முத்துக்குமரா - ஏன் குழம்(ப்)பிப்போனாய்??
முத்துக்குமரா, உன் தமிழ் உணர்விற்கு தலைவணங்குகிறேன்.
மற்றவர் நலன் கருதி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவதற்கெல்லாம் தூய்மையான உள்ளமும், குறிப்பாக ஈழத்தின் அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தூய மனம் என்பதையும் தாண்டி இன உணர்வும் வேண்டும்.
நீ எடுத்தது வேகமான முடிவு என்று சொல்ல முடிந்த எங்களுக்கு அதனை விவேகமான முடிவு என்ற சொல்லிட மனம வரவில்லையே முத்துக்குமரா.
இன உணர்வை நெஞ்சில் உரம் போட்டு போராளியாக இருந்திருக்க வேண்டிய நீ , தீக்கிரையாக போனதில் என்ன விவேகம் இருக்கிறது முத்துகுமார்?
உன் உயிர்த்தியாகம் , பட்டி தொட்டியெங்கும் பரவி , ஈழம் பற்றி என்ன என்று தெரியாதவர் கூட ஈழம் என்ன , நடப்பது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர், இளைஞர் சமுதாயத்தில் உணர்ச்சி கலந்த ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா கூட இதுவரை அங்கே ஏதோ போர் என்று நினைத்திருந்த நிலையில் மாறி, இரண்டு நாட்களாக , இலங்கை என்று ஆரம்பிக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கையில் படித்துவிட்டு கேள்வி கேட்கிறார்.. உன் உயிர்த்தியாகம் தான் இதை சாதித்தது , சந்தேகமே இல்லை..
ஏழுச்சியும், விழிப்பும் ஏற்படுத்தியிருக்கிறது உன் மரணம்.. உண்மை தான் ,
ஆனால் என்ன பயன் விளையும் முத்துக்குமரா..???
ஏற்பட்டிருக்கும் எழுச்சியை சரியான பாதையில் எடுத்துச்செல்ல நல்ல தலைமை இல்லாதவரை அந்த எழுச்சியின் பயன் என்ன சொல்?
உன் மரணத்தை கூட, இது ஏன்ன தியாகமா, குடும்ப தகராறில் தற்கொலையா, கட்சியின் தூண்டுதலா, என்றெல்லாம் கேள்வி கேட்டு ஒரு கூட்டம் கிளம்பிவிட்டதை நீ அறிவாயா?
ஜெத்மலானியின் கேள்விகளை விட, ராஜீவின் மரணம் பற்றிய கேள்விகளை கேட்கதாவர்கள் கூட, உன் மரணத்துக்கு பக்கம் பக்கமாய் கேள்வி கேட்பதை நீ அறிவாயா முத்துகுமரா?
உன் மரணத்தால் எழ்ச்சிப்பெற்றவர்கள் எல்லாம், இந்த கூட்டத்துக்கு பதில் சொல்வதற்கே இனி தங்கள் எழுச்சியை பயன்படுத்தப்போகிறார்க்ள்..
ஈழத்துக்கு ஆதரவா, எதிர்ப்பா , புலிகளுக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற நிலையில் இருந்து மாறி, இன்று முத்துக்குமாருக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற பாதையில் பயணம் செல்வதாக உணர முடிகிறது.
நீண்ட கடிதத்தில் தமிழக கட்சிகள் பலவற்றையும் சாடி சென்றுவிட்டாய்..
ஈழத்துக்கு ஆதரவான தமிழன் என்று பொதுவில் உன்னை வைத்து பார்த்திருக்கவேண்டிய நிலைமாறி சில அரசியல் கட்ச்யிகளுக்கு எதிரி, சில கட்சிக்கு ஆதரவானவன் என்ற அரசியல் முத்திரை உன் உண்மையான தமிழன் முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைத்து வருகிறதே உன் கடிதம்.. அதை உண்ணாலே உணர முடியாது முத்துக்குமரா..
இந்த சூராவளிக்கு நடுவில் நீ எழுப்பி சென்ற எழுச்சி எனும் தீ அனையாது எப்படி காத்திட போகிறோம் என புரியவில்லை.
எல்லாவறையும் காட்டிலும், இங்கே அரசியல்வாதிகள் புகுந்து உனக்கு கொடுக்கும் பட்டமும் , அவர்களக் நடத்தும் அரசியல் நாடங்களும், இன்னும் சில முத்துக்குமார்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது முத்துகுமரா..
நம் ஊடகங்களை பற்றி சொல்லிடவே வேண்டாம். முதல் பக்கத்தில் ஆரம்பித்த நீ ஒரு வாரத்தில் கடைசி பக்கத்தின் ஒரு மூலையில் பெட்டி செய்தியாக முடங்கிவிடுவாய்... அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் ஒரு வாரமே அதிகமடா.. பத்திரிக்கைதுறையிலும் அரசியல் இருக்கிறது என்று உனக்கு தெரியாமலா இருந்திருக்கும்..
தெளிவான சிந்தனையில் இருந்த நீ, உணர்ச்சி தீ எழுப்பும் தந்திரம் தெரிந்துவைத்திருந்த நீ, இப்படியெல்லாம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே என்று மட்டும் நினைக்காமல் விட்டது ஏனடா?
சற்று குழப்ப நிலையில் இருந்துவிட்டாயா??
நினைத்திருந்தால் உன் உடலில் தீயிட்டு உணர்ச்சி தீயை பரவவிட்டதற்கு பதிலாய் உணர்ச்சித்தீயை உன் உள்ளத்தில் ஏற்றி, புரட்சிபடையின் முதல் ஆளாய் நின்றிருப்பாயே முத்துகுமரா.
உன் ஆன்மா சாந்தியைடட்டும்.. ஈழத்து தமிழரின் சிரிப்பொலி காற்றிலே கலந்து உன்னை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கையுடன்.. !