அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

தமிழக முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், இன்னும் 2 வாரத்தில் இலங்கை இனப்படுகொலையை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைஞர் தந்தி அடிக்கச்சொன்னவுடன், அரசியல் காழ்ப்புடன் வாய்க்கு வந்தபடி கின்டல் செய்தவர்கள், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?? நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..

ஏன் பதவி விலகுவோம் என்று சொல்லாமல், தந்தி அடிக்க சொல்கிறார் என்று ஏளனமாக கேள்வி கேட்ட ஜெ, சொரனையற்ற வைகோ,. ஓ காமெடியன் ஞாநி முதல் சில வலைப்பதிவர்கள் வரை அனைவர் முகத்தில் கரி பூசிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது..

கலைஞருக்கு தெரியும், எப்போது எப்படிப்பட்ட, என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று..கொஞ்சம் கூட அவகாசம் தராமல், வெறும் அரசியல் காழ்ப்புடன் அவரை தாக்கிய அனைவரும் இனியாவது மூடிக்கொள்ளுங்கள்..

தமிழக முதல்வருக்கும், இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் நன்றி.

5 கருத்துக்கள்:

tommoy said...

சபாஷ் கலைஞரே , உங்கள் தலைமையில் விடிவுகாலம் பிறக்கட்டும் தமிழர்களுக்கு

ஜோ/Joe said...

// நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..//

சரியாக சொன்னீர்கள்.

விட்டுத்தள்ளுங்கள் இந்த வெற்றுக்கூச்சல் பேர்வழிகளை.

மதிபாலா said...

// நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..//


சரியாகச்சொன்னீர்கள் போங்கள்...அதுதான் இவர்களுக்கு முக்கியம்....

அதைத்தான் கலைஞரும் அனைத்துக்கட்சிக்கூட்டத்திலே சொன்னார்....அதையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொண்டால் மக்களுக்கு உண்மை புரியும்...

////

கூட்டத்தில் கலந்து கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி ராஜேந்தர், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராதார்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர்கள் தமிழர்களே இல்லை என்றார். ஈழ மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றார்.

உடனே இடைமறித்த முதலமைச்சர் கலைஞர், அப்படிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மிக அரிய விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.

அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிர்ப்பாக இங்கு வராமல் இருக்கிறார்கள் என்று கருதவேண்டாம். எனக்கு எதிராகத்தான் வராமல் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் வெளியில் இருந்தாலும் நம்மைப் போலவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எதிராக இருப்பதைப் போலக்காட்டுவது சிங்களவர்களுக்குத்தான் நன்மை பயக்கும் என்று விளக்கம் அளித்தபோது அவருடைய பெருந்தன்மையையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறையையும் அறிய முடிந்தது.

///

இது சுப.வீரபாண்டியன் அவர்கள் தம் அறிக்கையில் சொன்னது..

இனியாவது அரசியல் காழ்ப்புணர்வை தூக்கி வீசிவிட்டு வைகோவும் , அம்மாவும் ஒன்றுபட்டு கலைஞரின் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதே நம் அவா!!

தாமிரபரணி said...

அன்று ஆங்கிலேயன் ஆண்டான் இன்று ஆரியன் ஆண்டுகொண்டிருக்கிறான், எங்கள் இனமக்கள் படுகொலை செய்யபடுகிறார்கள் அதை தடுத்து நிறுத்துங்கள் என்று பலதடவை சொல்லியும் இந்த நடுவன அரசு செவிசாய்க்கவில்லை, இந்தியாவில் உள்ள கிருத்தவர்களை வதைத்தால் வாட்டிகனில்யிருந்து எதிர்ப்பு வருகிறது அரசு அடிபணிகிறது
ஆனால் நம் தமிழக மக்கள் அங்கே செத்து மடிகிறார்கள் அதைபற்றி இந்த நடுவன வடக்கத்திய அரசுக்கு கவலையில்லை
நாளை ஒருநாள் நம் தமிழ்நாட்டுக்குள் வந்து நம் தமிழக மக்களை கொன்றால் கூட இந்த அரசு கவலைபடாது, அது சரி பசுமாட கொன்னா அத எதிர்க்க பல பார்பன இயக்கம் இருக்கு, ஆனா தமிழன் செத்தா அத கேட்க ஒருநாதி இல்ல, பின்ன எதுக்காக இந்தியால அடிமையா நாம வாழனும், இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் இவன நம்பியிந்தா நம் இனமக்களையும் நம் மொழியையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இயலாது
நம் தமிழ் இனம் படுகொலை செய்யபடுவதை அறிந்தவுடன் பதறிஅடித்து அதை களைய முற்பட்டால் அதை தமிழர்களின் மேல் வைத்துள்ள அன்பின் பாசமாக எடுத்துகொள்ளலாம், தமிழர்கள் எடுத்துரைத்ததுக்கு அப்புறம் நடவடிக்கை எடுத்தாலும் பாராட்டுகரியதே, ஆனால் தமிழர்களின் அவலநிலையை பலதடவை எடுத்து சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது இந்த தே......யா(கெட்டவார்த்தை sensor cut) நடுவன அரசு, அடிமையாக இருந்தது போதும் சிந்தியுங்கள் தோழர்களே சிந்தியுங்கள்
மேற்கூறிய அநியாய அக்கிரமங்களைக் கண்டிக்க, அடக்கி ஒழிக்க
தமிழ்நாடு தனித்தமிழ்நாடு ஒன்று தான் தீர்வு

Unknown said...

நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..//

சரியாக சொன்னீர்கள்.


vazhi mozhigiren.. palarukku ingey kalaingar enraal udharukiRathu