அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி
சிங்கள இனவெறி ராசபக்சேவின் ரானுவ போர் விமானங்கள் வீசும் குண்டு மழையில் என் தொப்புள் கொடி உறவு நனைகிறது, என் சகோதர சகோதரிகள் மீது குண்டு மழை விழுகிறது., அதனோடு ஒப்பிடும் போது இந்த மழையில் நனைவது எங்களுக்கு துச்சம் என்று இன உனர்வோடு, மனிதாபிமானத்தோடு , இன்று பேரிடியுடன் பலத்த மழையிலும், கனுக்கால் வரை தண்ணீர் வெள்ளமெடுத்து ஓடிய போதும், சிறிதும் அஞ்சாது தமிழர் கூட்டம் கைக்கோர்த்து மனித சங்கிலியில் தன்னை இனைத்துக்கொண்டு உணர்வை, ஈழத்துக்காண ஆதரவை, சகோதரத்துவதுடன் வெளிபடுத்தியது பிரம்மிப்பே..
அத்துனை கூட்டம் அங்கே, குடையில்லாமலும், ஜோவென கொட்டிய மழையில் ஆர்ப்பரித்து நின்றிருந்த கூட்டம் அது.இனம்காக்க, தமிழ உறவுகளுக்கு கைகொடுத்திட நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி, கைகள் இனைத்து நின்ற காட்சி.
அரசியல் தொன்டர்கள் என்று மட்டுமில்லாம், திரையுலகம், அரசு ஊழியர்கள், வனிகர்கள், பொது மக்கள்,இளைஞர்கள், கூறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில், பள்ளி மாணவ, மாணவிகள் கை கோர்த்து, ஈழத்து சகோதர சகோதரிகளுக்காக, வானம் அழுத கண்ணீரில் தம்மையும் நனைத்து, தாங்கள் அழுத கண்ணீரில் சென்னையை நனைத்து நின்ற காட்சி தமிழனின் உணர்வுக்கு அத்தாட்சி.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஆர்ப்பரித்து வந்த இன உணர்வு கூட்டம்.. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம் சொன்ன சேதி - ஈழத்து தமிழனே, இதோ 17 ஆண்டு மவுனம் கலைத்து புறப்பட்டுவிட்டோம் என்று சொல்லியது.
மதியம் வரை அடங்கி இருந்துவிட்டு, 2 மனிக்கு மேல் கொட்டித்தீர்த்த மழைக்கு நன்றி- அடாது மழை பெய்தாலும் , விடாது நிற்ப்போம் எம் தமிழினம் காக்க என்று கைக்கோர்த்து நின்றான் தமிழன், அந்த உணர்வை வெளிக்கொண்டுவரவே மழை பெய்ததாக இருந்ததது. மழைக்கு நன்றி. சங்கிலியோடு சேர்ந்து அழுது தீர்த்த வானமே, நன்றி
பலவாறு பேசி, உட்புகுந்து, திசை திருப்பிட நினைத்த கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடு என்று ஒன்றினைந்து நின்ற தமிழர் கூட்டமே, நன்றி நன்றி.
தமிழர் கூட்டமே நன்றி , அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி
5 கருத்துக்கள்:
நீங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை வீ எம்.. ! பல மைல் தள்ளி இருக்கும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் வருகிறது.
ungal uthviku nantrigal
nesan
நன்றீ மது. வெளியில் இருந்தாலும் உங்களுக்கு உணர்வு இருக்கிறுது. ஆனால் இங்கே இருக்கும் சிலருக்கு .. என்னத்த சொல்றது விடுங்க..
நல்ல தலைப்பிட்டு உணர்வுடன் எழு்தியிருக்கிறீர்கள்.
சிவனேசன், சிக்கி முக்கி - வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.
மழையில் மக்கள் நின்ற காட்சியை பார்த்ததாலும், 40 நிமிடம் யாரென்றே தெரியாத ஒரு தமிழனுடன் கை கோர்த்து நின்றதாலும் வந்த உணர்வுங்க...
Post a Comment