சின்ன அய்யா - சிறு யோசனை

மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்களே, வணக்கம்.

புகையிலைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் தங்களின் அவா பாராட்டப்படவேண்டியதே. பல காலமாகவே இது பற்றி பேசி வரும் நீங்கள் , இப்போது எடுத்திருக்கும் இந்த பொது இடங்களில் புகைக்க தடை என்ற முடிவு நல்ல முடிவு.

பான் பராக் போன்ற வஸ்த்துக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?? எனக்கு தெரிந்து 3 வருடங்களுக்கு முன் பான்பராக் விற்பனை தடை செய்யப்பட்ட்து.. முதல் 2 மாதங்கள் விற்பனை இல்லாமால் இருந்தது , விற்றவர்கள் பிடிபட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வாசித்தது.. பின்பு , சில மாதங்களுக்கு வெளியில் தொங்கவிடாமல், உள்ளே வைத்து தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, பின்னர் தைரியம் வந்து எப்போதும் போல வெளியே சரம் சரமாக தொங்கவிடப்பட்டு வியாபாரம் சக்கை போடு போடுகிறது.. ஆனால் தமிழகத்தில் பான்பராக் விற்பனக்கு தடை என்று அரசானை சொல்லும்..

இந்த தடையினால் என்ன நடந்தது தெரியுமா??
பான்பராக் என்ற ஒரே ஐயிட்டம் இருந்தது போய், லஷ்மி சூப்பார், Hஆன்ஸ், அது இது என்று புது புது வகைகள் வந்தது தான் மிச்சம்.

சரி, சிகரெட்டுக்கு வருவோம்..
உள்ளபடியே மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரை புரிகிறது.. உங்களின் இலக்கு புகைப்பிடிக்காதவர் உள்ள நாடுஎன்பது தானே.. புகையிலையால் புற்று வந்து மனிதர்கள் இறக்க கூடாது என்ற நல்ல எண்ணம் என்பது தெரிகிறது..

விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் புகையிலைப்பழக்கதை ஒழிக்கமுடியுமா என்றால், மிக மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே காது கொடுத்து கேட்டு புகைப்பதை தவிர்ப்பார்கள். அகவே அது முழு பலன் தராது.

பொது இடங்களில் புகைக்க தடை என்பதன் மூலம் முழு பலன் வருமா என்றால் சந்தேகமே.புகைப்பிடிப்பதை நிறுத்திடவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இந்த சட்டத்தை பயன்படுத்தி புகைப்பதை தவிர்ப்பவர். மற்றவரெல்லாம், திருட்டுத்தனமாக இன்டு இடுக்கில் புகுந்துக்கொண்டு புகைக்கத்தான் போகிறார்கள்..
ஓவ்வொரு சந்துக்கும் ஆட்களை நியமித்து உங்களால் கண்கானிக்க முடியுமா அமைச்சரே?

வீட்டுக்கு பயந்து திருட்டு தம் அடித்தவர்கள் இப்போது போலிஸுக்கும் , சட்டத்துக்கும் பயந்து திருட்டு தம் அடிப்பார்கள்.. அவ்வளவே..இன்னும் சிலர், பிடித்தால் பார்க்கலாம் என்று பொது இடங்களில் புகைப்பதை பார்க்க முடிகிறது.இந்த சட்டமும், பான் பராக் தடை சட்டம் போல் 6 மாதத்தில் நீர்த்து போகாது என்ற உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அன்புமனி சார்.
உங்களின் பசுமை தாயகம், பா ம க சார்ப்பாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்று நடத்திப்பாருங்களே... மேடையின் பின்னால், மேடையில் கீழே இருந்தெல்லாம் புகை வருகிறதா இல்லயா என்று..

இவ்வளவு உயரிய நோக்கில் நீங்கள் கொண்டுவந்த இந்த சட்டம், இத்துனை நடைமுறை சிக்கலோடு இருப்பது சற்று வேதனையே.. ஏன் தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த வேலை?? .

இதைவிட, புகையிலை பொருட்கள் தயாரிப்பையே நீங்கள் தடை செய்யலாமே..இப்போதிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் 15 - 20 % குறிக்கோள் நிறைவேறும்.. ஆனால் நீங்கள் துனிந்து புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடை செய்தால், 90% குறிக்கோள் நிறைவேறும்..

உங்களின் நோக்கமும், இந்த தடையும் போற்றுதலுக்குரியது.. அதை குறை சொல்லவில்லை.. ஆனால் செய்வன திருந்தச்செய் என்றே சொல்கிறோம்..
அதை செய்வதில் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும், கட்சிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா??

உண்மையிலேயா உங்களுக்கு மக்களின் உடல்நலத்தில் அவ்வளவு அக்கரை இருக்கும் பட்சத்தில், இதற்கு முயற்சி செய்யுங்கள் சின்ன அய்யா...!

6 கருத்துக்கள்:

Anonymous said...

புகையிலைப் பொருட்களின் உற்பத்தியை தடை செய்யவேண்டும் என்ற தங்கள் கருத்து சரியானதே.

உங்களின் கருத்துக்கான விடையை மருத்துவர் அன்புமணி அவர்கள் பலமுறை தெரிவித்து விட்டார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் உடனடியாக ஒரே நாளில் புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடைசெய்ய முடியாது.

ஏனெனில் அத்தொழில் காலங்காலமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும். அதை படிப்படியாகத்தான் செய்யமுடியும்.

தற்போது அரசு கொண்டுவந்துள்ள சட்டம் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான முதல் படியே!

இலக்கை அடையும் முயற்சியில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

வீ. எம் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கரிகாலன் அவர்களே, அங்கே தான் முரண்பாடு இருக்கிறது.

அமைச்சரின் எண்ணம் அனைவரும் புகைப்பதை விடவேண்டும் என்பதே. எப்படிப்பார்த்தாலும் ஒரு சாராருக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.. அப்படியெனில், இந்த சட்டத்தின் மூலம், 90% பேர் புகைப்பதை நிறுத்தி, அதன் மூலம் புகையிலை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிப்படைந்தால்???
அல்லது இந்த சட்டம் நிச்சயம் 10% பேரை மட்டுமே கட்டுப்படுத்தி, அதன் மூலம் 10% சிகரெட் விற்பனை வீழும் என்று திட்டமிட்டே தான் அமைச்சர் இந்த தடையை ஏற்படுத்தினாரா??

சரி, .. ஒரு 6 மாதம் கழித்து புகையிலை விற்பனைக்கு தடை எடுத்துவருவார்களா? இந்த 6 மாதத்திற்குள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைத்துவிடுமா?
அப்படி நடந்தால் மிக சந்தோஷம்.. அந்த அடிப்படையில் , இப்போது அறிவிப்பை வெளியிட்டுவிட்டு , படிப்படியாக உற்பத்தியை குறைக்கலாமே.

ஒரு அரசாங்கத்தால் நிச்சயம் 6 மாதத்திற்குள் புகையிலை தொழிலில் இருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய நிச்சயம் இயலும்.. அனைவரும் மனது வைத்தால்.. ஆனால் நம் நாட்டில் அப்படி நடந்ததாக அறியவில்லை. அது தான் அச்சமே..

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.. அமைச்சர் திரு அன்புமனி அவர்கள் புகையிலை உற்பத்திக்கு தடைவித்து விட்டு.. (படிப்படியாகவாவது) , உடனடியாக அவர்களின் (உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழைகளுக்கு) மாற்று வ்ழி செய்தால் மட்டுமே நன்மை நடக்கும்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல். இப்படி ஒரு முடிவு, அடுத்த 3 மாதத்தில் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும்..ஏற்கனவே, சிலர் பொது இடத்தில் பிடிக்கத்துவங்க்கிவிட்டதை பார்க்க முடிகிறது

பா ம க செயல்பாடுகள் மீது கடும் ஆட்சேபனை கருத்து மாறு பாடு இருந்தாலும் , அன்புமனி அவர்களின் இந்த முயற்சி நல்ல முயற்சி, அதனால் தான் அவருக்கு பாராட்டுதல்கள் தெரிவித்தேன்.. பார்க்கலாம் தொடர்ந்து பாராட்ட முடிகிறதா என்று

tommoy said...

நல்ல பதிவு.. நீங்கள் சொல்வதிலும் ஒர் அர்த்தம் உள்ளது.. ஈTC யை தடை செய்தால், அரசங்காத்திற்கும் வருவாய் இழப்பு.. கட்சிக்கும் தேர்தல் நிதி இழப்பு.. அதான் செய்ய்யமாட்டார்கள்

Unknown said...

அன்புமணி அவர்களை உங்களோடு இணைந்து நானுஇம் பாரட்டுகிறேன்.

இந்த மட்டில் ஒரு விழிப்புணர்வு கொண்டுவரக் கூட நீதி மன்றங்களில் அவர் மிகவும் கடுமையாக போராடியதாக அறிகிறோம். நாம் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இருக்கிறோம் என்பது இதில் தான் தெரிகிறது.

நவநீதன் said...

passive smoking - ஐ கட்டு படுத்தவே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
passive smoking - ஆல் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சாகிறார்கள் என்று இந்த சுட்டி சொல்கிறது.

உங்களின் பான் பரக் பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கது.

நவநீதன் said...

passive smoking - ஐ கட்டு படுத்தவே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
passive smoking - ஆல் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சாகிறார்கள் என்று இந்த சுட்டி சொல்கிறது.

உங்களின் பான் பரக் பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கது.