சன் டீவியும், விஜயகாந்தும் - அய்யோ பாவமும், 25,000 மும்

குடியரசு தினத்தை முன்னிட்டு நமது சன் டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சூப்பர்கிட் அதிரடி திரைப்படம் காதலில் விழுந்தேன் என்று 10 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வந்து கலக்குகிறது..


டப்பா படங்கள் மற்றும் சுமாராக ஓடிய படங்களை தான் இது வரை நமது சன் டீவி திரைக்கு வந்து 1 அல்லது 1.5 வருடங்களில் ஒளிபரப்பிவந்துள்ளது. இப்போது பாவம் தனது சொந்த தயாரிப்பை இவ்வளவு சீக்கிரம் தனது தொலைக்காட்சியிலே போடவேண்டிய நிலை.



அதிலும், 5 நிமிடத்துக்கு ஒரு முறை "ஆரவாரமான வெற்றி", "அபார வெற்றி" என்றெல்லாம் பில்டப் விளம்பரம் கொடுத்த படத்தை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் "சூப்பர் Hஇட் அதிரடி திரைப்படம் என்று ஒளிபரப்பும் நிலை..


சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ல் காலை 11 மணிக்கு அதிரடி மெகாHஇட் திரைப்படம் தெனாவட்டு.. மதியம் 2 மணிக்கு உலக மகா வெற்றிப்படம் தின்டுக்கல் சாரதி, மாலை 6 மனி அதிரடி இமாலயா வெற்றிப்படம் படிக்காதவன் உங்கள் சன் டீவியில் என்ற விளம்பரத்தை எதிர்பார்க்கலாம்..


அடுத்து, நமது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஆக்ஷன் நாயகனாக கட்சி ஆரம்பித்த கேப்டன் இன்று காமெடி நாயகனாக நிற்கிறார். இதோ இன்று அவர் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இரண்டு. இது வரையில் மக்களுடன் தான் கூட்டணி என்று சவடால் விட்டவர் , இறங்கி வர வேண்டிய துர்பாக்கியம். பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டு இல்லை, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று திருவாய் மலர்ந்துள்ளார். மக்களுடன் கூட்டு கசந்து விட்டதா இல்லை பாராளுமன்ற தேர்தல் மக்களுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல என கேப்டன் நினைக்கிறாரா?



மக்களுடன் கூட்டனி அமைத்து சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்த இந்த காமெடி தலைவர் இப்போது டெல்லிக்கோட்டையை பிடிக்கும் நோக்கில் தேசிய கட்சிகளுடன் கூட்டனியாம்.



பாரளுமன்றத்தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று கூறும் இந்த கோமாளி 2011, சட்டமன்ற தேர்தல் எனவே மாநில கட்சிகளுடன் கூட்டு என்ற நிலையை எடுக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்?



மக்களுடன் கூட்டணி என்று ரீல் சுற்றி வந்த இந்த தீடிர் தலைவருக்கு வந்த சோதனை பாவம்..


அடுத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை இந்த ரீல் தலைவர் எடுத்துள்ளார். மின்சார பிரச்சனை போக்க திட்டம் என்னிடம் உள்ளது ஆனால் சொல்லமாட்டேன் என்று உளறிய இந்த தலைவர் இப்போது எந்த திட்டத்தையும் வெளிப்படையாக சொல்லமாட்டேன், 2011 ல் ஆட்சிக்கு வந்து நானே நிறைவேற்றுவேன் என்று அருள்வாக்கு அளித்துள்ளார். காரணம், அவரின் திட்டமான "மக்களுக்கு மருத்துவ காப்பீடு" திட்டத்தை தி மு க காப்பியடித்துவிட்டதாம்.. இனியும் தன்னிடம் உள்ள மற்ற திட்டங்களை வெளிப்படையாக சொன்னால் , அனைத்தையும் தி மு க காப்பியடித்துவிடுமாம்..


என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு. மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதில் இவருக்கு ஆர்வம் இல்லை. மாற்று கட்சி அதை செய்து பேர் எடுத்துவிடுமோ என்ற பொறாமை.. இவரெல்லாம் மக்களோடு கூட்டணி என்கிறார்.. விளங்கிடும் இவர் மக்கள் கூட்டணி. இதனால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் கூட்டணியில் இருந்து மாறி தேசிய கட்சி கூட்டணிக்கு அடி போடுகிறார் போலும்.


இந்த பதிவை படிக்கவரும் நண்பர்களின் மூலம் என் வருகைப்பதிவேட்டில் இது வரை வந்தவர் எண்ணிக்கை 25,000 தாண்டும் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. :)

5 கருத்துக்கள்:

tommoy said...

வருகை பதிவேடு 25,000 தாண்டி 25032 வந்துவிட்டது வாழ்த்துக்கள் வீ எம்

நாஞ்சில் பிரதாப் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா........

வீ. எம் said...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி முரளி, நாஞ்சில் பிரதாப்

ஆமாங்க முரளி 25200 தாண்டி இருக்கு. இது தாண்டுறதுக்கே மூச்சு இரைக்குது. பல பேரு ஈஸியா 1 லட்சம் அடிக்க்றாங்க..

நீங்க சொல்றது சரி பிரதாப்.. எல்லாம் சகஜமப்பா

வாக்காளன் said...

விஜயகாந்து எல்லாம் ஒரு மனுஷன் .. அய்யோ.. அய்யோ..

25000 தாண்டியதற்கு வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா...

25,000க்கு வாழ்த்துகள்....