ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?

இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.

உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...

இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.

ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.

அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை

ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??

அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..

ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..

இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.

1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??


இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??

அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.

பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.

13 கருத்துக்கள்:

Anonymous said...

\\பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.//

இந்த அறிவுரையை நீங்கள் குருமாவுக்கு ச்சே திருமாவுக்கு சொன்னால் தேவலை. ஏன்னா அவர் கட்சி (அல்லது கும்பல்) தான் கரைந்து மாயாவதி பக்கம் சென்று கொண்டிருக்கிறது. அதை கவனிக்காமல் எங்கிருந்தோ வந்த பெட்டியை வைத்து சினிமா சுகத்தில் மூழ்கி கிடந்தது விட்டு இப்போதோ வந்து குத்துது குடையுது என்று ஈழத்தமிழர் ஆதரவு டிராமா உண்ணாவிரத Stunt அடித்தால் அது எடுபடாது.

இதே இந்த குருமா ச்சே திருமா நாளை ஜெயலலிதா பாகாம் போகமாட்டார் என்று உங்களால் உறுதி கூற முடியுமா.

வீ. எம் said...

அனானி சார், மிக்க நன்றி கருத்துக்கு. ஆனால் நான் என்னமோ குருமா, திருமாவிற்கு வக்காலத்து வாங்கி பேசியிருப்பது போல் ஏன் இந்த கருத்து? பதிவை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்..

திருமாவளவனின் வி சி என்பது தேர்ததில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதெல்லாம் நடக்கவேமுடியாதது என்ன யோசித்தாலும்.. புரிகிறதா.. ?

Anonymous said...

திருமாவளவன் போன்ற கிருக்குப்பயல்கள் எல்லாம் இருக்க வேண்டிய இடம் சிறை. கலைஞர் கூடிய இதற்க்கு ஏற்ப்பாடு செய்வார் என்று நம்புவோம். இவனெல்லாம் தலைவன் என்ற போர்வையில் உலவும் நச்சுக்கிருமிகள்.

இவனை நம்பி கிராமப்புறங்களில் தம் வாழ்க்கையை தொலைத்துக்கொண்ட இளைஞர்கள் ஏராளம்.

இராஜன் said...

நன்பரே அவர் நச்சுக்கிருமியக இருந்து போகட்டும். தங்கள் வார்த்தையில் கொஞ்சம் நாகரிகம் காட்டலாம். பிரச்சனைக்குரிய ஈழ தமிழர்களின் வாழ்வை காக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்

Anonymous said...

நீங்கள் கூறிய மாதிரி திருமாவளவனை கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதை கிடையாது.ஆனால் திருமாவளவன் நடத்தியது ஒரு நாடகம்.

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜன்..
//தங்கள் வார்த்தையில் கொஞ்சம் நாகரிகம் காட்டலாம்//
புரியலயே.. எந்த வார்த்தையில் நாகரீகம் இல்லை என்று காட்டினால் , விளக்க அளிக்க ஏதுவாக இருக்கும் ராஜன்.

நன்றி அனானி.

//திருமாவளவன் நடத்தியது ஒரு நாடகம்.//
உண்மை. ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று..

வாக்காளன் said...

கருணாநிதியை, திருமாவை கேள்வி கேட்கும் யோக்கியதை ஜெயாவிற்க்கு இல்லை.. அதே போல இந்த ஜெயாவை கேள்வி கேட்கும் அருகதை கருணாநிதி, திருமாவுக்கு இல்லை..

தேவன் said...

ஒரு பேரில் வந்துகூட கருத்தைக் கழிக்க முடியாத அனானிக்குஞ்சுகளுக்கு வாய்க்கு வந்ததைப் பேசமட்டுமாவது துணிவு வாருகின்றதே பாராட்டுவோம் அனைவரும் இவர்கள் துணிச்சல்களை.

வீ. எம் said...

வருகைக்ககும் கருத்துக்கும் நன்றி தேவன் , வாக்காளன்.

ஆம் வாக்காளன், எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என தேர்வு செய்யும் நிலையில் தான் நாம் உள்ளோம். என்ன பன்னுவது

ராஜேஷ், திருச்சி said...

Jaya is better than anyone in terms of respecting religious beliefs, god fearing, tough stand on terrorism, national integrity. karunanidhi, thirumvalavan, ramadass are all totally a 0 in all this

Anonymous said...

ஜெவுக்கு கடவுள் நம்பிக்கையோடு மூட நம்பிக்கையும் அல்லவா இருக்கிறது, எவனோ ஜோசியக்காரன் சொன்னான் என்று ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு புறப்பட்டாரே

tommoy said...

rajesh - god fearing and religious belief are not the yardstick to judge a person. keep it in mind

Unknown said...

"ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?"


இல்லை, இல்லை, இல்லவே இல்லை.