மதியம் திங்கள், அக்டோபர் 20, 2008

அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..



சென்னையில் நடைப்பெற்ற தே மு தி க வின் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு அனல் தெரித்தது. உணர்சிக்கொந்தளிப்பான அந்த பேச்சு , தமிழகக்தில் அடுத்து தே மு தி க வின் ஆட்சி என்று பறைசாற்றியது.

அவரின் பேச்சின் சில பகுதிகள் இங்கே..
'வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் ஜெயிப்போம், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.."

அதென்னங்க லோக்சபா தேர்த்தல்ல 40 ம் வெற்றினு அடிச்சு சொல்றீங்க.. சட்டமன்ற தேர்தலில் 234 ல் போட்டினு மட்டும் சொல்றீங்க..?? என்ன கணக்கு இது அம்மனி?

காசா பனமா.. சும்மா அடிச்சு விட்டிருக்கவேண்டியது தானே 234 தொகுதியிலும் அமோக வெற்றினு...

"இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று ராசபக்சேவால் இன்னல் நடக்கிறது.. "
அட! அட! என்னே உங்கள் அறிவு.. மெய் சிலிர்க்குது அம்மனி.. அதெப்படிங்க.. கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு விடுவீங்களா??

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆத்தா.. என்ன சொல்ல ??

நிச்சயமா நீங்க ராவணன் ஆட்சியில போர்படை தளபதியாகவோ , இல்லை ராமர் படையின் போர்ப்படை தளபதியாகவோ, அட, குறைந்தபட்சம் சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..?

நிச்சயமா.. 10 வருஷத்துக்கு முன்னால தூர்தர்ஷன்ல போட்ட ராமாயன தொடரை சமையற்கட்டு வேலைக்கு நடுவுல எட்டி பார்த்துட்டு, அதிலிருந்து வந்த அபார அறீவை வைத்து நீங்க இங்கே அடிச்சுவிட்டுருக்கீங்க.. சரிதானே அண்ணி??

ராவணன் யாராக சித்தரிக்கப்பட்டான் , அவனுக்கு எதிரா போரிட்டது யார்.. அதிலே யார் திராவிட இனத்தின் தலைவனாக , யார் ஆரிய இனத்தின் காவலராக சித்தரிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் தெரியாமல். ஏதோ புலம்பிவிட்டு போய் இருக்ககூடாதுங்க..

இலங்கைனா உடனே ராவணன், சீதை , ராமர், அனில், அனுமான் தான் உங்களுக்கு தோனுமா?? . அட கண்றாவியே... குறைந்த பட்சம் ராவணண் எந்த இனம். அவன் எந்த தமிழருக்கு இன்னல் கொடுத்தான் என்று ஒரு 2 நிமிடம் பேசியிருக்கலாம் நீங்க..

சரி, விடுங்க.. ராமாயானம் சி டி வாங்கி போட்டு பார்த்துட்டு அடுத்த மநாட்டுல ஒழுங்கா பேசனும் சரியா?? இப்படி அச்சுபிச்சுத்தனமா பேசக்கூடாது.. சொல்லிட்டேன்..

என்றும் இலங்கை தமிழருக்கு அதரவு தருவது விஜயகாந்த். இன்றைக்கு யார் யாரோ பேசுறாங்க..
அட்றா , அட்றா.. அசத்திட்டீங்க அம்மனி.. இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதா??

அண்ணன் என்னவெல்லாம் பன்னாரு சொல்லுங்க.. ஓ, பிறந்தநாள் கொண்டாடறத விட்டுவிட்டாறா?? அடேங்கப்பா என்ன பெரிய நஷ்டம் இலைங்கைக்கு.. வி கா பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் மீண்டும் கொண்டாடப்படனும்னே,உடனே ஈழம் கிடைச்சுடும் அம்மனி.. கவலை வேண்டாம்..

அப்புறம், விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாரு... அவரோட 3 படம் இலங்கைல படமாக்கப்பட்டது.. அப்படி இப்படினு நீட்டி முழக்கி இருக்க வேண்டியது தானே... ஏன் விட்டுடீங்க??

யார் யாரோ பேசுறாங்கனு யாரை சொல்றீங்க?? நம்ம வைகப்புயல் வடிவேலுவையா??? :)

தமிழகத்தில் தே மு தி க ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து சொந்தகாலில் நிற்க வைப்போம்..
அட, 40 ம் உங்களுக்குனு சொல்லீட்டீங்க.. அப்புறமென்ன தமிழகம், அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. கேப்டன் தான் அடுத்த பிரதமர்.. இன்றைய தேதிக்கு ஒரே கட்சில 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்னா சும்மாவா.. விடுங்கம்மா , இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்திடலாம்...

பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..

அம்மனி சூப்பரு.. நான் கூட சமுக சேவை செய்ய என் சி சி அமைப்பு ஏற்பட்டுத்த சொல்றீங்கனு நெனைச்சேன்.. பயங்கரவாதத்தை தடுக்கவா... சரி சரி. நிச்சயமா செய்யலாம்.. காவல்துறை, ரானுவம் எல்லத்துக்கும் 5 வருஷம் லீவு விட்டுடலாம்.. சரியா அண்ணி?

அம்மா தாயே. அப்படியே, ஸ்கவுட், கைட், என் எஸ் எஸ், பீ டீ பிரியட் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்.. எல்லோருக்கும் மஞ்ச சட்டை தான் யூனிபார்ம் , இப்பவே சொல்லிட்டேன் சரியா...
தே மு தி க வளர்ச்சியை பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குது..
சொன்னாங்க.. ஜார்ஜ் புஷ் உங்க கட்சிய பார்த்துட்டு கதிகலங்கிபோய், அமெரிக்க தேர்தலை தள்ளி வெக்கலாமானு பாக்குறாங்கனு சொல்லுங்களேன்..

கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..

நீங்க பேசின பேச்ச பார்த்தா, சீக்கிரமே கேப்டன பின்னாடி தள்ளிட்டு நீங்க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிடுவீங்க போல இருக்கோ..

கேப்டன் சார், இனிமே அம்மனிய மாநாட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா.. என்ன பேசப்போறாங்கனு வீட்லயே கேட்டு கரெக்ஷன் பன்னிக்கொடுங்க.. அட, உங்க பேச்சயே யாரோ கரெஷன்பன்னி கொடுக்கறாங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க....
சரி என்னமோ பண்ணித்தொலைங்கோ..
தமிழ் மக்கள் எதை எதையோ பார்த்துட்டோம்.. இத பார்க்க மாட்டோமா... ??

10 கருத்துக்கள்:

வாக்காளன் said...

தஙகளின் கமெண்ட்ஸ் ஒவ்வொன்றும் நச் ரகம்.. கலக்கல்..


//சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..? //

சூப்பர்... :)

Unknown said...

//
பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..
//

பயங்கரவாதத்த ஒழிக்க கேப்டனோட இடதுகால் மட்டும் போதும்னு நான் நினச்சிட்டு இருந்தேன். அம்மிணி என்ன இப்படி சொல்லிட்டாங்க?

madhu said...

ALL TIME FOR TAMILANS.. WHAT ELSE TO SAY

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, வாக்காளன், மது மற்றும் சேவியர்..

///பயங்கரவாதத்த ஒழிக்க கேப்டனோட இடதுகால் மட்டும் போதும்னு நான் நினச்சிட்டு இருந்தேன். அம்மிணி என்ன இப்படி சொல்லிட்டாங்க?//

இது தான் உன்மையான நச் :)

தமிழன் said...

இவ்வளவு எதிர்பா? என் தமிழகத்தின் நாளைய முதல்வருக்கு கடுமையாக கண்டிக்கிறேன். அறிவுபூர்வமாக பேசினால் கிண்டல் செய்வதா? பார்த்து பதிவு போடுங்கள் நண்பரே நாற்பதில் தோற்றால் வலைப்பூவில் விஜயகாந்த் எதிர்ப்பு காரணமாக தோற்று விட்டார் என்று அண்ணியார் குற்றம்சாட்ட போகிறார்.

தமிழன் said...

அவர்களின் உற்ற நண்பர் வைகைப்புயல் வடிவேலு போல் சொல்லவேண்டும் என்றால் உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே. முடியல என்னால முடியல.

வெங்கட்ராமன் said...

கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..

ரிப்பீட்டேய். . . .

ISR Selvakumar said...

பிரேமலதா அண்ணி இந்த அளவுக்கு அறிவாளியா? மழை நேரத்துல சிரிப்பு காட்டுறதுக்கு அவங்க பேசுன டேப்பு எதாவது இருந்தா போடுங்க.

Anonymous said...

Unable to comment in Murali's "vayal veli" blog.

James said...

Super Punch and First Class Histrey Reserech ( Ex- Ravanan is Dravidan)