Showing posts with label திருமங்கலம். Show all posts
Showing posts with label திருமங்கலம். Show all posts

திருமங்கலத்தில் வைகோ வெற்றி

திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது.

தே மு தி க - 11,000 & சரத்தின் ச மு க 700 வாக்குகளும் பெற்றுள்ளது.

தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை விட சுமார் 36,150 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( தி மு க - 70,000 , அ தி மு க - 34,000).

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது

தலைப்பு பற்றிய விளக்கம். ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது..

உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு செய்யவேண்டும் என்றே இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி.

குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி

திருமங்கலத்தில் தி மு க வெற்றி?

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. வாக்கு என்னிக்கை 12ம் தேதி நடைப்பெற்று அன்று 11 மனிக்கெல்லாம் முடிவுகள் தெரியும்..

இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நக்கீரன் பத்திரிக்கை ஒரு கருத்து கனிப்பு நடத்தி முடிவுகளை இந்த வார இதழில் வெளியிட்ட்டுள்ளது. அதன் படி

தி மு க - 56 %

அ தி மு க - 36%

தே மு தி க 8.5%

ச ம க - 1.2%


தி மு க சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் நக்கீரன் எழுதியுள்ளது

ஆண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 52%

அ தி மு க - 35%

தே மு தி க - 9%


பெண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 53%

அ தி மு க - 36%

தே மு தி க - 9%

வயதுவாரியாக
(18 - 25) தி மு க - 45, அ தி மு க - 30, தே மு தி க - 21, ச ம க - 2
(26 - 40) தி மு க - 54, அ தி மு க - 37, தே மு தி க 5, ச ம க - 2
(41 க்கு மேல்) தி மு க - 58, அ தி மு க - 39, தே மு தி க - 2

மக்கள் மநநிலை என்ற தலைப்பில் நக்கீரன் மக்களிடம் பேசியதிலிருந்து

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்கு

இரண்டு கட்சியினரும் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் இருவருக்கும் சரி சமமாக

பிள்ளைகள் கைவிட்ட எனக்கு அந்த மகராசன் 1 ரூ அரிசி கொடுத்து வாழவெச்சு இருக்காரு அவருக்கு தான் ஓட்டு - வயதான பெண்மனி

அ தி மு க எனக்கு பிடிக்கும்னாலும் அந்த அம்மா இலங்கை தமிழர் பிரச்சனையில தமிழருக்கு எதிரா இருக்க்கு அதனால இரட்டை இலைக்கு ஓட்டு போடமாட்டேன்.

ஒரு ரூ அரிசி கொடுத்திருக்காரு, ரேசன்ல பொருள் கிடைக்குது அதுனால சூரியனுக்கு ஓட்டு

சாத்தான்குளம் இடைத்தேர்தல்ல எங்க வேலைய காமிக்க முடிஞ்சது.. ஆனா இங்கே அழகிரி ஏரியா ல முடியல.. இலைய ஓரம்கட்டி சூரியன் முன்னாடி போகுது - ஒரு அதிமுககாரர்

ஆளுங்கட்சி எம் எல் ஏ வரனும், சூரியனுக்கு ஓட்டு

பென் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் ஒருவர போட்டிருக்கார் கலைஞர் - தி மு க காரர்

மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் அதி மு க விற்கு ஓட்டு

தி மு க , அதிமுக பணம் தந்து கலக்குறாங்க.. கேப்டன் வெறும் வாயில முழம் போடறார்... தேறாது.. தே மு தி க தொன்டர்


பன்னி மேய்க்க சொன்ன விஜயகாந்த் - கடுப்பான விவசாயிகள்

செங்காப்படையில் பிராச்சாரம் செய்த விஜயகாந்திற்கு அங்கு கூடிய விவசாயிகளை பார்த்தவுடன் உற்ச்சாகம் ஏற்பட்டது. உற்சாகத்தில் அவர், இலவசங்களை கொடுக்கறாங்கனு வாங்காதீங்க..இலவசங்களுக்கு அடிமையாகாதீங்க.. இன்னைகு காசு பணம் தருவாங்க.. நீங்களும் வெட்க்கமில்லாம சந்தோஷமா வாங்குறீங்க.. நாளைக்கு 2 பன்னிய கொடுத்து மேய்க்க சொல்லுவாங்க. .நீங்க பன்னி மேய்ப்பீங்களா? என்று கேட்க..

கடுப்பான விவசாயிகள், யோவ். என்ன பேசுற, லிமிட்டா பேசு.. மெட்ராஸ்ல இருந்து வந்து எங்களயா பன்னி மேய்ப்பீங்களானு கேட்குற?? உனக்கு இஷ்டமிருந்தா நீ பன்னி மேயி.. வந்தமா ஓட்டு கேட்டமானு போ.. தேவையில்லாம பேசாதே என்று கோபமாக குரல் விட.. இதில் சங்கடமான விஜயகாந்த் கிளம்பிச்சென்றார்..

நன்றி - நக்கீரன்

பல முறை நக்கீரன் சர்வே முடிவுகள் துல்லியமாக இருந்திருக்கிறது.. பார்க்கலாம் இம்முறை எப்படி இருக்கிறது என்று.. !

திகு திகு திருமங்கலம் யாருக்கு?

இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..

தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..

பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் தி மு க , அ தி மு க, தே மு தி க , ச ம க கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..
இருப்பினும் நேரடி போட்டி என்னவோ தி மு க மற்றும் அ தி மு க விற்கு தான்.. ஒரளவு தே மு தி க வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் ச ம க விற்கு இது முதல் தேர்தல்..

அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது


இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.

பா ஜ க போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், பா ஜ க விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை தே மு தி க விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் தே மு தி க வை விட பா ஜ க தொண்டர்கள் அ தி மு க விற்கே வாக்களிக்க விரும்புவர்.

பா ம க வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு அ தி மு க ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் தி மு க விற்கும், ஒரு சாரார் வாக்கு அ தி மு க விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.

பா ஜ க போட்டியிடாதது, போன முறை தி மு க கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் பா ம க வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை அ தி மு க வின் ப்ளஸ்.
கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக ம தி மு க வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் அ தி மு க விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை ம தி மு க வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அ தி மு க விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.

தி மு க விற்கு என்று பார்த்தால், கம்யுனிஸ்ட் , பா ம க கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், கட்சியின் ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.

மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.

ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.

இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது.,

தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..