ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?
ஈழத்தை பற்றி யோசித்த போது வந்த வார்த்தைகளி கோர்வை இது.. கவிதையா , வாக்கியமா என்று தெரியவில்லை.. ஆனால் மனதில் தோண்றிய எண்ணம் என்பது மட்டும் நிஜம். படித்துவிட்டு சொல்லுங்கள், கருத்துப்பெட்டியில் மறக்காமல்.
விலை மாதர்கள்
ஈன அரசியல்வாதியின் பதவி "சுகத்துக்காக" மட்டும்
தேவைப்பட்டால் தட்டி எழுப்பிட
எங்கள் காவிரியும், ஈழமும் விலைமாதர்கள் அல்ல!
உளியின் ஓசை
"உளியின் ஓசை" கேட்ட காதுகளுக்கு - என்
தமிழன் ஒப்பாரி கேட்காது போனதோ ?.
காரணம இல்லாமலா - உளியின் ஓசையால்
கால் காசு வரும். - ஒப்பாரியின் ஓசையால் ??
இறையாண்மை
ஈழம் என்றால் ஆறடிக்கு எட்டிப்பார்க்கும் இறையாண்மை
உங்கள் இறை "ஆண்மை"
காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்
கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல.
ஆண்மைக்கு அடிசறுக்கும் - எங்கள் இறையான்மைக்கு
அடிக்கடி சறுக்கும்
இடம் பொருள் ஏவல் பார்த்தா ? - இல்லை
இனம் , மொழி, பதவி பார்த்து.
உச்சகட்ட கெட்டவார்த்தை
போராளியை எதிர்த்திடவே துனிவின்றி - பக்சே
போர் என்ற போர்வையிலே - இன அழிப்பு நீ செய்தாய்.
காறி உமிழ்ந்து திட்டிடவே - வசவு வார்த்தை
எனக்கொன்று வேண்டுமென தேடித்தேடி - கிடைத்ததடா
உச்சகட்ட கெட்டவார்த்தை - கடைசியிலே
இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே
காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..