திருமங்கலத்தில் வைகோ வெற்றி

திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது.

தே மு தி க - 11,000 & சரத்தின் ச மு க 700 வாக்குகளும் பெற்றுள்ளது.

தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை விட சுமார் 36,150 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( தி மு க - 70,000 , அ தி மு க - 34,000).

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது

தலைப்பு பற்றிய விளக்கம். ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது..

உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு செய்யவேண்டும் என்றே இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி.

குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி

10 கருத்துக்கள்:

muthu said...

தலைப்பு பற்றிய விளக்கம் நச் நச்.. வைகோவின் ராஜதந்திரம் சூப்பர்.. :)

வாக்காளன் said...

DMK WINS as said in NAKHEERAN SURVEY SAID.

RAJESH - wat do you say now?

ராஜேஷ், திருச்சி said...

தி மு க வின் வெற்றி பணம் கொன்டு பெறப்பட்ட வெற்றி.. இது நியாயமான வெற்றி இல்லை

Anonymous said...

Rajesh panam vangi kondu ootu pottathu yaru, makkal thane??????????? panam illaiye?????panam koduthal than ootu entru, namthu adipadai kadamaikku koda panam vangupavargalai enna ventru solluvathu?

ராஜேஷ், திருச்சி said...

ஆம், பனம் வான்கியது மனிதர்கள். ஆனால் மனிதர்களை சோற்றால் அடித்த பின்டங்களாக, முன்டங்களாக. பனம் தின்னி பேய்களாக மாற்றியது உங்களின் திராவிட கட்சிகள்.

சுயமரியாதை என்ற பொய் பசப்பு பசப்பி அவர்களை ஒன்னும் தெரியா அடிமைகள் ஆக்கியது ஈரோடு கிழவன் வழி வந்த திராவிடர்கள் என்பது தான் உன்மை.

தமிழகம் குட்டிச்சுவராகவும், மக்களுக்கு கடவுள் பக்தி குறைந்து , குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம், இப்படி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகிய காரணம். பெரியார், அண்ணா, கருநாநிதி உள்ளிட்ட இந்த திராவிட பண முதலைகள் தான்..

மிஸஸ்.டவுட் said...

//குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி//

சமாளிபிகேசன் மாதிரி இருக்கு

muthu said...

ராஜேஷ் , நாவடக்கம் தேவை..

இங்கே விவாதம் தி மு க, அ தி மு க , இடைத்தேர்தல் பற்றி மட்டுமெ.. ஏன் தேவையின்றி திராவிடம் , பெரியார் அண்ணா பற்றி இழுக்கவேண்டும்?

குப்பன்_யாஹூ said...

ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் வாகு அளித்து உள்ள தொகுதியில் சரத்குமார் கட்சி பெற்ற வாக்கு 831.

ஐம்பது மாவட்ட செயலாளர்கள் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் குடும்ப கட்சி பெற்ற வாக்குகள் 13000.

இனிமேல் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் இந்த கட்சிகள் பற்றி எழுதும் டுபாக்கூர் செய்திகள் விலை போகாது.

நக்கீரன் சர்வே படி கடும் போட்டி இருக்கும், வாக்கு வித்தியாசம் பத்தாயிரம் என்பது எல்லாம் பொய் என வாக்காளர்கள் மீண்டும் நிரூபித்து உள்ளார்கள்.

Anonymous said...

அப்பா திருச்சி ராஜேசு,
கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரப்பா.
பக்தி முற்றினால் பைத்தியம்.
திராவிட இயக்கங்களால் படித்துள்ள,ஓரள்விற்குத் தன்மானம் பெற்றுள்ள மனிதர்களையும்,முக்கியமாகப் பெண்களையும் பாரப்பா!
ஜெகத்குரு நடமாடுங் கடவுள் காஞ்சி சங்கராச்சாரி என்ற சுப்புணிக்குச் சொல்லும் உம் அறிவுரையை!

அது சரி said...

உங்களுக்கு வஞ்சப்புகழ்ச்சி அணி நன்றாக வருகிறது :0))