ஈழம் - இப்படித்தான் நடக்கவேண்டும் என்று ஆசை
30/01/2009 - தி மு க , பா ம க அமைச்சர்கள் ராஜினாமா, அனைவரும் மக்களவை சபாநாயகருக்கு தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பினர்.
30/01/2009 - போர் நிறுத்ததை வலியுறுத்தி காங்கிரஸ் அரசு உறுதியான எச்சரிக்கையை இலங்கை அரசுக்கு நாளை மாலைக்குள் அனுப்பாவிட்டால், தி மு க , பா ம க, கம்யூனிஸ்ட எம் பி க்ககள் அனைவரும் கூண்டோடு எம் பி பதவியை ராஜினாமா செய்ய உறுதி - கருணாநிதி தலைமயில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.
30/01/2009 தமிழக கட்சிகள் முடிவு - காங்கிரஸ் அரசு கவிழுமா?
சட்டசபையில் தி மு க விற்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவு வாபஸ் ஆகுமா??? தி மு க அறுதி பெரும்பான்மை இழக்குமா?
1/2/2009 - தி மு க விற்கு துனை நிற்போம் - ஆட்சி கவிழ விடமாட்டோம் - பா ம க , வி சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உறுதி.
02/02/09 - அனைத்து எம் பி க்களும் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.
02/02/09 - தமிழர் நலன் கருதி - நடபுணர்வோடு காங்கிரஸை விட்டு பிரிகிறோம் - கருணாநிதி அறிவிப்பு.
03/02/2009 - மதிமுக வினரும் ராஜினாமா - வைகோ அறிவிப்பு
04/02/2009 - தி மு க விற்கு ஆதரவு வாபஸ் - காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடி.
தமிழ் உணர்வுடன் கலைஞரின் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் - ராமதாஸ், பழ நெடுமாறன் வேண்டுகோள்.
06/02/09 - திடீர் திருப்பம் - தமிழ் உணர்வுடன், தமிழர் நலன் கருதி தி மு க அரசுக்கு ஆதரவு - ஜி கே வாசன் தலைமையில் 12 எம் எல் ஏ க்கள் உறுதி.
06/02/09- தமிழக காங்கிரஸ் மீண்டும் பிளவு - காங்கிரஸ் அதிர்ச்சி
07/02/2009 - விடுதலைப்புலிகளின் அடிப்பொடியாக மாறிய கட்சிகள் - ஜெ காட்டமான அறிக்கை.
போர் நிறுத்த ஆபத்தும், தமிழக கட்சிகளின் அபத்தமும் - துக்ளக் கட்டுரை08/02/2009 - ஜெ வின் தமிழீழ எதிர்ப்பு போக்கை கண்டித்து அந்த கூட்டணியில் இருந்து விலகல் - கம்யூனிஸ்டகள் அறிவிப்பு.
இராமேஸ்வரத்தில் மாபெரும் தமிழீழ ஆதரவு மாநாடு - கருணாநிதி, ராமதாஸ், திருமா, வைகோ, தா. பா, நல்லக்கன்னு, வாசன், பழ நெடுமாறன், சீமான், பாரதிராஜா, சத்ய ராஜ் வீரமனி , சு ப வீ பங்கேற்பு- 3 கோடிதமிழர்கள் கலந்துக்கொண்ட பேரணி .
தமிழகத்தின் போராட்டங்கள் - இந்தியா முழுவதிலும் உள்ள தமிழரிடத்தில் பரவியது.
14/02/2009 நல்ல முடிவு எடுப்பேன் - ஜனாதிபதி தமிழர்களுக்கு உறுதி
அப்பாவிகளை கொல்லுவதை நிறுத்துங்கள் - பல நாடுகளில் இருந்து
ராஜபக்ஷேவிற்கு நெருக்குதல்கள் வலுக்கிறது.
20-02-2009 பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜபக்ஷே அறிவிப்பு.
21-02-2009 - ராஜபக்ஷே முடிவு தவறு, தொடர்ந்து போரிட வேண்டும் - சோ, ஜெயலலிதா , சுப்பரமனிசாமி அறிக்கை
22/02/2009 - பெண் ராஜபஷே - ஜெ மீது வைகோ கடும் தாக்கு- கூட்டணி உடைந்தது..
23/02/2009 - வைகோ போனால் கவலையில்லை.. என்னை அன்டித்தான் அவர் இருந்தார்.. அவரை நம்பி நான் இல்லை
26/02/2009 - 2009 மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மும்முனை போட்டி
திமுக+கம்யூனிஸ்ட்+பா.ம.க+வி சிறுத்தைகள்+ மதிமுக+ மூப்பனார் காங்கிரஸ்
அ தி மு க + காங்கிரஸ்
பா ஜ க + தே மு தி க + ச மு க
27/2/09 - தாமதமான முடிவு என்றாலும், தமிழருக்காக கலைஞர் எடுத்த முடிவை வரவேற்று , பாராளுமன்ற தேர்தலில் தி மு க கூட்டணிக்கு ஆதரவு - தமிழ் அமைப்புகள் ஆதரவு.
தமிழருக்கு எதிரான போக்கால் ஜெ ஓரங்கட்டப்பட்டார் - நக்கீரன், ஜீவி
அய்யோ இங்ங்ங்ங்கே.. கெக்கக்கே... ங்ங்..ங்.... ந்ஞஞா.. பல்டி, கில்டி, பல்டி, கொல்டி, ஞஞ... ங்...ங்.. ங்க்... போச்சே.. போச்சே... அய்யோ. அய்யய்யோ.. === தினமலர் ஒரு வாரமாக தொடர்ந்து போட்டு வரும் தலைப்புச்செய்தி..
நாளை முதல் செய்தித்தாள்களில் இப்படியான தலைப்புச்செய்தி பார்க்க ஆசையாகத்தான் உள்ளது. நடந்தால் நன்றாக இருக்கும்.
7 கருத்துக்கள்:
///ஈழத்தமிழருக்காக முத்துக்குமரன் தீக்குளித்து மரணம்-
கலைஞரே , இன்னும் என்ன மவுனம் வேண்டியிருக்கு உமக்கு.. ????? மவுனத்தை கலையுங்கள்/////
ஆம் , போது உங்கள் மவுனம்..
ஈழம் குறித்த பத்திரிகைச் செய்திகளும் சரி தொலைகாட்சி செய்திகளும் சரி இங்கிருக்கும் மக்களை மேலும் மேலும் குழப்பமாக்கி மனதில் ஒரு வித அச்ச உணர்வையும் அதீத கோபத்தையுமே உண்டாக்கி வருகிறது ...உண்மையில் ஈழத்தில் என்ன நடக்கிறது? யாருடைய செய்திகள் தான் நம்பகமானவை?
யார் மீது தவறு?
புலிகளிடமா?
ராஜ பக்க்ஷே அரசிடமா?
இல்லை அப்படி ஒரு நாட்டில் பிறந்து விட்ட குற்றத்துக்காக ஈழத்தமிழ் மீதா?
துக்கம் தான் மிஞ்சுகிறது .உண்மை எப்போது தெரியும்?
சென்ற பின்னூட்டத்தில் ஈழத் தமிழர் என்பதற்கு தமிழ் என்று மாற்றி டைப் செய்து விட்டேன் .பிழை திருத்தி வாசிக்கவும்
நல்ல கனவு, இன்னும் 1 மாத்தில் வரும் இந்த தலைப்பு செய்தி..
பிரபாகரன் பிடிபட்டான்.. சிறையில் அடைப்பு.
இலங்கை தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு..
நடராஜன் சொன்னது நிச்சயம் நடக்கும்... வெகு விரைவில்..
அன்று இந்த அரசியல் குஞ்சுகள் வாய் மூடும்.. அந்த நாள் தான் தேவை
temporary war stop announcement in srilanka. war stopped for 48 hours/./
கட்டாயம் அப்படித்தான் நடக்கும்,
தமிழின ஒற்றுமையிருந்தால்.
அவரவர் அவர்களுக்குத் தெரிந்த தலைவர்கட்கு எடுத்துச் சொல்லுங்கள்.
தலைமைக்கு Fax அனுப்புங்கள்.
நக்கீரனுக்கு அனுப்புங்கள்.
Post a Comment