பார"தீ"
இது நடந்து ஒரு 2 , 2.5 வருஷம் இருக்கும். இப்போ நெனைச்சாலும் நானே மனசுக்குள்ளே சிரித்து வைப்பேன்.. விஷயம் ஒன்னும் பெருசா இல்லை... மேல படிங்க புரியும்...
2002 செப்டம்பர் மாசம் , ஏதோ ஒரு வியாழக்கிழமை மாலை 5.00 மணி இருக்கும், என்னோட மேலதிகாரி என்னை கூப்பிட்டு, வீ எம், பாரதி னு ஒரு new member நம்ம டீம் ல ஜாய்ன் பன்றாங்க .. நான் 1 வாரம் விடுமுறை ல போறதால நீங்க தான் அந்த new joinee ya பார்த்துக்கனும்னு சொன்னாங்க..
சரி சொல்லிட்டு என் சீட் ல் வந்து நான் உட்கார்ந்தாலும் என் பாழா போன மனசு ஒரு இடமா உட்காரல.. பாரதி , அட பேரே எவ்ளோ நல்லா இருக்கு.. fresher nu வேற சொல்லிட்டாரு ..
மனசை அது இஷ்டத்துக்கு அலய விட்டுட்டு..இருந்த இரண்டு வேலையை , அவசர , அவசரமா முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளில் மூழ்கி , கொஞ்ச நேரம் பாரதியை மறந்து இருந்தேன்..
ரிமோட் வெச்சி , ஒவ்வொரு சானலா மாறி மாறி போயிட்டே இருந்தா .. ஏதோ ஒரு சானல்ல ஒரு மெகா தொடர்ல , அந்த காதாநாயகி பேரு "பாரத"¢.. அட , பார்த்த உடனே அவ்ளோ தான்.. மனசு திரும்பவும் பறக்க தொடங்கி விட்டது.. அதோட டீ வி , ரிமோட் , தொடர் எல்லாம் மறந்து ,
பாரதி எப்படி இருப்பா.. திங்கட்கிழமை காலைல வந்தவுடன் என்னை தான் பார்க்க போறா.. மேலதிகாரி 1 வாரம் இருக்க மாட்டார்.. நம்ம கிட்ட தான் எல்லாத்துக்கும் வரனும்..
ஒரு வேளை கல்யாணம் ஆகி இருக்குமோ?? சே சே .,.இருக்காது.. fresher தானே.. சின்ன வயசு.. ஆகி இருக்காது.. "இருக்காது" என்பதை விட "இருக்க கூடாது" என்றே மனசு சொல்லியது ..
தமிழ் பேர் தான், ஆக தமிழ் பொண்ணு .. ஹ்ம்ம்ம்.. அதுக்காக முதல் நாளே தமிழ் ல பேசிவிட வேண்டுமா என்ன?.. ஒரு இரண்டு நாள் இங்கிலிஷ் தான் .. அப்புறம் தான் தமிழ்.. முதல் இரண்டு நாள் ஆங்கிலம், பிரச்சனை இல்லை.. ஆனா, தமிழ்ல ஆரம்பிக்கும் போது வாங்க , போங்க னு பேசனுமா?? வேண்டாம், வேண்டாம்... அப்புறம் ஏதோ ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கும்... வா , போ னு பேசிடலாம்.. நம்மை விட சின்ன பொண்னு தானே... அப்படியே நினைவுகளில் தூங்கி போனேன்..
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேலைக்கு நடுவே அப்பப்போ பாரதி வந்து போனாள்... வெள்ளிக்கிழமை நல்ல நாள், இன்னைக்கு வந்து சேர்ந்திருக்கலாம்.... சரி சரி ..இன்னும் 2 நாள் தானே ... மனசை தேற்றிவிட்டேன்..
வீட்டிற்க்கு வந்து , டின்னர் எல்லாம் முடித்து , படுத்தவுடன், வலுக்கட்டாயமாக, பாரதியின் நினைவுகளை மனதில் இழுத்து அசை போட்டேன்.. அந்த "WKDT" ப்ரொஜக்ட் ல இருப்பாங்களே கவிதா, அவங்களை மாதிரி இருப்பாளா பாரதி?? அவ்ளோ சூப்பர் இல்லைனா கூட , அந்த quality team ல இருக்காங்களே பவித்ரா அப்படி இருந்தா கூட நல்லா இருக்கும்.. யோசனையில் அப்படியே தூங்கி போனேன்..
சனி , ஞாயிறு விடுமுறை .. வேறு பல சொந்த பணிகள் இருந்தபோதிலும், அவ்வப்போது, "வாம்மா மின்னல்" கணக்காக மனதில் வந்து வந்து போனாள். ஒரு வழியா ஞாயிறு மாலை 4 மணி யாச்சு.. சும்மா படுத்துட்டு இருந்தேன்.. மின்னல் கணக்கா வந்த பாரதி , இப்பொழுது வானவில் கனக்கா மனசுல நின்னா.. !
இன்னும் 18 மனிநேரம் தான் பாரதியை பார்க்க, என்ன டிரஸ் போடலாம்?? அந்த வெள்ளை சட்டை ..வேண்டாம்.. அது கொஞ்சம் பழசு, லுக்கா இருக்காது .. அப்பொ அந்த light blue shirt? சரி, இது தான் சரி, போன தடவை போட்டப்ப கூட நம்ம பசங்க என்ன மாப்ள , dressing கலக்கா இருக்கு னு சொன்னாங்க.. நிறைய பேர் அந்த வெளீர் நீல சட்டை with கருப்பு கால் சட்டை நல்லா இருக்குனு சொன்னாங்க.. சரி அதையே போடலாம்...
அம்மா , என் dress ironing கொடுக்கனும் ... எல்லாம் கொடுத்து அங்கே இப்போ தான் வந்தது .. கட்டில் மேல இருக்கு பாரு.. அம்மா சொல்ல.. வந்து கட்டில்ல பார்த்தா 5 சட்டை , 4 கால் சட்டை ரெடியா இருக்கு.. ஐயோ .. அந்த வெளீர் நீல சட்டை இல்லை... என்னமா அந்த light blue ஷர்ட் எங்கே கானோமே... குரல் கொடுத்தேன்.. இல்லப்பா , அதை துவைக்கல ..நாளைக்கு தான்.. அம்மா சொல்ல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. அம்மா ..ஏன் அதை துவைக்கலை?? அது வேனும்மா.. கொஞ்சம் துவைச்சுப்போடேன்.. இல்லை நான் துவைக்கட்டுமா???
ஏன்டா ..அதான் 5 செட் இருக்கே ..அதை போடு... நான் நாளைக்கு துவைத்து போடுறேன்... இல்லமா.. நாளைக்கு முக்கியமான ஒரு க்ளையன்ட் மீட்டிங் .. அந்த ஷர்ட் போட்டா நல்லா இருக்கும்.. அதான் .....பொய் தான்.. ஆனாலும் தப்பான காரியத்துக்கு இல்லையே.. சமாதானம் சொல்லிக்கொண்டேன்..
ஒரு வழியாக அம்மாவை துவைக்க வைத்தேன்.. அன்று இரவும் வேறு சில சிந்தனைகளுடன் சேர்ந்து பாரதியின் நினைவுகளோடு கரைந்து போனது...
திங்கட்கிழமை காலை 8 மனி இருக்கும்... இன்னும் இரண்டு மனி நேரம் தான் , பாரதியை சந்திக்க போகிறேன்.... நினைவுகளோடு அலுவலகம் கிளம்ப தயாரானேன்..
குளித்து முடித்து , கன்னாடி முன் எப்போதும் விட ஒரு 15 நிமிடம் அதிகமாகவே நின்றேன்.. light blue சட்டை போட்டு , கருப்பு கால் சட்டை போட்டு... dressing முடித்து கண்ணாடி முன் நின்று பார்த்தேன்..சற்று திருப்தியாகவே இருந்தது.. பாரதியும் நீல நிற ஆடையில் வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்.. மனதில் நானே சொல்லிகொண்டேன்..
சரி முதலில் என்ன சொல்லவேண்டும்.. ஹாய் பாரதி... இல்லை ஹலோ பாரதி.... கொஞ்சம் வேற மாதிரி... வெல்கம் மிஸ் பாரதி.........(ஏதோ நேர்முக தேர்வுக்கு போவது போல் செய்து பார்த்தேன்..) சரி அந்த நேரத்தில் எப்படி வருகிறதோ அப்படியே சொல்லலாம்.. எதுவும் "natural அ இருந்தால் தான் நல்லா இருக்கும்"... என் கடந்த 3 நாள் செய்கைகளுக்கு சம்பந்தமே இல்லாமல் நானே சொல்லிக்கொண்டேன்....
போயிட்டு வரேன் மா .. அம்மாவிடம் சொல்லிவிட்டு. கிளம்பினேன்...மனி 9.30 . என் அலுவலக இருக்கையில்.. என் laptop ஐ நன்றாக துடைத்து.. மேஜை மேலிருக்கும் 4 , 5 decoration பொருட்களை பல பல விதமாக அடுக்கி பார்த்து.. குழம்பி போய்..கடைசி ஏதோ ஒரு கட்டத்தில் திருப்தி அடைந்து , அடுக்கி வைதேன்.. என் அலுவலக இருப்பிடம் கொஞ்சம் சுத்தமாக் இருந்தது..
ஐயோ , மனி 9.45 .. அவசர அவசரமாக rest room சென்று.. கண்ணாடி முன் நின்று , சின்ன டச்-அப் செய்துக்கொண்டு வந்து அமர்ந்தேன்.. :) 9.55, எந்த நிமிடமும் வரலாம்.. ஆவலோடு நான்..
சார் என்று ஒரு குரல்.. திரும்பி பார்த்தேன், குள்ளமாக , சற்று மாநிறத்தில், குண்டாக ஒருவர்... யாருடா இந்த நேரத்தில்.. பாரதி வர நேரத்தில் நந்தி மாதிரி .எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசி அனுப்ப வேண்டும் .. மனதுக்குள் நினைத்தவாறே .."எஸ்" என்றேன்...
ஐ ஆம் பாரதி, நியூ ஜாயினி(JOINEE) Fரம் டுடே .... வெளீர் நீல சட்டை , கருப்பு நிற கால் சட்டையில் அந்த கர கர ஆண் குரல்...
வெல்கம் , ஐ ஆம் வீ .எம் என்றேன் சற்றே தளர்ந்த குரலில்.
அப்போது தான் "பாரதி" என்ற பெயர் ஆண்களுக்கும் இருக்கும் என்பது 4 நாட்களுக்கு என் மரமன்டைக்கு உரைக்காமல் போனது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.. பட் டூ லேட்... !
என்ன சொல்றீங்க??? எதுவா இருந்தாலும் கருத்துப்பெட்டில சொல்லுங்க !!
வீ .எம்
24 கருத்துக்கள்:
:-)))
வீ.எம் என்றால் வீம்பா? இள வயசு இள ரத்தம் இப்படி தான் தூணுக்கு சேலை கட்டினாலும் பொண்ணா தான் தெரியும். இதெல்லாம் சகஜமப்பா.
Sunapana hmmm...yarum pakkala poikittea iru.. btw yepdi tamil la post panrathunu yarachum sollungala
//அந்த "WKDT" ப்ரொஜக்ட் ல இருப்பாங்களே கவிதா, அவங்களை மாதிரி இருப்பாளா பாரதி?? அவ்ளோ சூப்பர் இல்லைனா கூட , அந்த quality team ல இருக்காங்களே பவித்ரா அப்படி இருந்தா கூட நல்லா இருக்கும்.. //
என்ன அலுவலகத்திலே இதுதான் வேலையா? எச்சரிக்கை யாராவது முதுகில் கட்டிவிடப்போகிறார்கள்
:-)))))))))))))))))))))))))
வீ. எம்... நீங்க வரச் சொன்னீங்கன்னு இதுக்கு முன்னால ஒரு தரம் உங்கள் வலைப்பூவிற்கு வந்து கொஞ்சம் காணாமல் போய்விட்டேன்! அதாங்க அந்த 'எப்போ வருவேன்...' பதிவு. இன்னைக்காவது ஆஜர் சொல்லிடனும்னு சொல்லிட்டே வாசிக்க ஆரம்பித்தேன்.
:)))))
:-) வீட்டுக்கு வீடு வாசப்படி..
உங்களுக்கு 'பாரதி' நமக்கு 'கெளரி ஷங்கர்'.. கெளரி'க்கும் ஷங்கர்'க்கும் நடுவால ஒரு ஸ்பேஸ் விட்டு எழுதிட்டான் hr'ல இருந்த பாவி .. ஒரு நாலு மணி நேரம் மிதக்க விட்டுட்டான்.. (பின்ன ஒரே cubicle'ன்னா மிதக்காமயா இருப்போம்)
இப்போ மூனு வருஷமா நம்ம முதல் வட்ட நண்பர்கள்ல ஒருத்தன் அந்த 'கெளரி'
அட, எனக்கும் இதுமாதிரிதாங்க ஆச்சு !
அது எப்டீன்னு கேட்டீங்கன்னா....
அப்டீன்னு நீட்டி முழக்கி சொல்றதுக்கு
ஒரு மேட்டரும் இல்லாததுனால...
சொல்றதுக்கு ஒன்னுமிலாமப் போச்சுங்க
:-(
I'm very sorry.
ஒரு பக்கக் கதை படித்த உணர்வு ஏற்பட்டது.
அன்னன் சுரேஷ் கன்னன், அல்வாசிட்டி விஜய் சார், ஜகன் , காஜா குழலி, துளசியக்கா, நிர்மலா மேடம், ராசா சார் , ஞானபீடம் ஐயா, r vijay sir - எல்லாருக்கும் நன்றி
சுரேஷ் கன்னன் & துளசியக்கா : :-))) இப்படி மட்டும் போட்ட நான் என்னனு புரிஞ்சுக்கறது????
அல்வாசிட்டி விஜய் : V M na வீம்பா னு தெரியாது ... நிச்சயமா vetti paiyan இல்லை :)
இள வயசு இள ரத்தம் - அதெல்லாம் ஒரு காலம் பா.... :)
குழலி : விவேக் மாதிரி யாருக்காச்சும் மனசுல ஓடுறத படிக்கிற வரம் கிடைச்சாதான் டின்னு..அதுவரைக்கும் அப்படியே போக வேண்டியது தான் :)
நிர்மலா : //உங்கள் வலைப்பூவிற்கு வந்து கொஞ்சம் காணாமல் போய்விட்டேன்//
கானாம போய்டீங்களா??? அப்புறம் எப்படி கண்டுப்புடிச்சீங்க???
ராசா : ஒரே படகுல பயனம் செஞ்சதுல ரொம்ப சந்தோஷம் :)
ஞானபீடம்: கவலை படாதீங்க... சீக்கிரமே ஒரு வாய்ப்பு வரும்..
r vijay : இது கதையல்ல , நிஜம் (கொஞ்சம் , கொஞ்சம் "மிக்ஸிங்" இருக்கு ஹி ஹி ஹி )
வீ எம்
[quote]<---//ஹ்ம்ம்ம்.. அதுக்காக முதல் நாளே தமிழ் ல பேசிவிட வேண்டுமா என்ன?.. ஒரு இரண்டு நாள் இங்கிலிஷ் தான் .. அப்புறம் தான் தமிழ்.. முதல் இரண்டு நாள் ஆங்கிலம், பிரச்சனை இல்லை.//---> [/quote]
பீடிகையைப்பாத்த போதே புரிஞ்சு கொண்டேன் ஆணாக இருக்கும் என்று. அதென்ன உங்களுக்கெல்லாம் தமிழ் பேச என்ன கெளரவக்குறைவா?? எங்கிருந்தாலும் தமிழில ஒரு வணக்கம் போடுற சுகம் வருமாப்பா சொல்லுங்க நெஞ்சைத்தொட்டு.
//எங்கிருந்தாலும் தமிழில ஒரு வணக்கம் போடுற சுகம் வருமாப்பா ////
நிச்சயமா வாராது .. !
கருத்துக்கு நன்றி தமிழ்பித்தன் அவர்களே
அட பழக்க தோஷத்துல கடைசி பாராவ மொதல்ல படிச்சுட்டேன்!!! ரசிகக முடியாமபோச்!!
அடுத்த தரம் சத்யா வேலைக்குச் சேரும் போது ஆம்பளைதான்னு தீர்மானம் செய்து கொண்டு சொம்பு மாதிரி போகாதீர்கள். இதே மாதிரி நீல் சட்டை...வெல்கம் சத்யா...etc. etc. எங்களுக்கு ஒரு பதிவாவது கிடைக்கும்.
//மனசை அது இஷ்டத்துக்கு அலய விட்டுட்டு..இருந்த இரண்டு வேலையை , அவசர , அவசரமா முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளில் மூழ்கி , கொஞ்ச நேரம் பாரதியை மறந்து இருந்தேன்..//
இதை வாசித்தபோதே, உங்கள் அதீத ஆர்வம் தவிடு பொடியாகப் போகிறது என்பது புரிந்தது. இருந்தாலும் என்ன தொடர்ந்து வாசிக்கும் எனது ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. உங்கள் எழுத்து நடை, அந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டது. நன்றாக இருந்தது. இன்னும் நிறைய எழுதுங்கள்.
அட, நம்ம பாட்டுப் புலவன் பாரதியையாவது ஒரு கணம் நினைத்துப் பார்த்திருந்தால் ஆண்களுக்கும் இந்தப் பெயர் உண்டு என்பது நினைவுக்கு வந்திருக்கும். அது சரி, நீங்க இருந்த நிலையிலே அந்தப் பாரதி எங்கே நினைவுக்கு வரப் போகிறார். :))
வீ.எம்.........
சும்மா அலையறது ஒரு சந்தோஷம்...... சுமையோட அலையறது இன்னொரு சந்தோஷம்........ ஆனா சுமையைத் தேடி சும்மா அலையறது இருக்கே....... அத்த என்னான்னு சொல்றது....... எனக்கு என்னன்னு சொல்லத் தெரியல
// ஐயோ , மனி 9.45 .. அவசர அவசரமாக rest room சென்று.. கண்ணாடி முன் நின்று , சின்ன டச்-அப் செய்துக்கொண்டு வந்து அமர்ந்தேன்.. :) 9.55, எந்த நிமிடமும் வரலாம்.. ஆவலோடு நான்..//
என்ன மாதிரி டச்-அப் சார்....... பொதுவா ஆண்களுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன மேக் அப் சமாச்சாரங்கள் கிடையாதென்று நினைத்திருந்தேன். அதிகம் போனால் கண்ணாடி முன் நின்று ஒரு பத்து நிமிடம் தலை வாரிக் கொள்ளலாம் டச்-அப் ங்கிறது என்னன்னு எனக்கும் சொல்லுங்களேன்.
மத்தபடி பாரதி நான் எதிர்பார்த்த வீ.எம் பதிவு மாதிரி இல்லை.
dhasarathy, dubukku , கலை, கோ கனேஷ் : வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !
dhasarathy : அவசர குடுக்கையாக இருக்கின்றீரே !! :)
dubukku
//அடுத்த தரம் சத்யா வேலைக்குச் சேரும் போது ஆம்பளைதான்னு தீர்மானம் செய்து கொண்டு சொம்பு மாதிரி போகாதீர்கள்.//
உங்களுக்கு ஒரு பதிவு கிடைக்கனும்.. அதுக்காகவாச்சும்.. இப்படி நடக்காம பார்த்து கொள்கிறேன்.. :)
கலை:
//உங்கள் எழுத்து நடை, அந்த ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டது. நன்றாக இருந்தது//
தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.. எழுதுகிறேன்!
கோ கனேஷ்
((என்ன மாதிரி டச்-அப் சார்)))
கோ கனேஷ் : அதே தான் சார் .. சும்மா தலை சீவி.. "face tissue" வெச்சி கொஞ்சம் துடைத்து..... இப்படி அப்படி ரெண்டு தடவை திரும்பி பார்த்து ....
((((மத்தபடி பாரதி நான் எதிர்பார்த்த வீ.எம் பதிவு மாதிரி இல்லை. )))
ஹ்ம்ம்ம்... உன்மையான கருத்துக்கு நன்றி.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயலுவேன்.
வீ எம்
வீ.எம். குமுதம் ஒருபக்க கதைபோல் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளீர். வாழத்துக்கள்!
நன்றி பாசிட்டிவ் ராம் அவர்களே !
not know if it is story or real incident. either way nice one to read. written very interestingly
sukumar
நன்றி சுகுமார்,
இது நடந்தது ... !! ஆனால் சொன்னது சொன்னபடி இல்லை.. ! கரு உன்மை..
சற்று சுவாரஸ்யமாக இருக்க.. கொஞ்சம் திரைக்கதை எழுதினேன் !!
வீ எம்
Post a Comment