படம் பார்த்து கதை செப்பு - அடுத்த முதல்வர் ஆல்பம்

அடுத்த தமிழக முதல்வர் புகைப்பட ஆல்பம் இது!
இது வெறும் கற்பனையே !! யாரையும் புன்படுத்த அல்ல , அல்ல , அல்ல !
நாள் : 2 ஜூன் 20XX
********************************************************************
அப்பாடா ஒரு வழியா 132 இடம் கிடைச்சு கோட்டைக்கு வந்தாச்சு.. ஐயோ ! இனிமே இப்படி தான் அடக்கமா போஸ் கொடுக்கனும் ..இந்த சுவத்துல கால் வெச்சி தூக்கி அடிக்கிறத எல்லாம் மூட்டை கட்டி போடனும்
Image hosted by Photobucket.com


=======================================================
Image hosted by Photobucket.com
தலைக்கு மேல வேலை இருக்கு.. சரி சரி கொஞ்சம் தியானம் பன்னி, நல்லவங்களா பார்த்து துறை ஒதுக்கனும்.. நம்மள நம்பி 132 பேரை தமிளக மக்கள் கெலிக்க வெச்சிருக்காங்க .அதுல யாரெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க???ஹ்ம்ம்..யோசிக்கலாம்!
==============================================
Image hosted by Photobucket.com

முதல்வர்: முதல்ல தெய்வம் சம்பந்தபட்ட துறை, ஹ்ம்ம் ..யாரை அறநிலையத்துறை அமைச்சராக போடலாம்
முதல்வர்-வீட்டம்மா : பக்கதுலேயே இவ்ளோ பக்தியா உக்காந்திருக்கேன்.. என் நியாபகம் வரலயா இவருக்கு???
முதல்வர் : சரி சரி , DONE !

===============================================

Image hosted by Photobucket.com

அய்யோ, ஒரு வழியா 'விளையாட்டுத்துறை அமைச்சரை முடிவு பன்னியாச்சு.. பின்னாடி இன்னா ஸ்டைலா நிக்கிறாரு பாருங்க
=================================================
Image hosted by Photobucket.com
சரி சரி, அவனுக்கு விளையாட்டுத்துறை ... உனக்கு தான் போலிஸ் துறை தரேன்னு சொல்லிட்டேன் ல.. சிரி சிரி .. சரியான துறை உனக்கு !
======================================
Image hosted by Photobucket.com
ஹ்ம்ம்ம் ..புரியுது, அறநிலைய துறையோட சேர்த்து உனக்கு உனவு த்துறையும் வேணும்..
அதான் ஒரே ஆள் 2 துறைய பாக்கலாமே.. கொடுத்துட்டா போச்சு.. நல்லா முறுகலா
ஒரு தோசை போடுமா! :)
=======================================
Image hosted by Photobucket.com
கவலைபடாதே டாமி, பசுவதை தடுப்பு சட்டம் மாதிரி நாய் வதை தடுப்பு சட்டம் கொண்டுவந்து உன்னையும் காப்பாத்துவேன் !
============================================


Image hosted by Photobucket.com
அவங்கவங்களுக்கு தேவையானதை பங்கு போட்டு குடுத்தாச்சு, பத்திரமா சண்டை போடாம சாப்பிடனும்..ஓ சாரி பார்த்துக்கனும் , சரியா?
===========================================

Image hosted by Photobucket.com
அப்பாடா ஒருவழியா எந்த பிரச்சினையும் இல்லாம, சரி சமமா தகுதியானவர்களுக்கு துறை பிரிச்சு கொடுத்தாச்சு, வாங்க வாங்க கேபினெட் க்ரூப் போட்டோ எடுத்துக்கலாம்
=========================================

Image hosted by Photobucket.com

காட்சி 1: ஹலோ !யாரங்கே!! என்ன இது கேபினெட் க்ரூப் போட்டோ அவ்ளோ க்ளாரிட்டி இல்லயே...நல்லா வரலயே.. அப்புறம் என் ரசிகர்கள் கொதித்தெழுந்தா நான் பொருப்பில்ல சொல்லிட்டேன்.. சீக்கிரம் மாத்துங்க!
காட்சி 2: ஐய்யோ, ,என்னது நம்ம கட்சிக்கு மொத்தம் 1 இடம் தான் கெடச்சதா??? என்னபா சொல்றீங்க ..132 இல்லயா? நான் வேற ஏதேதோ plan போட்டுடேனே பா .. அட ராமா !!
(((படிப்பவருக்கு எது பிடிச்சிருக்கோ அதை படிச்சுக்கலாம், இன்னொரு முறை :) ))

=========================================

நடிகர்கள், நல்லவர்கள். !!

வலைப்பூ நன்பர்களே வணக்கம்!பூனாவில் இருந்து என் முதல் பதிவு !

இது ஒரு வார இதழில் 2 மாதங்களுக்கு முன் வந்த பேட்டியை அடிப்படையாக கொண்ட பதிவு.. கொஞ்சம் லேட்டான பதிவு தான் இருந்தாலும் படித்தவுடன் இதை எழுதவேண்டும் என்ற என்னம் தோன்றியதால் எழுதுகிறேன். சமீபத்தில் பழைய இதழ்களை மேய்ந்த போது கண்ணில் பட்டது...
நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு சென்னையில் ஒரு சிலை தயாரகிறது.. சென்னை என்றவுடன், சிவாஜியை தங்களின் ஆசான், தெய்வம், அப்பா என்றெல்லாம் சொல்லித்திரியும் நடிகர்களின் முயற்சியால் இது நடக்கிறது இது என்று நீங்கள் தவறாக எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல ! அதேபோல், தமிழகத்தை சேர்ந்த ஒரு மகா கலைஞனுக்கு அம்மா அரசு செய்கின்ற மரியாதையா என்றால் , அதுவும் இல்லை..


சிலை தயாரிக்கப்படுவது, பாண்டிச்சேரியில் நிறுவப்படுவதற்காக. பாண்டிச்சேரி அரசின் வேண்டுகோள் படி சிற்பி திரு மணி நாகப்பா தன் பட்டறையில் சிற்பத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறார்.அவ்வப்போது பாண்டிச்சேரி முதல்வர் திரு ரங்கசாமி சென்னை வந்து பார்த்துவிட்டு போகிறார்.
இந்த பதிவு, யார் செய்கிறார்கள் , தமிழக அரசோ, தமிழ் நடிகர்கள் ஏன் செய்யவில்லை என்பதற்காக அல்ல..பின்?? சொல்கிறேன்..

மணி நாகப்பா ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ..அதில் அவர் சொன்ன விஷயம் சற்று நெருடலானது.. இது தான் அவர் சொன்னது
"..... சிலை இறுதி வடிவம் அடையும் கட்டத்தில், தமிழகத்தில் உள்ள பெரிய!! நடிகர்கள் அத்தனை பேரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வந்து பார்த்து உங்கள் அபிப்பிரயத்தை சொல்லுங்கள் , அதன்படி செய்யலாம் என்று சொன்னேன். சிவாஜியை தெய்வம் என்றும், எங்கள் உயிர் என்று சொல்லும் ரஜினி , விஜய்காந்த் உட்பட சிவாஜி என் அப்பா அவர் மடியில் தான் வளர்ந்தேன் என பேட்டி கொடுக்கும் கமல் உட்பட அனைத்து முன்னனி நடிகர்களையும் அழைத்தேன்... ஆனால் ஒருத்தர் கூட இன்று வரை எட்டிப்பார்க்கவில்லை. என்ன நடிகர்களோ இவர்கள் ..."

இது தான் அவர் சொன்ன செய்தி. பொங்கலோ , தீபாவளியோ - தொலைக்காட்சியில் தங்கள் முகத்தை காட்ட அலைந்துக்கொண்டு ஓடிவந்து ஆற அமர பேட்டி என்ற பெயரில் பினாத்திவிட்டு செல்லும் நடிகர்களுக்கு, "மரியாதை நிமித்த" சந்திப்பு என்று பெயர் கொடுத்து தங்களின் சுய லாபத்துக்காக அரசியல் தலைவரை சந்தித்து விட்டு வரும் நடிகர்களுக்கு, பல நூறு மைல் தாண்டி பக்தி மார்கமாக சென்றாலும் மறக்காம பத்திரிக்கைக்கு பேட்டி தரும் நடிகர்களுக்கு, ஒரு நடிகையின் பிறந்த நாளுக்கு கவிதை எழுதி அனுப்பி தான் எதிலும் புதுமை செய்வேன் என்று காட்டிக்கொள்ள நேரம் இருக்கும் நடிகர்களுக்கு.. வார பத்திரிக்கைளின் பக்கம் பக்கமாக சுயசரிதை எழுத நேரமிருக்கும் நடிகர்களுக்கு, இதோ இங்கே சென்னையில் இருக்கும் ஒரு பட்டறைக்கு வந்து அந்த மகா கலைஞனுக்காக 15 நிமிடம் செலவழிக்க ஏனோ முடியவில்லை. பாவம் அவர்கள் !


ஒருவேளை , அவற்றில் எல்லாம் பணமோ , பப்ளிசிட்டியோ , அல்லது இரண்டும் சேர்ந்தோ கிடைக்கும் ஆனால் இந்த பட்டறைக்கு வந்து போவதால் தங்களுக்கு பெட்ரோல் செலவு மட்டுமே மிஞ்சும் என்பதால் தவிர்த்துவிடுகிறார்களோ இந்த "ஏழை" நடிகர்கள்????

இவர்கள் எல்லாம் அவரின் இறுதி ஊர்வலத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்ததை பார்த்தால், திரையில் நடித்து நடித்து , நிஜ வாழ்க்கையிலும் அதுவே பழகிப்போய்விட்டதாகவே தோன்றுகிறது.


மறக்காமல் முதல் வேளையாக 3 அல்லது 4 மனி நேரம் ஒதுக்கி, திரையரங்கு சென்று 300, 400 செலவழித்து குறைந்தது 3 முறையாவது, இந்த நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வரும்போது பார்த்துவிடுவோம்..இல்லை மறைந்த சிவாஜியின் ஆத்மா நம்மை மன்னிக்காது!

நல்ல நல்ல நடிகர்கள்! நல்லா இருக்கட்டும் பாவம்... !! ஒரு நாள் அவர்களுக்கும் சிலை வடிக்க வேண்டி வரும்.. !
இவர்களில் ஒருவர் தான் நாளைய தமிழக முதல்வரா??? என்ன சொல்வது !!!!

வீ எம்

வெல்கம் டூ , வீ எம் - நீங்கள் படிக்கும் பதிவு...

வணக்கம் அண்ட் வெல்கம் டூ சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல்... ஓ... ஸாரி..வெல்கம் டூ வீ எம் நீங்கள் படிக்கும் பதிவு........
.... இந்த பதிவோட நம்ம சென்னை எபிசோட் (அதாங்க சென்னை ல இருந்து எழுதபட்ட பதிவு) முடியுதுங்க
அடுத்த பதிவு எங்கிருந்துனு சொல்லனும் ல.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேரரக் ...............................


அடுத்த பதிவுகள் பூனா விலிருந்து....

ஆமாங்க, அலுவலக வேலையாக பூனா போறேன் .. 1 மாசம்.. ஜுன் 26 போயிட்டு ஜூலை 24 திரும்ப சென்னை வருவேன்... (இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப் பா னு நீங்க சொல்றது புரியுது....)


அடுத்த பதிவு பூனா ல இருந்து எழுதுவேன்... until then its bye from வீ .எம்..
(சமிபத்துல 2 , 3 சன்ரைஸ் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி பாதிப்புல ஊருக்கு போற விஷயத்தை இப்படி சொல்லிட்டேன் , வேற ஒன்னுமில்லை.. !)

====================================================

பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2

பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 1 (http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post.html)

ரஜினி - அரசியல் அரிதாரம் - ஒரு பார்வை

(பாவம் அவரை விட்டுவிடுவோம் - பாகம் 2 )

Image hosted by Photobucket.com


இந்த பதிவை ரஜினியின் ஒரு பாடலில் இருந்து ஆரம்பிப்பதே சரியாக இருக்கு என தோன்றுகிறது.
"எனக்கு கட்சியும் வேண்டாம் , ஒரு கொடியும் வேண்டாம் ஹே டகர டகர டகர டகர டோய்..' 1989 ல் வெளியான ராஜாதி ராஜா பட பாடல் இது. இந்த பாடலுக்கும் இன்றுள்ள நிலைமக்கும் தான் எவ்வளவு பெரிய வேறுபாடு...
ரசிகிர்கள் மனதில் "இவர் அரசியலுக்கு வரலாமே" .... என்கிற எண்ணம் எப்பொழுது "இவர் வரவேண்டும்" என்று மாறியது , பின்னர் அதுவே "வந்தே ஆகவேண்டும்" என எப்படி மாறியது ?
தெரிந்தோ , தெரியாமலோ தன் படங்களில் ரஜினி அவர்கள் புகுத்திய "பன்ச்" வசனங்களே இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
1991 அம்மா ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ரஜினிக்கும் அம்மாவிற்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரம்பமானது. பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதியது. அதை தொடர்ந்து வந்த "மன்னன்", "அன்னாமலை" படத்தில இருந்த ரஜினியின் வசனங்கள் சற்று அரசியல் நெடி கலந்து இருந்தது. அப்போதே ரஜினி என்கிற நடிகருக்கு "அரசியல்வாதி" முலாம் பூசும் முதற்கட்ட பனிகள் ஆரம்பமானது.
ஆனால், 1992ல் சினிமா துறை முதல்வருக்கு நடத்திய பாராட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினியின் பேச்சு இந்த சலசலப்பை அடக்கும் விதமாக இருந்தது. அந்த விழாவில் அவர் பேசியது இது தான்
"..........நேற்று பஸ் கண்டக்டர் , இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ, அதே நேரத்தில்..ஆண்டவா, எந்த சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுவிடாதேனு வேண்டிக்குறேன், ஏன்னா, அரசியலுக்கு வந்துட்டா நிம்மதி போயிடும்..." அதே பேச்சில், முற்றிலும் பொய்யான , ஆதாரமற்ற செய்திகளை எழுத வேண்டாமென பத்திரிக்கைகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பேச்சு சற்று சலசலப்பை அடக்கினாலும், விரைவிலேயே , 3 வருட இடைவெளியில் காட்சிகள் மாறியது...
"பாட்ஷா" பட வெற்றி விழாவில் அவர் பேசிய பேச்சு பல்வேறு வடிவம் பெற்று, "இன்னொரு முறை இவர் வந்தால் ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது" என்பது வரை வந்து... ஒரு கூட்டனி க்கு ஆதரவு தந்து, அந்த கூட்டனியும் பெரும் வெற்றி பெற்றது..... பின்னர், ரசிகர்கள் இந்த வெற்றிக்கு தலைவரின் ஆதரவே காரணம் எனவும், ரசிகரல்லாதோர், இல்லை , இல்லை இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் , மக்களுக்கு அம்மா ஆட்சி மீது இருந்த வெறுப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம், ரஜினி வாய்ஸ் என்பதெல்லாம் சும்மா எனவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.முதலில் வந்தது முட்டையா , கோழியா என்பது போல் தான் இந்த வாதம் தொடர்கிறது..நாம் அதற்குள் செல்ல வேண்டாம்.. நான் சொல்ல வருவது, தெரிந்தோ , தெரியாமலோ அந்த ஆதரவின் மூலமே தன் ரசிகர்களுக்கு "அரசியல்" ருசி ஏற்படுத்திவிட்டார் ரஜினி.
நம் அரசியல்வாதிகள் மிக புத்திசாலிகள், கொடுக்க வேண்டியதை கொடுத்து நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அரசியல் போதை ஏறிப்போனது.இந்த காலகட்டத்தில் தான் ரசிகிர்கள் மனதில் "இவர்அரசியலுக்கு வரலாமே" .... என்று இருந்த எண்ணம் "இவர் வரவேண்டும்" என்று மாறியது. ரஜினி என்ன செய்திருக்கலாம்? ரஜினி அவர்கள் இந்த காலகட்டத்தில், நேரடியாக இறங்கி இருக்க வேண்டும்.. அப்படி நடந்திருந்தால், 3 நிகழ்வுகளுக்கு வாய்ப்பிருந்தது
யாருக்கு தெரியும், ரஜினி மிக பெரிய வெற்றி பெற்று கோட்டையில் அமர்ந்திருக்கலாம்.. இல்லை மொத்தமாக "கோட்டை"யும் விட்டிருக்கலாம்.. அல்லது கணிசமான தொகுதிகள் வென்று கோட்டையில் கொடி ஏற்றுபர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கலாம். இந்த மூன்றில் எது நடந்திருந்தாலும், இந்த பதிவிற்கோ , அவர் வருவாரா , மாட்டாரா என்ற 10 வருட பட்டிமன்றத்துக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
ஆனால் அதை செய்யாமல், தன் ரசிகர்களை களம் இறக்கிவிட்டு அவர் ஒரு அறிக்கை மற்றும் ஒரு தொலைக்காட்சி தரிசனம் என்ற அளவில் நிறுத்தி கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் மனக்"கோட்டை" கட்டிக்கொண்டிருப்பது தான் மிஞ்சியது. தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே ஆங்காங்கே ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் மனகசப்பு ஏற்பட்டது .. வெற்றி பெற்றவுடன் எங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்..(அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா, கடைசி வரையில் உங்களை மதித்து நடப்பதற்கு?? அவங்க பொழைக்க தெரிஞ்சவங்கப்பா )
அப்போதாவது ரஜினி சுதாரித்திருக்க வேண்டும்.. ! மேலே சொன்ன ராஜாதி ராஜா பாடலை செயல் படுத்தி இருக்கவேண்டும் மாறாக யாருக்கும் புரியாமலேயே பேசிக்கொண்டிருந்தார்..
இதற்கு அடுத்து வந்த படங்களில் அருனாசலத்தை தவிர, மற்ற 3 படங்களிலும் (முத்து, படையப்பா , பாபா) அரசியல் நெடி சற்று அதிகமாகவே அடிக்க தொடங்கியது. குறிப்பாக முத்துவை பற்றி சொல்ல வேண்டும்.
முத்து படத்தில் தினிக்கப்பட்ட "வசனங்கள்" ஏராளம்.. மீனா வுடன் நடக்கும் மோதல் காட்சிகளில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களின் கற்பனை சக்திக்கு நன்றாக தீனி போட்டது.. அவரின் அனல் பறக்கும் வசனங்களுக்கு அவரவர் வசதிகேற்ப பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டது.. ரசிகர்களுக்குள் பட்டிமன்றமே நடந்தது. போதாகுறைக்கு, எரிகின்ற தீயில் எண்னெய் ஊற்றும், தங்கள் கடமையை பத்திரிக்கைகள் சரியாகவே செய்தது. ரசிகர்கள் சற்று மறந்தாலும் கூட, பத்திரிக்கைகள் விழிப்புடன் இருந்து சமூக கடமையாற்றியது.
முத்து படத்தில நிச்சயமாக ரஜினி இதை தவிர்த்திருக்கலாம்.. என்ன காரணத்தினாலோ அப்படி செய்யவில்லை.. இல்லை இது இயக்குனர் எடுத்த முடிவு ..ரஜினி என்ன செய்வார் என்று சொல்வீர்களேயானால் ..சிரிப்பதை தவிற வேறெதுவும் செய்ய முடியாது !
திரையில் தான் கால் தூக்கினாலும் , கை தூக்கினாலும், ரசிகர்களும் சரி , பத்திரிக்கையும் சரி அதற்கொரு அர்த்தம் செய்துக்கொள்கிறார்கள் என்று தெரிந்தும் ரஜினி , 1992 விழாவில் பத்திரிக்கைகளை குற்றம் சாட்டியவர், இது போன்ற வசனங்களை பேசியது நிச்சயமாக ஏற்புடையதல்ல!
தொடர்ச்சியாக அவர் நடித்து வெளிவந்த படையப்பா படம், சொல்லவே வேண்டாம்.. தனக்கு எதிரியாக ஒரு ஆனவம் கொண்ட பென் கதாபாத்திரம், அதே அனல் பறக்கும் வசனங்கள்... கேட்க வேண்டுமா?
பாபா - ஆன்மீக படம் என்று அறிந்த போது, அட! ரஜினி அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டு , தனக்கு ஆன்மீகத்தில் தான் நாட்டம் என்று புரிய வைக்க போகிறார். 7 , 8 வருட விளையாட்டு முடிவுக்கு வர போகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் .. இல்லை , இல்லை இது மேலும் குழப்பத்தை தான் அதிகரித்துள்ளது என்ற அளவில் அந்த கதையின் இறுதி காட்சியை அமைத்து படத்தை முடித்தார்.
ஆன்மீகம் பற்றி எடுத்து சொல்ல எவ்வளவோ நல்ல திரைக்கதை இருக்கும் போது ( எடுத்துகாட்டு : ராகவேந்திரர்), இப்படி ஆன்மீகத்தை அரசியலோடு கலந்திருக்க வேண்டாம். விளைவு அவரின் ஆன்மிகமும் மக்களை சென்றடையவில்லை... அவரின் அரசியல் நிலையும் தெளிவுபடுத்தபடவில்லை.. மேலும் குழப்பித்தான் விட்டது.
தெரிந்து நடந்ததோ , தெரியாமல் நடந்தோ புரியவில்லை.. ஆனால் 1992 ல் ரசிகர்கள் மனதில் சிறு பொறியாக கிளம்பிய அரசியல் ஆசை இன்று வரையில் பல்வேறு வடிவங்களில் அனைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது..திரையில் அவர் பேசும் வசனத்துகே இந்த வலிமை என்றால்.. நிஜ வாழ்வில் அவர் பேச்சுக்கு?? சொல்ல வேண்டுமா?
திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் தோன்றிய சில பொது மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள் இந்த தீப்பொறி அனையாமல் இருக்க உதவியது. மலேசிய, சிங்கப்பூர் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளில் அவர் ரசிகர்களுக்கு அளித்த கேள்வி பதில் நிகழ்ச்சி இன்னும் குட்டையை நன்றாக குழப்பியதே தவிர, தெளிவடைய செய்யவில்லை.
நதி நீர் பிரச்சனைக்காக அவர் இருந்த உன்னாவிரதம், பாபா - பா.ம.க சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அந்த கால கட்டத்தில் அவர் கொடுத்த அறிக்கை, பேட்டிகள் எல்லாம் அரசியல் சார்புடைய குழப்பங்களைத்தான் அதிகரித்தது.
நதி நீர் பிரச்சினையின் போது தீடிரென தொலைக்காட்சி பேட்டியில் " ...அவர்கள் யாரென எனக்கு தெரியும்..தேர்தல் நேரத்தில் தக்க பதில் தருவேன்" என்றார்.. அதற்குள் மருத்துவரின் சில்மிஷத்தால் காட்சிகள் மாறி, இன்று வரை அவர் குறிப்பிட்ட "அவர்கள்" யாரென்று தெரியாமல் போனது.
பா. ம க - பாபா பிரச்சனையால், அவரின் அரசியல் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அம்மையாரோடு அவர் ஆடிய ஆட்டம் களம் மாறி எதிரனியுடன் இனி ஆட்டம் என்றானது.. அவரின் ரசிகர்கள் சத்தியனாரயனன் தலைமயில் அரசியலில் இன்னும் ஒரு படி மேலே சென்றனர்.. தினமலர் போன்ற பத்திரிக்கைகள் மிக அழகாக காய் நகர்த்தி ஆட்டம் முடிந்துவிடாமல் பார்த்துக்கொண்டது.
முத்து படத்தில் ஆரம்பத்தில் மீனாவுடன் சண்டை போட்டாலும், பின்பு அவருடன் ராசியாகி போனது போல், எதிர்பாராத திருப்பம் நிஜத்திலும் நடந்தது, அம்மாவை தீவரமாக எதிர்தவர் பின்பு அம்மா ஆதரவு நிலை எடுத்தார்...
களம் மாறிவிட்டதே தவிர, ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது....


எதையும் தீர்மானமாக சொல்லாமல.. நேற்று அப்படி, இன்று இப்படி, நாளை எப்படியோ என்று பூடகமாக கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை தவிர்த்திருக்கலாம்.. எப்பொழுது திரையில் தான் பேசும் வசனங்களுக்கே பல்வேறு அர்த்தம் கற்பிக்கபடுகிற்தோ, அப்போதே அவர் இப்படி பேசுவதை தவிர்த்து, கேட்கப்படுகிற கேள்விக்கு அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி பதில் சொல்லி இருக்க வேண்டும்..
ரஜினியோ..அல்லது அவரை சுற்றி இருந்தவர்களோ..இல்லை பத்திரிக்கைகளோ .. அல்லது இவர்கள் அனைவரும் சேர்ந்தோ அனையாமல் பார்த்துக்கொண்ட காரணத்தாலேயே அந்த சின்ன பொறி இந்த 12 ஆண்டுகளில் வீரயம் பெற்று கொழுந்து விட்ட எரிகிறது.
நல்ல வேளயாக சந்திரமுகி சற்று மாறுபட்டு இருந்தது... அதில் ரஜினிக்கு மருத்துவர் என்ற கதாபாத்திரம் என்று கேள்விபட்டபோது , போச்சுடா மீண்டும் தூபம் போடப்படுகிறது என்று தோன்றியது ..நல்ல வேளயாக அப்படி எதுவும் இல்லாமல் போனது. இப்படியே தொடர வேண்டும் என்பதே பலரின் விருப்பம்..
வழ வழா குழ குழா என்றில்லாமல், இது தான் என்று தீர்கமாக முடிவெடுத்து சொல்லுவது அரசியலுக்கு வர மிக மிக முக்கியமான தகுதிகளுள் ஒன்று.. இதுவே ரஜினியை அரசியலுக்குள்ளே இழுத்து வராத சக்தியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.
இதற்கெல்லாம் முடிவு ரஜினியின் கையில் தான் உள்ளது ... ஆம், நிச்சயம் வருவேன், அது வரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும் என்றோ ..அல்லது .. அரசியலுக்கும் எனக்கும் ஒத்து வராது ..அரசியல் என்பதற்கே வாய்ப்பில்லை என்றோ அவர் விடும் ஒரு தெளிவான அறிக்கையில் தான் உள்ளது.. அவர் அம்மாவை எதிர்த்து "ஆண்டவாலும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னாலும்.. அதே அம்மாவை "அஷ்டலட்சுமி" என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் அவரின் ரசிகர்கள் அவர் வருவேன் , வரவே மாட்டேன் என்று சொல்லும் அறிக்கையையும் நிச்சயம் ஏற்பார்கள்...
ஆனால், அது எப்போதோ?????????????????????????????????
ஒரு பாடலோடு முடிக்கலாம், சற்று மாற்றம் செய்த அவரின் முத்து பாடலோடு....
விடுகதையா உந்தன் (அரசியல்) வாழ்க்கை, விடை தருவார் யாரோ?????? குழப்பமில்லாத ஒர் அறிக்கை உந்தன் பெயரால் இங்கு வேண்டுமய்யா..........

வீ எம்

நன்றி : குழலி ( ஒரு புகைப்படத்திற்கு)

நன்றி : rajinifans.com (மற்றொரு புகைப்படம் மற்றும் சில தகவல்கள்)

படித்ததில் பிடித்தவற்றுள் சில !

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

மெட்டி ஒலிலிலிலிலிலிலி

மெட்டி ஒலி -இது கடந்த 3 ஆண்டுகளாக 75% தமிழர்களின் இல்லங்களில் இரவு 9 - 9.30 மணி வரை கேட்ட ஒலி.. நாடகமே என்றாலும், அதில் வரும் சம்பவங்களை ஏதோ தங்கள் வீட்டில் நிகழும் நிகழ்வுகளாகவே ஒன்றிப்போய் பார்த்தவர்கள் ஏராளம்..மெகா தொடர் நாடகங்களை ஒரு பக்கம் விமர்சித்துக்கொண்டே, ஓரக்கண்ணால் பார்த்தவர்களும் மிக அதிகம், என்னையும் சேர்த்து.
ஆரம்பத்தில் தொடருக்கு நடுவே விளம்பரம் போட்டது போய் , கொஞ்சம் சூடு பிடித்தவுடன் விளம்பரத்துக்கு இடையே கொஞ்சம் நாடகமும் போடப்பட்டது என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கும் இந்த தொடர் , இன்றோடு முடிய போகிறது...

சற்று இடைவெளி விட்டு, ஒரிரு மாதங்களுக்கு பிறகு பார்த்தாலும் புரியும் என்கிற வசதி மெகா தொடருக்கு உண்டு..மெட்டி ஒலியிலும் அந்த வசதி இருந்தது. பொதுவாக மெகா தொடர்கள் வார பத்திரிக்கை துனுக்குகளில், பட்டிமன்றகளில் , கூடிப்பேசும் நன்பர்கள் என அனைவரின் வாயிலும் விழுந்து எழும்.. மெட்டி ஒலியும் அதற்கு விதிவிலக்கல்ல.. வலைப்பூவில் கூட மெட்டிஒலி பற்றிய பதிவுகள் சிலவுண்டு..

பட்டிமன்ற புகழ் "ராஜா" ஒரு பட்டிமன்றத்திலே பேசும்போது "எங்க வீட்டு அம்மனி மெட்டிஒலி முடிந்தால் தான் ரொட்டி ஒலி னு சொல்லிடுச்சி.." என சொல்லி மக்களின் கரகோஷத்தை அள்ளி சென்றார்.

ஒரு மனைவி கனவனை பார்த்து கேட்டாங்களாம் "ஏங்க , மெட்டி ஒலி கோபி பாருங்க, எவ்ளோ நல்லவரா இருக்காரு, மனைவிக்கிட்ட அன்பா இருக்காரு... நீங்களும் அப்படி தான் இருக்கனும்.."கனவர் சொன்னாராம் "ஹ்ம்ம்..அவருக்கு லட்சக்கனக்குல பணம் வருது, எனக்கும் உங்கப்பா மாசம் 50 ஆயிரம் தந்தா நான் மட்டும் இப்படி நடிக்க மாட்டேனா என்ன??"

என் நன்பன் மெட்டி ஒலி ஆரம்பிக்கப்போ "பாச்சிலர்" , முடியும்போது 2 குழந்தைக்கு அப்பா ... என்ன 3 வருசத்துல கல்யாணம் பன்னி 2 குழந்தைகளா னு பாக்கறீங்களா?? ஏன் முடியாது????? ஹ ஹா ஹா ... இருந்தாலும் அவனுக்கு(மனைவிக்கு) ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தை பிறந்தது..
நாம (வீ எம்) அப்பவும் "பாச்சிலர்" இப்பவும் அதே தான் :( :( ..பார்க்கலாம் செல்வி புன்னியத்துல ஏதாச்சும் நடக்குதானு...)..ஐயோ ..."செல்வி" தொடரை சொன்னேங்க... !

நானும் மெட்டி ஒலி உள்ளிட்ட மெகா தொடர்களை அதிகமாக விமர்சித்துள்ளேன்.. என்ன இது மக்களை இப்படி அடிமை படுத்தி வைக்கிறாங்க, அப்புறம் நினைத்துக்கொள்வேன், அவர்களுக்கு டீ வி தொடர் என்றால் நமக்கு வலைப்பூ !

இந்த வகையான தொடர்கள் பல நேரங்களில் அபத்தமான விஷயத்தை சொல்கிறது, வியாபார நோக்கத்திற்காக சில விஷயங்கள் தினிக்கபடுகிறது, சில நேரங்களில் மூட வழக்கங்களை நியாயப்படுதுகிறது.... இன்றைய தொடர்களில் சில் நேரங்களில் "இது போன்ற காட்சி தேவையா??" என சொல்ல வைக்கும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் வைக்கப்படுகிறது.. உன்மையே !

ஆனால் , சற்று யோசித்து பார்த்தால்,. . பல குறைகள் இருந்தாலும் நிச்சயமாக சில நல்ல விடயங்கள் உள்ளடங்கி இருப்பது தெரிகிறது....

இந்த தொடரை பொறுத்தவரை, ஒரு கனவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் காண்பித்தார்கள், அதே வேளையில் எப்படி இருக்க கூடாது என்றும் காண்பித்தார்கள்.. நல்ல அருமையான பாத்திர படைப்புகள் இந்த தொடரில் இருந்தது..
சிறு சிறு பிரச்சினைகள் எழுந்து அடங்கினாலும் 5 சகோதரிகளின் பாசத்தையும் , பொறுப்பான தந்தையும் பார்க்க முடிந்தது.. நல்ல உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வைக்கும் படி இருந்தது ...
மாமியாராக நடிதவரின் பாத்திர படைப்பு மிகைப்படுத்தபட்டதென்றாலும், இவரின் சுபாவத்தை ஒத்த மாமியார்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது... நிச்சயமாக அவர்களுக்கு சற்றாவது உறுத்தி இருக்கும்..
நிர்மலா என்ற பாத்திர படைப்பின் மூலம், ஒரு பேன் ஆரம்பத்தில் மற்றவரையே சார்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் தெளிவடைந்து , சுயமாக இருக்க முடியும் என்பதை காட்டியது.. அந்த கதாபாத்திரத்தின் முதல் பாதியும், பின் பாதியும் வெகு அழகாக தீட்டப்பட்டிருந்தது

இப்படி 3.5 ஆண்டுகளுக்கு மக்களை கட்டி போடுவது சாதாரண காரியம் இல்லை.. கதாசிரியர், இயக்குனர் இருவரின் அபார திறமையும் இதற்கு முழு காரணம்.. வாழ்த்துக்கள்... !

குடும்பத்தில் அனைவரும் உட்கார்ந்து பேசுவதே அரிதாகி வரும் இந்த கால கட்டத்தில், இது போன்ற தொடர் பார்க்கும் அந்த 1 மனி நேரமாவது அனைவரும் தொலைகாட்சி முன் கூடி அமர்வதும், தொடர் பற்றியாவது ஏதாவது அவர்களூக்குள் விவாதிப்பதும் ..நல்ல விஷயமே!

மறுபக்கத்தில், இதையெல்லாம் விட உண்மையிலேயே இதில் நடித்தவர்கள், டெக்னிஷியன்கள் அனைவரும் மூன்று வருட காலம் ஒன்றாய் இருந்து , பேசி , பழகி.. ஆரம்பத்தில் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த நாடகம் தொடர் முடியும் இந்த நேரத்தில் நெருக்கமான நன்பர்களாகி இருப்பார்கள்.
நடிப்புக்கு புதிதாய் வந்தவர்கள் கூட இந்த 3.5 ஆண்டு காலத்தில் தங்களை பட்டை தீட்டிக்கொண்டிருப்பார்கள். அதை கண்கூடாக பார்க்க முடிந்தது. என்ன ஒரு அருமையான அனுபவமாக இருந்திருக்கும் அல்லவா?
ஆக, ஒரு கவிஞன் "வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி ... " என்று பாடியது போல..இந்த மெகா தொடர்களில் பல குறைகள் இருந்தாலும், நிச்சயமாக நாம் புரிந்துக்கொள்ளக்கூடிய , ரசிக்க கூடிய சில நல்ல விடயங்களும் இருக்கத்தான் செய்கிறது ...

உண்மைதானே??????

வீ எம்

செய்திகள் - சுட சுட !!

இன்றைய(15-5-05) மாலை நாளிதழில் வந்துள்ள 2 செய்திகள் பற்றியது இந்த பதிவு.பல நல்ல செய்திகள் வந்துள்ளது, சந்தோஷம், ஆனால் கீழே உள்ள இந்த இரண்டு செய்திகள் சற்று நெருடலாக இருக்கவே .. என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்...



செய்தி 1 :
இந்த செய்தியை படித்தபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. இது எந்த நோக்கத்தில் பிரசுரிக்க பட்டுள்ளது என்று இன்னும் யோசித்து கொண்டிருக்கிறேன்.. அந்த செய்தித்தாள் நிறுவனம் ,
  • உன்மையிலேயே இந்த செய்தி முக்கியமானது, மக்களை சென்றடைய வேண்டும் என்பதனால் இதை போட்டுள்ளதா?? - இல்லை
  • நேற்று சர்குலேஷன் மிக குறைவு..இன்று உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இவரை பற்றி எழுது வேண்டும்.. ஆனால் என்ன எழுத?? எதோ ஒன்று , இதை எழுதுவோம் ... தலைப்பை பார்த்து ஒரு 1000 பிரதி அதிகம் விற்கட்டும் என்று அச்சிலேற்றியதா??? இல்லை..
  • ஒரு நாளைக்கு இத்தனை செய்தி வரவேண்டும், கணக்கில் ஒன்று குறைகிறது என்று இந்த முக்கியமான செய்தியை சேர்த்தார்களா??
ஏதோ , யார் அந்த 3 வது "ரிப்பீட்டு" சொல்வது என தெரியாமல் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் செய்வது போலவும்.. இல்லை இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால், நுழைவு தேர்வு எழுதி பின் ரத்தாகியதால் நொந்து போயிருக்கும் மாணவர்கள் சந்தோசம் அடைந்துவிடுவார்கள் என்பது போலவும்... இந்த செய்தியை போட்டிருக்கிறாகள்..அதுவும் தலைப்பு பக்கத்தில்... இப்படி தர்மத்துக்கு செய்தி எழுதுவது தான் ஒரு வேளை பத்திரிக்கை தர்மம் என்பதா??? ... நாளைக்கு ஒரு நடிகர் வீட்டு நாய்க்கு 4 தடவை வயித்தால போச்சுனு எழுதுவாங்க போல...தேவுடா , தேவுடா....



செய்தி :2

மேலே சொன்ன செய்தி செய்திதாள் நிறுவனத்தை பார்த்து சிரிப்பதா , அழுவதா ரகம் ..இது ரசிகர்களை பார்த்து சிரிப்பதா , அழுவதா என்ற ரகம்..

வீரப்பன் மனைவியிடம் வி.கா ரசிகர்கள் சென்று கட்சியில் சேர சொல்லியுள்ளனர்.. அவர்கள் சொன்ன காரணத்தை பாருங்கள்... "கீழிருந்து மேலே உள்ள 3 வது பத்தியை (para) படியுங்கள்... அதை எழுத கூட மனம் வரவில்லை....
அட மாக்கான்களா...எப்போ மாற போறீங்க...???? வேறென்னத்த சொல்ல... அவங்களும் யோசிச்சு சொல்றேனு சொன்னாங்களாம்..இவங்க கேட்டுட்டு வந்திருக்காங்க..


-- நீங்க என்ன சொல்ல போறீங்க .. கருத்துபெட்டில சொல்லுங்க ---
வீ எம்

குங்குமம் கேள்விகள் - என் பதில்கள்

பாஸ்டன் பாலா , குங்குமத்தில் வந்த கேள்விகளை அவர் வலைபூவில் போட்டு பதில் கேட்டிருந்தார்.. என் பதில்கள் இதோ இங்கே !!

நன்றி : திரு பாஸ்டன் பாலா (http://etamil.blogspot.com/2005/06/blog-post_111881044089605095.html)

குங்குமம் கேள்விகள்
ராஜ்குமார், காரப்பாடி:பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?

க தியாகராசன், குடந்தை: நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?

அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம் : பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?எஸ்

அபுதுல்லா அஹமது, நாகூர் : தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்ராஜ்குமார்,

வீ எம் பதில்கள்

பதில் 1 : இன்றைய கால கட்டத்தில் பேசாமல இருந்து மற்றவர்கள் உன்னை பற்றி பேச வைப்பது தான் பெஸ்ட்

பதில் 2: நாலும் பார்த்து தெளிந்த நல்லவர் !

பதில் 3: கொசுக்களாவது பாதுக்காப்பாக இருகட்டுமே என நல்ல எண்ணம் தான்!!

பதில் 4: என் மன் எனக்கு சொந்தம் - தேசபக்தி , இன்னும் ஒருபடி மேலே போய் , எனக்கு தானே சொந்தம்..நான் அழிப்பேன் என சொல்வது தீவிரவாதம்.

அத்வானி - அது-வா-நீ ??

முதலில் பாகிஸ்தானில் ஜின்னா பற்றிய அத்வானியின் கருத்தை படித்தவுடனேயே, புரிந்தது பாரதிய ஜனதா தன்னுடைய அடுத்த கட்ட நாடகத்திற்கான ஒத்திகையை ஆரம்பித்து விட்டதென்று ...

சமீபத்தில் உமா பாரதியை கதாநாயகியாக வைத்து எடுக்கப்பட்ட நாடகம் ஒரளவுக்கு ஓடி முடிந்த பின்.. இதோ அடுத்த கட்ட நாடகம் திரைப்படத்தை மிஞ்சும் விறுவிறுப்புடன் , எதிர்பார்த்த திருப்பங்களுடன் நடந்தேறியுள்ளது.

இத்துனை நாளாக இல்லாத திருநாளாக, நம்ம அத்வானி அண்ணாச்சி ஜின்னா பற்றி திருவாய் மலர்ந்துள்ளார். அதுவும் அவரை பற்றி உயர்வாக பேசியது பார்க்கும் போது, சாத்தான் வேதம் ஓதுவதாகவே இருந்தது... ஆனால் சாத்தான் திடீரென்று ஏன் ஓதுகிறது என்பது தான் புரியாமல் இருந்தது !

பாகிஸ்தான் சென்ற அத்வானி இரு நாடுகளின் நட்பு பாலத்தை வலுப்படுத்த மேலும் ஒரு கல் எடுத்து வைக்கிறாரே என்று சற்று நேரம் தவறாக தான் என்னிவிட்டோம்...பாகிஸ்தான் , முஸ்லிம் எதிர்ப்பு என்பது பி-ஜே-பி ன் உயிர் மூச்சு.. இப்படி அத்வானியே மூச்சை நிறுத்திவிடும்படி பேசி விட்டாரே என பா.ஜ.க வட்டாரமே சற்று ஆடி தான் போய்விட்டது..

அட அத்வானி, பா.ஜ.க வின் மனசாட்சி கூட விழித்துக்கொன்டதே என்ற அச்சரியத்தை கூட 5 நாட்களுக்கு மேல் அவர்கள் விடவில்லை.... பின்னர் தான் மெல்ல புரிந்தது..

அத்வானி ஒரே கல்லில் பல மாங்காய் அடித்து விட செய்த முயற்சி..
வேறோரு நாட்டில், தன் தேன் தடவிய பேச்சால் தான் ஒரு நடுநிலையானவர் என்று முஸ்லீம் சமுதாயத்தின் முட் பறைசாற்றிக்கொள்ளுதல்..அதே வேளையில், தன் ராஜினாமா நாடகத்தின் மூலம்..தன் சொந்த கட்சியினரின் மன ஓட்டத்தை பார்பது..கட்சியில் உள்ள ஜோஷி போன்ற இரன்டாம் கட்சி தலைவர்களுக்கு என் பலம் இது என ஒரு ஷாக் தருவது.. பா ஜ க வின் பொது குழுவை கூட்டி, தான் புகழாரம் சூட்டியவரின் மீதே வசை மாறி பொழிய வைத்து ..
(குழந்தையை கிள்ளி விட்டு , தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்கள்.. பா ஜ க தான் சற்று வித்தியாசமான் கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுபவர்கள் ஆயிற்றே... ஆதலால் தான் முதலில் பாகிஸ்தானில் தொட்டில் ஆட்டிவிட்டு , அப்புறம் இந்தியா வந்து குழந்ததையை கிள்ளி விட்டிருகிறார்கள்...)பா ஜ கா வை பின்னால் இருந்து ஆட்டி வைக்கு ஆர் எஸ் எஸ் க்கு தன் பலத்தை புரிய வைப்பது...இப்படி பல மாங்காய் அடிப்பதில் அத்வானி சற்று வெற்றியும் பெற்றுள்ளார்.. ஆனால் நிரந்தரமா????? காலம் பதில் சொல்லும்..
இறுதியாக, தான் தான் பா ஜ கவின் எல்லாம் என மற்றவரை விட்டு பறை சாற்றிவிட்டு , தன் ராஜினாமா வாபஸ் மூலம் நாடகத்தை முடித்திருக்கிறார்கள்.. கட்சிக்கு அவர் தலைவர் ஆவதும் , போவதும் உட்கட்சி பிரச்சினை.. நமக்கென்ன.. அதற்காக இப்படியா மறைந்த ஒருவரின் பெயரில் ஒரு நாடகம்???
மக்கள் மனதிலிருந்து பா ஜ க மறைந்துவிட கூடாது என்று அழகாக திரைக்கதை எழுதி நாடகங்கள் அறங்கேற்றபடுகிறது.
ராஜினாமா செய்ததன் மூலம், தன் கருத்தில் மாற்றமில்லை என்று பறை சாற்றிய அத்வானி... தன் கட்சியின் செயற்குழுவில் ஜின்னா மீது புழுதி வாரி இறைத்த பின்பு வாபஸ் பெறுகிறாரென்றால் ... என்ன சொல்லுவது????

இடத்திற்கு ஏற்றார் போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம் ஒரு ஜந்து , அத்வானி - அது-வா-னீ????
இவர்கள் திரைத்துறைக்கு வந்திருந்தால் நிச்சயமாக சிவாஜியும், கமலும் காணாமல் போய் இருப்பார்கள்.

-இது என் தனிப்பட்ட ஆதங்கம் மட்டுமே!!
வீ எம்

சின்ன நெருடல் !! வலைப்பூ நன்பர்கள் சிந்திக்க........ !!


நான் வலைப்பூவிற்கு வந்து 20 - 22 நாட்கள் தான் ஆகிறது .. சில காலாமாகவே நான் அனானிமஸாக வந்து போய் கொண்டிருந்தேன்.. பதிவுகளையும் , அதற்க்கான கருத்துக்களையும் படிக்கும் போதும் உள்ளபடியே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்... எவ்வளவு ஆழமான , ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், அலசல் கட்டுரைகள், கவிதைகள், நையாண்டி... கருத்து பெட்டியில் எதிர் கருத்து போடுபவர்கள் கூட எவ்வளவு நாசூக்காக, இங்கீதத்துடன், ரசிக்குப்படி எப்படி இவர்களால் முடிகிறது என்று யோசிப்பேன்..
அதிலும் , சில பதிவுகளை படித்த போது, வலைப்பதிவர்கள் பலர் நேரிடையாக சந்தித்துள்ளார்கள் என்பதும் புரிந்தது.. என்ன ஒரு இனிமையான அனுபவம் ..
குழுமங்களையோ அல்லது webpage ஒன்றை ஆரம்பித்து , முதல் வேளையாக ஆபாச கதைகளையும், படங்களையுமே போட்டு 'கலை' சேவை செய்யும் கூட்டத்தின் நடுவில்.. சற்று தவறினாலும் ஆபாசமாகிவிடும் அபாயம் இருக்கும் தலைப்புகளை கூட மிக நேர்த்தியாக பதிவு செய்து, சிறிதும் ஆபாசம் வந்துவிடாமல் எழுதி , அதிலும் ஆண் , பெண் என் இருபாலரும் ஆரோக்கியமான விவாதம் செய்வதை பார்த்து தான் எனக்கு வலைப்பூ ஒன்று தொடங்க வேண்டும் என்ற என்னமே வந்தது....
வலைப்பூ குடும்பத்தில் இனைந்து நமக்கு தெரிவதை எழுதி , மற்றவர் பதிவுக்கு கருத்துச்சொல்லி முடிந்தால் நேரில் சந்தித்து, நட்புடன் இருந்து... இப்படியெல்லாம் எழுந்த சிந்தனையால் உதித்தது தான் என் "அரட்டை அரங்கம்"...
ஆனால் இப்போது சற்று நெருடலாக இருக்கிறது...
அனானிமஸாக வந்து சிலரின் பதிவுகளை மட்டுமே பார்த்து நாம் வலைப்பூ குடும்பம் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது..
தெளிந்த நீரோடை போன்ற அழகான பதிவுகளின் இடையில் சின்னதாய் அசுத்தமான கால்வாய் கலக்கிறதா என தோன்றுகிறது..
சாதியின் பெயரால் ஒருவர் மற்றொருவரை தாக்குவதும்... எப்போது சாதியின் அடிப்படையிலேயே பதிவுகளை போடுவதும்.. இப்படி சொன்னதுக்கு மண்னிப்பு கேள் , இல்லை வழக்காடு மன்றம் தான் என் சண்டையிடுவதும். .. அப்படி சண்டையிடும் கட்டாயத்திற்கு ஒருவரை ஆளாக்குவதும்...
பார்க்கும் போது.. கொஞ்சம் அவசரப்பட்டு வலைப்பூ குடும்பத்தை மற்ற குழுமம், webpage ஐ விட உயர்வாக எண்ணிவிட்டோமா என்ற எண்ணம் தோன்றுகிறது...
குழுமம், webpage ல் ஆபாசமும் , வக்கிரமும் என்றால் வலைப்பூவில் சாதியும் , மதமும், தனிமனித தாக்குதல்களும்.... பார்பதற்கே சற்று கவலையாக உள்ளது..
சிலர் தானே ...ஏன் இவ்வளவு கவலைபட வேண்டும் என மெத்தனமாக இருக்க முடியுமா?...... நெருப்பு "தீ" கூட மெதுவாக தான் பரவும்.. சேதம் கொஞ்சம் குறையாக தான் இருக்கும், சா"தீ" எனும் தீ வேகமாக பரவி ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்... நல்லதொரு பூந்த்தோட்டத்தை சா"தீ" கொண்ட எரித்துவிட வேண்டாம்..
அழகிய பூந்தோட்டதில் நச்சு விதை விதைக்க வேண்டாமே....

வலைப்பூவில் இருக்கும்போதாவது சாதியை மறந்து சண்டையிடாமல் இருப்போம்.....
எல்லோரும் சற்று சிந்திப்போமா - சாதீ யை மனதுக்குள் மட்டுமே வைப்போம்.. வலைப்பூ வீதியில் மேய விட வேண்டாம்.. அது யாருக்கும் நல்லதல்லவே !!

நான் அனினாமஸாக சுற்றி திரிந்து பார்த்து ரசித்த தோட்டமாகவே இது இருக்கும் என்ற நம்பிக்கையுடன்,.
வீ .எம்

பார"தீ"

இது நடந்து ஒரு 2 , 2.5 வருஷம் இருக்கும். இப்போ நெனைச்சாலும் நானே மனசுக்குள்ளே சிரித்து வைப்பேன்.. விஷயம் ஒன்னும் பெருசா இல்லை... மேல படிங்க புரியும்...
2002 செப்டம்பர் மாசம் , ஏதோ ஒரு வியாழக்கிழமை மாலை 5.00 மணி இருக்கும், என்னோட மேலதிகாரி என்னை கூப்பிட்டு, வீ எம், பாரதி னு ஒரு new member நம்ம டீம் ல ஜாய்ன் பன்றாங்க .. நான் 1 வாரம் விடுமுறை ல போறதால நீங்க தான் அந்த new joinee ya பார்த்துக்கனும்னு சொன்னாங்க..


சரி சொல்லிட்டு என் சீட் ல் வந்து நான் உட்கார்ந்தாலும் என் பாழா போன மனசு ஒரு இடமா உட்காரல.. பாரதி , அட பேரே எவ்ளோ நல்லா இருக்கு.. fresher nu வேற சொல்லிட்டாரு ..
மனசை அது இஷ்டத்துக்கு அலய விட்டுட்டு..இருந்த இரண்டு வேலையை , அவசர , அவசரமா முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளில் மூழ்கி , கொஞ்ச நேரம் பாரதியை மறந்து இருந்தேன்..

ரிமோட் வெச்சி , ஒவ்வொரு சானலா மாறி மாறி போயிட்டே இருந்தா .. ஏதோ ஒரு சானல்ல ஒரு மெகா தொடர்ல , அந்த காதாநாயகி பேரு "பாரத"¢.. அட , பார்த்த உடனே அவ்ளோ தான்.. மனசு திரும்பவும் பறக்க தொடங்கி விட்டது.. அதோட டீ வி , ரிமோட் , தொடர் எல்லாம் மறந்து ,
பாரதி எப்படி இருப்பா.. திங்கட்கிழமை காலைல வந்தவுடன் என்னை தான் பார்க்க போறா.. மேலதிகாரி 1 வாரம் இருக்க மாட்டார்.. நம்ம கிட்ட தான் எல்லாத்துக்கும் வரனும்..
ஒரு வேளை கல்யாணம் ஆகி இருக்குமோ?? சே சே .,.இருக்காது.. fresher தானே.. சின்ன வயசு.. ஆகி இருக்காது.. "இருக்காது" என்பதை விட "இருக்க கூடாது" என்றே மனசு சொல்லியது ..
தமிழ் பேர் தான், ஆக தமிழ் பொண்ணு .. ஹ்ம்ம்ம்.. அதுக்காக முதல் நாளே தமிழ் ல பேசிவிட வேண்டுமா என்ன?.. ஒரு இரண்டு நாள் இங்கிலிஷ் தான் .. அப்புறம் தான் தமிழ்.. முதல் இரண்டு நாள் ஆங்கிலம், பிரச்சனை இல்லை.. ஆனா, தமிழ்ல ஆரம்பிக்கும் போது வாங்க , போங்க னு பேசனுமா?? வேண்டாம், வேண்டாம்... அப்புறம் ஏதோ ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கும்... வா , போ னு பேசிடலாம்.. நம்மை விட சின்ன பொண்னு தானே... அப்படியே நினைவுகளில் தூங்கி போனேன்..
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேலைக்கு நடுவே அப்பப்போ பாரதி வந்து போனாள்... வெள்ளிக்கிழமை நல்ல நாள், இன்னைக்கு வந்து சேர்ந்திருக்கலாம்.... சரி சரி ..இன்னும் 2 நாள் தானே ... மனசை தேற்றிவிட்டேன்..
வீட்டிற்க்கு வந்து , டின்னர் எல்லாம் முடித்து , படுத்தவுடன், வலுக்கட்டாயமாக, பாரதியின் நினைவுகளை மனதில் இழுத்து அசை போட்டேன்.. அந்த "WKDT" ப்ரொஜக்ட் ல இருப்பாங்களே கவிதா, அவங்களை மாதிரி இருப்பாளா பாரதி?? அவ்ளோ சூப்பர் இல்லைனா கூட , அந்த quality team ல இருக்காங்களே பவித்ரா அப்படி இருந்தா கூட நல்லா இருக்கும்.. யோசனையில் அப்படியே தூங்கி போனேன்..
சனி , ஞாயிறு விடுமுறை .. வேறு பல சொந்த பணிகள் இருந்தபோதிலும், அவ்வப்போது, "வாம்மா மின்னல்" கணக்காக மனதில் வந்து வந்து போனாள். ஒரு வழியா ஞாயிறு மாலை 4 மணி யாச்சு.. சும்மா படுத்துட்டு இருந்தேன்.. மின்னல் கணக்கா வந்த பாரதி , இப்பொழுது வானவில் கனக்கா மனசுல நின்னா.. !
இன்னும் 18 மனிநேரம் தான் பாரதியை பார்க்க, என்ன டிரஸ் போடலாம்?? அந்த வெள்ளை சட்டை ..வேண்டாம்.. அது கொஞ்சம் பழசு, லுக்கா இருக்காது .. அப்பொ அந்த light blue shirt? சரி, இது தான் சரி, போன தடவை போட்டப்ப கூட நம்ம பசங்க என்ன மாப்ள , dressing கலக்கா இருக்கு னு சொன்னாங்க.. நிறைய பேர் அந்த வெளீர் நீல சட்டை with கருப்பு கால் சட்டை நல்லா இருக்குனு சொன்னாங்க.. சரி அதையே போடலாம்...
அம்மா , என் dress ironing கொடுக்கனும் ... எல்லாம் கொடுத்து அங்கே இப்போ தான் வந்தது .. கட்டில் மேல இருக்கு பாரு.. அம்மா சொல்ல.. வந்து கட்டில்ல பார்த்தா 5 சட்டை , 4 கால் சட்டை ரெடியா இருக்கு.. ஐயோ .. அந்த வெளீர் நீல சட்டை இல்லை... என்னமா அந்த light blue ஷர்ட் எங்கே கானோமே... குரல் கொடுத்தேன்.. இல்லப்பா , அதை துவைக்கல ..நாளைக்கு தான்.. அம்மா சொல்ல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. அம்மா ..ஏன் அதை துவைக்கலை?? அது வேனும்மா.. கொஞ்சம் துவைச்சுப்போடேன்.. இல்லை நான் துவைக்கட்டுமா???
ஏன்டா ..அதான் 5 செட் இருக்கே ..அதை போடு... நான் நாளைக்கு துவைத்து போடுறேன்... இல்லமா.. நாளைக்கு முக்கியமான ஒரு க்ளையன்ட் மீட்டிங் .. அந்த ஷர்ட் போட்டா நல்லா இருக்கும்.. அதான் .....பொய் தான்.. ஆனாலும் தப்பான காரியத்துக்கு இல்லையே.. சமாதானம் சொல்லிக்கொண்டேன்..
ஒரு வழியாக அம்மாவை துவைக்க வைத்தேன்.. அன்று இரவும் வேறு சில சிந்தனைகளுடன் சேர்ந்து பாரதியின் நினைவுகளோடு கரைந்து போனது...
திங்கட்கிழமை காலை 8 மனி இருக்கும்... இன்னும் இரண்டு மனி நேரம் தான் , பாரதியை சந்திக்க போகிறேன்.... நினைவுகளோடு அலுவலகம் கிளம்ப தயாரானேன்..
குளித்து முடித்து , கன்னாடி முன் எப்போதும் விட ஒரு 15 நிமிடம் அதிகமாகவே நின்றேன்.. light blue சட்டை போட்டு , கருப்பு கால் சட்டை போட்டு... dressing முடித்து கண்ணாடி முன் நின்று பார்த்தேன்..சற்று திருப்தியாகவே இருந்தது.. பாரதியும் நீல நிற ஆடையில் வந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்.. மனதில் நானே சொல்லிகொண்டேன்..
சரி முதலில் என்ன சொல்லவேண்டும்.. ஹாய் பாரதி... இல்லை ஹலோ பாரதி.... கொஞ்சம் வேற மாதிரி... வெல்கம் மிஸ் பாரதி.........(ஏதோ நேர்முக தேர்வுக்கு போவது போல் செய்து பார்த்தேன்..) சரி அந்த நேரத்தில் எப்படி வருகிறதோ அப்படியே சொல்லலாம்.. எதுவும் "natural அ இருந்தால் தான் நல்லா இருக்கும்"... என் கடந்த 3 நாள் செய்கைகளுக்கு சம்பந்தமே இல்லாமல் நானே சொல்லிக்கொண்டேன்....
போயிட்டு வரேன் மா .. அம்மாவிடம் சொல்லிவிட்டு. கிளம்பினேன்...மனி 9.30 . என் அலுவலக இருக்கையில்.. என் laptop ஐ நன்றாக துடைத்து.. மேஜை மேலிருக்கும் 4 , 5 decoration பொருட்களை பல பல விதமாக அடுக்கி பார்த்து.. குழம்பி போய்..கடைசி ஏதோ ஒரு கட்டத்தில் திருப்தி அடைந்து , அடுக்கி வைதேன்.. என் அலுவலக இருப்பிடம் கொஞ்சம் சுத்தமாக் இருந்தது..
ஐயோ , மனி 9.45 .. அவசர அவசரமாக rest room சென்று.. கண்ணாடி முன் நின்று , சின்ன டச்-அப் செய்துக்கொண்டு வந்து அமர்ந்தேன்.. :) 9.55, எந்த நிமிடமும் வரலாம்.. ஆவலோடு நான்..
சார் என்று ஒரு குரல்.. திரும்பி பார்த்தேன், குள்ளமாக , சற்று மாநிறத்தில், குண்டாக ஒருவர்... யாருடா இந்த நேரத்தில்.. பாரதி வர நேரத்தில் நந்தி மாதிரி .எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசி அனுப்ப வேண்டும் .. மனதுக்குள் நினைத்தவாறே .."எஸ்" என்றேன்...

ஐ ஆம் பாரதி, நியூ ஜாயினி(JOINEE) Fரம் டுடே .... வெளீர் நீல சட்டை , கருப்பு நிற கால் சட்டையில் அந்த கர கர ஆண் குரல்...

வெல்கம் , ஐ ஆம் வீ .எம் என்றேன் சற்றே தளர்ந்த குரலில்.


அப்போது தான் "பாரதி" என்ற பெயர் ஆண்களுக்கும் இருக்கும் என்பது 4 நாட்களுக்கு என் மரமன்டைக்கு உரைக்காமல் போனது என்று யோசிக்க ஆரம்பித்தேன்..
பட் டூ லேட்... !


என்ன சொல்றீங்க??? எதுவா இருந்தாலும் கருத்துப்பெட்டில சொல்லுங்க !!

வீ .எம்

சுமைதாங்கிகள்..


பெண் சுமைதாங்கிகள்..

பழகி போனது

மூன்று வயதில் ஏற்றிய பாரம்
மூப்படைந்தும் இறக்கவில்லை
சுமைதாங்கிகள் - நாங்கள்
"பெண்கள்" எங்கள் அடையாளம்...

========================
ஆண் சுமைதாங்கிகள்..

பாரம்

சுமை தான் - ஆனாலும்
வலிக்கவில்லையே - ஏனோ?
மனதின் பாரம் - இதை விட
அதிகம் என்பதனால் தானோ ???


வீ .எம்

எப்போ வருவேன் ... எப்படி வருவேன் , யாருக்கும் தெரியாது ஆனா ....

சென்னையில் ரொம்ப கஷ்டமடா சாமி... ! சம்மர் வந்தாலும் வந்துச்சி, தூங்க முடியல... !! அப்படி இப்படி வேலையெல்லாம் முடிச்சு அப்பாடானு 11 மனிக்கு படுத்து.. என்னடா 5 நாள் ஆச்சு வலைப்பூவில் எழுதி , எதைப்பத்தி எழுதலாம் என யோசனை.. "பாவம் அவரை விட்டுவிடுங்களேன் .. பாகம் 2 " எழுதனுமே... சரி அதுக்கு பாயிண்ட்ஸ் யோசிப்போம் ... ஹ்ம்ம்ம்.. இந்த பாயின்ட் எழுதலாம் ..ஆனா ரொம்ப strong ஆ இருக்குமோ...அப்புறம் நம்ம ராம்கி அண்னே & தலைவர் ரசிகர் எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க .. டின்னு கட்டிட்டாங்கனா..என்ன பன்றது... !! சரி இது வேண்டாம்.. ஹம்... இப்படி எழுதினா... அய்யோ .. வேண்டாம் சாமீ .. நம்ம "காஜா" குழலி சும்மா இருக்க மாட்டார் ..அல்வா சாப்பிட்ட மாதிரி, பில்ட் அப் கொடுத்துடுவார்... சரி சரி . இதுவும் வேணாம்... அப்போ இது... இது தான் சரி, ஒரு பாயிண்ட் மனசுல வந்தது.. என்ன நம்ம Go Ganesh ஒரு கேள்வியோட அவர் பின்னூட்டததை முடிப்பார்.. இருந்தாலும் "காஜா" கலாய்கறதுக்கு கனேஷ் பெட்டர் .. எப்படி இருந்தாலும் நம்ம ஞானபீடம் ஒரு தாக்கு தாக்குவார்.. பரவாயில்லை.. !

இது வேற , rajinifans.com ல இருந்து கொஞ்சம் பேர் வலைக்கு வந்துட்டு போய் இருக்காக... ஏற்கனவே கடுப்புல இருப்பாங்க.. இதுல எதாச்சும் ஏடாகூடமா எழுதிட்டா ?? so, யோசிச்சு , யோசிச்சு 2 , 3 points தான் தேறிச்சு ... சரினு light a கண்ணு அசந்து போற நேரத்துல..திடீர்னு ஒரு குரல் , அப்பா கூப்டாங்க "வாடா , கொஞ்சம் தண்ணி அடி" .. அட, metro water தான் சாமி... ..கை பம்புல தான் அடிக்கனும்.. மனி என்னனு பார்த்தா 1.45 .. இன்னும் 3 வரி கூட யோசிக்கலை அதுக்குள்ளேவே.. சரி ..எழுந்து போனேன்.. 1 வாரமa இதே பிரச்சனை தான்..போர் ல தண்ணி வரலை.. மெட்ரோ வாட்டர் தான் ... இது சென்னை வாசிகளுக்கு ஒரு சம்மர் ஸ்பெஷல் offer .. வருசா வருசம் இந்த விளையாட்டு தான்.. என்ன பன்றது.. எப்பவும் நாம் இந்த விளையாட்டுக்கு போறது இல்ல.. அப்பா , அம்மா , தங்கை தான் பார்த்துப்பாங்க.. .. அம்மா யும் , தங்கையும் சித்தி வீட்டுக்கு போய் இருக்காங்க... அதனால நான் இன்னைக்கு அப்பாக்கு ஹெல்ப் பன்னனும்... ஏதோ ஈஸியான வேலைனு நெனைச்சு காலைல சரினு சொல்லிட்டேன்..இப்போ தானே தெரியுது...நட்ட நடு ராத்திரியிலே ..லொடுக்கு லொடுக்குனு அடிச்சு , வருவனா பாருனு ..தண்ணி மெல்லிசா வர... அப்பப்பா ... கார்போரேஷன் பியூன் ல இருந்து கமிஷனர் வரைக்கும் திட்டி தீர்த்து .. கவுன்சிலர் ல இருந்து முதல்வர் வரை அர்ச்சனை செய்து.. எதோ சென்னைக்கு மழை பெய்ய வெச்சா தன் சொத்து கொறஞ்சி போயிடற மாதிரி பிகு பன்ற வருண பகவானுக்கு கொஞ்சம் அர்ச்சனை செய்து...

ஒரு வழியா 8 குடம் தண்ணி அடிச்சி போய் அக்கடானு 2.30 மனிக்கு படுத்தா .. தூக்கம் வரும்னு பார்த்தா மறுபடி வலைப்பூ ஞாபகம் தான்.. அடங்கொக்கா மக்கா.. என்னடா இது..இப்படி வலைப்பூ பைத்தியமாயிட்டேன்.... சரி .. சரினு நம்ம சிந்தனை குதிரைய தட்டி விட்டு யோசிக்க ஆரம்பிச்சேன்.. நல்ல எழுத்தாளர்களுக்கு நடு ராத்திரில தான் சிந்தனை வரும்.. (தூக்க வரலை ..வேற வழி...) மறுபடியும் ... "பாவம் ..அவரை விட்டுவிடுங்கள் - பாகம் 2 " தான் ..அட ..என்னமா .. கருத்துகள் (பாயின்ட்ஸ்) வருது இப்போ. அடா அடா அடா .. நம்ம metro water a விட ஸ்பீடா வருது... எல்லாம் மனசுல போட்டுட்டு மனி பார்தா, 4.30 .. ஐயோ ..காலையில வேலைக்கு போவேனும்... ஹ்ம்ம்..ஆச்சரியம் தான்.. வலைபூக்கு நடுவுல இன்னும் office ஞாபகம் இருக்கு டோய்...சரி அப்படியே தூங்கி எழுந்து போய் காலையிலே எல்லாத்தையும் வலைப்பூவில் கொட்லாம்னு..தூங்கி...காலைல இங்கே வந்தா .. நம்ம மண்டையில ஏதோ மக்கர்... யோசிச்ச எதுவும் ஞாபகம் வரலை... நொந்து போயிட்டேன்.. யோசிச்சு யோசிச்சு பார்த்தில் மெட்ரோ வாட்டர் , கைபம்பு எல்லாம் தான் வருது... நம்ம வலைப்பூக்கு யோசிச்ச விஷயம் எதுவும் வரலை... :( so, once again நான் மறுபடியும் யோசிச்சு "பாவம் அவரை விட்டுவிடுங்களேன் .. பாகம் 2" எழுத கொஞ்சம் டைம் வேனும்..
அப்புறம் தலைப்பை பத்தி சொல்லனுமே.. பாதி தான் மேலே இருக்கு.. full a கீழே பாருங்க


" நான் எப்போ வருவேன் ... எப்படி வருவேன் , யாருக்கும் தெரியாது ஆனா நிச்சயமா ..வரக்கூடாத நேரத்துல எல்லாம் வந்து இம்சை பன்னுவேன்...."
- நான் தான் சென்னை metro water :)thalaippu சும்மா வெச்சது... எது கூடவும் link pannadheengo..... !!

அப்புறம், subject ஏ இல்லாம, நல்ல தமிழ் பத்தி எல்லாம் யோசிக்காம.. இஷ்டத்துக்கு எழுதி பார்க்கலாம் , வருமானு நெனைச்சேன் ..ஏதோ சுமார வருது.. ஆன இது கொஞ்சம் கஸ்டமா தாம் இருக்கு...

அப்புரம் தார் பூசும் நன்பர்களே... !! please excuse this time.. - தாரெல்லாம் பூசிடாதீங்க..okay..

see u all soon ! very soon !
வீ . எம்

பாவம் , அவரை விட்டு விடுவோமே !!

அவருக்கு வர விருப்பம் இருக்கிறதோ இல்லையோ , அவரின் ரசிகர்களுக்கும், பல பத்திரிக்கைளுக்கும், சில அரசியல் கட்சிகளுக்கும் அவரை எப்படியும் இழுத்து விட வேண்டும் என்பதில் அப்படி ஒரு ஆசை.. ! உண்மையிலேயே சொல்லப்போனால், அவரின் ரசிகர்களின் ஒரு பிரிவினரை தவிர, மேலே சொன்ன மற்ற அனைவருமே சுய லாபத்துக்காகவே அவர் வரவை ஆவலுடன் எதிர்பார்கின்றனர்..
பொதுவாகவே .. சரியாக வருமா ? வராதா ? என்று புரிந்துகொள்ள முடியாத ரெண்டாங்கெட்டான் காரியங்களுக்கு நான் என்று முன்னே வருவதை விட "அவன்" என்று மற்றவரை சுட்டுவது (கைகாட்டி விளையாட்டு) மனித இயல்பு..ஞாபகப்படுத்தி பாருங்கள், பள்ளியில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டு பதில் எதிர்பார்க்கும் வேளையில், விடை தெரிந்த கேள்வியாக இருப்பின் , நான் , நீ என் போட்டி போட்டு பதில் வரும்... அதே வேளையில் , பதில் தெரியாத ஒரு கேள்வியாக இருந்தால்?? மற்றவர் பெயரை எத்தனை முறை சொல்லி இருப்போம்.. சில சமயங்களில் ஏதோ ஒரு தவறான விடையை பக்கத்தில் உள்ள ஒரு எமாந்தவனிடன் சொல்லி .. சொல்லு டா ..சீக்கிரம் சொல்லுட என உசுப்பி இருப்போம்..அந்த மாக்கானும் பெறுமைக்காக , தவறாக விடை சொல்ல, ஆசிரியர் அவனை நையாண்டி செய்வதையோ .. அல்லது திட்டுவதையோ.. சிறிதாவது ரசித்திருப்போம்.... !
இதுவும் ஒரு வகையில் அது போலவே !!

ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இது வரவு, பத்திரிக்கைக்கு இது வியாபரம், அரசியல் கட்சிக்கு இது தொகுதிக்கு 500 , 1000 அதிக வாக்குகள் மற்றும் 10 - 12 கூடுதல் தொகுதியில் வெற்றி. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகருக்கோ இது எதிர்காலம் .. அதை ஏன் யாரும் உனரவில்லை... ??

பத்திரிக்கையோ , மற்ற அரசியல்வாதிகளோ அவரை இழுப்பது சரி ..வியாபார நோக்கம்.. இருவருக்குமே இவர் வந்து , தோற்று போனாலும் எந்த நட்டமும் இல்லை.. "முடி"யை கட்டி மலையை இழுப்போம் , வந்தால் "மலை" போனால் "முடி" என்கிற கணக்குத்தான்.. அவர்களுக்கு இந்த "காந்த்" இல்லையென்றால் வேறொரு "சாந்த்"

ஆனால், "உயிர் உனக்கு" என கோஷமிட்டும், அவர் போஸ்டரில் ஒரு மாடு அரிப்பு அடங்க உடலை தேய்துக்கொண்டால் கூட அந்த மாட்டை எதிரி போல பாவித்து சண்டைக்கு போயும், அவர் வீட்டினுள் இருக்கிறாரா இல்லையா என கூட தெரியாமல் , அவர் வீட்டின் வாசலில் பல மனி நேரம் தவமிருந்தும், அவர் படத்துக்காக 'பன்' வடிவ கொண்டை போட்டால் , அதே போல் கொண்டை போட்டுக்கொன்டு, தெருவில் நடந்தும், எல்லாம் அவரே என் இருக்கும் அவரின் முரட்டு பக்தர்கள் , ரசிகர்கள் கூட இந்த 'கைகாட்டி' விளையாட்டை ஏன் செய்கிறார்கள் என்று தான் புரியவில்லை !!

பத்திரிக்கையையும் , மற்ற அரசியல்வாதிகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டு .. உங்களுக்கு தான் இதை எழுதுகிறேன்..

ரசிகர்களே,
வெள்ளித்திரை என்கிற மாயை உங்கள் கண்களை மறைக்கிறதா?? இல்லை சினிமாவில், நூறடியில் இருந்து குதிக்கும் காட்சியில் 'டூப்' போட்டு எடுத்து விடுவது போல், அரசியலும், அரசாங்கமும் சுலபமானது என்று நினைத்து விட்டீர்களா?
திரையில் அவரை பார்த்து ரசிக்கும் கூட்டம் அனைத்தும் ஓட்டுக்களாய் மாறும் என்று தயவு செய்து எண்ணிவிடாதீர்கள் ரசிகர்களே !!

அது உன்மையாயின், சிவாஜி , பாக்கியராஜ் , ராமராஜன்... ஏன், செந்தில் , கவுண்டமணி கூட ஒரு முறையாவது நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள்..

சரி, இவர்களை எல்லாம் திரையில் தான் ரசித்தார்கள் ..ஆனால் எங்கள் தலைவர் ஒரு விழாவிற்கோ இல்லை பொது இடத்திற்கோ வந்தால் போதும் அப்படி ஒரு கூட்டம் என்கிறீர்களா?? அப்படி பார்த்தால், 1970 களில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த கலைஞர் இன்று வரை முதல்வராகவே நீடித்து இருக்க வேண்டும்... சரிதானே?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது?? விஜய் டிவி "மக்கள் யார் பக்கம்" நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ரசிகர் மன்ற தலைவர் திரு. ரஜினி சங்கர் , புள்ளி விவரங்களோடு பேசினார், பார்த்திருப்பீர்கள்.. பாண்டியில் இத்தனை பதிவு செய்த மன்றங்கள் , இத்தனை பதிவு செய்யாத மன்றங்கள்.. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தபட்சமாக இத்தனை நபர்.., அவர் குடும்ப உறுப்பினர் , அதில்லாமல் மன்றம் சாரா ரசிகர்கள்... எல்லாம் சொல்லி இறுதியில் மன்றங்கள் X நபர் X குடும்ப உறுப்பினர் + மன்றம் சாரா ரசிகர்கள்+... .. எல்லா கணக்கும் போட்டு ரஜினி சங்கர் சொன்ன வாக்குகள் படி பார்த்தால் அங்கே போட்டியிட்ட தி மு க கூட்டணி வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கி இருக்க கூடாது.. ஆனால் ..நடந்தது என்ன??? யோசித்து பாருங்கள்...

இன்றைய கால அரசியலுக்கு தேவையான சில தகுதிகள் நிச்சயாக நான் கேட்ட , அறிந்த வரையில் ரஜினியிடம் இல்லை. அதில் 20 - 25% கூட இல்லை..

"கடவுளே" வந்தாலும் அவரை
கட்டிப்போட்டு கான்ட்ராக்ட் விட்டு
காசு பார்க்கும் அரசியல்வாதிகள்
நிறைந்த காலமிது ..


ரசிகர்களே , காமராஜர் , கக்கன் காலத்து அரிசியல் என்ற நினைப்பிலேயே, நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், தயவு செய்து உங்கள் 40 ஆண்டு கால தூக்கத்தை கலைத்துவிட்டு விழித்துக்கொள்ளுங்கள்.... !

ரஜினிக்கு நான் எதிர்ப்பு அல்ல.. சொல்லப்போனால் அவரின் ரசிகன் தான். .ஆனால் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகன் அல்ல , வெறியன் அல்ல.. திரையில் அவர் நடிப்பை ரசித்து ..அவரிடம் உள்ள நல்ல குணங்களுக்காக அவரை மதித்து .. அதே நேரத்தில் அவரின் சில தவறான கருத்துக்களை தயங்காமல் விமர்சனம் செய்யவும் , மற்றவர் செய்யும் விமர்சனத்தில் உன்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளவும் பக்குவப்பட்ட உன்மையான ரசிகர்களில் ஒருவன்.. !

அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் சொல்லவில்லை ..வரட்டும்.. ஆனால் அவர் சுயமாக + and - சிந்தித்து, ஆராய்ந்து முடிவு செய்யட்டும்.. நாம் அவரை வலுக்கட்டாயமாக் இழுக்க வேண்டாம்.. . நாம் இழுத்தா அவர் நடிக்க வந்தார்?? நாம் கதை தேர்வு செய்து கொடுத்தா அவர் படையப்பா வும் , பாபாவும் நடித்தார்.. நாமா அவரை இமய மலைக்கு இழுத்து சென்றோம்?? .. இல்லயே ...அவரின் முடிவு தானே எல்லாம்???? இதையும் அவரே முடிவு செய்யட்டுமே.... ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் வர வேண்டாம் என்பதே என் கருத்து... அவரது ரசிகர்களின் ஒரு பகுதியினரின் கருத்தும் கூட ..
நாங்கள் ரசிகர்களாகவே இருப்போம் ... தொன்டனாக வேண்டாம்.!

அவர் வரவேண்டும் என்று வற்புறுத்தி நாம் ஒரு நாள் மட்டும் 'உண்ணாவிரதம்' இருந்து அழைத்து ...அவரை வாழ்நாள் முழுவதும் பட்டினி போட்டு விட வேண்டாம்.... !!

"ரஜினி ராம்கி" சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதினார் .. "ரஜினி - சகாப்தமா , சப்தமா?" திரைத்துறை பொறுத்த வரையில் அவர் சகாப்தம். மேலும் சகாப்தம் படைக்கட்டும்... அவரை அரசியலுக்கு வலுக்கட்டாயமாக, இழுத்து வந்து "வெறும் சப்தம்" என் மாற்றிவிடாதீர் , ரசிகர்களே !!

கவிஞர் கண்ணதாசன் பாடல் நினைவிற்கு வருகிறது :

"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ..கருடா சவுக்கியமா? ...
யாவரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ...
கருடன் சொன்னது ..அதில் அர்த்தம் உள்ளது"


வேறொரு வலைப்பூவில் பார்த்த வரிகளை இங்கே சுட்டி காட்ட விரும்புகிறேன்..

" ............... இப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை இதில் அடக்கம்."

பாவம், அவர் அவராக இருக்கட்டும்.. சுயமாக முடிவெடுக்கட்டும்! அவரின் உன்மையான ரசிகர்களிக்கு நிச்சயம் புரியும் என்ற நம்பிக்கையில்....

இந்த நிலைக்கு ரசிகர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது.. ரஜினி அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது.. சொல்லப்போனால் அதிக பங்கு அவருக்கு தான் இருக்கிறது ... எப்படி ????? அதையும் சொல்ல வேண்டும் அல்லவா??

பகுதி 2 ல் சொல்கிறேன் ...

அப்புறம் .. வேரென்ன சொல்லப்போறேன்..வழக்கம் போல தான்.. பிடிச்சிருந்தா ஒரு வரி கருத்து + நட்சதிரத்துல் ஒரு சுட்டு .. மற்ற ரசிகர்களும் படிக்கட்டுமே !!

விரைவில் சந்திப்போம்...

அன்புடன்,
வீ .எம்