எப்போ வருவேன் ... எப்படி வருவேன் , யாருக்கும் தெரியாது ஆனா ....

சென்னையில் ரொம்ப கஷ்டமடா சாமி... ! சம்மர் வந்தாலும் வந்துச்சி, தூங்க முடியல... !! அப்படி இப்படி வேலையெல்லாம் முடிச்சு அப்பாடானு 11 மனிக்கு படுத்து.. என்னடா 5 நாள் ஆச்சு வலைப்பூவில் எழுதி , எதைப்பத்தி எழுதலாம் என யோசனை.. "பாவம் அவரை விட்டுவிடுங்களேன் .. பாகம் 2 " எழுதனுமே... சரி அதுக்கு பாயிண்ட்ஸ் யோசிப்போம் ... ஹ்ம்ம்ம்.. இந்த பாயின்ட் எழுதலாம் ..ஆனா ரொம்ப strong ஆ இருக்குமோ...அப்புறம் நம்ம ராம்கி அண்னே & தலைவர் ரசிகர் எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க .. டின்னு கட்டிட்டாங்கனா..என்ன பன்றது... !! சரி இது வேண்டாம்.. ஹம்... இப்படி எழுதினா... அய்யோ .. வேண்டாம் சாமீ .. நம்ம "காஜா" குழலி சும்மா இருக்க மாட்டார் ..அல்வா சாப்பிட்ட மாதிரி, பில்ட் அப் கொடுத்துடுவார்... சரி சரி . இதுவும் வேணாம்... அப்போ இது... இது தான் சரி, ஒரு பாயிண்ட் மனசுல வந்தது.. என்ன நம்ம Go Ganesh ஒரு கேள்வியோட அவர் பின்னூட்டததை முடிப்பார்.. இருந்தாலும் "காஜா" கலாய்கறதுக்கு கனேஷ் பெட்டர் .. எப்படி இருந்தாலும் நம்ம ஞானபீடம் ஒரு தாக்கு தாக்குவார்.. பரவாயில்லை.. !

இது வேற , rajinifans.com ல இருந்து கொஞ்சம் பேர் வலைக்கு வந்துட்டு போய் இருக்காக... ஏற்கனவே கடுப்புல இருப்பாங்க.. இதுல எதாச்சும் ஏடாகூடமா எழுதிட்டா ?? so, யோசிச்சு , யோசிச்சு 2 , 3 points தான் தேறிச்சு ... சரினு light a கண்ணு அசந்து போற நேரத்துல..திடீர்னு ஒரு குரல் , அப்பா கூப்டாங்க "வாடா , கொஞ்சம் தண்ணி அடி" .. அட, metro water தான் சாமி... ..கை பம்புல தான் அடிக்கனும்.. மனி என்னனு பார்த்தா 1.45 .. இன்னும் 3 வரி கூட யோசிக்கலை அதுக்குள்ளேவே.. சரி ..எழுந்து போனேன்.. 1 வாரமa இதே பிரச்சனை தான்..போர் ல தண்ணி வரலை.. மெட்ரோ வாட்டர் தான் ... இது சென்னை வாசிகளுக்கு ஒரு சம்மர் ஸ்பெஷல் offer .. வருசா வருசம் இந்த விளையாட்டு தான்.. என்ன பன்றது.. எப்பவும் நாம் இந்த விளையாட்டுக்கு போறது இல்ல.. அப்பா , அம்மா , தங்கை தான் பார்த்துப்பாங்க.. .. அம்மா யும் , தங்கையும் சித்தி வீட்டுக்கு போய் இருக்காங்க... அதனால நான் இன்னைக்கு அப்பாக்கு ஹெல்ப் பன்னனும்... ஏதோ ஈஸியான வேலைனு நெனைச்சு காலைல சரினு சொல்லிட்டேன்..இப்போ தானே தெரியுது...நட்ட நடு ராத்திரியிலே ..லொடுக்கு லொடுக்குனு அடிச்சு , வருவனா பாருனு ..தண்ணி மெல்லிசா வர... அப்பப்பா ... கார்போரேஷன் பியூன் ல இருந்து கமிஷனர் வரைக்கும் திட்டி தீர்த்து .. கவுன்சிலர் ல இருந்து முதல்வர் வரை அர்ச்சனை செய்து.. எதோ சென்னைக்கு மழை பெய்ய வெச்சா தன் சொத்து கொறஞ்சி போயிடற மாதிரி பிகு பன்ற வருண பகவானுக்கு கொஞ்சம் அர்ச்சனை செய்து...

ஒரு வழியா 8 குடம் தண்ணி அடிச்சி போய் அக்கடானு 2.30 மனிக்கு படுத்தா .. தூக்கம் வரும்னு பார்த்தா மறுபடி வலைப்பூ ஞாபகம் தான்.. அடங்கொக்கா மக்கா.. என்னடா இது..இப்படி வலைப்பூ பைத்தியமாயிட்டேன்.... சரி .. சரினு நம்ம சிந்தனை குதிரைய தட்டி விட்டு யோசிக்க ஆரம்பிச்சேன்.. நல்ல எழுத்தாளர்களுக்கு நடு ராத்திரில தான் சிந்தனை வரும்.. (தூக்க வரலை ..வேற வழி...) மறுபடியும் ... "பாவம் ..அவரை விட்டுவிடுங்கள் - பாகம் 2 " தான் ..அட ..என்னமா .. கருத்துகள் (பாயின்ட்ஸ்) வருது இப்போ. அடா அடா அடா .. நம்ம metro water a விட ஸ்பீடா வருது... எல்லாம் மனசுல போட்டுட்டு மனி பார்தா, 4.30 .. ஐயோ ..காலையில வேலைக்கு போவேனும்... ஹ்ம்ம்..ஆச்சரியம் தான்.. வலைபூக்கு நடுவுல இன்னும் office ஞாபகம் இருக்கு டோய்...சரி அப்படியே தூங்கி எழுந்து போய் காலையிலே எல்லாத்தையும் வலைப்பூவில் கொட்லாம்னு..தூங்கி...காலைல இங்கே வந்தா .. நம்ம மண்டையில ஏதோ மக்கர்... யோசிச்ச எதுவும் ஞாபகம் வரலை... நொந்து போயிட்டேன்.. யோசிச்சு யோசிச்சு பார்த்தில் மெட்ரோ வாட்டர் , கைபம்பு எல்லாம் தான் வருது... நம்ம வலைப்பூக்கு யோசிச்ச விஷயம் எதுவும் வரலை... :( so, once again நான் மறுபடியும் யோசிச்சு "பாவம் அவரை விட்டுவிடுங்களேன் .. பாகம் 2" எழுத கொஞ்சம் டைம் வேனும்..
அப்புறம் தலைப்பை பத்தி சொல்லனுமே.. பாதி தான் மேலே இருக்கு.. full a கீழே பாருங்க


" நான் எப்போ வருவேன் ... எப்படி வருவேன் , யாருக்கும் தெரியாது ஆனா நிச்சயமா ..வரக்கூடாத நேரத்துல எல்லாம் வந்து இம்சை பன்னுவேன்...."
- நான் தான் சென்னை metro water :)thalaippu சும்மா வெச்சது... எது கூடவும் link pannadheengo..... !!

அப்புறம், subject ஏ இல்லாம, நல்ல தமிழ் பத்தி எல்லாம் யோசிக்காம.. இஷ்டத்துக்கு எழுதி பார்க்கலாம் , வருமானு நெனைச்சேன் ..ஏதோ சுமார வருது.. ஆன இது கொஞ்சம் கஸ்டமா தாம் இருக்கு...

அப்புரம் தார் பூசும் நன்பர்களே... !! please excuse this time.. - தாரெல்லாம் பூசிடாதீங்க..okay..

see u all soon ! very soon !
வீ . எம்

12 கருத்துக்கள்:

Agent 8860336 ஞான்ஸ் said...

//எப்படி இருந்தாலும் நம்ம ஞானபீடம் ஒரு தாக்கு தாக்குவார்.. பரவாயில்லை.. !//

போய்யா...போ...
போ....ஓஓஓ......
ஓ....டிப்போ...

எல்லாம் இந்த சம்மர் பண்ற வேல. போயி ரெண்டு புளிநாரங்காய (lemon) வாங்கி தலையில தேச்சு, கஷ்டப்பட்டு புடிச்ச தண்ணிய கொஞ்சமா ஊத்தி குளிங்க; சூடு தணியலாம்.

Agent 8860336 ஞான்ஸ் said...

மேற்கூறியபடி செஞ்சா, பேரு எழுதியிருக்கற எல்லாரும் வந்து comment உடுவாங்க, அப்டீங்கற கனவும் கலையலாம்,

வீ. எம் said...

வந்துட்டாரய்யா ..வந்துட்டாரு..... !! நன்றி ஞானபீடம் அவர்களே !!

// பேரு எழுதியிருக்கற எல்லாரும் வந்து comment உடுவாங்க, அப்டீங்கற கனவும் கலையலாம், ///

எல்லோரும் ஞானபீடம் மாதிரி நல்லவங்களா இருப்பாங்களா?

வீ .எம்

Go.Ganesh said...

வீ.எம் ஆனாலும் உமக்கு தெறம் அதிகமய்யா.......எப்படியாச்சும் ஒரு விஷயத்தைத் தேடி பிடிச்சி எழுதி முடிச்சிடறீங்க...... வாழ்த்துக்கள் நண்பரே.... எல்லாருக்கும் இந்த திறமை அமைவதில்லை...... ஆனா அதுக்காக 4.30 அது இதுன்னு பில்டப் குடுத்ததெல்லாம் ஓவர். இருந்தாலும் நம்ம வீ.எம்னு சும்மா இருக்கோம்.

கலை said...

விஷயமே இல்லாத ஒரு விஷயத்தைக் கூட இப்படி சுவாரசியமா எழுத எங்கே கத்துக்கிட்டீங்க??? ரசிச்சு வாசிச்சேன்.

பி.கு. இதை நேற்றே எழுதலாம்னு பார்த்தேன். ஆனால் இணையத்தளம் என்னை அனுமதிக்கவில்லை. காரணம் தெரியாது. :)

வீ. எம் said...

நன்றி கனேஷ் ... இங்க சென்னை சைதை யில் வந்து பாருங்க.. 2.30, 3 மனிக்கு தான் உன்மையா metro water varudhu .. ..என்ன பன்றது.. !!
எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது ..ஆனா..........
// நம்ம வீ.எம்னு சும்மா இருக்கோம் //

:)ரொம்ப நன்றி பா !!

வீ. எம்

Moorthi said...

வீஎம்மு...

சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறீங்க... ஜமாயுங்க.. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு!

வீ. எம் said...

சுத்தி சுத்தி அடிச்சேனா????
இல்லையே .. லொடுக்கு லொடுக்குனு அடிச்சேனு தானே சொன்னேன்.. :)

நன்றி மூர்த்தி !!

Siva said...

Nalla irukku unga posting.

i am also chennai only ... and same water problem..

Siva

வீ. எம் said...

Thanks Siva,

Rather than being "other" why dont u start a blog??

marketing for blogs :) :)

குழலி / Kuzhali said...

// நம்ம "காஜா" குழலி சும்மா இருக்க மாட்டார்//

ஆகா கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான் இன்னாபா நம்மளான்ட கலாய்க்கிற பேட்ட சைடுங்காட்டி வந்த படா பெஜாராயிடுவ அக்காங் சொல்லிட்டேன்

குழலி / Kuzhali said...

ஒரு விடயம் நிச்சயமாக பாராட்ட வேண்டும் அது சரி எப்படி இப்படியெல்லாம் எழுதுகின்றீர் சுவாரசியமாக