Showing posts with label கட்சி. Show all posts
Showing posts with label கட்சி. Show all posts

தி மு க, அ, ம, தே (தி மு க) - - இப்போ புதுசா செ மு க..??

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்த வருடத்தின் முதல் பதிவு இடுகிறேன்!

ஏற்கனவே பல முன்னேற்ற கழகங்கள் தமிழகத்தில் இருப்பது போதாதென்று இப்போது புதுசாக இன்னும் ஒரு முன்னேற்ற கழகம் முளைத்திருகிறது , இந்த முன்னேற்ற கழகம் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்களை முன்னேற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆம்! தன் ஊரை முன்னேற்ற ஒருவர் பல வழிகளில் முயற்சி செய்தார்.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், தோல்வியே கிடைத்தது, நாடளுமன்ற தேர்தல்.. அங்கும் தோல்வியே, நகராட்சி தலைவர் பதவிக்கு முயன்றார் , அங்கேயும் தோல்வி முகம்.. வார்டு உறுப்பினர் பதவியும் கானல் நீர் ஆனது..
இந்த தோல்விகளை எல்லாம் கண்டு துவண்டுவிடவில்லை.. தன் நகராட்சியை முன்னேற்றியே தீரவேண்டும் என்ற வெறி அவருக்கு இன்னும் கூடிக்கொண்டேதான் போனது.

தான் வாழும் நகராட்சியை எப்பாடுபட்டாவது உயர்த்திட வேண்டும் என்ற அவரது தீவிர சிந்தனையின் வடிவம் தான் இந்த செ மு க.

திரு எ.சுப்பிரமனியன் தான் அந்த விடா முயற்சியாளரும், செ மு க வின் நிறுவனரும் ஆவார்.

அதென்ன செ மு க??? அது தான் செங்கல்பட்டு முன்னேற்ற கழகம்.

சுப்பிரமனியன் செங்கல்பட்டு வர்த்தக சங்கத்தை நடத்தி வருபவர்.

செங்கல்பட்டு - சென்னையிலிருந்து தாம்பரம் மார்கமாக 40 கி மீட்டர் தூரத்தில் இருக்கும் நகராட்சி.. செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் (பா ம க).

செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதியின் எம் பி (பா ம க) திரு ஏ கே மூர்த்தி - முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர்.

தான் ஒரு அ தி மு க அனுதாபியும், தீவிர எம் ஜி ஆர் ரசிகன் என்றும் கூறும் எ. சுப்பிரமனியன். இன்று எம் ஜி ஆரை அ தி மு க புறக்கணித்ததை ஜீரனிக்கமுடியாமல், தனி கட்சி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் (கட்சி பெயர்ல எம் ஜி ஆரே இல்லயே???#$#).

ஊழலற்ற , தூய்மையான, ரவுடியிசமற்ற நகரமாக செங்கல்பட்டை மாற்றிடும் லட்சியுத்துடன் இந்த புது கட்சியை தொடங்கி , கொடி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்..

எம் எல் ஏ, எம் பி போன்ற பதவிகள் வேண்டாமென்றும், நகராட்சி தலைவர் என்ற சிறிய பதவிக்கு வந்து , அதன் மூலம் செங்கையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று சபதமிடுகிறார். விரைவில் செங்கல்பட்டு முழுதும் தன் கட்சி கொடியேற்றி கட்சியை வளர்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

நல்லவேளையாக இவர் 2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லவில்லை.. அந்த வகையில் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.. இல்லையெனில் ஏற்கனவே இருக்கும் 2011ன் 13 முதலவர்களுடன் இவரும் 14 வது முதல்வர் வேட்பாளராக வந்திருப்பார்..

இவரது செ மு க செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இப்படியே போனால், விரைவில் தா. மு க (தாம்பரம் முன்னேற்ற கழகம்) , வி மு க (விழுப்புரம் முன்னேற்ற கழகம்) அ மு க (அம்பத்தூர் முன்னேற்ற...) தின்டிவனம் மு க, கும்பகோனம் மு கழகம்.. தஞ்சாவூர் முன்னேற்ற கழகம் என்று சுமார் 300 கழகங்கள் வரலாம்..

இன்னும் ஒரு படி மேலே போய், "குரேம்பேட்டை முன்னேற்ற கழகம்", "சைதை முன்னேற்ற கழகம்", "போரூர் முன்னேற்ற கழகம்", "வத்தலகுண்டு முன்னேற்ற கழகம்", "பள்ளிக்கரனை 3 வது சந்து முன்னேற்ற கழகம்",, "காசிமேடு கோவிந்தப்பன் தெரு முன்னேற்ற கழகம்" . "மாட்டுத்தாவனி முன்னேற்ற கழகம்", "களக்காடு முட்டு சந்து முன்னேற்ற கழகம்" என்றெல்லாம் வரும் போலிருக்கிறது.. "ஆனைவயல் ஆறாம் நம்பர் வீடு" முன்னேற்ற கழகம்

இதுவும் நல்லாத்தான் இருக்கு..