொல்லுங்க ---
வீ எம்

22 கருத்துக்கள்:

குழலி / Kuzhali said...

//ஏதோ , யார் அந்த 3 வது "ரிப்பீட்டு" சொல்வது என தெரியாமல் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் செய்வது போலவும்.. //

சாத்துறீங்க தலைவா....

இரண்டு செய்திகளையும் படிக்கும் போது சத்தியமாக அழுவதா சிரிப்பதா எனத்தெரியாமல் நொந்து கொண்டேன்...

நன்றி - பத்திரிக்கையின் பெயர் போட்டுவிடுங்கள் , காப்புரிமை பிரச்சினை வந்து விடப்போகின்றது...

வீ. எம் said...

//காப்புரிமை பிரச்சினை வந்து விடப்போகின்றது//
நல்ல வேளை என் மேல வழக்கு வராம காப்பாத்திடீங்க குழலி... !

நன்றி : www.maalaimalar.com

//சத்தியமாக அழுவதா சிரிப்பதா எனத்தெரியாமல் நொந்து கொண்டேன்...//
ஏதோ ஒன்னு செய்தீங்களே ..அது வரைக்கு சந்தோஷம்... :)

வீ எம்:

Anonymous said...

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|வீரப்பன் வன்னியதிலகம் என்று சொன்னார்களே? மருத்துவர் ஐயா கட்சியிலே சேராமல் முத்துலச்சுமி கேப்டன் கட்சியிலே சேர்வது குறித்து எந்தத் தமிள்க்கூலிடாங்கி ஆவது இன்னும் எழுதாதது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது|

Agent 8860336 ஞான்ஸ் said...

//இப்படி தர்மத்துக்கு செய்தி எழுதுவது தான் ஒரு வேளை பத்திரிக்கை தர்மம் என்பதா??? //

இப்டி தர்மத்துக்கு எழுதாட்டி,
பேப்பர காசுக்கு விக்க முடியாது; தர்மம் தான் பண்ணனும். !

-----------------
யோக்கியன் வர்றான்; சொம்ப தூக்கி உள்ள வையி. - ஒரு பழமொழி !

Agent 8860336 ஞான்ஸ் said...

இன்னாவோ தெர்ல, எனக்கு இந்த வீ.எம்.-ம
தாக்கி comment உடாட்டி தூக்கமே வரமாட்டேங்குதுபா !
நா சொல்றதுல எதுனா, ராங்கு கீதாப்பா !!

அப்டிப்போடு... said...

நான் ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன்., போட்டவுடன் கருத்து சொல்லுங்க.

பினாத்தல் சுரேஷ் said...

muttikkiren muttikkiren!

We are interested in these matters more than GSLV-3's payload!

vidhiyee vidhiyee thamizhach chaathiyai enna seyya ninaiththay?

(ps: forgive me for typing in english-- veettula kalappai thuru pidichiruchi)

துளசி கோபால் said...

ஏம்ப்பா, வீரப்பன் மனைவி 'சினிமா'லே நடிக்கத்தயார்னு சொன்னதா வந்ததே!

அட தேவுடா?

PositiveRAMA said...

வீ.எம்.. அந்த வீரப்பன் பெஞ்சாதியை நம்ம (அரசியல்)மக்கள் CM ரேஞ்சுக்கு கொண்டுபோனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை..நம்ம மக்களுக்கு இரக்க குணம் ரொம்ப
ஜா(ஸ்)திங்க! என்னைக்குதான் இந்த சமுதாயம் திருந்துமோ!

Go.Ganesh said...

வீ.எம் ஒண்ணுமே பெறாத விஷயங்களை அவர்கள் செய்தியாக்குகிறார்கள்.
அதையே கொஞ்சம் நக்கலுடன் கண்டித்து நீங்கள் வலைப்பதிவாக்குகிறீர்கள்.....

உமக்கு கற்பனா சக்தி அதிகமய்யா........

ஒரு மோசமான ஜோக் சொல்லட்டுமா....

வீரப்பன் செத்ததும்..... வீரப்பன் மனைவி சிவகாசி ஜெயலட்சுமி கிட்ட போய் கத்துனாங்களாம்.......
என்னன்னு கத்துனாங்க தெரியுமா.......... உன் ஆளுங்கள ஏவி விட்டு என் ஆளை கொன்னுட்டேயில்லன்னு கத்துனாங்களாம்.........
இதுவும் மாலைமலரில் தான் வந்தது என நினைக்கிறேன்.........

today's newspaper is tomorrow's wastepaper........

மாலைமலர் ரொம்பவே futuristic......அதனால அது இன்னைக்கே wastepaper......:-(((

பதிவு அருமை. வாழ்த்துக்கள்

Anonymous said...

Hello VM,

All your posting are good...
Please let us know when will you complete Rajni's posting - second part... I was expecting that one also...

Continue posting, many people around me are regularly reading your blogs.

வீ. எம் said...

thanks for the nice words anonymous..it will be coming very soon..


//many people around me are regularly reading your blogs. //
so all of you going to a browsing center as a group and seeing my postings :)

kidding!
V M

வீ. எம் said...

நன்றி கனேஷ்,

///இன்னைக்கே wastepaper......:-((( //
அது வேஸ்ட் பேப்பர் ஆனதுல உங்களுக்கு என்ன அவ்ளோ கஷ்டம்.. sad face la இருக்கீங்க??

நல்ல ஜோக் சொன்னதுக்கு ஒரு நன்றி !!

வீ எம்

இராமநாதன் said...

நல்ல பதிவு வீ.எம்.

மாலைமலர் வெறும் tabloid. அவர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. இதில் வி.கா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூளையைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கு. இவர்களெல்லாம் நாளைய எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களா?

தியாகி பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி எம்.பி ஆகும் போது, முத்துலட்சுமி சி.எம் ஆக ஆசைப்படக் கூடாதா?? :)

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
குழலி / Kuzhali said...

//தியாகி பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி எம்.பி ஆகும் போது, முத்துலட்சுமி சி.எம் ஆக ஆசைப்படக் கூடாதா?? :)//

அட்றா... அட்றா... இதுதான் இராமநாதனின் குத்து (பஞ்ச்)

Dala (anonymous) said...

Hello VM,

I am working in a software company in Pune, here many of my tamilian friends are reading your blogs.
Thats what i meant.

Thanks
Dala.

வீ. எம் said...

I was just kidding yaar .. !
thanks dala for that information...

since you said Pune...
I will be in Pune on an official assignment from june 27 to july 25.. our office is in magarpatta city (cyber city)

V. M

வீ. எம் said...

ஞான்ஸ்,

//இன்னாவோ தெர்ல, எனக்கு இந்த வீ.எம்.-ம
தாக்கி comment உடாட்டி தூக்கமே வரமாட்டேங்குதுபா !//

ராங் இல்லபா !
எனக்கும் என்னமோ தெர்ல பா... ஞான்ஸ் வந்து தாக்கி கமெண்ட் உடாட்டி , தூக்கமே வரல பா !!

அப்படிபோடு,
//நான் ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன்., போட்டவுடன் கருத்து சொல்லுங்க.//

நிச்சயமா .... ! எழுதிட்டு , தலைப்ப சொல்லுங்க ! போட்டு தாக்கிடுவோம் !

பாசிடிவ் ராமா..
மக்களுக்கு இரக்க குணம் ஜாஸ்தி.... உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி ! :)

கோ கனேஷ்,
//வீ.எம் ஒண்ணுமே பெறாத விஷயங்களை அவர்கள் செய்தியாக்குகிறார்கள்.
அதையே கொஞ்சம் நக்கலுடன் கண்டித்து நீங்கள் வலைப்பதிவாக்குகிறீர்கள்.....///

எனக்கும் அவங்களுக்கு என்ன வித்தியாசம்னு கேக்குறீங்களா?? :)

துளசியக்கா,
//ஏம்ப்பா, வீரப்பன் மனைவி 'சினிமா'லே
நடிக்கத்தயார்னு சொன்னதா வந்ததே//

வரட்டும் , அவருக்கு ரசிகர் மன்றம் வரட்டுமே.. என்ன கெட்டுபோக போவுது !! :)

//இவர்களெல்லாம் நாளைய எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களா?//

சரியா சொன்னீங்க இராமநாதன்... தமிழக நெலம இப்படி போச்சே !! :)

சுரேஷ் - கலப்பைய கிஷ்னாயில்ல ஊற போடுங்க !!


மத்தபடி எல்லோர்க்கும் நன்றிபா !!

வீ எம்

மாயவரத்தான்... said...

ராமநாதன் சார்.. உங்களுக்கு DALAன்னு இன்னொரு பேரு இருக்கோ?!

இராமநாதன் said...

தலீவா
பூனாவுக்கு ஆட்டோ ஒட்ட மாஸ்டர் ப்ளான் போடறீங்க போலிருக்கு. இந்த DALA அவரு மாட்டுக்கு சிவனேன்னு கம்பூட்டர தட்டிக்கினுகீறாரு.

நமக்கும் அவர்க்கும் ரொம்ப தூரம்..

இந்த தமில்மணத்துலகூட இங்கிலிபீசுல இருக்கற பதிவுகள தார் ஊத்தி அழிக்க ஒரு வழி கண்டுபிடிங்க தல..

--
இராமநாதன்

மாயவரத்தான்... said...

//அவரு மாட்டுக்கு சிவனேன்னு கம்பூட்டர தட்டிக்கினுகீறாரு.//


அட.. 'மாட்டுக்கு' கம்ப்யூட்டர் தெரியுமா?!

இங்கிலீஷ் பதிவுகளை தார் ஊத்தி அழிக்க உலகத்திலயே இப்போதைக்கு பேடண்ட் ரெண்டு பேர் கிட்ட தான் இருக்கு..! So, I'm so sorry...I'm helpless..!!!