மதியம் செவ்வாய், டிசம்பர் 02, 2008

அ தி மு க எம் எல் ஏ பதவி பறிப்பு? கோர்ட் தீர்ப்பு & ஒரு சுயேட்சையின் காமெடி


அ தி மு க வின் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் குளோரின் சந்திராவின் எம் எல் ஏ பதவி செல்லாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
2006 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அ தி மு க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் குளோரின் சந்திரா. இவரின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார்.
ராஜபாளையம் தனித்தொகுதி, அதன் அடிப்படையில் இங்கே தாழ்த்தப்பட்டோர் தான் போட்டியிடவேண்டும் ஆனால் கிறுத்துவரான அ தி மு க வேட்பாளர் குளோரின் தான் தாழ்த்தப்பட்டவர் என்று தவறான தகவல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தவறான தகவல் கொடுத்து வெற்றிப்பெற்ற அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று தங்கமுத்து தன் மனுவில் கூறியிருந்தார். ( இங்கே அ தி மு க வின் அம்மா 4 இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து பதவியிழந்து ஞாபகம் வருகிறது :) )

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளோரின் சந்திராவின் பள்ளி சான்றிதழை அடிப்படையாக வைத்து இவர் தாழ்த்தப்பட்டவரின் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குளோரின் சந்திரா தங்கமுத்துவிற்கு அவரின் தேர்தல் செலவான ரூ 5000 வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. (வழக்கு செலவாக தங்கமுத்து 5000 த்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.. :) )

இதில் இந்த சுயேட்சையின் காமெடி எது என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும் :)
தங்கமுத்து தன் மனுவில், குளோரின் சந்திரா வெற்றி செல்லாது என்று அறிவித்து, தன்னை (தங்கமுத்துவை) வெற்றிப்பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அது தான் காமெடி.

தீர்ப்பளித்த நீதிபதி கூட சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.. புரியலயா?? கீழே பார்க்கவும்..
ராஜபாலையம் 2006 சட்டமன்ற தொகுதி வாக்குகள் விவரம்
குளொரின் சந்திரா - அ தி மு க - வெற்றி - 58320
வி பி ராஜன் - தி மு க - 57870
காளிமுத்து - பகுசன் சமாஜ் - 13218
ஐய்யனார் - தே மு தி க - 10250
விஜயகுமாரி - பார்வாட் ப்ளாக் - 4082
செல்லப்பாண்டி - பி ஜே பி - 1640
தங்கமுத்து (மனுதாரர்) - சுயேட்சை - 156

156 (மொத்த வாக்கில் 0.1%) வாக்குகள் வாங்கி 7 வது இடத்தில் இருக்கும் தங்கமுத்து தன்னை வெற்றிப்பெற்றதாகவும், எம் எல் ஏ வாகவும் அறிவிக்க சொன்னது செம காமெடி தானே.. :)
நீதிமன்றம் அவரின் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்தது.. பாவம் என்று 5000 ரூ இழப்பீடு வழங்க மட்டும் தீர்ப்பளித்துள்ளது.
உடனடியாக பதவி போகுமா அல்லது குளோரின் மேல் முறையீடு செய்து அது 3 ஆண்டுகள் வழக்காடப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் இந்த சட்டமன்றத்தின் ஆயுள்காலமான 5 ஆன்டுகளே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை..
சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட நினைத்து காமெடி செய்திருந்தாலும் நிச்சயம் தங்கமுத்துவை பாராட்ட வேண்டும்.
2 முதல் 6 வது வரையிலான இடத்தை பிரதான கட்சிகளே இதனை கண்டுக்கொள்ளாத போது இவர் துனிந்து வழக்குப்போட்டு , ஆதாரங்கள் சமர்ப்பித்து வழக்கில் வெற்றியும் கண்டுள்ளது பாராட்டப்படவேண்டியது தானே..

3 கருத்துக்கள்:

வாக்காளன் said...

இவ்ளோ கஷ்டப்பட்ட தங்கவேலுக்கு எம் எல் ஏ பதவி கொடுக்கலாம்.. :)

குடுகுடுப்பை said...

சரியான சிரிப்புங்க. டைப் பண்ண கூட முடியல.

நானும் ஒரு நாள் சுயேச்சையா போட்டியிடுவேன் என்ற நம்பிக்கையில்

வீ. எம் said...

வாக்காளன் சொல்லிட்ட நோ அப்பீல் :)

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை.. போட்டியிட்டு ஜெயிக்க வாழ்த்துக்கள் , பதிவர்கள் ஓட்டு எல்லாம் உங்களுக்குத்தான்