" அவரை தேடி .... "
"ஒருவ"ரை தேடி - தொடங்கிய பயனம்
தூரத்தில் தெரிவது ? நான் தேடியவரோ?
அருகில் சென்றேன், நலமா என்றேன்?
நலமே தம்பி, நீயும் நலமா? - கரகரப்பான கம்பீர குரலில்
நிச்சயம் இவரே அவரென எண்ணி, அவசரமாக
ஐயா, தாங்கள் யாரோ ? என்றேன்
கலைஞர் இவரே, தமிழினதலைவர்
ராஜ தந்திரி , அரசியல் சானக்கியர் , இன்னும் பல பல
அடுக்கின அவரின் தம்பியர் கூட்டம் !
ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச ,
மீண்டும் நடந்தேன் , "அவரை" தேடி
சற்றே தொலைவில் , மற்றொரு உருவம்
நிச்சயம் அவர் தான் , முடிவே செய்தேன்
அருகினில் அமர்ந்து வணக்கம் என்றேன்
திடமாய் அவரும் வணக்கம் என்றார்
தங்களை பற்றி கூறும் என்றேன்
புரட்சிப் புயலாம் , சீறிடும் வேங்கை யாம்..
பளிச்சென சொன்னது பாசறை கூட்டம்..
ஏமாற்றம் மட்டுமே எம்மிடம் மிஞ்ச,
மீண்டும் நடந்தேன் , அவரை தேடி
அரை கல் தூரம் , தனியாய் நடந்தேன்,
கால்கள் வலிக்க சற்றே நின்றேன்
கூட்டம் ஒன்று என்னை கடக்க,
நடுவில் ஒருவர் விறைப்பாய் செல்ல
அருகில் சென்றேன், "அய்யா.." என்றேன்
அடடா வா வா, தெரியுமா என்னை?
உனர்ச்சி வயப்பட உருகியே போனார்
நிச்சயம் இவரில்லை, உணர்ந்தே நானும்
வேறோரு பாதையில் , விரைவாய் நடந்தேன்
வெயில் கொடுமை - வாட்டி எடுக்க,
மரத்தடி நிழலில் சற்றே சாய்ந்தேன்..
வேட்டு சத்தம் - காதை பிளக்க,
அலறி , சுருட்டி எழுந்து அமர்ந்தேன்
ஆயிரக்கனக்கில் வாகனம் தொடர
வந்து இறங்கிய, இவர் தான் அவரோ?
கேட்டே விடுவோம் , வேகமாய் நடந்தேன்
அருகினில் செல்ல முயன்றே தோற்று,
கூட்டத்தில் ஒருவரை ,வாஞ்சையாய் கேட்டேன்
யார் இவர் என நீ சொல்வாய் எனவே !
பொசுக்கும் பார்வையால் பதிலை சொன்னார்
இவர் தான் எங்கள் காவல் தெய்வம்
நிரந்தர முதல்வர், புரட்சித்தலைவி
தெரியாதாடா மடையா என்றார்
நன்றி சொல்லி , வேகமாய் நகர்ந்தேன்
பல மைல் தூரம் நடந்தே முடித்தேன்,
விடுதலை சிறுத்தை , கொள்கை சிங்கம்
தீப்பொறி , தளபதி
காடு வெட்டி, கராத்தே
இன்னும் பலரை வழியெங்கும் பார்த்தேன்.
தேடிய "அவரை" எங்கும் காணாது ,
ஏக்கமாய் நடந்தேன்
நம்பிக்கையோடே நெடுந்தூர பயணம்
"அரசியல்" வீதியில், மீண்டும் தொடர்ந்தேன்
நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்,
நீர் யாரென கேட்பேன் , "மனிதன்" என்பார்,
நம்பிக்கையோடு, காத்து இருப்பேன்
வீதியின் முடிவில், அயர்ந்து அமர்ந்தேன்
நிச்சயம் ஒரு நாள் "அவரை" காண்பேன்
=====
பிடித்திருந்தால், மனதை நிறைத்திருந்தால், 2 நிமிடம் அதிகம் எடுத்து , தங்கள் கருத்தை இங்கே பதிவு செய்து .., நட்சத்திரத்திலும் ஒரு சுட்டு சுட்டுங்கள்... மறக்காமல் ! ! !
மீண்டும் சந்திக்கும் வரை,
வாழ்த்துக்களுடன்,
வீ . எம்
25 கருத்துக்கள்:
i liked it very very much . good one .
real political road and scenes!
V.M,
Good posting.
Courageous too.
Best wishes..
mitra (saikrishna)
ps: thanks for giving link to my blog.
பாலா, விஜய் மற்றும் மித்ரா ,
மூவருக்கும் மிக்க நன்றி .. !!
மித்ரா,
எதுக்கு தேங்க்ஸ்??? இதெல்லாம் ஒரு சின்ன சமூக சேவை தானே ஹி ஹி ஹி !! :)
விஜய்.
தங்கள் வலைப்பூவையும் பார்த்துள்ளேன்.. நல்ல பதிவுகள் !!
வீ .எம்
Avar pala ANtukaLukku munAl irunthAr. PiRagu nam thollai thAnga mudiyAmal Odi vittAr. Avar peyar Mohandass Karamchand Gandhi...
BTW, enathu valaippooviRku vijayam seithathil magizhchi! mINdum varavum!!
நன்றாக உள்ளது. உங்கள் பதிவு தற்கால அரசியல் நடப்பை தெளிவாய் உணர்த்துகிறது. பாராட்டுக்கள். என்றாவது ஒரு நாள் அவரைப் பார்க்க முடிந்தால் சந்தோஷம்தான். ஆனால் முடியுமா??
எனது வலைப்பூவுக்கும் இணைப்பு கொடுத்ததற்கு (சமூக சேவைக்கு ?? :)) நன்றிகள்.
நன்றாக உள்ளது வீ.எம். தொடருங்கள்
Hi
your's Avaraith theedi is too good. It resembles a poem of kannadaasan. In that poem he is searching the god in every event and in all event god told "feel it" or "experience it". At the last line kannadasan placed a question
Anubaviththey arivathu thaan
vaazhkkai enil
Aandavaney nee ean enak keetteen
Aandavan chatrey aruginil vanthu
Antha anubavam enbathey
naan thaan endraan.
your creation is just like the above poem.
siragugal sir, nichayamaga idhu copy illai.. yosichu yosichu naan write pannadhu ! :)
thanks for your visit !!
நல்லா இருக்கு.
முத்தெடுக்க
மூச்சடக்கி
மூழ்க வேண்டியது
ஆழ்கடலில் தானே -தவிர
பாதாள சாக்கடையில் அல்லவே :-(
நீங்கள் தேடும் அவர் எப்படிப்பட்டவர் ? நீங்கள் தேடும் அவராக நீஙகள் உங்களை மாற்றிக்கொள்ள முயலலாமா ?
முத்து , ஞானபீடம் , லதா அவர்களே
தங்கள் கருத்துக்கு நன்றி !!
ஞானபீடம் : முத்தெடுக்கத்தான் ஆழ்கடல்... ஒரு சாதாரன மனிதனை தேடி ஏன் ஆழ்கடல் செல்ல வேண்டும் என்று புரியவில்லை ! :)
நடிகர்கள் , ரசிகர்கள் , அரசியல்வாதி யார் பற்றி எழுதினாலும் ... இப்படி சொல்றீங்களே !! எத தான்பா நாங்க எழுத?? :)
லதா : நான் தேடும் அவர் சராசரி மனித நேயம் உள்ள ஒரு மனிதர்.... !! தங்கள் கருத்துக்கு நன்றி.. நிச்சயம் முயலுவேன்..
நான் குறிப்பிட்ட அரசியல்வாதிகளில் தங்களுக்கு பிடித்தமானவர் யாராவது இருக்கிறார்களோ???
வீ .எம்
வீ. எம்,
Excellent one :)
வாழ்த்துக்களுடன்
BALA
நன்றி திரு. பாலா,
ஆமா , நீங்கள் தந்துள்ள link ல் க்ளிக் செய்தால், "profile not available" nu வருதே...
என் எலியில் பிரச்சினையா?? இல்லை உங்கள் வலையில் பிரச்சனையா???
வீ .எம்
நன்று. என்னைப்போலவே தங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது.
தற்போது மனிதனின்
முகவரி, இமெயில், வெப் முகவரி, வலைப்பதிவு... எதுவும் தேடினாலும் கிடைக்காது...
"அவர்" திருப்பி நீர் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர் ??
கனேஷின் 'மின்னஞ்சல்" முகவரி கொடுப்பேன் !! :)
- "அரசியல்" வீதியில் உங்களை தேடி கால் கடுக்க நடந்து வந்த "பொது ஜன" வீதியில் வசிக்கும் பல கோடி மனிதர்களில் நானும் ஒருவன் என்பேன்.. !!
வருகைக்கு நன்றி கனேஷ் மனிதா,
வீ .எம்
வீ. எம்,
//
ஆமா , நீங்கள் தந்துள்ள link ல் க்ளிக் செய்தால், "profile not available" nu வருதே...
என் எலியில் பிரச்சினையா?? இல்லை உங்கள் வலையில் பிரச்சனையா???
//
Thanks. என் வலையில் பிரச்சனை :-(
The problem is fixed now !
enRenRum anbudan
BALA
வீ.எம்,
இன்னைக்குத்தான் உங்க பதிவுகளை த் 'தற்செயலாப்'பார்த்தேன்!
அட்டகாசமாக இருக்கிறது!!
நானும்'மனிதனைத்'தான் தேடிக்கொண்டிருக்கின்றேன்!!!
நல்ல பதிவுகள்.
வாழ்த்துக்கள்!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
'தற்செயலாக' வந்து பார்த்ததுக்கு ரொம்ப நன்றி துளிசி, அடிக்கடி 'தற்செயலாக' வந்து பாருங்கள் !! :)
பாலரும் தேடிட்டு தான் இருக்காங்க.. நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் !
வீ .எம்
good kavidhai mr VM . continue to write
கொஞ்சம் விக்ரமன் ஸ்டைலில் சொன்னால்
"உலகத்தில மனிதர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம் ஏனா எல்லாரும் மனிதனைப் பார்க்கத்தான் ஆசைப்படறாங்களே தவிர மனிதர்களாய் வாழ யாருமே ஆசைப்படறதில்லை".....
எனக்கு இந்த வரிகளில் முழு உடன்பாடு உண்டு.... என்னையும் சேர்த்துதான்......
மன்னிக்கவும் வீ.எம் உயிரோட்டமாக சென்று கொண்டிருக்கும் ஒரு பதிவில் இது போல சில நெகட்டிவ் சிந்தனைகளையும் இடுவதற்கு
//"உலகத்தில மனிதர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம் ஏனா எல்லாரும் மனிதனைப் பார்க்கத்தான் ஆசைப்படறாங்களே தவிர மனிதர்களாய் வாழ யாருமே ஆசைப்படறதில்லை".....
//
கணேஷ்,
அருமையான வரிகள்.இதைச் சொன்னது நீங்கள்தானா?
Post a Comment