சின்ன நெருடல் !! வலைப்பூ நன்பர்கள் சிந்திக்க........ !!
நான் வலைப்பூவிற்கு வந்து 20 - 22 நாட்கள் தான் ஆகிறது .. சில காலாமாகவே நான் அனானிமஸாக வந்து போய் கொண்டிருந்தேன்.. பதிவுகளையும் , அதற்க்கான கருத்துக்களையும் படிக்கும் போதும் உள்ளபடியே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்... எவ்வளவு ஆழமான , ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், அலசல் கட்டுரைகள், கவிதைகள், நையாண்டி... கருத்து பெட்டியில் எதிர் கருத்து போடுபவர்கள் கூட எவ்வளவு நாசூக்காக, இங்கீதத்துடன், ரசிக்குப்படி எப்படி இவர்களால் முடிகிறது என்று யோசிப்பேன்..
அதிலும் , சில பதிவுகளை படித்த போது, வலைப்பதிவர்கள் பலர் நேரிடையாக சந்தித்துள்ளார்கள் என்பதும் புரிந்தது.. என்ன ஒரு இனிமையான அனுபவம் ..
குழுமங்களையோ அல்லது webpage ஒன்றை ஆரம்பித்து , முதல் வேளையாக ஆபாச கதைகளையும், படங்களையுமே போட்டு 'கலை' சேவை செய்யும் கூட்டத்தின் நடுவில்.. சற்று தவறினாலும் ஆபாசமாகிவிடும் அபாயம் இருக்கும் தலைப்புகளை கூட மிக நேர்த்தியாக பதிவு செய்து, சிறிதும் ஆபாசம் வந்துவிடாமல் எழுதி , அதிலும் ஆண் , பெண் என் இருபாலரும் ஆரோக்கியமான விவாதம் செய்வதை பார்த்து தான் எனக்கு வலைப்பூ ஒன்று தொடங்க வேண்டும் என்ற என்னமே வந்தது....
வலைப்பூ குடும்பத்தில் இனைந்து நமக்கு தெரிவதை எழுதி , மற்றவர் பதிவுக்கு கருத்துச்சொல்லி முடிந்தால் நேரில் சந்தித்து, நட்புடன் இருந்து... இப்படியெல்லாம் எழுந்த சிந்தனையால் உதித்தது தான் என் "அரட்டை அரங்கம்"...
ஆனால் இப்போது சற்று நெருடலாக இருக்கிறது...
அனானிமஸாக வந்து சிலரின் பதிவுகளை மட்டுமே பார்த்து நாம் வலைப்பூ குடும்பம் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது..
தெளிந்த நீரோடை போன்ற அழகான பதிவுகளின் இடையில் சின்னதாய் அசுத்தமான கால்வாய் கலக்கிறதா என தோன்றுகிறது..
சாதியின் பெயரால் ஒருவர் மற்றொருவரை தாக்குவதும்... எப்போது சாதியின் அடிப்படையிலேயே பதிவுகளை போடுவதும்.. இப்படி சொன்னதுக்கு மண்னிப்பு கேள் , இல்லை வழக்காடு மன்றம் தான் என் சண்டையிடுவதும். .. அப்படி சண்டையிடும் கட்டாயத்திற்கு ஒருவரை ஆளாக்குவதும்...
பார்க்கும் போது.. கொஞ்சம் அவசரப்பட்டு வலைப்பூ குடும்பத்தை மற்ற குழுமம், webpage ஐ விட உயர்வாக எண்ணிவிட்டோமா என்ற எண்ணம் தோன்றுகிறது...
குழுமம், webpage ல் ஆபாசமும் , வக்கிரமும் என்றால் வலைப்பூவில் சாதியும் , மதமும், தனிமனித தாக்குதல்களும்.... பார்பதற்கே சற்று கவலையாக உள்ளது..
சிலர் தானே ...ஏன் இவ்வளவு கவலைபட வேண்டும் என மெத்தனமாக இருக்க முடியுமா?...... நெருப்பு "தீ" கூட மெதுவாக தான் பரவும்.. சேதம் கொஞ்சம் குறையாக தான் இருக்கும், சா"தீ" எனும் தீ வேகமாக பரவி ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்... நல்லதொரு பூந்த்தோட்டத்தை சா"தீ" கொண்ட எரித்துவிட வேண்டாம்..
அழகிய பூந்தோட்டதில் நச்சு விதை விதைக்க வேண்டாமே....
வலைப்பூவில் இருக்கும்போதாவது சாதியை மறந்து சண்டையிடாமல் இருப்போம்.....
எல்லோரும் சற்று சிந்திப்போமா - சாதீ யை மனதுக்குள் மட்டுமே வைப்போம்.. வலைப்பூ வீதியில் மேய விட வேண்டாம்.. அது யாருக்கும் நல்லதல்லவே !!
நான் அனினாமஸாக சுற்றி திரிந்து பார்த்து ரசித்த தோட்டமாகவே இது இருக்கும் என்ற நம்பிக்கையுடன்,.
வீ .எம்
24 கருத்துக்கள்:
"You must me the change you wish to see in the world" endu sollramathiri ellarum ninacha unga athangam theerum V.M.
Snegethy
grass is greener the other side.
இது சம்பந்தமான என்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளேன் வாசித்தீர்களா?
வீஎம்
இதைப்பற்றி நான் கூட எழுதி இருக்கிறேன், வாதம் விவாதம் விதண்டவாதம் என்று.
வீ.எம் சினேகிதி அவர்கள் சொல்வது போல
"You must me the change you wish to see in the world"
ஆனால் சாதியைப் பற்றியே எழுதக்கூடாதுன்னு சொல்றது அநியாயம். அதுவும் ஒருவகை சமுதாயப் பிரச்சனை. ஒரு எழுத்தாளன் சமுதாயப் பிரச்சனைகளை எடுத்து அவற்றுக்கு
தீர்வும் கூற வேண்டும்.
ஆனால் இங்கு அந்த எழுத்தாளனின் சாதியும் பார்க்கப் படுகிறது. அது தான் வருத்தமாக இருக்கிறது. நம்மால் முடிந்தவரை அந்த தவறை செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் இப்பொழுது ஒரு ஆரோக்கியமான வலைப்பூ நாகரிகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது நீடிக்கும் என்று நாமும் நம்புவோம்.
அப்புறம் ஒரு ரெண்டு நாளாக உடல்நிலை சரியில்லை மன்னிக்கவும்.......
முகமூடி , தேன் துளி , snegethy , கோ கனேஷ், anonymous : தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி
snegethy : எல்லேரும் அப்படி நினைப்பார்கள் என்று நம்புவோம் !
முகமூடி : தங்கள் பதிவையும் படித்தேன்.. நன்றாக எழுதியுள்ளீர்கள்
தேன் துளி : தங்களின் 'archives' ல் தேடி பார்தேன்.. "வாதம் விவாதம் விதண்டவாதம் " பதிப்பினை கண்டுபிடிக்க முடியவில்லை.. link தாருங்கள் .. நிச்சயம் படிக்க வேண்டும்.,
கோ கனேஷ்
//ஆனால் இங்கு அந்த எழுத்தாளனின் சாதியும் பார்க்கப் படுகிறது. அது தான் வருத்தமாக இருக்கிறது//
மிக சரி ! நிச்சயமாக, சாதி மதம் பற்றி விவாதிக்கலாம், எழுத்தாளனின் சாதியை விமர்சிக்காமல்.. தனிமனித தாக்குதல் இல்லாமல்...
//அப்புறம் ஒரு ரெண்டு நாளாக உடல்நிலை சரியில்லை//
என்ன ஆச்சு உடல்நலத்திற்கு? நடந்தால் கூடவே வருகிறதா??? :) :) சும்மா... விளையாட்டாக..
இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள்??
வீ எம்
//ஆனால் சாதியைப் பற்றியே எழுதக்கூடாதுன்னு சொல்றது அநியாயம். அதுவும் ஒருவகை சமுதாயப் பிரச்சனை. ஒரு எழுத்தாளன் சமுதாயப் பிரச்சனைகளை எடுத்து அவற்றுக்கு தீர்வும் கூற வேண்டும்.
ஆனால் இங்கு அந்த எழுத்தாளனின் சாதியும் பார்க்கப் படுகிறது.//
இதுவேதான் எனது கருத்தும். பல பதிவுகளைப் படிக்கும்போது, அட படித்தவர்கள் கூட இப்படி இந்த சாதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பார்களா என்று தோன்றும்.
ஆரோக்கியமான வாதங்கள் சிலரிடமாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.
//சாதீ யை மனதுக்குள் மட்டுமே வைப்போம்..//
நல்லா யோசிச்சித்தான் இதை சொல்றீங்களா நண்பரே?
சாதீயை பத்தி இங்கு பேசரதெல்லாம் அதை ஒழிப்பதற்காக நண்பரே.
இங்கு சாதீயின் பெருமைகளை பற்றி பேசவில்லை; அதனால் படும் அவஸ்த்தையைத் தான் அலசிகிறோம்.
சாதீயையும் வெறுப்பையும் மனதிலிருந்தும் விரட்டுவோம் வாருங்கள் நண்பரே.
காஞ்சியை வழிமொழிகிறேன்!
நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
கலை, காஞ்சி பிலிம்ஸ் , துடிப்புகள் , குப்புசாமி : வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி !
கலை :
//ஆரோக்கியமான வாதங்கள் சிலரிடமாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்//
இந்த நம்பிக்கையில் தான் நானும் எழுதினேன்..பார்கலாம்
காஞ்சி பிலிம்ஸ் / துடிப்புகள் : இங்கே பல பதிவுகள் சாதீ யை ஒழிப்பதற்காக என்பதை நம்ப முடியவில்லை.. வள்ர்பதாகவே தெரிகிறது.. உங்களை போன்ற சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் தவிர் மற்றவர் எல்லாம் ..சாதியை எழுத்தாளருடன் இனைத்து ..விதன்டாவாதம் தான் செய்கிறார்கள்...அவர்களின் சிந்தனைக்கே இந்த பதிவு..
குப்பசாமி: நன்றி !
வீ.எம். உங்கள் கருத்தோடு நான் உடன் படுகிறேன்.
//சாதியை எழுத்தாளருடன் இனைத்து ..விதன்டாவாதம் தான் செய்கிறார்கள்...//
இதில் நிச்சயமாக வேறுபடுகின்றேன்...
வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை
சுவாரசியமாக இருக்கும் என இராணி சீதை அரங்கில் விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்து ஒரு எழுத்தாளர் சொல்லும்போது எப்படி அய்யா அவர் சாதியை பார்க்காமல் பேச முடியும்...
பிற்படுத்தப்பட்ட,மிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து எத்தனையோ எழுத்தாளர்கள் உள்ளனர், அவர்கள் யாராவது இப்படி பேசினார்களா? ஜெ.கே வும் அ.மி.யும் தான் இப்படி பேசினார்கள்...
"வேரில் பழுத்த பலா" என்ற நாவலுக்கு மறைந்த எழுத்தாளர் திரு.சு.சமுத்திரத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தபோது சாகித்திய அகாடமி விருதுக்கும் இட ஒதுக்கீடா என கேலி செய்த கூட்டமய்யா?
அவர் அவருக்கு தெரிந்த அவர் வாழ்ந்த வாழ்க்கை சூழலைஇத்தான் எழுத முடியும்... அதில்தான் உண்மை இருக்கும்... மற்ற சூழலைப்பற்றி எழுதினால் அதில் சிறிதாவது போலித்தனம் கலந்துவிடும்...
வேரில்பழுத்தபலா நாவலை படித்து பார்த்தால் தான் தெரியும் அது ஒரு இலக்கியமென்றும்... நசுக்கப்பட்ட சமுதாயத்தின் அவலக்குரல் என்றும்...
////சாதியை எழுத்தாளருடன் இனைத்து ..விதன்டாவாதம் தான் செய்கிறார்கள்...////
இதைப்பற்றிய எனது பதிவின் சுட்டி இதோ வர்ணபேதமும் வாழ்க்கை சுவாரசியமும்
கத்துற கழுதைங்க கத்திட்டுதானுங்க இருக்கும் கண்டுக்காமே நீங்க எழுதுங்க.நல்லத மட்டுமே படிக்க எழுதனு ஒரு நல்ல கூட்டம் இருக்கத்தான் செய்யுது அவங்களுக்காவது...தொடர்ந்து பதியுங்கள்...
குழலி ,
நன்றி !
சாதி பற்றி பேச வேண்டாமென சொல்லவில்லை, ஆனால் ..எப்பொழுது அந்த விவாதம் , தனிமனித தாக்குதல்களாக , விதன்டாவாதமாக மாறிவிட்டதோ.. ஆரோகிமற்ற விவாதமாகவிட்டதோ.. அப்பொழுது அதை விட்டு விடுவோம் என்பது தான் என் வாதம்..
இங்கு மட்டுமல்ல , வலைபதிவர் மட்டுமல்ல... நீங்கள் சொல்லும் கூட்டங்களிலும், எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தும்..
மற்றபடி அனைத்து சாதியையும் மதிக்கிறேன்.. !
வீ எம்
பிரியன் அவர்களே,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
நிச்சயம் எழுதுவேன்.. !
என் வலைப்பூ தலைப்பில் சொல்லி இருப்பது போல்.. மனதில் பட்டதை எழுதுவேன் !!
வீ எம்
ஆமாம் நண்பரே, வலைப்பூ என்பது ஒருவரின் நாட்குறிப்பு மாதிரி. திருப்பி புரட்டுகையில் இதமளிக்க வேண்டும். இந்தியாவில் சாதிய பிரச்சனைகள் தீராமல் இருக்க காரணம் தங்கள் விடுதலை என்றில்லாமல் தானும் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அனைத்து தரப்பினருக்கும் இருப்பதுதான என்றே கருதுகிறேன். மற்றபடி நாம் எழுத்துகளை விவாதிக்க வேண்டுமே தவிர எழுதியவரின் சாதியை விமர்சிக்கத் தேவையில்லை - அவர் எழுத்துகளில் அது கலக்காதவரை
முத்துகுமரன் :- வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி
good posting..we will hope for best.. i am also same anonymous like you .. thinking to join the family
thanks mr anonymous.. dont worry , please join our weblog family.. all these will be sorted out soon. :)
சம்மி அவர்களே , வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//தவறு செய்யாதவர் எவருமில்லை அல்லது தவறு இல்லாத எந்த சாதி அல்லது மதம் அல்லது மனிதனில்லை என்பது என் கருத்து //
மறுக்க முடியாத கருத்து
Post a Comment