சோ - ரஜினி / வைகோ - ஜெயலலிதா

யாழ்ப்பானம் போனாலும் ராஜபக்ஷேக்கு ஆதரவாக பேசுவேன் - சோ ராமசாமி

மோடியின் மேடைப்பேச்சு தொகுப்பை, "கல்வியே கற்பகதரு" என்ற தலைப்பில் புத்தகமாக அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நேற்று நடைப்பெற்றது. அதில் நம் பழம் பெரும் நடிகர் , பத்திரிக்கையாளர் சோ ராமசாமி கலந்துகொண்டு முத்தாய்ப்பாய் உரையாற்றினார்.

புத்தக விழாவில் ராமசாமி இலங்கைப்போர் குறித்தும் பேசினார்.. (சம்பந்தம் இல்லாமல் ஏன் பேசினார் என்று கேட்டுவிட கூடாது, அப்படி கேட்கப்படவேண்டிய ஒரே ஆள் கருணாநிதி மட்டுமே என்பது எழுதப்படாத விதி) அதே போல பழம்பெறும் நடிகரும் பத்திரிக்கையாளுருமான சோ ராமசாமி ரஜினி பற்றியும் சிலேடையாக பேசி புல்லரிக்கவைத்தார்..

ராமசாமியின் பேச்சு - இங்கே ஒருவர் பேசும் போது மோடியை சூப்பர்ஸ்டார் என்றார்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. இது தான் பெட்டராக இருக்கும்..

அட ராமசாமி , என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதோ ஒரு விழாவுல ரஜினி ஜெ க்கு எதிரா பேசிட்டாரு, அப்புறம் ஒரு தேர்தல்ல அவங்களுக்கு எதிரா அறிக்கை கொடுத்து மக்களை ஜெ க்கு எதிரா வாக்களிக்க சொன்னாரு.. எல்லாம் சரிதான்.. ஆனா அதெல்லாம் த்ப்புனு உணர்ந்து, அம்மாக்கு பொக்கே கொடுத்தார், தைரியலக்ஷ்மி பட்டமெல்லாம் கொடுத்து அம்மாகிட்ட சமாதானமா போயிட்டாரு. ஆனா நீங்க என்ன இன்னும் அவர் அம்மாவை எதிர்த்தார் என்பதை மனசுல வெச்சுகிட்டு ரஜினி மேல இவ்ளோ வஞ்சத்தை வெச்சுகிட்டு இருக்கீங்க?? அவர ஒரு வழி பன்னாம விடமாட்டீங்க போல, பாவம் அவர், விட்டுவிடுங்க ராமசாமி சார்.

அவரே தனக்கு அரசியல் ஒத்துவராது, சரிப்படாதுனு ஒதுங்கியிருக்காரு.. பாவம் , அவரை அவர் வேலையை செய்ய விடுங்க. அவருக்கே விருப்பமில்லாதப்போ நீங்க ரஜினி கடவுள் பக்தி உள்ளவருன்ற ஒரே காரணத்துக்காக அவர் முதல்வரா வரனும், அரசியல்ல வரனும்னு இப்படி பெனாத்திகிட்டு இருக்கீங்களே ராமசாமி. ஒரு வேளை ஜெ டீவி ஸ்டாட்டுக்கு போட்ட பிட்டு மாதிரி ரஜினி தலைமை ரசிகர்மன்ற தலைவர் பதவிக்கு பிட்டு போடுறீங்களா ராமசாமி??

என்னமோ போங்க.. பலருக்கு ரஜினி குழப்பவாதியா இருக்காருனு தோணுது, அவருக்கே தான் என்ன செய்யமுடியும்னு தெரியல. ஆனா உங்க முட்டை ஞான கண்ணுக்கு மட்டும் அவரை வித்தியாசமா தெரியுது.. உம்ம கண்ணே கண்ணு ராமசாமி.

அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்.. (ஞாபகமிருக்கா?? உமக்கு இருக்காது... ஜெ, ரஜினி , அத்வானி சொல்றது எல்லாம் ஞாபகம் இருக்காது, இதுவே கருணாநிதி, ராமதாஸ், வைகோ சொல்றதுனா மட்டும் கன்னாபின்னானு ஞாபகம் இருக்கும், துக்குளக்ல அட்டைப்படம் வரும்) உங்க செல்லப்பிள்ளை ராஜபக்ஷேக்கு ரஜினி இப்படி சவால் விட்டுட்டாரே, இன்னுமா ரஜினி அரசியல்ல வந்து முதல்வராகனும்னு ஆசைப்படுறீங்க ராமசாமி? உங்க செல்லப்பிள்ளைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா??

அப்புறம் இந்த மேடையிலும் ஜெ டீவி ஸ்லாட்டுக்கு உங்க நன்றிக்கடனை செலுத்திட்டீங்க போல.. சந்தோஷம் ராமசாமி,.

மோடி பிஜேபி முதல்வருங்க.... பி ஜே பி நிலையை பத்தியும் விமர்சனம் பன்னீட்டீங்க போல.. மேடைல பி ஜே பி ஆளுங்களை வெச்சுக்கிட்டு, பார்வையாளர்கள் வரிசைல செம எதிர்ப்பாமே.. தமிழ்ல பேச சொன்னா , முடியாதுனு சொல்லிட்டு ஆங்கிலத்துல தான் பேசுனீங்கலாமே ராமசாமி.. பார்த்துக்கோங்க நம்மாளுங்க பல பேருக்கு ஆங்கிலம் தெரியல.. சும்மா ராமசாமி, மோடி, பி ஜே பினு காரணத்துக்காக உங்க கூட்டங்களுக்கு வந்துடுறாங்க.. ராமசாமி பேசினா கைத்தட்டனும் புரியுதோ புரியலயோ கை தட்டிட்டு போறாங்க.. இருந்தாலும் பத்த வெச்சுட்டீயே பரட்டை..(பரட்டையா?? !! ) .. சரி இந்த வாரம் பிஜேபி நிலைப்பற்றி நக்கல் கார்ட்டூன் துக்குளக்ல வருமா?? இல்லை கார்ட்டூன் எல்லாம் தி மு க , காங்கிரஸ், பா ம க , கம்யூனிஸ்டுக்கு மட்டும்தானா ராமசாமி?

தினமலத்துல , தினத்தந்தில கூட ஏதோ தமிழில் பேச சொல்லி மட்டும் கூட்டத்தில் சலசலப்புனு மாதிரி செய்தி போட்டு முடிச்சுட்டாங்க..

மற்றொரு செய்தி நம்ம வைகோ அண்ணாச்சி பற்றி -
விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை கீழே போட சொல்லுவதா , ப சிதம்பரத்துக்கு வைகோ கடும் கண்டனம் என்ற தலைப்பில் நம்ம வைகோ வழக்கம்போல, நரம்பு புடைக்க , உணர்சிக்கொந்தளிக்க ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்..

அண்ணே, சிதம்பரமாவது பரவாயில்லை, புலிகளை ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சொன்னார்.. நம்ம அம்மா , அட அதாங்க உங்க அன்பு சகோதரி புலிகளை நசுக்கி ஒழிக்க வேண்டும்னு சொல்லியிருக்காங்க. ஒரு வேளை, புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு போயிட்டா. போர் நின்னுடும், புலிகளை நசுக்கி அழிக்கும் வாய்ப்பு போயிடும், உங்க அன்பு சகோதரி ஆசையில் மன்னு விழுந்துடும்ன்ற கோவத்துல, சிதம்பரத்த காய்ச்சி எடுத்துட்டீங்களா??..

அப்படின்னா உங்க அறிக்கை சரிங்க.. விட்டுடலாம்.. இல்லைனு சொல்ல வரீங்களா?? அப்போ ஒன்னு பன்னுங்க.. உங்க அறிக்கைல எங்கெல்லாம் சிதம்பரம்னு வருதோ அங்கே எல்லாஎம் ஜெயலலிதா நு மாத்தி (சரி, பெயர் வேண்டாம் என் அன்புச்சகோதரினு போட்டுக்கோங்க) நாளைக்கு எல்லா பத்திரிக்கைக்கும் உங்கள் அறிக்கையாக அனுப்புங்களேன், மிகச்சரியா பொருந்தும்.. முடியுமா??

முடியாது என்றால்.. ஈழத்துக்கான உங்கள் வெத்துவேட்டு முழக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களை குறை சொல்லி நரம்பு புடைக்க கத்த வேண்டாம்..

9 கருத்துக்கள்:

muthu said...

//எங்கெல்லாம் சிதம்பரம்னு வருதோ அங்கே எல்லாஎம் ஜெயலலிதா நு மாத்தி நாளைக்கு எல்லா பத்திரிக்கைக்கும் உங்கள் அறிக்கையாக அனுப்புங்களேன், மிகச்சரியா பொருந்தும்.. முடியுமா?? //

நச், நம்ம புரச்சி புயல் பன்னுவாரா? அட நீங்க வேற கிடைக்கப்போற 4 எம் பி சீட்டும் இல்லாம தலைல மன்னை வாரி போட்டுக்க வைகோ என்ன லூசா?? காலத்தை ஒட்டனுமேனு இப்படி அறிக்கை விட்டுகிட்டு இருக்காரு.. நீங்க வேற

வாக்காளன் said...

சோவின் பேனா குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் வரையும் கேலி சித்திரமாக.. ! அது ஆசிர்வதிக்கப்பட்ட பேனா.. ! :)

வீ. எம் said...

முத்து , வாக்காளன் - தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் மிக்க நன்றி

ராஜேஷ், திருச்சி said...

சோ எது செய்தாலும் குற்றம் கண்டுப்பிடிக்கவே ஒரு கூட்டம் அலையுது தமிழ்மனத்துல. அவரின் ஆற்றலும், அறிவும் கணக்கிட்டால், நாமெல்லாம் கால் காசு பெறமாட்டோம் என்பதை நினைவில் கொள்க.. !

வேல் தர்மா said...

முட்டைக் கண்ணோடு ஓரெழுத்து நாமன்
தமிழர் நெற்றியில் போடுவான் நாமம் - அந்தக்
கோமாளி கொடுங் கேப்மாரி
மெய்மாதிரிப் பொய்மாரி
பொழிவான் - ஒருநாள்
அழிவான்

கோவி.கண்ணன் said...

//அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்..//

சூப்பரு.

சோ ஒரு கோமாளி !

muthu said...

சூப்புரமனியசாமிக்கு நடந்த முட்டை அபிஷேகம் - இந்த சோ ராமசாமிக்கு நடக்கப்போவது எப்போது??? எப்போது என ஆவல்

enRenRum-anbudan.BALA said...

//அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்..
//
மிகச் சரியான பாயிண்ட், என்னமா எடுத்து விடறீங்க ? :-)

சோவின் "புலி எதிர்ப்பு" என்பது மற்ற அனைத்து நியாயங்களையும், அவரை மறைத்து விட / மறந்து விடச் சொல்கிறது :-(

Kumar said...

Boss,

Cho & subramania swamy ellam oru comedien'na thaan naama paakanum.. Evanunka sollurathula(uzharala) meaning irukunu aaranchamna, naamathaan paithiyam