Showing posts with label பெண்மை. Show all posts
Showing posts with label பெண்மை. Show all posts

வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??

எனக்கு தெரிந்த நன்பர் ஒருவரின் சகோதரியின் வாழ்வில் நடந்த சோகம்.
இந்த சோக நிகழ்வு நடந்து முழுமையாக 2 வாரங்கள் கூட ஆகவில்லை.
இது போன்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும் நேரில் , அதுவும் நன்பர் ஒருவர் வாழ்வில் நடந்ததை கேட்ட போது மனம் பதைபதைத்துவிட்டது.
நன்பரின் மூத்த சகோதரி திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. கனவருடன் நல்லபடியாக வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது. கனவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை.

அன்பான கனவன், உறவுகள், பொருளாதார வசதி என்று எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு ஒரே ஒரு குறை. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்கிற மனக்குறை மட்டுமே. இருவருமே இது குறித்து மருத்துவ ஆய்வுக்கு சென்று வந்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த ஒரு குறையே அந்த சகோதரிக்கு எமனாக வரும் என்று இரண்டு வாரங்கள் முன்பு வரை கூட யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஆம், இந்த தம்பதிகள் இருவரும் குழந்தையின்மையின் காரணமாக ஒரு வித சோகத்தில் இருப்பதால், அதிலும் கனவர் வேலைக்கு சென்ற பின்னர் இந்த சகோதரி தனிமையில் தவிப்பதை தவிர்த்திடும் பொருட்டு பென் வீட்டார், இந்த தம்பதியினரை தங்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு தனி ப்ளாட்டில் ஒரு வருடத்திற்கு முன்னர் குடியமர்த்தினர்.. அவ்வப்போது போய் பார்த்து அறுதல் சொல்ல ஏதுவாக இருந்தது..


விரைவில் தங்கள் மகளுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அந்த பெற்றோருக்கு தலையில் இடி விழுந்ததது போல் வந்த செய்தி மகள் தன்னை உயிரோடு எரித்துக்கொண்டுவிட்டாள் என்பது தான்..
என்ன பாடுபட்டிருக்கும் அந்த பெற்றோரின் மனம்? அலறி அடித்து ஓடியவர்களுக்கு பாதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட மகளை தான் பார்க்க முடிந்தது.

விஷயம் இதுதான். அந்த பென்னுக்கும் அதே ப்ளாட்டில் இருக்கும் வேறு இரண்டு பென்களுக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்த சிறிய மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு வருடத்தில் குரோதமாகிவிட்டது.


அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மையை குறித்து ஏளனமாக பேச துவங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று , ஏதோ விஷயத்துக்காக ஆரம்பித்த வாய்ச்சன்டையில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மை பற்றி மிக கடுமையாக விமர்சனம் செய்து சற்று ஆபாசமான வார்த்தைகளை வீசியதில் மனமுடைந்த அந்த சகோதரி தன்னைத்தானே அவர்கள் கண் எதிரிலேயே தீக்கிரையாக்கிக்கொண்டால்.
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு , மருத்துவர்களின் போராட்டம் வெற்றிபெறாமல் அந்த சகோதரியின் உயிர் பிரிந்துவிட்டது.

எத்துனை பெரிய சோகம் அந்த குடும்பத்துக்கு.. ஈடு செய்ய முடியாத இழப்பு.. தீ நாக்குகள் மனதை சுட்டதால், தன் உடலையும் தீக்கிரையாக்கி ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துவிட்டது. தாங்கள் மேற்கொண்டுவரும் மருத்துவத்தின் பலனாக அந்த சகோகதரி கரு தரித்திருக்கவும் வாய்ப்புள்ளது.. அப்படி பார்க்கும்போதும் தன்னை மட்டுமின்றி இந்த உலகில் வந்திருக்க வேண்டிய ஒரு உயிரும் போய்விட்டது..

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இவரை காப்பாற்றிட முனைந்த்தால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மருந்துவமனையில் உள்ளார்.

யாரை குறை சொல்வது?
இந்த விஷயத்தில் வேறு வித முடிவுகள் எடுக்க வாய்ப்பிருந்தும் உணர்ச்சிவயபட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் துரதிருஷ்டவச முடிவெடுத்த அந்த சகோதரியையா??

நாக்கில் விஷம் வைத்து திரிந்த அந்த பென்களையா?

அவரின் குழுந்தைப்பிறப்பை தள்ளிப்போட்ட ஏதோ ஒரு சக்தியையா??
இல்லை, ஒரு பெண் என்றால் திருமணம் முடிந்த சில மாதங்களின் கருத்தரிக்க வேண்டும், பிள்ளை பெற்றிட வேண்டும், இல்லையெனில் அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , பெண்மைக்கு தகுதியற்றவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பையா??

யாரை சொல்லி என்ன செய்வது.. ஒரு உடல் உயிருடன் தீக்கிரையாக்கப்படுவிட்ட சோகம் தீருமா?? அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தான் சொல்ல முடியுமா?
கைதாகி இருக்கும் அந்த பென்களின் குடும்பத்தில் நிலை என்ன??
சம்பந்தப்பட்ட அந்த 3 பெண்களுமே உணர்ச்சியவப்பட்டதன் விளைவு எத்துனை பேரை நிரந்தர சோகத்தில் ஆழ்த்திவிட்டது..