ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?
இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.
உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...
ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.
அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.
திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை
ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??
அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..
ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..
இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.
1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??
இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.
இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??
அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.
பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.