திருமங்கலத்தில் தி மு க வெற்றி?

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. வாக்கு என்னிக்கை 12ம் தேதி நடைப்பெற்று அன்று 11 மனிக்கெல்லாம் முடிவுகள் தெரியும்..

இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நக்கீரன் பத்திரிக்கை ஒரு கருத்து கனிப்பு நடத்தி முடிவுகளை இந்த வார இதழில் வெளியிட்ட்டுள்ளது. அதன் படி

தி மு க - 56 %

அ தி மு க - 36%

தே மு தி க 8.5%

ச ம க - 1.2%


தி மு க சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் நக்கீரன் எழுதியுள்ளது

ஆண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 52%

அ தி மு க - 35%

தே மு தி க - 9%


பெண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 53%

அ தி மு க - 36%

தே மு தி க - 9%

வயதுவாரியாக
(18 - 25) தி மு க - 45, அ தி மு க - 30, தே மு தி க - 21, ச ம க - 2
(26 - 40) தி மு க - 54, அ தி மு க - 37, தே மு தி க 5, ச ம க - 2
(41 க்கு மேல்) தி மு க - 58, அ தி மு க - 39, தே மு தி க - 2

மக்கள் மநநிலை என்ற தலைப்பில் நக்கீரன் மக்களிடம் பேசியதிலிருந்து

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்கு

இரண்டு கட்சியினரும் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் இருவருக்கும் சரி சமமாக

பிள்ளைகள் கைவிட்ட எனக்கு அந்த மகராசன் 1 ரூ அரிசி கொடுத்து வாழவெச்சு இருக்காரு அவருக்கு தான் ஓட்டு - வயதான பெண்மனி

அ தி மு க எனக்கு பிடிக்கும்னாலும் அந்த அம்மா இலங்கை தமிழர் பிரச்சனையில தமிழருக்கு எதிரா இருக்க்கு அதனால இரட்டை இலைக்கு ஓட்டு போடமாட்டேன்.

ஒரு ரூ அரிசி கொடுத்திருக்காரு, ரேசன்ல பொருள் கிடைக்குது அதுனால சூரியனுக்கு ஓட்டு

சாத்தான்குளம் இடைத்தேர்தல்ல எங்க வேலைய காமிக்க முடிஞ்சது.. ஆனா இங்கே அழகிரி ஏரியா ல முடியல.. இலைய ஓரம்கட்டி சூரியன் முன்னாடி போகுது - ஒரு அதிமுககாரர்

ஆளுங்கட்சி எம் எல் ஏ வரனும், சூரியனுக்கு ஓட்டு

பென் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் ஒருவர போட்டிருக்கார் கலைஞர் - தி மு க காரர்

மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் அதி மு க விற்கு ஓட்டு

தி மு க , அதிமுக பணம் தந்து கலக்குறாங்க.. கேப்டன் வெறும் வாயில முழம் போடறார்... தேறாது.. தே மு தி க தொன்டர்


பன்னி மேய்க்க சொன்ன விஜயகாந்த் - கடுப்பான விவசாயிகள்

செங்காப்படையில் பிராச்சாரம் செய்த விஜயகாந்திற்கு அங்கு கூடிய விவசாயிகளை பார்த்தவுடன் உற்ச்சாகம் ஏற்பட்டது. உற்சாகத்தில் அவர், இலவசங்களை கொடுக்கறாங்கனு வாங்காதீங்க..இலவசங்களுக்கு அடிமையாகாதீங்க.. இன்னைகு காசு பணம் தருவாங்க.. நீங்களும் வெட்க்கமில்லாம சந்தோஷமா வாங்குறீங்க.. நாளைக்கு 2 பன்னிய கொடுத்து மேய்க்க சொல்லுவாங்க. .நீங்க பன்னி மேய்ப்பீங்களா? என்று கேட்க..

கடுப்பான விவசாயிகள், யோவ். என்ன பேசுற, லிமிட்டா பேசு.. மெட்ராஸ்ல இருந்து வந்து எங்களயா பன்னி மேய்ப்பீங்களானு கேட்குற?? உனக்கு இஷ்டமிருந்தா நீ பன்னி மேயி.. வந்தமா ஓட்டு கேட்டமானு போ.. தேவையில்லாம பேசாதே என்று கோபமாக குரல் விட.. இதில் சங்கடமான விஜயகாந்த் கிளம்பிச்சென்றார்..

நன்றி - நக்கீரன்

பல முறை நக்கீரன் சர்வே முடிவுகள் துல்லியமாக இருந்திருக்கிறது.. பார்க்கலாம் இம்முறை எப்படி இருக்கிறது என்று.. !

11 கருத்துக்கள்:

ராஜேஷ், திருச்சி said...

நக்கீரன் ஒரு பத்திரிகையா????? இல்லை,

அது திராவிட திருடன்களின் , கழக கருங்காளீகல் கைக்கூலி கூட்டம்.. அவ்வளவே..

எப்பவும் தி மு க, தி க, ம க இ க , பெரியார் கூட்டத்துக்கு கூஜா துக்கும் ஒரு மூண்றாம் தர பத்திரிகை. அதுல ஒரு சர்வே. .அதுக்கு ஒரு பதிவு..

KaveriGanesh said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

muthu said...

பன்னி மேய்ப்போர் சங்க தலைவர் அண்ணன் கேப்டன் வி காந்த் வாழ்க வாழ்க

முரளி said...

கிராமபுறங்களில் மக்களிடம் 1 ரூ அரிசி, பொங்கள் பரிசு, கலர் டீவி, இலவச அடுப்பு இவை அனைத்தும் நல்ல பலனை தரும்.. மின்வெட்டு , விலைவாசி என்பது பாதிப்பை ஏற்படுத்தினாலும் , முன்னே சொன்னவை அவற்றை சரிகட்டிடும்..

கூட்டனி பொறுத்தவரை - இங்கே பா ம க, கம்யூனிஸ்ட்க்கு பெரிய வாக்குகள் இல்லை.. மேலும் ஆளுங்கடச்சி எம் எல் ஏ, வரட்டும் என்ற மனப்பாகு இதனை சரிகட்டிடும்..

ஆக, தி மு க சிறு வாக்கு வித்தியாசத்திலாவது வெற்றி பெரும்..

வீ. எம் said...

அனைவரின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி
ராஜேஷ், ஏன் இந்த துவேஷம்?? இடைத்தேர்தல் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லலாமே

Anonymous said...

//ராஜேஷ், திருச்சி said...

நக்கீரன் ஒரு பத்திரிகையா????? இல்லை, //

ஆமா, துக்ளக் மட்டும் தான் பத்திரிக்கை

வாக்காளன் said...

huge turnout of votes, DMK will Win I suppose.

ராஜேஷ், திருச்சி said...

Mr Anony, Dont compare Thuklag with these third rated Nakheeran and all.

Nakheeran doesnt have any standards at all.. it is a cheap cheap magazine..

hemamalini said...

தி மு க வெற்றி பெரும்..

captain said...

பன்னி மேய்ப்போர் சங்க தலைவர் அண்ணன் கேப்டன் வி காந்த் வாழ்க வாழ்க


reepeeattttuuuu

muthu said...

உங்களின் கனிப்பும், நக்கீரன் கருத்து கணிப்பு சரியாக வருகிறது என நினைக்கிறேன்'
5 வது சுற்றில் தி மு க 17,000 வாக்குகள் முன்னிலை..தி மு க சுமார் 25,000 வாக்குகளுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என் நினைக்கிறேன்.. தி மு க் விற்கு மேலும் ஒரு எம் எல் ஏ...