கலைஞர் டீவியில் - கூடல் நகர்
இதை போன வாரமே பதிவிட வேண்டும் என நினைத்தேன்.. சில காரணங்களால் பதிவிட முடியாமல் போனது..
பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில், சற்று தாமதமானாலும் இதோ..
பலரும் இதனை கவனித்திருக்கலாம்..
சன் டீவி ஆரம்பித்து வைத்த கலாசாரம்.. ஏதேனும் விஷேச நாட்களுக்கான நிகழ்ச்சியெனில், குறிப்பாக அந்த நாட்களில் ஒளிப்பரப்பாகும் திரைபடத்தை பற்றிய விளம்பரத்தை 5 நாட்களுக்கு முன்னரே "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக .. வெளி வந்து சில மாதங்களே ஆன சூப்பர் திரைப்படம்" என்று நீட்டி முழக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக்கொண்டே இருப்பார்கள்..
அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று , கலைஞர் டீவியில் ஒளிப்பரப்பாகிய , பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் திரைப்படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் செய்யப்பட்டது..
உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்.. என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்யப்பட்டது..
இதில் என்ன இருக்கிறது?? நிச்சயமாக இதில் எதுவும் இல்லை.. வழக்கமாக விடுமுறை நாட்களில் போடப்படும் சிறப்பு திரைப்படம், விளம்பரம்.. காந்தி ஜெயந்தி நாளில் காந்தியவாதிகள், விடுதலை போராட்டத்தியாகிகள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகள் தான் போடவேண்டும் என்று பதிவெழுத நான் என்ன மொக்கை பதிவரா? :) :)
வழக்கமாக இந்த விளம்பரங்கள் போடும்போது, அந்த படத்தின் க்ளிப்பிங் காட்டப்படும்.. சில முக்கிய காட்சிகள் , வசனங்கள் வரும்.. முடிக்கும் போது அந்த படத்தில் மிகவும் பேசப்பட்ட (மக்களால் பேசப்பட்ட) பாடல் ஒன்றுடன் முடிப்பார்கள்..
அப்படி இந்த கூடல் நகரின் விளம்பரத்தில் க்ளிப்பிங் காட்சியில் வந்த முதல் வசனம் "அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.." தன் மகள் பாவனாவை கதலிக்கிறார் என்றதும் , பரத்தை கொன்றுவிடுமாறு தன் அடியாட்களுக்கு நெடுமுடி வேணு கட்டளையிடுவதாக ஒரு காட்சி..
இப்போது இனைத்துப்பாருங்கள்.. விளம்பரம் + முதல் க்ளிப்பிங் வசனம்.
உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன " <க்ளிப்ப்பிங்> " அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா. <க்ளிப்ப்பிங்> , <க்ளிப்ப்பிங்> , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில்,
:) :)
டிஸ்கி - பதிவு சன் , கலைஞர் தொலைக்காட்சி , காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள், விளம்பர முறை, கூடல் நகர் திரைப்படம் என்று எதை பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை.. , அக்டோபர் 2, விளம்பரமும் , அது தொடர்ந்து வந்த க்ளிப்பிங்ல் வசனமும் ஒரு சேர கேட்டது (CO-INCIDENCE) சற்று வித்தியாசமாக இருந்தது .. அதை பகிர்ந்துக்கொள்ளவே.. :)
4 கருத்துக்கள்:
TIMING SENSE , V.M.
விளம்பரம் கிடைக்காது என தெரிந்தும் சன் டீவியில் ரிச்சர்ட் அட்டன்பரோவோட காந்தி திரைப்படத்தை தமிழில் ஒளிபரப்பினார்கள். இது நிச்சயம் பாராட்டுகுரியது.
பாவனாவோட அப்பா நெடுமுடி வேணு இல்லை வீ.எம் . அந்த நபர் பிதாமகன் ல வர்ற வில்லன் . நெடுமுடி வேணு மலையாளத்தின் மிகச் சிறந்த நடிகர் , அந்நியன் படத்துல விக்ரமோட அப்பாவா வருவாரே அவர் தான் நெடுமுடிவேணு ....இன்னும் சில தமிழ் படங்களில் கூட நடிச்சிருக்கார் .எனக்கு தெரிஞ்சு இந்தியன்ல கூட வருவார் ..
முரளி , ப்ளீச்சிங் பவுடர், கயல் வாசுதேவன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
பிழையை திருத்தியமைக்கு நன்றி கயல்..
Post a Comment