அத்வானி - அது-வா-நீ ??

முதலில் பாகிஸ்தானில் ஜின்னா பற்றிய அத்வானியின் கருத்தை படித்தவுடனேயே, புரிந்தது பாரதிய ஜனதா தன்னுடைய அடுத்த கட்ட நாடகத்திற்கான ஒத்திகையை ஆரம்பித்து விட்டதென்று ...

சமீபத்தில் உமா பாரதியை கதாநாயகியாக வைத்து எடுக்கப்பட்ட நாடகம் ஒரளவுக்கு ஓடி முடிந்த பின்.. இதோ அடுத்த கட்ட நாடகம் திரைப்படத்தை மிஞ்சும் விறுவிறுப்புடன் , எதிர்பார்த்த திருப்பங்களுடன் நடந்தேறியுள்ளது.

இத்துனை நாளாக இல்லாத திருநாளாக, நம்ம அத்வானி அண்ணாச்சி ஜின்னா பற்றி திருவாய் மலர்ந்துள்ளார். அதுவும் அவரை பற்றி உயர்வாக பேசியது பார்க்கும் போது, சாத்தான் வேதம் ஓதுவதாகவே இருந்தது... ஆனால் சாத்தான் திடீரென்று ஏன் ஓதுகிறது என்பது தான் புரியாமல் இருந்தது !

பாகிஸ்தான் சென்ற அத்வானி இரு நாடுகளின் நட்பு பாலத்தை வலுப்படுத்த மேலும் ஒரு கல் எடுத்து வைக்கிறாரே என்று சற்று நேரம் தவறாக தான் என்னிவிட்டோம்...பாகிஸ்தான் , முஸ்லிம் எதிர்ப்பு என்பது பி-ஜே-பி ன் உயிர் மூச்சு.. இப்படி அத்வானியே மூச்சை நிறுத்திவிடும்படி பேசி விட்டாரே என பா.ஜ.க வட்டாரமே சற்று ஆடி தான் போய்விட்டது..

அட அத்வானி, பா.ஜ.க வின் மனசாட்சி கூட விழித்துக்கொன்டதே என்ற அச்சரியத்தை கூட 5 நாட்களுக்கு மேல் அவர்கள் விடவில்லை.... பின்னர் தான் மெல்ல புரிந்தது..

அத்வானி ஒரே கல்லில் பல மாங்காய் அடித்து விட செய்த முயற்சி..
வேறோரு நாட்டில், தன் தேன் தடவிய பேச்சால் தான் ஒரு நடுநிலையானவர் என்று முஸ்லீம் சமுதாயத்தின் முட் பறைசாற்றிக்கொள்ளுதல்..அதே வேளையில், தன் ராஜினாமா நாடகத்தின் மூலம்..தன் சொந்த கட்சியினரின் மன ஓட்டத்தை பார்பது..கட்சியில் உள்ள ஜோஷி போன்ற இரன்டாம் கட்சி தலைவர்களுக்கு என் பலம் இது என ஒரு ஷாக் தருவது.. பா ஜ க வின் பொது குழுவை கூட்டி, தான் புகழாரம் சூட்டியவரின் மீதே வசை மாறி பொழிய வைத்து ..
(குழந்தையை கிள்ளி விட்டு , தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்கள்.. பா ஜ க தான் சற்று வித்தியாசமான் கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுபவர்கள் ஆயிற்றே... ஆதலால் தான் முதலில் பாகிஸ்தானில் தொட்டில் ஆட்டிவிட்டு , அப்புறம் இந்தியா வந்து குழந்ததையை கிள்ளி விட்டிருகிறார்கள்...)பா ஜ கா வை பின்னால் இருந்து ஆட்டி வைக்கு ஆர் எஸ் எஸ் க்கு தன் பலத்தை புரிய வைப்பது...இப்படி பல மாங்காய் அடிப்பதில் அத்வானி சற்று வெற்றியும் பெற்றுள்ளார்.. ஆனால் நிரந்தரமா????? காலம் பதில் சொல்லும்..
இறுதியாக, தான் தான் பா ஜ கவின் எல்லாம் என மற்றவரை விட்டு பறை சாற்றிவிட்டு , தன் ராஜினாமா வாபஸ் மூலம் நாடகத்தை முடித்திருக்கிறார்கள்.. கட்சிக்கு அவர் தலைவர் ஆவதும் , போவதும் உட்கட்சி பிரச்சினை.. நமக்கென்ன.. அதற்காக இப்படியா மறைந்த ஒருவரின் பெயரில் ஒரு நாடகம்???
மக்கள் மனதிலிருந்து பா ஜ க மறைந்துவிட கூடாது என்று அழகாக திரைக்கதை எழுதி நாடகங்கள் அறங்கேற்றபடுகிறது.
ராஜினாமா செய்ததன் மூலம், தன் கருத்தில் மாற்றமில்லை என்று பறை சாற்றிய அத்வானி... தன் கட்சியின் செயற்குழுவில் ஜின்னா மீது புழுதி வாரி இறைத்த பின்பு வாபஸ் பெறுகிறாரென்றால் ... என்ன சொல்லுவது????

இடத்திற்கு ஏற்றார் போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம் ஒரு ஜந்து , அத்வானி - அது-வா-னீ????
இவர்கள் திரைத்துறைக்கு வந்திருந்தால் நிச்சயமாக சிவாஜியும், கமலும் காணாமல் போய் இருப்பார்கள்.

-இது என் தனிப்பட்ட ஆதங்கம் மட்டுமே!!
வீ எம்

12 கருத்துக்கள்:

ப்ரியன் said...

நான் பா.ஜ.க அநுதாபி ஆனாலும் சொல்லுவேன் இது எல்லாம் வரப்போகும் பீகார் மாநில தேர்தலுக்காக நடத்தப் பட்ட நாடகங்கள்(திரை,கதி,வசனம்,இயக்கம் - பா.ஜ.க,தாயாரிப்பு ஆர்.எஸ்.எஸ்)

வீ. எம் said...

நன்றி ப்ரியன்.. !

நானும் பா ஜ க வை , சற்று வித்தியாசமான கட்சியாகதான் ஆரம்பித்தில் பார்தேன்... ஆனால் காலப்போக்கில் அவர்களும் பத்தோடு ஒன்றாகி போனார்கள்!
வீ எம்

அப்டிப்போடு... said...

இதுகளுக்கெல்லாம் உடைச்சுதான் பழக்கம்., கல்லெடுத்து என்னாத்த கட்டுங்கன்னு நினைக்கிறிங்க?., அத்வானி அந்த கணக்கு போட்டாரு., இந்தக் கணக்கு போட்டாருங்கிறிங்க., தலைமைப் பதவிலயே இம்புட்டு குழப்படின்னு ஊர் சிரிக்குது அம்புட்டுத்தான் பலன்.

குழலி / Kuzhali said...

//தன்னுடைய அடுத்த கட்ட நாடகத்திற்கான ஒத்திகையை ஆரம்பித்து விட்டதென்று ... //

சத்தியமா நானும் இதைத்தான் நினைத்தேன்...

நாடகம் என நான் நினைத்து பொய்யான ஒரே நிகழ்ச்சி சோனியா பிரதமர் பதவிவேண்டாம் என சொன்னதை...

Moorthi said...

பெரிய இடத்தில் அதெல்லாம் ரொம்ப சகஜம் அய்யா! நாம்தான் கொஞ்சம் சிந்திக்கனும்.

Go.Ganesh said...

வீ.எம் ! மூர்த்தி சார் சொல்வது போல பெரிய இடத்தில் இதெல்லாம் ஜகஜம் நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் இருந்த (இருக்கும்) கட்சியில் அத்வானி போல புல்லுருவிகளும் இருப்பது வேதனைக்குறிய விஷயம்.

சரி சரி நம்ம மன்மோகன் + ஷீலா தீக்ஷித் க்கும் சோனியாவுக்கும் நடக்கும் பிரச்சனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்......

இப்பத்தான் நம்ம வீ.எம் குசும்பை பார்க்க முடியுது.

வீ. எம் said...

குயிலி:
//சத்தியமா நானும் இதைத்தான் நினைத்தேன்... //
இப்போ இப்படி சொல்லிட்டு , பின்னாடி உங்களின் தொடர்ல அத்வானி பற்றி எழுதும் போதி..
அசராமல் ராஜினாமா செய்துவிட்டு , பின் அழகாக வாபஸ் பெற்ற அத்வானியில் துனிச்சலும், சமயோசித புத்தியும் என்னை கவர்ந்தது ..அப்படினு எழுதுனீன்ங்க ......... அப்போ இருக்குய்யா உனக்கு !

அப்படிபோடு:
கல்லெடுத்து என்னாத்த கட்டுங்கன்னு நினைக்கிறிங்க?.,
கடைசியா பாருங்க பா ஜ க வுக்கு கல்லெடுத்து கல்லறை கட்டுவாங்க.. அப்போ தெரியும்..இவங்களுக்கு கட்டவும் தெரியும்னு.. ஹி ஹி ஹி :)

மூர்த்தி :
அது சரி .. நாமெல்லாம் கொஞம் சிந்திச்சிருந்தா எப்பவோ நல்லது நடந்த்ருக்குமே !! என்ன பன்றது !!

வீ எம்

முத்துகுமரன் said...

நல்ல பதிவு வி.எம். அத்வானி ஏதோ ஜின்னா மதச் சார்பற்றவர் என்று சொல்லிவிடவில்லை. ஒரு குறிப்பிட கால கட்டத்தில் அவர் மத்ச்சார்பின்மையை வெளிப்படுத்தினார் என்பது மட்டும் அத்வானி பேச்சின் தொனி. அதுக்குள் பரிவாரங்கள் கூத்தை ஆரம்பித்து விட்டன. வாஜ்பாயும் இதற்கு விதிவிலக்கல்ல. என்ன அவர் கவிஞர் அதனால் நயமாக பேசுவது போல் தோன்றும். மற்றபடி இருவரும் முகமுடிகளே. உள்ளிருப்பது எல்லாம் ஒன்றுதான். அது மதத் துவேசம்

PositiveRAMA said...

வீ.எம்..நீங்கள் ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் என்பதை உங்கள் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
எல்லா கட்சியும் ஒரே குட்டையில விழுந்த மட்டைதாங்கோ.

வீ. எம் said...

முத்துகுமரன் & பாசிடிவ் ராமா :- வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி

முத்துகுமார்: மற்றபடி இருவரும் முகமுடிகளே
சாரியாக சொன்னீர்கள் , முகத்தை தொலைத்த முகமூடிகள் !

பாசிடிவ் ராமா : "ராமா " மற்றும் தன்கள் படத்தை பார்த்தவுடன் தாங்கள் கருத்து எதிமறையாக இருக்கு என்று எண்ணிவிட்டேன் :)
//நீங்கள் ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் //
அதெல்லாம் இல்லீங்கோ..எதோ மனசுல பட்டது ..எழுதினேன் !
வீ .எம்

கலை said...

உங்கள் அரசியல் விமர்சனம் நன்றாகவே இருந்தது. இந்திய அரசியல் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறேன். பாகிஸ்தானில் அத்வானியின் பேச்சு பற்றி அறிந்தபோது, ரொம்பவும் ஆச்சரியப்பட்டேன். மனிதர்கள் மாறுவதில்லையா, அப்படித்தான் போலும் என எண்ணிக் கொண்டேன். உங்கள் விமர்சனம் பார்த்த பின்னர் புரிந்தது. அட, இதற்குள் இத்தனை விடயங்களா, போலித்தனங்களா?

வீ. எம் said...

மிக்க நன்றி கலை அவர்களே, ஆம் இன்னும் பல விடயங்களும்.. ப போலித்தனங்களும் உள்ளது.. தெரியாமல் இருப்பதே நல்லது !

வீ எம்