நம் நடுநிலை நாயகர் சோ தன் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவின் போது பல விஷயங்களை பற்றி திருவாய் மலர்ந்தார். குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல், ஈழ ஆதராவளர்கள் மீதான நடவடிக்கைகளில் கருணாநிதி , ஜெ செயல்படும் விதம் , உண்ணாவிரதம் பற்றிய தன் கருத்து என்று.
கடந்த ஆண்டில் அவர் அம்மாவின் புகழ் பாடியதை விட இந்த ஆண்டு அவர் அடித்த ஜால்ரா செவிப்பறையை கிழிக்கும் வகையில் இருந்தது. சோ ராமசாமி "நடுநிலை நக்கலாளன்" என்ற முறையில் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல..
அ தி மு க வை எதிர்த்து த மா க + ரஜினி + தி மு க விற்கு ஜால்ரா தட்டியதும் இதே சோ ராமசாமி தான் என்பது அனைவருக்கும் தெரியும்..
திருமங்கலம பற்றி பேசியவர், கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் என்றார்.. அதாவது 4 இருந்து 5 மணிக்குள் என்று ஒரு கதையளந்தார்.. அதாவது தி மு க கடைசி நேரத்தில் புகுந்து ஓட்டுக்களை குத்தியதா, அல்லது ஒரே மணி நேரத்தில் இத்துனை பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்ததா என்று விளக்காமல், கடைசி 1 மணி நேரத்தில் 30% என்றார்..
தேர்தல் ஆணையம் அனைத்து பூத்துகளிலும் கேமரா வைத்து தீவிரமாக கண்காணித்த போது தி மு க வினர் உள்ளே சென்று ஓட்டுக்குத்தியிருக்கமுடியாது. அப்படி நடந்திருந்தாலும் நிச்சயம் அது பத்திரிக்கைகளில் , குறிப்பாக ஜெ டிவியில் ப்ளாஷ் ஓடி இருக்கும். (இந்த பாயின்டை சோ ராமசாமி சொன்ன பிறகு தான் அம்மையாரும், ஜெயா டீவியும் பிடித்து தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது) கடைசி ஒரு மணி நேரத்தில் (4 - 5) இத்துனை வாக்குகள் என்று சோ ராமசாமி அள்ளி விட்டதே ஒரு கதை.
பத்திரிக்கை, டீவி செய்திகளில் வந்த தகவல் படி 4 மணி அளவில் வரிசையில் கூட்டத்தை பார்த்து டோக்கன் கொடுக்கப்பட்டு , பல பூத்துகளில் 7.15 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது தெரிகிறது. ஆக, 1 மனி நேரம் இல்லை.. சுமார் 3 மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவாகியுள்ளது.. 3 மணி நேரத்தில் 30% சாத்தியம் தான் என்பது ராமசாமிக்கு தெரியாதா? தெரியும் , ஆனாலும் ஏன் "சோ"ழியன் குடுமி ஆடியது?
பணம் கொடுக்கப்பட்டு வந்த வாக்குகள் என்பது உண்மை, இது முழுதுமாக தி மு க அரசின் சாதனைக்கு கிடைத்த ஓட்டு இல்லை என்பது உண்மை.. பணமும் தன் பங்காற்றியுள்ளது. இதற்காக அவர் அழகிரிக்கு சிறந்த மனிதர் பட்டமெல்லாம் தரட்டும்.. ஆனால் அழகிரிக்கு ஒட்டியபடியே அம்மா வருகிறாரே வரிசையில், அவருக்கு என்ன பட்டம் தருவார்? அதை பற்றிய மூச் விடவில்லையே இந்த அரசியல் க்ரிட்டிக்..?
தொகுதியில் இருந்து 1000 கொடுத்த அழகிரிக்கு அதிசய மனிதர் பட்டமென்றார்.. போயஸில் இருந்துக்கொண்டு மதுரைக்கு 700 கொடுத்த அம்மாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் ராமசாமி?
ஒரு குடும்பத்துக்கு 5,000 , ஒரு ஓட்டுக்கும் 1000 என்று செய்தி வந்த பத்திரிக்கைகளில் கூட தெளிவாக வந்த செய்தி : தி மு க, அ தி மு க என இரு கட்சிகளுமே காந்தி நோட்டை வாரி இறைத்தது என்று. என்ன தி மு க 1000 கொடுத்தால் அ தி மு க 700, 800 மட்டுமே கொடுத்தது.. அனைவருமே கொடுத்தனர் என்பது ராமசாமிக்கு தெளிவாக தெரிந்தும், ஒருவரை விட்டு விட்டார் என்றால்.. சோழியன் குடுமி சும்மாவா ஆடியது??
இந்த தேர்தல் பற்றி கேள்வி கேட்கவைத்து பதல் அளித்த ராமசாமி, இதே போல கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் , சென்னை மாநகராட்சி தேர்தல் பற்றியெல்லாம் அப்போதைய தன் துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் என்ன பேசினார் என்று டோண்டுவை தான் கேட்கவேண்டும்.
கருணாநிதி , ராமர் விசயத்தில் பல்டி என்றார்..அரசு ஊழியர் விஷயத்தில் ஜெ ரிவர்ஸ் கியர் பற்றி சொல்லும்போது அவருக்கு பல்டி என்ற வார்த்தை மறந்து போனது.. (அத்வானி போல் இவருக்கும் செலக்டீவ் அம்னீசியாவாக இருக்கலாம்.. ஜெயலலித்தாவிற்கு தான் தெரியும்). இங்கே அழகாக பல்டி என்று சொல்வது தவிர்த்து அது துரதிஷ்டவசமானது என்றார்.
பல்டி என சொல்ல ஏன் மனது வரவில்லை. அம்மாவிடம் மட்டும் இதயம் இனித்து, வாய் புளித்ததா?, இங்கேயும் ஏன் சோழியன் குடுமி ஆடியது?
உண்ணாவிரதம் பற்றியும் ராமசாமி கமென்ட் அடித்தார்.. காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு , மாலைவரை ஜீரனம் ஆகாது என்று.. அம்மையார் இருந்த கேரவன் உண்ணாவிரதம் பற்றி தன் 10 வது துக்குளக் ஆண்டு விழாவில் என்ன திருவாய் மலர்ந்தார் என்று படிக்கவேண்டும்.. ரஜினியும் உண்ணாவிரதம் இருந்தார்.. நிச்சயம் அவரின் உண்ணாவிரதத்தை இதே போல கமென்ட் அடித்திருக்க மாட்டார்.. அந்தளவு ஏமாளியா என்ன சோ ராமசாமி??
மொத்தத்தில் இந்த ஆண்டு துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழா என்பதை விட அம்மாவின் பிறந்த நாள் விழா துக்குளக் ஆண்டு விழாவில் நடந்தது என்று சொல்லலாம்..
அப்போது விடை தெரியவில்லை இப்போது தான் தெரிகிறது.. ஏன் என்று.. எல்லாம் "எங்கே பிராமணன்" தான் காரணம்..
சோழியன் குடுமி மட்டும் தான் சும்மா ஆடுமா என்ன?? எங்க சோ ராமசாமியின் இல்லாத குடுமி கூட நன்றாவே ஆடும், ஒரு தொலைக்காட்சி ஸ்லாட் கிடைக்குமென்றால்.. நன்றாக ஆடியுள்ளது.. சபாஷ் ராமசாமி. இன்னும் நன்றாக ஆட்டும் குடுமியை.. அடுத்த 2 ஸ்லாட் வேனுமே..
விசுவின் குடுமிக்கு அடுத்து கன ஜோராக ஆடியது ராமசாமியின் குடுமி தான்..
இதே நிலையில் சன் டீவி , தி மு க வினர் என்றிருந்தால், சில பதிவு போட்டிருப்பர், சொம்பாடித்து ஸ்லாட் வாங்கவா என்று.. ஆனால் இங்கே அம்மாவும், சோவும், ஜெயா டீவியும் ஆச்சே, அதான் தன் கேள்வி பதிலில் கூட ஒரு பதிவர் சொன்னார்.. எது எப்படியிருந்தா என்ன நமக்கு ஒரு நல்ல சீரியல் கிடைத்ததே என்று..
எங்கே பிராமணன்.. இதுக்கு மேலயுமா எங்கேனு தேடனும்??