சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

இன்று நான் பார்க்க நேர்ந்த இந்த இரண்டுமே சில்லறைத்தனமான விஷயங்கள். சற்று வித்தியாசமாக எனக்கு பட்டதால் , நம் பதிவர்களுடன் இதை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவு. படித்துவிட்டு அட போயா சில்லறை பையா என்று சொல்லிவிடாதீர்கள்.. :)

வழக்கமாக என் பைக்கில் அலுவலகம் வரும் நான் இன்று மழை காரணமாக பேருந்தில் வர தீர்மானித்தேன்.. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை.. அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தது போக , ஒரு 10 , 12 பேர் நின்று கொண்டிருந்த்தார்கள். நான் நடத்துனருக்கு அருகில் நின்றிருந்தேன். ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர் 10 ரூ கொடுத்து கின்டிக்கு பயனச்சீட்டு வாங்கினார். பயனச்சீட்டின் விலை 4.50 ரூ. 4.50 போக மீதமாக 5.50 கொடுக்கவேண்டிய நடத்துனர் மீதமாக 5 ரூ மட்டும் கொடுத்துவிட்டு, 50 காசு இருந்தால் கொடுத்துவிட்டு 1 ரூ வாங்கிக்கொள்ள சொன்னார்.. சென்னையில் இப்படியான காட்சிகள் பிரபலம்..

அந்த பயனியிடம் 50 காசு சில்லறை இல்லை.. சென்னையில் பேருந்து பயனம் செய்த அனைவருக்கும் அடுத்து என்னவிதமான உரையாடல் அங்கே நடந்திருக்கும் என்று நிச்சயம் தெரியும். பயனி நடத்துனரை திட்ட, நடத்துனர் பயனியின் மீது எரிந்து விழ, ஒரு கட்டத்தில் இருவரும் அரசாங்கத்தின் மீது கரித்துக்கொட்ட... அதே தான் இங்கும் நடந்தது..

கடைசி வரை விடாப்படியாக இருந்து அந்த பயனி 50 காசு வாங்க்கிகொண்டு தான் நடத்துனரின் இடத்தை விட்டு விலகி சென்றார்.

உண்மை என்னவென்றால், நடத்துனரின் பையில் 50 காசு இருந்துள்ளது.. அத்துனை காசுகளின் இடையே அதனை தேடியெடுக்க நடத்துனருக்கு சோம்பேறித்தனமோ அல்லது அவரின் அலட்சியமோ.. எதோ ஒன்று அந்த 50 காசை தந்துவிடாமல் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தது..

அடுத்து இரண்டாவது நிகழ்வு.

அதே நாள் மாலையில், அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையில் நன்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன்.


அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் (பெயர் தெரியாததால், தலைவர் என்று வைத்துக்கொள்வோம்) கடைக்காரரிடம் , அண்ணே ஒரு பூமர் ப்புள்கம் கொடுங்க என்றார்..

உங்களுக்கு தெரிந்திருக்கும், 1 பூமரின் விலை 1 ரூ. அந்த கடைக்காரர் பூமர் எடுத்து நீட்டிய போது , நம் தலைவர் கொடுத்த நோட்டை பார்த்து நாங்களே கொஞசம் ஆடிப்போய்விட்டோம்... 1 ரூபாய் பூமருக்கு அவர் கொடுத்தது ஒரு 100 ரூ நோட்டு.. 1 ரூபாய்க்கு 100 ரூ நீட்டுவதற்கெல்லாம் ஒரு தில் வேனும்பா..

நாங்களே ஆடிப்போய்விட்டோம் என்றால், அந்த கடைக்காரரை நினைத்துப்பாருங்கள். 100 ரூபாயை பார்த்த மாத்திரத்தில், வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்து பூமரை மீண்டும் டப்பாக்குள் அடைத்துவிட்டார்.. பூமர் கை மாறிவிடக்கூடாது என்ற அவரின் அவசரம் தெரிந்தது...

சில்லறை கொடுங்க - இது கடைகாரர்..

சற்று நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருந்த நம் தலைவர், சரிப்பா ஒரு பூமர், ஒரு ரூபா அஜெந்தா பாக்கு ஒன்னு கொடு என்று மீண்டும் அதே 100 ரூபாயை நீட்டினார்..

கடைக்காரர் கடுப்பாகிவிட்டார் போல, சிறிது நேரத்துக்கு நம் தலைவரை கண்டுக்கொள்ளவே இல்லை..

சில நிமிடங்கள் நின்று பார்த்த நம் தலைவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென்று பாக்கெட்டில் கை விட்டு 2 ரூ நாணயம் ஒன்று எடுத்துக்கொடுத்துவிட்டு 1 பூமர், 1 அஜந்தா பாக்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினார்...

சட்டென்று எனக்கு அந்த நடத்துனரின் ஞாபகம் வந்தது... நம்ம தலைவருக்கும் , அந்த நடத்துனருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே பட்டது..

நம் தலைவரின் செய்கையில் எங்களுக்கு ஒன்று புரியல.. 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டால் கிடைக்காது என்று 1 பூமர் கேட்டாரா அல்லது பூமர் சாப்பிட ஆசையில் கேட்டாரா?

சில்லறைக்காகத்தான் என்றால், ஏன் இருந்த 2 ரூபாயையும் கொடுத்து தேவையில்லாமல பூமரும் , பாக்கும் வாங்க வேண்டும்..

எது எப்படியோ.. ஒரே நாளில் நான் பார்த்த இந்த சாதாரன நிகழ்வுகள், சற்று வித்தியாசமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாகவும் பட்டது.. அதை பகிர்ந்துக்கொள்ளவே இந்த சில்லறைத்தனமான பதிவு :)

இப்படியான சில்லறை அனுபவங்கள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா? இந்த பதிவை படித்ததை தவிர்த்து :)

1 கருத்துக்கள்:

kayal said...

அடுத்தவங்களைக் கேட்பானேன் ...இப்போ உங்களுக்கே நூறு ரூபாய்க்கு சில்லறை வேணும்னா நீங்களே கூட சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா அவசரத்துக்கு (வேற எப்படித்தான் சமாளிக்கறதாம் ) இப்படித்தான் ஏதாவது பெட்டிக்கடைல நிக்க வேண்டியது வரும் , கண்டக்டர் சில்லறை தர லேட் பண்ணதுக்கு ரொம்பப் பெரிய காரணம் தேவை இல்லை . அது இங்கே சகஜமாக்கப்பட்ட ஒரு விஷயமாகி எத்தனையோ காலமாச்சு, பயணிகளின் கடமைகளில் ஒன்று மறவாமல் சில்லறை வைத்துக் கொண்டு பஸ் ஏறுவது .(வடிவேலுவோட ஏறிவாயா காமெடி இந்த இடத்துல தேவையே இல்லாம ஞாபகம் வர்றதை தவிர்க்க முடியலை வீ.எம் )