முதலமைச்சர் கருணாநிதி பற்றிய வதந்தி...???

தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக் அவர் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சிகளில் கூட கலந்துக்கொள்ளவில்லை.
இதன் அடிப்படையில், வழக்கம் போல் கருணாநிதி பற்றிய வதந்தி சென்னை மற்றும் பல இடங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

இது ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. ஆயிரம் காழ்ப்புகள் இருந்தாலும், எதிர் கருத்து இருந்தாலும், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மறைந்தார் என்று வதந்தி கிளப்புவது மிகவும் அருவருப்பான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இந்த வதந்தியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் , "வதந்திகளை நம்பவேண்டாம், கருணாநிதி நலமாய் இருக்கிறார்" என ஸ்கராஸ் ஓடுகிறது..

இங்கே முதல்வர் , அங்கே பிரதமர் என இருவரும் மருத்துவமனையில், குடியரசு நிகழ்சிகளுக்குகூட இருவரும் வர இயலவில்லை.

இருவருக்கும் பிரார்த்திக்க பல கோடி பேர் இருக்கிறார்கள்.. உங்களை பொத்தி பொத்தி காத்து குணப்படுத்தி அனுப்ப 1000 டாக்டர்கள் உங்களை சுற்றி.. இருவரும் தயவு செய்து நினைத்து பாருங்களேன்.

அங்கே என் இனத்தை சார்ந்த சகோதரன் உயிர் போகும் நிலையில் கூட ஆறுதல் சொல்ல ஆளில்லை.. அவன் கூட இருப்பவர்கள் கூட தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடவேண்டியுள்ளது. குண்டடிப்பட்டு ரத்தத்துடன் அலறும் அவர்களுக்கு மருந்திட ஒரு நர்ஸ் கூட கிடையாது அய்யா.. தயவு செய்து சிந்தியுங்கள்.. உயிரும் , வலியும் அனைவருக்கும் ஒன்று தானே?
நம்பிக்கையுடன்.

8 கருத்துக்கள்:

Jayakumar said...

இந்த வயதான காலத்தில் இருவரும் பேசாமல் பதவியை விட்டுவிட்டு ஓய்வெடுக்கலாம். அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.

Unknown said...

இது போண்ற வதந்தி தவறு என்று சொல்லிய அதே நேரத்தில்.. மிக சரியாக அங்கே அல்லல்படும் தமிழர்களின் பிரச்சனையையும் உள்ளே எடுத்து வந்து நச் என்று சொல்லியுள்ளீர்கள்..

உயிர் வலியும் உடல் வலியும் அனைவருக்கும் ஒன்றுதானே.. இருவரும் இதை உணர்வது எப்போதோ. .. தெரியவில்லை..

வாக்காளன் said...

காழ்ப்புகள் இருந்தாலும், எதிர் கருத்து இருந்தாலும், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மறைந்தார் என்று வதந்தி கிளப்புவது மிகவும் அருவருப்பான செயல்

100 % TRUE...


//அய்யா.. தயவு செய்து சிந்தியுங்கள்.. உயிரும் , வலியும் அனைவருக்கும் ஒன்று தானே//

500 % TRUE , LET PM and CM Think this !! Please stop genocide

Anonymous said...

karunanidhi. tamil. tamil makkal yenru solli solli makkalai yemaatrugirar. edhai makkal purindhu kolla vendum. tamil perai solli avar arasiyal laabam paarkirar. d.m.k meedhu meedhu makkal migam veruppaga erukkirargal yenru avargal purindhu kolla vendum. thirumangalathil evargal jaitha lanchanam ulagathukke theriyum. ulagathukku nanmai yerpada vendum yenral makkal marubadiyum d.m.k ottu poda koodadhu.

Anonymous said...

//
இருவருக்கும் பிரார்த்திக்க பல கோடி பேர் இருக்கிறார்கள்.. //

இந்த வதந்திகள் எல்லாம் உண்மையாகிவிட கூடாதா என்று வேண்டிக்கொள்ள வைத்துவிட்டாயே , தலைவா !!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இந்த வயதான காலத்தில் இருவரும் பேசாமல் பதவியை விட்டுவிட்டு ஓய்வெடுக்கலாம். அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.//

தமிழினத்துக்கும், இந்தியாவுக்கும் கூட நன்று.

குப்பன்.யாஹூ said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

அன்று எம்ஜியார் அமெரிக்காவில் சிகிச்சை பெரும் போது இந்த மாதிரி வதந்திகளை பரப்பியது யார்.

குப்பன்_யாஹூ

வீ. எம் said...

வருகை தந்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றீ.

ஒன்றும் செய்ய இயலாதவன் - உங்கள் கருத்தில் வக்கிரம் இருக்கிறது

ஜே கே - யோகன் பாரிஸ் - உங்கள் கருத்தை வழிமொழியலாம்.. ஆனால் என்ன செய்வது.. இந்திய ஜனநாயகத்தில் அரசியலுக்கு வருவதற்கும், விலகுவதற்கும் எந்த கட்டுப்பாடும் இல்லையே.. ! அது அவரவரின் விருப்பம்.. நம் கையில் இருக்கும் ஒரே துருப்பு சீட்டு "ஓட்டு"

குப்பன் - இங்கே எம்ஜியாரா, கருணாநிதியா. தி மு க வா, அதிமுக வா என்பதல்ல பிரச்சனை..
பொதுவாகவே ஒருவர் உயிருடன் இருக்கும் போது இது போன்ற வதந்தி பரப்புவது அருவருக்கத்தக்கது.. அது எம்ஜியாருக்காக இருந்தாலும், கருணாநிதிக்காக இருந்தாலும் சரி..