தூயாவின் அழைப்பை ஏற்று..
1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
அனுபவங்கள் என்று ஏதும் இல்லை. அன்டை நாட்டில் என் இனம் அழிக்கப்படுகிறது. அதனை இலங்கை அரசு நடத்தும் போர் என்று சொன்னாலோ அல்லது திட்டமிட்ட இனப்பட்கொலை என்று சொன்னாலே, எப்படி சொன்னாலும், அங்கே அழிக்கப்படுவது தமிழினம். தமிழன், அதையும் தாண்டி மனித உயிர்கள் எனும் போது வேதனையாக உள்ளது.
வேறு வழியின்றி போரின் மூலமே தீர்வு என்று ஏற்படுத்தப்பட்ட குழு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவர்கள் எடுத்த சில முடிவுகளாலும் போராளிகள் என்ற நிலையில் இருந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரைக்குத்தப்பட்டு, நம் இந்திய மன்னிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது வேதனையான விஷயமே.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் , உரிய மற்றும் தொடர் செய்திகள் தராததும், அரசியல் காரணங்களுக்கான சுழலில் இந்த பிரச்சனை சிக்கி சிதைந்ததும் வேதனையே..
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
ஈழத்துக்காண அங்கீகாரம் கிடைத்திட வேண்டும். நிச்சயம் கிடைக்கும். வெடிச்சத்தம் கேட்டும், உயிருக்கு அஞ்சியோடியும் தமிழ் இனம் அங்கே பட்ட இன்னல் போதும்.. விரைவில் தீர்வு வரவேண்டும் எனபதே அனைவரின் விருப்பமும்.
3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
அதீத ஆர்வம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், அங்கே என்ன நடக்கிறது.. இந்த முறையாவது அமைதி திரும்பிடாதா? , 30 வருட போராட்டம் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்தில் ஈழத்து செய்திகளை படிப்பதுன்டு.
அதிகமாக, வலைதளங்களிலும், பத்திரிக்கை வாயிலாகவுமே படிக்க வாய்ப்புள்ளது.
4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
வரவேற்கபடவேண்டிய ஒன்று. இது தொடர்ந்திட வேண்டுமே என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இந்த குரல்கள் இன்னும் தீர்கமாக ஒலிக்கவேண்டும், முந்தய காலங்களில் நடந்தது போல தற்காலிக குரலாக ஒலித்து, பின்பு ஓய்ந்தது போல் அல்லாமல், ஒரு நல்ல முடிவு வரும் வரை ஓங்கி ஒலிக்கவேண்டும். ஈழத்து தமிழர்களுக்கு பாதுக்காப்பு அரணாக இந்த ஒலி இருக்கவேண்டும்.
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
தமிழினமே, இது பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தமிழகத்தில் ஆதரவு குரல் கேட்க்கிறது. முன்பை விடவும் தீரமாக ஒலிக்கிறது. நிச்சயம் உங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும். ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைத்திடும்.கடல் கடந்து இங்கே வரும் செய்திகளின் நம்பகத்தன்மை புரியவில்லை.பலவித கருத்துக்குள் பரப்பபடுகிறது. அங்கே இருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஈழ நிலவரம் குறித்த நடுநிலை, உண்மையான செய்திகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பிடவேண்டும்.
நிச்சயமாக ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும், அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.
வீ எம்
1 கருத்துக்கள்:
பதிவிற்கு முதலில் நன்றிகள்..
பதிவை படித்துவிட்டு மறுபடி எழுதுகின்றேன்.
Post a Comment