ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???

இலங்கை தமிழர் பிரச்சனையில் , அ தி மு க பொது செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த பழ நெடுமாறன் , ஜெயலலிதாவை ராஜபக்ஷேவின் ஊதுகுழல் என்று சாடியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும், அங்கே அமைதி ஏற்பட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு முடிவுகள் எடுக்கும் போது, தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் லாபத்துக்காகவும் , முதல்வரை மட்டும் ஜெயா தாக்கி வருவது, அவர் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குறியது.

இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, ஆயுதம் தந்தும், உளவுத்தகவல் தந்தும் உதவிடும் இந்தியாவிற்கு , இந்த (போர் நிறுத்தம் ) பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று ஜெயா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரின் அறியாமையை காட்டுகிறது.

ஈழத்துக்காண தீர்வை புலிகளால் தரமுடியும், அவர்களின் பலத்தை ஜெயா அறியவேண்டும். உலக நாடுகள் பலவும், சிங்கள இனப்படுகொலையை கண்டிக்கும் வேளையில், ஜெயா மட்டும் திசை திருப்பும் நோக்கில் பேசுவதை பார்த்தால் அவர் ராஜபக்சேவின் ஊதுகுழல் என தோண்றுகிறது.

இரு முறை முதல்வராக இருந்தவருக்கு , தமிழர் பிரச்சனை குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது, தமிழர்களை கொல்வோரின் கைப்பாவையாக இருப்பது விசித்திரமாக உள்ளது. அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் முதல்வர் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு துனை நிற்போம் என்று ராமதாஸ், விஜய டி ராஜேந்தர், சரத்குமார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளளும் கூறி வரும் நிலையில், மூன்றே பேர் மட்டும் அரசியல் காழ்ப்பு காரணமாக தனித்து நிற்கின்றனர்..

ஜெயா, வைக்கோ மற்றும் விஜயகாந்த் - இவர்கள் மட்டும் தங்களின் அர்சியல் லாபத்துக்காக தவறான முடிவுகள் எடுப்பதால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் ..
ww

3 கருத்துக்கள்:

Anonymous said...

ஒரு நடிகரின் காதலியாய் இருந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு இடம் தரலாமா?
அனைவரும் ஒதுக்கிவிட்டால் தானாகவே அடங்கி ஓய்ந்து விடும் இந்த ஊளை.

tommoy said...

ஜயலலிதா ஒரு காலத்தில் சந்திரிக்காவின் ஊதுகுழல்.. வைகோ சொன்னது..
இப்பொது இவருக்கு.. அவர் மாறவில்லை.. மாறவும் மாட்டார்..

வீ. எம் said...

வருகைக்கு நன்றி அனானி , முரளி....

//ஒரு நடிகரின் காதலியாய் இருந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு இடம் தரலாமா//
இதை 1991 ல எல்லோரும் யோசித்து இருக்கனும்..


//சந்திரிக்காவின் ஊதுகுழல்.. வைகோ சொன்னது.. //

அவர் இப்பொ அம்மாவின் ஊதுகுழலாக தானே இருக்கின்றார்.