நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.

... நான் தான் அப்பா பேசுறேன்..

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..

அப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்
அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..
சரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட
பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..
==============================================
வேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..

வேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..
=============================================================

இது எனக்கு மெயிலில் வந்த சிறுகதை.. நெகிழ்வாக இருந்ததால், ஆங்கிலத்தில் இருந்ததை என் நடையில் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன்..
ஒரிஜினல் இது..


An elderly man in Mumbai calls his son in New York and says,'I hate to ruin your day son, but I have to tell you that your mother and I are getting a divorce; 35 years of marriage... and that muchmisery is enough!

''Dad, what are you talking about?' the son screams.'We can't stand the sight of each other any longer,' the old man says.'We're sick of each other, and I'm sick of talking about this, so you call your sister in Hong Kong and tell her!

'Frantic, the son calls his sister, who explodes on the phone.'Like heck they're getting divorced,' she shouts, 'I'll take care of this.

'She calls Mumbai immediately, and screams at the old man, 'You are not getting divorced. Don't do a single thing until I get there. I'm calling my brother back, and we'll both be there tomorrow. Until then , don't do a thing, DO YOU HEAR??' and she hangs up.

The old man hangs up his phone and turns to his wife. 'Okay', he says, 'It's all set. They're both
coming for Diwali and paying their own airfare!!
===========================================
The sky is not going to fall down if you take few days LEAVE and meet your dear ones.
OFFICE WORK IS NOT EVERYTHING IN LIFE and MONEY MAKING IS NOT EVERYTHING IN LIFE. AFTER ALL WE WORK FOR SOMEONE ELSE'S DREAM.
=====================

தங்கள் கருத்தை பதித்துவிட்டு செல்லவும், நன்றி
வீ எம்

பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார்.

ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனி நாடு கோரிக்கையைத் தவிர்த்து, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்ஷே கூறினார்.

நன்றி - குமுதம் (latest News)

அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி

சிங்கள இனவெறி ராசபக்சேவின் ரானுவ போர் விமானங்கள் வீசும் குண்டு மழையில் என் தொப்புள் கொடி உறவு நனைகிறது, என் சகோதர சகோதரிகள் மீது குண்டு மழை விழுகிறது., அதனோடு ஒப்பிடும் போது இந்த மழையில் நனைவது எங்களுக்கு துச்சம் என்று இன உனர்வோடு, மனிதாபிமானத்தோடு , இன்று பேரிடியுடன் பலத்த மழையிலும், கனுக்கால் வரை தண்ணீர் வெள்ளமெடுத்து ஓடிய போதும், சிறிதும் அஞ்சாது தமிழர் கூட்டம் கைக்கோர்த்து மனித சங்கிலியில் தன்னை இனைத்துக்கொண்டு உணர்வை, ஈழத்துக்காண ஆதரவை, சகோதரத்துவதுடன் வெளிபடுத்தியது பிரம்மிப்பே..


அத்துனை கூட்டம் அங்கே, குடையில்லாமலும், ஜோவென கொட்டிய மழையில் ஆர்ப்பரித்து நின்றிருந்த கூட்டம் அது.இனம்காக்க, தமிழ உறவுகளுக்கு கைகொடுத்திட நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி, கைகள் இனைத்து நின்ற காட்சி.

அரசியல் தொன்டர்கள் என்று மட்டுமில்லாம், திரையுலகம், அரசு ஊழியர்கள், வனிகர்கள், பொது மக்கள்,இளைஞர்கள், கூறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில், பள்ளி மாணவ, மாணவிகள் கை கோர்த்து, ஈழத்து சகோதர சகோதரிகளுக்காக, வானம் அழுத கண்ணீரில் தம்மையும் நனைத்து, தாங்கள் அழுத கண்ணீரில் சென்னையை நனைத்து நின்ற காட்சி தமிழனின் உணர்வுக்கு அத்தாட்சி.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஆர்ப்பரித்து வந்த இன உணர்வு கூட்டம்.. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம் சொன்ன சேதி - ஈழத்து தமிழனே, இதோ 17 ஆண்டு மவுனம் கலைத்து புறப்பட்டுவிட்டோம் என்று சொல்லியது.

மதியம் வரை அடங்கி இருந்துவிட்டு, 2 மனிக்கு மேல் கொட்டித்தீர்த்த மழைக்கு நன்றி- அடாது மழை பெய்தாலும் , விடாது நிற்ப்போம் எம் தமிழினம் காக்க என்று கைக்கோர்த்து நின்றான் தமிழன், அந்த உணர்வை வெளிக்கொண்டுவரவே மழை பெய்ததாக இருந்ததது. மழைக்கு நன்றி. சங்கிலியோடு சேர்ந்து அழுது தீர்த்த வானமே, நன்றி
பலவாறு பேசி, உட்புகுந்து, திசை திருப்பிட நினைத்த கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடு என்று ஒன்றினைந்து நின்ற தமிழர் கூட்டமே, நன்றி நன்றி.


தமிழர் கூட்டமே நன்றி , அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி

கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?

நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது ஒருமித்த கருத்து வந்துள்ளது.

இந்த நேரத்தில் வந்துள்ள வைகோ கைது என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?

காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.

கலைஞரே, ஏன் இந்த முடிவு?

நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு, ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?

பலவாறான கருத்துக்கள் வரலாம். வைகோ மட்டும் ஏன் கைது?
விடுதலை புலி ஆதரவு என்றால், ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான், அமீர், திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..

இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??

இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..

நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?

ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?

குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?

ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது

இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..

மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.

கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.

வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

இன்று நான் பார்க்க நேர்ந்த இந்த இரண்டுமே சில்லறைத்தனமான விஷயங்கள். சற்று வித்தியாசமாக எனக்கு பட்டதால் , நம் பதிவர்களுடன் இதை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவு. படித்துவிட்டு அட போயா சில்லறை பையா என்று சொல்லிவிடாதீர்கள்.. :)

வழக்கமாக என் பைக்கில் அலுவலகம் வரும் நான் இன்று மழை காரணமாக பேருந்தில் வர தீர்மானித்தேன்.. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை.. அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தது போக , ஒரு 10 , 12 பேர் நின்று கொண்டிருந்த்தார்கள். நான் நடத்துனருக்கு அருகில் நின்றிருந்தேன். ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர் 10 ரூ கொடுத்து கின்டிக்கு பயனச்சீட்டு வாங்கினார். பயனச்சீட்டின் விலை 4.50 ரூ. 4.50 போக மீதமாக 5.50 கொடுக்கவேண்டிய நடத்துனர் மீதமாக 5 ரூ மட்டும் கொடுத்துவிட்டு, 50 காசு இருந்தால் கொடுத்துவிட்டு 1 ரூ வாங்கிக்கொள்ள சொன்னார்.. சென்னையில் இப்படியான காட்சிகள் பிரபலம்..

அந்த பயனியிடம் 50 காசு சில்லறை இல்லை.. சென்னையில் பேருந்து பயனம் செய்த அனைவருக்கும் அடுத்து என்னவிதமான உரையாடல் அங்கே நடந்திருக்கும் என்று நிச்சயம் தெரியும். பயனி நடத்துனரை திட்ட, நடத்துனர் பயனியின் மீது எரிந்து விழ, ஒரு கட்டத்தில் இருவரும் அரசாங்கத்தின் மீது கரித்துக்கொட்ட... அதே தான் இங்கும் நடந்தது..

கடைசி வரை விடாப்படியாக இருந்து அந்த பயனி 50 காசு வாங்க்கிகொண்டு தான் நடத்துனரின் இடத்தை விட்டு விலகி சென்றார்.

உண்மை என்னவென்றால், நடத்துனரின் பையில் 50 காசு இருந்துள்ளது.. அத்துனை காசுகளின் இடையே அதனை தேடியெடுக்க நடத்துனருக்கு சோம்பேறித்தனமோ அல்லது அவரின் அலட்சியமோ.. எதோ ஒன்று அந்த 50 காசை தந்துவிடாமல் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தது..

அடுத்து இரண்டாவது நிகழ்வு.

அதே நாள் மாலையில், அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையில் நன்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன்.


அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் (பெயர் தெரியாததால், தலைவர் என்று வைத்துக்கொள்வோம்) கடைக்காரரிடம் , அண்ணே ஒரு பூமர் ப்புள்கம் கொடுங்க என்றார்..

உங்களுக்கு தெரிந்திருக்கும், 1 பூமரின் விலை 1 ரூ. அந்த கடைக்காரர் பூமர் எடுத்து நீட்டிய போது , நம் தலைவர் கொடுத்த நோட்டை பார்த்து நாங்களே கொஞசம் ஆடிப்போய்விட்டோம்... 1 ரூபாய் பூமருக்கு அவர் கொடுத்தது ஒரு 100 ரூ நோட்டு.. 1 ரூபாய்க்கு 100 ரூ நீட்டுவதற்கெல்லாம் ஒரு தில் வேனும்பா..

நாங்களே ஆடிப்போய்விட்டோம் என்றால், அந்த கடைக்காரரை நினைத்துப்பாருங்கள். 100 ரூபாயை பார்த்த மாத்திரத்தில், வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்து பூமரை மீண்டும் டப்பாக்குள் அடைத்துவிட்டார்.. பூமர் கை மாறிவிடக்கூடாது என்ற அவரின் அவசரம் தெரிந்தது...

சில்லறை கொடுங்க - இது கடைகாரர்..

சற்று நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருந்த நம் தலைவர், சரிப்பா ஒரு பூமர், ஒரு ரூபா அஜெந்தா பாக்கு ஒன்னு கொடு என்று மீண்டும் அதே 100 ரூபாயை நீட்டினார்..

கடைக்காரர் கடுப்பாகிவிட்டார் போல, சிறிது நேரத்துக்கு நம் தலைவரை கண்டுக்கொள்ளவே இல்லை..

சில நிமிடங்கள் நின்று பார்த்த நம் தலைவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென்று பாக்கெட்டில் கை விட்டு 2 ரூ நாணயம் ஒன்று எடுத்துக்கொடுத்துவிட்டு 1 பூமர், 1 அஜந்தா பாக்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினார்...

சட்டென்று எனக்கு அந்த நடத்துனரின் ஞாபகம் வந்தது... நம்ம தலைவருக்கும் , அந்த நடத்துனருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே பட்டது..

நம் தலைவரின் செய்கையில் எங்களுக்கு ஒன்று புரியல.. 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டால் கிடைக்காது என்று 1 பூமர் கேட்டாரா அல்லது பூமர் சாப்பிட ஆசையில் கேட்டாரா?

சில்லறைக்காகத்தான் என்றால், ஏன் இருந்த 2 ரூபாயையும் கொடுத்து தேவையில்லாமல பூமரும் , பாக்கும் வாங்க வேண்டும்..

எது எப்படியோ.. ஒரே நாளில் நான் பார்த்த இந்த சாதாரன நிகழ்வுகள், சற்று வித்தியாசமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாகவும் பட்டது.. அதை பகிர்ந்துக்கொள்ளவே இந்த சில்லறைத்தனமான பதிவு :)

இப்படியான சில்லறை அனுபவங்கள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா? இந்த பதிவை படித்ததை தவிர்த்து :)

தூயாவின் அழைப்பை ஏற்று..

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

அனுபவங்கள் என்று ஏதும் இல்லை. அன்டை நாட்டில் என் இனம் அழிக்கப்படுகிறது. அதனை இலங்கை அரசு நடத்தும் போர் என்று சொன்னாலோ அல்லது திட்டமிட்ட இனப்பட்கொலை என்று சொன்னாலே, எப்படி சொன்னாலும், அங்கே அழிக்கப்படுவது தமிழினம். தமிழன், அதையும் தாண்டி மனித உயிர்கள் எனும் போது வேதனையாக உள்ளது.

வேறு வழியின்றி போரின் மூலமே தீர்வு என்று ஏற்படுத்தப்பட்ட குழு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவர்கள் எடுத்த சில முடிவுகளாலும் போராளிகள் என்ற நிலையில் இருந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரைக்குத்தப்பட்டு, நம் இந்திய மன்னிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது வேதனையான விஷயமே.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் , உரிய மற்றும் தொடர் செய்திகள் தராததும், அரசியல் காரணங்களுக்கான சுழலில் இந்த பிரச்சனை சிக்கி சிதைந்ததும் வேதனையே..

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஈழத்துக்காண அங்கீகாரம் கிடைத்திட வேண்டும். நிச்சயம் கிடைக்கும். வெடிச்சத்தம் கேட்டும், உயிருக்கு அஞ்சியோடியும் தமிழ் இனம் அங்கே பட்ட இன்னல் போதும்.. விரைவில் தீர்வு வரவேண்டும் எனபதே அனைவரின் விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
அதீத ஆர்வம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், அங்கே என்ன நடக்கிறது.. இந்த முறையாவது அமைதி திரும்பிடாதா? , 30 வருட போராட்டம் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்தில் ஈழத்து செய்திகளை படிப்பதுன்டு.
அதிகமாக, வலைதளங்களிலும், பத்திரிக்கை வாயிலாகவுமே படிக்க வாய்ப்புள்ளது.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
வரவேற்கபடவேண்டிய ஒன்று. இது தொடர்ந்திட வேண்டுமே என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இந்த குரல்கள் இன்னும் தீர்கமாக ஒலிக்கவேண்டும், முந்தய காலங்களில் நடந்தது போல தற்காலிக குரலாக ஒலித்து, பின்பு ஓய்ந்தது போல் அல்லாமல், ஒரு நல்ல முடிவு வரும் வரை ஓங்கி ஒலிக்கவேண்டும். ஈழத்து தமிழர்களுக்கு பாதுக்காப்பு அரணாக இந்த ஒலி இருக்கவேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

தமிழினமே, இது பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தமிழகத்தில் ஆதரவு குரல் கேட்க்கிறது. முன்பை விடவும் தீரமாக ஒலிக்கிறது. நிச்சயம் உங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும். ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைத்திடும்.கடல் கடந்து இங்கே வரும் செய்திகளின் நம்பகத்தன்மை புரியவில்லை.பலவித கருத்துக்குள் பரப்பபடுகிறது. அங்கே இருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஈழ நிலவரம் குறித்த நடுநிலை, உண்மையான செய்திகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பிடவேண்டும்.

நிச்சயமாக ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும், அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.
வீ எம்

அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..



சென்னையில் நடைப்பெற்ற தே மு தி க வின் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு அனல் தெரித்தது. உணர்சிக்கொந்தளிப்பான அந்த பேச்சு , தமிழகக்தில் அடுத்து தே மு தி க வின் ஆட்சி என்று பறைசாற்றியது.

அவரின் பேச்சின் சில பகுதிகள் இங்கே..
'வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் ஜெயிப்போம், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.."

அதென்னங்க லோக்சபா தேர்த்தல்ல 40 ம் வெற்றினு அடிச்சு சொல்றீங்க.. சட்டமன்ற தேர்தலில் 234 ல் போட்டினு மட்டும் சொல்றீங்க..?? என்ன கணக்கு இது அம்மனி?

காசா பனமா.. சும்மா அடிச்சு விட்டிருக்கவேண்டியது தானே 234 தொகுதியிலும் அமோக வெற்றினு...

"இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று ராசபக்சேவால் இன்னல் நடக்கிறது.. "
அட! அட! என்னே உங்கள் அறிவு.. மெய் சிலிர்க்குது அம்மனி.. அதெப்படிங்க.. கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு விடுவீங்களா??

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆத்தா.. என்ன சொல்ல ??

நிச்சயமா நீங்க ராவணன் ஆட்சியில போர்படை தளபதியாகவோ , இல்லை ராமர் படையின் போர்ப்படை தளபதியாகவோ, அட, குறைந்தபட்சம் சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..?

நிச்சயமா.. 10 வருஷத்துக்கு முன்னால தூர்தர்ஷன்ல போட்ட ராமாயன தொடரை சமையற்கட்டு வேலைக்கு நடுவுல எட்டி பார்த்துட்டு, அதிலிருந்து வந்த அபார அறீவை வைத்து நீங்க இங்கே அடிச்சுவிட்டுருக்கீங்க.. சரிதானே அண்ணி??

ராவணன் யாராக சித்தரிக்கப்பட்டான் , அவனுக்கு எதிரா போரிட்டது யார்.. அதிலே யார் திராவிட இனத்தின் தலைவனாக , யார் ஆரிய இனத்தின் காவலராக சித்தரிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் தெரியாமல். ஏதோ புலம்பிவிட்டு போய் இருக்ககூடாதுங்க..

இலங்கைனா உடனே ராவணன், சீதை , ராமர், அனில், அனுமான் தான் உங்களுக்கு தோனுமா?? . அட கண்றாவியே... குறைந்த பட்சம் ராவணண் எந்த இனம். அவன் எந்த தமிழருக்கு இன்னல் கொடுத்தான் என்று ஒரு 2 நிமிடம் பேசியிருக்கலாம் நீங்க..

சரி, விடுங்க.. ராமாயானம் சி டி வாங்கி போட்டு பார்த்துட்டு அடுத்த மநாட்டுல ஒழுங்கா பேசனும் சரியா?? இப்படி அச்சுபிச்சுத்தனமா பேசக்கூடாது.. சொல்லிட்டேன்..

என்றும் இலங்கை தமிழருக்கு அதரவு தருவது விஜயகாந்த். இன்றைக்கு யார் யாரோ பேசுறாங்க..
அட்றா , அட்றா.. அசத்திட்டீங்க அம்மனி.. இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதா??

அண்ணன் என்னவெல்லாம் பன்னாரு சொல்லுங்க.. ஓ, பிறந்தநாள் கொண்டாடறத விட்டுவிட்டாறா?? அடேங்கப்பா என்ன பெரிய நஷ்டம் இலைங்கைக்கு.. வி கா பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் மீண்டும் கொண்டாடப்படனும்னே,உடனே ஈழம் கிடைச்சுடும் அம்மனி.. கவலை வேண்டாம்..

அப்புறம், விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாரு... அவரோட 3 படம் இலங்கைல படமாக்கப்பட்டது.. அப்படி இப்படினு நீட்டி முழக்கி இருக்க வேண்டியது தானே... ஏன் விட்டுடீங்க??

யார் யாரோ பேசுறாங்கனு யாரை சொல்றீங்க?? நம்ம வைகப்புயல் வடிவேலுவையா??? :)

தமிழகத்தில் தே மு தி க ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து சொந்தகாலில் நிற்க வைப்போம்..
அட, 40 ம் உங்களுக்குனு சொல்லீட்டீங்க.. அப்புறமென்ன தமிழகம், அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. கேப்டன் தான் அடுத்த பிரதமர்.. இன்றைய தேதிக்கு ஒரே கட்சில 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்னா சும்மாவா.. விடுங்கம்மா , இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்திடலாம்...

பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..

அம்மனி சூப்பரு.. நான் கூட சமுக சேவை செய்ய என் சி சி அமைப்பு ஏற்பட்டுத்த சொல்றீங்கனு நெனைச்சேன்.. பயங்கரவாதத்தை தடுக்கவா... சரி சரி. நிச்சயமா செய்யலாம்.. காவல்துறை, ரானுவம் எல்லத்துக்கும் 5 வருஷம் லீவு விட்டுடலாம்.. சரியா அண்ணி?

அம்மா தாயே. அப்படியே, ஸ்கவுட், கைட், என் எஸ் எஸ், பீ டீ பிரியட் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்.. எல்லோருக்கும் மஞ்ச சட்டை தான் யூனிபார்ம் , இப்பவே சொல்லிட்டேன் சரியா...
தே மு தி க வளர்ச்சியை பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குது..
சொன்னாங்க.. ஜார்ஜ் புஷ் உங்க கட்சிய பார்த்துட்டு கதிகலங்கிபோய், அமெரிக்க தேர்தலை தள்ளி வெக்கலாமானு பாக்குறாங்கனு சொல்லுங்களேன்..

கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..

நீங்க பேசின பேச்ச பார்த்தா, சீக்கிரமே கேப்டன பின்னாடி தள்ளிட்டு நீங்க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிடுவீங்க போல இருக்கோ..

கேப்டன் சார், இனிமே அம்மனிய மாநாட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா.. என்ன பேசப்போறாங்கனு வீட்லயே கேட்டு கரெக்ஷன் பன்னிக்கொடுங்க.. அட, உங்க பேச்சயே யாரோ கரெஷன்பன்னி கொடுக்கறாங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க....
சரி என்னமோ பண்ணித்தொலைங்கோ..
தமிழ் மக்கள் எதை எதையோ பார்த்துட்டோம்.. இத பார்க்க மாட்டோமா... ??

ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???

இலங்கை தமிழர் பிரச்சனையில் , அ தி மு க பொது செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த பழ நெடுமாறன் , ஜெயலலிதாவை ராஜபக்ஷேவின் ஊதுகுழல் என்று சாடியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும், அங்கே அமைதி ஏற்பட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு முடிவுகள் எடுக்கும் போது, தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் லாபத்துக்காகவும் , முதல்வரை மட்டும் ஜெயா தாக்கி வருவது, அவர் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குறியது.

இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, ஆயுதம் தந்தும், உளவுத்தகவல் தந்தும் உதவிடும் இந்தியாவிற்கு , இந்த (போர் நிறுத்தம் ) பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று ஜெயா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரின் அறியாமையை காட்டுகிறது.

ஈழத்துக்காண தீர்வை புலிகளால் தரமுடியும், அவர்களின் பலத்தை ஜெயா அறியவேண்டும். உலக நாடுகள் பலவும், சிங்கள இனப்படுகொலையை கண்டிக்கும் வேளையில், ஜெயா மட்டும் திசை திருப்பும் நோக்கில் பேசுவதை பார்த்தால் அவர் ராஜபக்சேவின் ஊதுகுழல் என தோண்றுகிறது.

இரு முறை முதல்வராக இருந்தவருக்கு , தமிழர் பிரச்சனை குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது, தமிழர்களை கொல்வோரின் கைப்பாவையாக இருப்பது விசித்திரமாக உள்ளது. அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் முதல்வர் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு துனை நிற்போம் என்று ராமதாஸ், விஜய டி ராஜேந்தர், சரத்குமார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளளும் கூறி வரும் நிலையில், மூன்றே பேர் மட்டும் அரசியல் காழ்ப்பு காரணமாக தனித்து நிற்கின்றனர்..

ஜெயா, வைக்கோ மற்றும் விஜயகாந்த் - இவர்கள் மட்டும் தங்களின் அர்சியல் லாபத்துக்காக தவறான முடிவுகள் எடுப்பதால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் ..
ww

அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

தமிழக முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், இன்னும் 2 வாரத்தில் இலங்கை இனப்படுகொலையை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைஞர் தந்தி அடிக்கச்சொன்னவுடன், அரசியல் காழ்ப்புடன் வாய்க்கு வந்தபடி கின்டல் செய்தவர்கள், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?? நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..

ஏன் பதவி விலகுவோம் என்று சொல்லாமல், தந்தி அடிக்க சொல்கிறார் என்று ஏளனமாக கேள்வி கேட்ட ஜெ, சொரனையற்ற வைகோ,. ஓ காமெடியன் ஞாநி முதல் சில வலைப்பதிவர்கள் வரை அனைவர் முகத்தில் கரி பூசிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது..

கலைஞருக்கு தெரியும், எப்போது எப்படிப்பட்ட, என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று..கொஞ்சம் கூட அவகாசம் தராமல், வெறும் அரசியல் காழ்ப்புடன் அவரை தாக்கிய அனைவரும் இனியாவது மூடிக்கொள்ளுங்கள்..

தமிழக முதல்வருக்கும், இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் நன்றி.

மஞ்சள் மகிமை.

மஞ்சள் மகிமை.

ஒரு கட்சிக்கு சொந்தமா என்னவெல்லாம் இருக்கும்? ஒரு கட்சிக்கு சொந்தம் கொண்டாட ஒரு குடும்பம் இருக்கும்... ஒரு மைத்துனன் இருப்பான், ஒரு உ பிறவா சகோதரி அப்படினு எல்லாம் சொன்னீங்கன்னா பிச்சுபுடுவேன் பிச்சு.. சரியா சொல்லுங்க..

ஒரு கட்சி என்றால் அதற்கு ஒரு கொடி, சின்னம் இருக்கும்.. சில விதிகளுக்குட்பட்டு அவை தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இந்த சின்னத்தையோ, கொடியையோ வேறு யாரும் உபயோகிக்கமாட்டார்கள்.. ஆனால் இப்போது தே மு தி க , பா ம க இடையே நடைபெறும் இந்த மஞ்சள் சட்டை போராட்டம் மிக விசித்திரமாக உள்ளது..
கட்சிக்கொடி, சின்னம் போல, பா ம க மஞ்சள் நிற சட்டைக்கு உரிமைக்கொண்டாடி உரிமைக்குரல் எழுப்பியுள்ளது...

குறிப்பாக தங்கள் பரம வைரியான விஜயகாந்தின் தே மு தி க வினர் நடத்தவிருக்கும் இளைஞர் மாநாட்டிற்கு அனைவருக்கும் மஞ்சள் நிற சட்டையை சீருடையாக தருவது சர்ச்சையை கிளப்பி, பா ம க விற்கும் , தே மு தி க விற்கும் அறிக்கைப்போரை உச்சத்தில் வைத்துள்ளது..

சட்டையின் நிறத்தில் கூட அரசியலா?? எங்கே போகிறது தமிழக அரசியல்??

ரயில்வே போர்ட்டர்கள் கம்யூனிஸ்டுகளுடன் சன்டைக்கு வருவார்கள் போல்லுள்ளது..

அப்படிப்பார்த்தால் கலைஞர் பல ஆண்டுகளாகவே மஞ்சள் துண்டு தானே போடுகிறார்ர்??

பா ம க விடம் மஞ்சள் சட்டைக்கு மட்டுமே காப்புரிமை இருக்கிறதா , துண்டுக்கு இல்லையா??

எல்லாம் மஞ்சள் மகிமை :)

எனக்கொரு சந்தேகம் , தீர்த்து வைய்யுங்களேன்..


நம்ம ஆற்காட்டு அண்ணன் தலை தமிழ்நாட்டுல இப்படி உருளுது.. அவரே நொந்து நூலா போயி , அடுத்து தேர்தலில் தி மு க தோற்க மின்வெட்டு காரணமா இருக்கும்னு சுய புலம்பல் செய்யறாரு.. தும்ப விட்டு வால் பிடிச்ச கதையா, மின்வெட்டு அபாயம்னு செய்தி வந்த காலத்துல தேவையான நடவடிக்கை எடுக்காம, அவர் இஷ்டத்துக்கு அறிக்கைவிட்டுட்டு இப்போ குய்யோ முய்யோ நு கத்துறாரு..

அண்ணாச்சி - அடுத்த எலக்ஷன்ல நீங்க எங்க நின்னாலும் உங்களுக்கு ஷாக் அடிக்கத்தான் போகிறதுங்கோ.. வடிவேலு கூட வேண்டாம், அவர் கூட வர போண்டா மனி போது உங்கள வீட்டுக்கு அனுப்பறதுக்கு.. .. ஜெனரேட்டர் வீட்டுல இருக்குதுல்லா?? ஏன்னா, 2011 க்கு அப்புறம் உங்க எந்த வீட்டுக்கும் 24 மனி நேர மின்(க)வெட்டு இருக்கும் வாய்ப்பு இருக்குங்க..

சரி அதவிடுங்ககோ, விஷயத்துக்கு வருவோம்.. என்ன மின்வெட்டுனு கேட்டா உடனே கலைஞர், ஆற்க்காட்டர் எல்லோரும் பீகார பாருங்கோ.. ஒரிசாவ பாருங்கோ, ஆந்திராவ பாருங்கோ அங்கேயெல்லாம் கூட கடும் மின்வெட்டு, அதை விட இங்கே பரவாயில்லைனு சொல்றாங்க...ஆக, இரு ஒரு தேசிய பிரச்சனை.. இது இந்தியா முழுக்கு இருக்கு அதானே??

அப்போ மின்சாரவண்டி , அதாங்க ரயில். அது எப்படிங்க பிரச்சனை இல்லாம ஓடுது.. வீட்டுக்கே இவ்ளோ மின்சாரம் தேவைபடுதுன்னா, பல ஆயிரம் மைல் ஓடுற ரயிலுக்கு எவ்ளோ தேவை?? அதை எப்படி சமாளிக்கறாங்க..? எங்கேயிருத்து அவ்ளோ மின்சாரம் வருது??? கூடிய சீக்கிரம் ரயில் வன்டிக்கு கூட 1 , 2 மனிநேர மின்வெட்டு வருமா???

ஆற்க்காட்டாரே, லாலு கிட்ட பேசிப்பாருங்களேன்.. கொஞ்சம் மின்சாரம் கடன் தரமுடியுமானு.. உங்க கூட்டணில தானே இருக்காங்க.. தந்தாலும் தருவாரு.. என்ன நான் சொல்றது.. ???

வீ எம்

கலைஞர் டீவியில் - கூடல் நகர்

இதை போன வாரமே பதிவிட வேண்டும் என நினைத்தேன்.. சில காரணங்களால் பதிவிட முடியாமல் போனது..
பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில், சற்று தாமதமானாலும் இதோ..

பலரும் இதனை கவனித்திருக்கலாம்..

சன் டீவி ஆரம்பித்து வைத்த கலாசாரம்.. ஏதேனும் விஷேச நாட்களுக்கான நிகழ்ச்சியெனில், குறிப்பாக அந்த நாட்களில் ஒளிப்பரப்பாகும் திரைபடத்தை பற்றிய விளம்பரத்தை 5 நாட்களுக்கு முன்னரே "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக .. வெளி வந்து சில மாதங்களே ஆன சூப்பர் திரைப்படம்" என்று நீட்டி முழக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக்கொண்டே இருப்பார்கள்..

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று , கலைஞர் டீவியில் ஒளிப்பரப்பாகிய , பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் திரைப்படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் செய்யப்பட்டது..

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்.. என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்யப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது?? நிச்சயமாக இதில் எதுவும் இல்லை.. வழக்கமாக விடுமுறை நாட்களில் போடப்படும் சிறப்பு திரைப்படம், விளம்பரம்.. காந்தி ஜெயந்தி நாளில் காந்தியவாதிகள், விடுதலை போராட்டத்தியாகிகள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகள் தான் போடவேண்டும் என்று பதிவெழுத நான் என்ன மொக்கை பதிவரா? :) :)

வழக்கமாக இந்த விளம்பரங்கள் போடும்போது, அந்த படத்தின் க்ளிப்பிங் காட்டப்படும்.. சில முக்கிய காட்சிகள் , வசனங்கள் வரும்.. முடிக்கும் போது அந்த படத்தில் மிகவும் பேசப்பட்ட (மக்களால் பேசப்பட்ட) பாடல் ஒன்றுடன் முடிப்பார்கள்..

அப்படி இந்த கூடல் நகரின் விளம்பரத்தில் க்ளிப்பிங் காட்சியில் வந்த முதல் வசனம் "அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.." தன் மகள் பாவனாவை கதலிக்கிறார் என்றதும் , பரத்தை கொன்றுவிடுமாறு தன் அடியாட்களுக்கு நெடுமுடி வேணு கட்டளையிடுவதாக ஒரு காட்சி..

இப்போது இனைத்துப்பாருங்கள்.. விளம்பரம் + முதல் க்ளிப்பிங் வசனம்.

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன " <க்ளிப்ப்பிங்> " அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா. <க்ளிப்ப்பிங்> , <க்ளிப்ப்பிங்> , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில்,
:) :)

டிஸ்கி - பதிவு சன் , கலைஞர் தொலைக்காட்சி , காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள், விளம்பர முறை, கூடல் நகர் திரைப்படம் என்று எதை பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை.. , அக்டோபர் 2, விளம்பரமும் , அது தொடர்ந்து வந்த க்ளிப்பிங்ல் வசனமும் ஒரு சேர கேட்டது (CO-INCIDENCE) சற்று வித்தியாசமாக இருந்தது .. அதை பகிர்ந்துக்கொள்ளவே.. :)

தந்தி அடிக்கலாம் வாங்க..

"தந்தி போராட்டம்" இப்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துள்ளது. கலைஞரின் தந்தி போராட்ட அறிவிப்பு தொடர்ந்து மத்திய அரசு கூட இலங்கை தூதரகத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..

இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கெல்லாம் தந்தி அடிக்கலாம்..??

தந்தி # 1 - மின்சார தேவையை அதிகரிக்கும் முயற்சியை மேற்க்கொண்டு தமிழக மக்களை இருளில் இருந்து காப்பாற்றக்கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணண் ஆற்க்காட்டருக்கு ஒரு ஷாக் தந்தி.

தந்தி #2 - பணவீக்கத்தை கட்டுபடுத்தி , விலைவாசி அரக்கனிடமிருந்து மக்களை காத்திடும் முயற்சி மேற்க்கொண்டிடுக என்று கேட்டு பொருளாதார மேதை மதிப்பிற்குறிய சிவகங்கை சிங்கம் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு தந்தி.

தந்தி # 3 எப்போது உங்கள் பின்னாலேயே வால் பிடித்து வரவேண்டும் என்று விரும்பும் உங்கள் உடன்பிறப்பு ஆற்க்காட்டாருக்கு அமைச்சர் பதவியில் இருந்து விடை கொடுத்து, அவரை திரு சன்முகநாதன் அவர்கள் இடத்தில் அமர வைத்து , சன்முகநாதன் அவர்களை மின்சாரத்துறை அமைச்சராக்கிட. ஆவன செய்திட வேண்டும் என கேட்டு முதலவர் கலைஞருக்கு ஒரு விண்ணப்ப தந்தி.

தந்தி # 4 முதல்வரின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே, மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் சேர்த்திடும் அஞ்சாநெஞ்சன் அவர்களின் போக்கை கொஞ்சமேனும் அடக்கி வைக்க கோரி தந்தை என்ற முறையில் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் தந்தி.

தந்தி # 5 காதலில் விழுந்தேன் பிரச்சனையை சமூக பிரச்சனையாக சித்தரித்து ஒப்பாரி வைக்கும் சன் டீவி சகோதரர்களுக்கு, கடந்த காலங்களில் , அரசின் ஆதரவு மற்றூம் அமைச்சர் வீட்டு தொலைகாட்சி என்ற ஓரே காரணத்துக்காக என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், எத்துனை இருட்டடிப்பு, ஊடகத்துறையில் உள்ள சக மனிதர்களை அழித்திட என்னவெல்லாம் செய்தனர் என்பதை பட்டியலிட்டு ஒரு மெகா சைஸ் சுயசரிதை தந்தி.

தந்தி # 6 தனக்கென ஒரு கட்சி இருக்கிறது , அது தனிக்கட்சி.
அ தி மு க வின் கிளைக்கட்சியல்ல என்பதை நினைவூட்டி அண்ணன் வைகோவிற்கு ஒரு நினைவூட்டல் தந்தி.

தந்தி # 7 "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப புண்ணாக்கிட்டாங்கப்பா" என்று ஒற்றை வரியில் வைகைபுயல் வடிவேல் அண்ணாச்சிக்கு ஒரு அவசர தந்தி.

தந்தி # 8 பத்திரிக்கை செய்திகளையும், கருத்துக்கணிப்புகளையும் பார்த்து , 2011 ல் நான் தான் முதல்வர் என்ற கற்பனையில் , மிதமிஞ்சிய மிதப்பில் செயல்பட்டு உள்ளதையும் கோட்டை விடவேண்டாம் என்று , கடந்த கால அரசியல் நிகழ்வுகளை பட்டியல் இட்டு , கருப்பு தங்கம் கேப்டனுக்கு ஒரு புள்ளியல் தந்தி.

தந்தி # 9 தமிழக காங்கிரஸ் தலைவர் என்னும் பதவியை உன்மையாகவே தலைவர் பதவி என்று நினைத்து, வாய் கொடுத்து புண்ணாகிக்க்கொள்ளாமல், இருக்கும் வரை அனுபவித்துவிட்டு போகவும் என்று திரு "கோல்ட் மில்க்" தங்கபாலு அண்ணனுக்கு ஒரு அறிவுரை தந்தி.

தந்தி # 10 உங்களால் தான் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச போகிறது என்று இன்னமும் நம்பி, போயஸ் வீட்டிற்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் நடையாய் நடந்து சீரழிகிர ரசிகன் பட்டாளம் இன்னும் இருக்க்கிற வரை உங்கள் எந்திரனும் சரி,ஒரு வேளை 2015 வரும் உங்கள் சுந்தரனும் நிச்சயமாக உங்கள் கையை கடிக்கவே கடிக்காது என்று ஒரு சந்தோஷ தந்தி நம் சூப்பர் ஸ்டாருக்கு.

கோடிக்கணக்கில் குவியப்போகும் தந்திகளை பட்டுவாடா செய்ய வேண்டிய வசதிகள் செய்திட (அதை மட்டுமாவது) வேண்டும் என திரு ராசாவுக்கு ஒரு கடைசி தந்தி.

மக்கள்ஸ் - இன்னும் பலருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று ஆசை, முதல் பத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் மற்றதை போடுகிறேன்.. நானே போடுகிறேன்.. அதற்குள் யாரும் எனக்கு நினைவூட்டல் தந்தி அனுப்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

உங்கள் மனதிலும் உதிக்கும் தந்திகளையும், பெருநர்களையும் கருத்துப்பெட்டியில் சொல்லிவிட்டு போங்கள் நன்பர்களே.. பார்க்கலாம் யாருடையது சிறந்த தந்தி என்று.

நன்றி
வீ எம்

சின்ன அய்யா - சிறு யோசனை

மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்களே, வணக்கம்.

புகையிலைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் தங்களின் அவா பாராட்டப்படவேண்டியதே. பல காலமாகவே இது பற்றி பேசி வரும் நீங்கள் , இப்போது எடுத்திருக்கும் இந்த பொது இடங்களில் புகைக்க தடை என்ற முடிவு நல்ல முடிவு.

பான் பராக் போன்ற வஸ்த்துக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?? எனக்கு தெரிந்து 3 வருடங்களுக்கு முன் பான்பராக் விற்பனை தடை செய்யப்பட்ட்து.. முதல் 2 மாதங்கள் விற்பனை இல்லாமால் இருந்தது , விற்றவர்கள் பிடிபட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வாசித்தது.. பின்பு , சில மாதங்களுக்கு வெளியில் தொங்கவிடாமல், உள்ளே வைத்து தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, பின்னர் தைரியம் வந்து எப்போதும் போல வெளியே சரம் சரமாக தொங்கவிடப்பட்டு வியாபாரம் சக்கை போடு போடுகிறது.. ஆனால் தமிழகத்தில் பான்பராக் விற்பனக்கு தடை என்று அரசானை சொல்லும்..

இந்த தடையினால் என்ன நடந்தது தெரியுமா??
பான்பராக் என்ற ஒரே ஐயிட்டம் இருந்தது போய், லஷ்மி சூப்பார், Hஆன்ஸ், அது இது என்று புது புது வகைகள் வந்தது தான் மிச்சம்.

சரி, சிகரெட்டுக்கு வருவோம்..
உள்ளபடியே மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரை புரிகிறது.. உங்களின் இலக்கு புகைப்பிடிக்காதவர் உள்ள நாடுஎன்பது தானே.. புகையிலையால் புற்று வந்து மனிதர்கள் இறக்க கூடாது என்ற நல்ல எண்ணம் என்பது தெரிகிறது..

விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் புகையிலைப்பழக்கதை ஒழிக்கமுடியுமா என்றால், மிக மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே காது கொடுத்து கேட்டு புகைப்பதை தவிர்ப்பார்கள். அகவே அது முழு பலன் தராது.

பொது இடங்களில் புகைக்க தடை என்பதன் மூலம் முழு பலன் வருமா என்றால் சந்தேகமே.புகைப்பிடிப்பதை நிறுத்திடவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இந்த சட்டத்தை பயன்படுத்தி புகைப்பதை தவிர்ப்பவர். மற்றவரெல்லாம், திருட்டுத்தனமாக இன்டு இடுக்கில் புகுந்துக்கொண்டு புகைக்கத்தான் போகிறார்கள்..
ஓவ்வொரு சந்துக்கும் ஆட்களை நியமித்து உங்களால் கண்கானிக்க முடியுமா அமைச்சரே?

வீட்டுக்கு பயந்து திருட்டு தம் அடித்தவர்கள் இப்போது போலிஸுக்கும் , சட்டத்துக்கும் பயந்து திருட்டு தம் அடிப்பார்கள்.. அவ்வளவே..இன்னும் சிலர், பிடித்தால் பார்க்கலாம் என்று பொது இடங்களில் புகைப்பதை பார்க்க முடிகிறது.இந்த சட்டமும், பான் பராக் தடை சட்டம் போல் 6 மாதத்தில் நீர்த்து போகாது என்ற உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அன்புமனி சார்.
உங்களின் பசுமை தாயகம், பா ம க சார்ப்பாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்று நடத்திப்பாருங்களே... மேடையின் பின்னால், மேடையில் கீழே இருந்தெல்லாம் புகை வருகிறதா இல்லயா என்று..

இவ்வளவு உயரிய நோக்கில் நீங்கள் கொண்டுவந்த இந்த சட்டம், இத்துனை நடைமுறை சிக்கலோடு இருப்பது சற்று வேதனையே.. ஏன் தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த வேலை?? .

இதைவிட, புகையிலை பொருட்கள் தயாரிப்பையே நீங்கள் தடை செய்யலாமே..இப்போதிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் 15 - 20 % குறிக்கோள் நிறைவேறும்.. ஆனால் நீங்கள் துனிந்து புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடை செய்தால், 90% குறிக்கோள் நிறைவேறும்..

உங்களின் நோக்கமும், இந்த தடையும் போற்றுதலுக்குரியது.. அதை குறை சொல்லவில்லை.. ஆனால் செய்வன திருந்தச்செய் என்றே சொல்கிறோம்..
அதை செய்வதில் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும், கட்சிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா??

உண்மையிலேயா உங்களுக்கு மக்களின் உடல்நலத்தில் அவ்வளவு அக்கரை இருக்கும் பட்சத்தில், இதற்கு முயற்சி செய்யுங்கள் சின்ன அய்யா...!